கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்....கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்...
உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி...


