
பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்… நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்… இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள்….