Posts Tagged ‘ 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ’

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும். அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,  “பதவி அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும், அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப் பயன்படுத்தினால்... [மேலும்..»]