ஓடிப் போனானா பாரதி? – 02

பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து ‘கவிராஜன் கதை’யில் எழுதியிருக்கிறார். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு…

View More ஓடிப் போனானா பாரதி? – 02

ஓடிப் போனானா பாரதி? – 01

பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுவதற்கே இந்த முயற்சி. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆதாரபூர்வமான மிகப்பல ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பதிவை அளிக்கிறேன்.

View More ஓடிப் போனானா பாரதி? – 01

பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2

பாரதி தேசியக்கல்வியை தமிழிலேயே கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறபோது அவரது உயிர் தமிழா? ஆரியமா?
ஆரம்ப விளம்பரங்கள் கூட தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?

View More பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2

நாற்குலம்

~ மகாகவி பாரதி மொழிபெயர்ப்பில் திலகர் வாக்கு
திலகர் சொன்னார்: ‘பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லட்சணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

View More நாற்குலம்

‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம்.

View More ‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்

பாரதியாருக்கு உயிர் தமிழா, ஆரியமா? என்ற கட்டுரை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தபோது திகைப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டுரையைப் பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கழகத்துக்காரர்களுக்கு பாரதியார் தமிழை வெறுத்தார் என்று சொல்ல அருகதை இல்லை. ஏன் இல்லை என்பதை இக்கட்டுரையில் ஆங்காங்கே சொல்கிறேன்.

View More ‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்

பாரதியும் தேசியமும்

மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல…

View More பாரதியும் தேசியமும்

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.

அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.

ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.

View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு