Posts Tagged ‘ விவேகானந்தர் ’

அறிவிப்புகள்

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

மேலும் »

சமூகம், நிகழ்வுகள்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்...

மேலும் »

ஆன்மிகம், வழிகாட்டிகள்

[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

November 16, 2011
-
[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

1000 சித்பவானந்தர்கள் வந்தாலும் தமிழ் மண்ணில் சம்ஸ்க்ருதத்தை வளர்த்து விட முடியாது என்று ஈவெரா கர்ஜித்தார். சுவாமிகளின் துறவு சீடர்களில் ஒருவர் சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் பரப்புவதற்காகவே சுவாமிகள் பெயரிலேயே ஆஸிரமம் அமைத்து தம்மை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தொடர், வழிகாட்டிகள்

[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

November 10, 2011
-
[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

தபோவனம் கட்டத் தேவைக்கு மேற்பட்டும் நிதி வரத்துவங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்: “தாயுமானவர் தபோவனத்திற்குத் தேவையான நிதி சேர்ந்து விட்டது. இனி அன்பர்கள் நிதி அனுப்பவேண்டாம். அனுப்பினால் திருப்பி அனுப்பப்படும்".

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், பொது

ஹிந்து என்னும் சொல்

November 1, 2011
-
ஹிந்து என்னும் சொல்

பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல....ஹரிஹரர், புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது...சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் - ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு...

மேலும் »

அனுபவம், தொடர், வழிகாட்டிகள்

[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?

October 24, 2011
-
[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?

அப்போது சோவியத் யூனியம் ஓகோவென்று இருந்தது...ருஷ்யாவைப் பற்றி மகோன்னதமான பிம்பங்கள் இருந்தன...அந்தக் காலக்கட்டத்தில் ருஷ்ய கம்யூனிசத்தைப் பற்றி சுவாமிஜியிடம் கேட்டோம். சுவாமிஜி மிக அழகாகப் பதில் சொன்னார்கள்...“சுவாமிஜி, இவ்வளவு பெரிய சொத்து நமக்குக் கிடைக்கிறது. நாம் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ட்ரஸ்ட்டின் நோக்கம் என்ன? மத்தியானம் சாப்பாடு இலவசமாகப் போடுவது. அவ்வளவுதானே?”...

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தொடர், வழிகாட்டிகள்

[பாகம் 2] குதி. நீந்தி வா !

September 25, 2011
-
[பாகம் 2] குதி. நீந்தி வா !

சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடையச் செய்ய என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது.

மேலும் »

அனுபவம், வழிகாட்டிகள்

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

September 7, 2011
-
வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார்

மேலும் »

சமூகம், வழிகாட்டிகள்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார். நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.

மேலும் »

அனுபவம், வழிகாட்டிகள்

பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்

பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்

இந்த நட்புணர்வை உணர்ந்தவர்போல் உடனே அவர் என்னைத் தேடி வந்து கேட்டார்: “நீங்கள் அமெரிக்க மதப் பிரச்சாரகரா?” ”ஆம்” என்றேன். “எங்கள் நாட்டில் நீங்கள் ஏன் கிறுத்துவ மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேட்டார்.

மேலும் »