
1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் வருடம் பழமையான கல்வெட்டுகளின் மீது கொஞ்சம் கூட வரலாற்று அறிவே இல்லாத அரசு அதிகாரிகள் எதோ பெரிய சமயப் பணி செய்தது போல காட்டி கொள்ள தங்கள் பெயர்களை எழுதி ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளனர். இது மட்டும் இன்றிப் பல இடங்களில் டைல்ஸ்(Tiles) ஒட்டிக் கோயிலின் பாரம்பரியத்தை அழித்து உள்ளனர். அது மட்டுமா? பல சிற்பங்கள் குப்பைகளாக கோயில் மதில் சுவர் ஓரங்களில் போடப்பட்டு உள்ளன…