வீடுபெற நில்!

“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.”
“ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையறவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம். மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. ”
“ஏன்? நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”

View More வீடுபெற நில்!

அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் கொல்லப் படுவது சாலை விபத்துகளில் தான். பெரும்பாலும் விபத்து நடக்கும் இடங்களில் இருந்து அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் செல்ல நேரம் ஆகும் காரணத்தினாலேயே பெரும்பான்மையான விபத்துக்குள்ளான மக்கள் கொல்லப் படுகிறார்கள். இறக்க நேருகிறது. ஏன் சாலை விபத்துகளில் அடிபடுபவர்கள் உடனடியாக வான் வழியாக மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லும் வசதி அறிமுகப் படுத்தப் படவில்லை?… ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர் ஊருக்கு ஹெலிப்பாடுகள் அமைக்க முடிந்த அரசாங்கத்தினால் ஏன் மாவட்டத் தலைநகர்களில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம் ஒரு ஹெலிக்காப்டரையும் ஹெலிப்பாடையும் நிறுவ முடியவில்லை?…

View More அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்

கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1

அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?…

View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1

அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை

மின்சார தயாரிப்பு தொழில்களில் இறக்கும் மனிதர்களை கணக்கில் கொண்டால், எண்ணெய் மற்றும் நிலக்கரியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அணுசக்தியினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட 18 மடங்கு அதிகம்… ஒரு நிபுணர் குழு ஜைட்டாபூரில் அணு உலை வருவதை அறிவியல் பூர்வமாக ஆதாரங்களுடன் எதிர்த்து, அதை அரசாங்கம் ஏற்று கொண்டால் அது சரியான முடிவுதான்…

View More அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை

சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்

பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா?

View More சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]

அங்கிருந்தவர்களின் உதவியால், எண்ணி நான்கே நிமிடங்களில் அவசர சிகிச்சை வண்டி வந்து, குழந்தையையும் அவன் தாயாரையும் அழைத்துக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அவர்கள் பின்னாலேயே என் மனைவியும், மகனும் கார் ஒன்றில் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் அவர்களிடம், “பயப்படும்படியாக ஒன்றும் நடக்காது…” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய போன், செருப்பு முதலியவைகளை எடுத்துக் கொடுத்து அவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்…. நிகழ்வுகள் நடக்கும்போது நடத்துபவனை நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்பதுதான் என் தாழ்மையான எண்ணம்.

View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]