Posts Tagged ‘ விண்வெளி ’

அறிவியல்

நட்சத்திரங்களின் கதை!

நட்சத்திரங்களின்  கதை!

ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.

மேலும் »

அறிவியல்

பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்

பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்

அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.... இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.

மேலும் »

அறிவியல், கேள்வி-பதில்

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? ... அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? ... விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.

மேலும் »

இலக்கியம், வைணவம்

ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்

ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்

புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்... தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!

மேலும் »

அறிவியல், வழிகாட்டிகள்

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

மேலும் »

அறிவியல்

பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி கேலக்ஸி எப்படி இயங்குகிறது?

பரிதி மண்டலம் சுற்றும் நமது  பால்வீதி கேலக்ஸி எப்படி இயங்குகிறது?

வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது." -- கிரேக்க மேதை பிளாடோ.

மேலும் »

அறிவியல்

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன....இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான்...

மேலும் »

அறிவியல்

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1″ என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இந்து.காம் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. “பாரதம் போன்ற வளரும் நாடுகளுக்கு சந்திர மண்டல ஆராய்ச்சியெல்லாம் தேவையா? தரையில் மக்கள் கஷ்டப்படும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சி விரயமல்லவா” எனும் கேள்விகளை சிலர் எழுப்பலாம். உண்மையில் இந்த சந்திரயான் மூலம் நமது பூமியின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். பனிப்போரின் போது விண்வெளி ஆராய்ச்சி ஏறக்குறைய சோவியத்துக்கும் அமெரிக்காவுக்குமான கௌரவ பிரச்சனையாகவும் தொழில்நுட்பப் போட்டியாகவும் திகழ்ந்தது. ஆனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி எப்படி விண்வெளி தொழில்நுட்பத்தை மண் சார்ந்த பிரச்சனைகளை...

மேலும் »