தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)

உங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்… இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன்? நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்… ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது…

View More தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)

ஒரு பயணம் சில கோயில்கள்

வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…

View More ஒரு பயணம் சில கோயில்கள்

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

View More அருணையின் கருணை

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.

View More தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது… புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன…

View More பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா