சென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு

கடந்த மாதம் அக்டோபர்-21 அன்று மறைந்த பெரியவர், கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் நினைவாக, ஆதாரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நாள் 15-நவம்பர் 2015 ஞாயிறு காலை 10 மணி. இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூர் (அமிர்தாஞ்சன் – விவேகானந்தா கல்லூரி வழியில்). திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆர்.வெங்கடேஷ், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் கீழே…

View More சென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்…. தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்…

View More அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்