இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே……”இந்து அடையாளம்” என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது. இந்துமதத்தின் ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை அதன் முழுமையான வீச்சுடனும், நடைமுறையில் காணும் உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும்…..

View More இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்

அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு… தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.

View More வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்