கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார்…”கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது”….

View More கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4

மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம். [..]

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4

எது உழைப்பாளர் தினம்?

மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?

View More எது உழைப்பாளர் தினம்?