காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…

View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!

View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

வீரமுண்டு… வெற்றியுண்டு!

இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]

View More வீரமுண்டு… வெற்றியுண்டு!

நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

அயோத்தியில் ஒரு நவாப் காலத்தில் நியாயம் ஹிந்துக்கள் பக்கம் இருந்ததால் அவர்களுக்குச் சாதகமான முடிவு உடனுக்குடன் எடுக்கப்பட்டது. ஆனால் அதே அயோத்தியில் 1947-க்குப் பிறகு சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களோ, ஸ்ரீ ராம ஜன்மஸ்தானத்தில் இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமபிரான் கோயிலை இடித்துக் கட்டப்பட்ட பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

View More நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

View More இரு பெண்களின் கதை