நர்த்தன கணபதி

பொற்சிலம்பு வயிற்றில் அணிந்த பாம்புக்கச்சையோடு அழகாக மிளிர, வெற்றிதரும் நடனத்தைச் செய்யும் தந்தையே வியந்து பார்த்து துடி கொட்டி இசைக்க, நின்று ஆடுகின்ற ஆனைக்கன்றை நினைப்பவர்களது வினைகள் இல்லாமலாகும் என்கிறது இப்பாடல்.. ஸ்ரீ சங்கரர் இயற்றிய கணேச புஜங்கம் – இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார்….

View More நர்த்தன கணபதி

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது… உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம்….

View More ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது… பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்… பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும். இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்….

View More விநாயகர் நினைவுகள்

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

View More ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்