அவசியத்திற்கு அதிகமாக மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பது சாத்திரம். "கோடரியை கண்டதும் மரம் பயந்து நடுங்குகிறது" என்று வேதம் இதற்கு விளக்கம் சொல்கிறது. இந்த உருவகத்தின் மூலம் மரத்தை உணர்வும், அறிவுமுள்ள ஒரு ஆன்மாவாகக் கற்பித்து அதை மதிக்கக் கற்றுத்தருகிறது வேதம்....நம் நதிகளையும், மரங்களையும், சோலைகளையும் அசுத்தம் செய்யாமலும், அழிக்காமலும் போற்றிப் பாதுகாப்பது சமுதாயக் கடமை மட்டுமல்ல தெய்வீகக் கடமையும் ஆகும் என்று உணரவேண்டும். [மேலும்..»]




