சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

‘ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?’…அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்…

View More சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை

“நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

ஓடிப் போனானா பாரதி? – 10

‘இந்தியா’ பத்திரிகையின் – சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் – அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய – மையப்புள்ளியின்று விலகக் கூடிய – கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

View More ஓடிப் போனானா பாரதி? – 10

ஓடிப் போனானா பாரதி? – 09

எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’

View More ஓடிப் போனானா பாரதி? – 09

ஓடிப் போனானா பாரதி? – 08

முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பிட்ட ‘இந்தியா’ பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் – தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் – உருவாக்கும் எண்ணம் என்வென்றால், ‘சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, ‘அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.’)…

View More ஓடிப் போனானா பாரதி? – 08

ஓடிப் போனானா பாரதி? – 07

இதுவரையில் இந்தத் தலைப்பில் ஆய்ந்தவர்கள் எல்லோரும் சீனிவாசனுடைய வாக்குமூலத்தை ஊன்றிப் படிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சீனி. விசுவநாதன் வெளியிட்டிருக்கும் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ (தொகுதி 3) இந்த வாக்குமூலத்தின் முழு வடிவத்தைத் தந்திருக்கிறது. இந்த வாக்குமூலத்தில் ஒரு மிக முக்கியமான பகுதி எப்படி இத்தனை நாள், இவ்வளவு தேர்ந்த ஆய்வாளர்களின் கண்களில் படாமல் போனது என்ற வியப்பே மேலிடுகிறது. முரப்பாக்கம் சீனிவாசன் தன் வாக்குமூலத்தில் சொல்கிறார்…

View More ஓடிப் போனானா பாரதி? – 07

ஓடிப் போனானா பாரதி? – 06

சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், ‘மிகவும் மிதமான போக்கை உடையவர்,’ என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், ‘வெதுவெதுப்பான வாக்கியங்களை’ எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்?

View More ஓடிப் போனானா பாரதி? – 06

ஓடிப் போனானா பாரதி? – 05

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாள் முன்னால் – ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று – ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகிறது. ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது.

View More ஓடிப் போனானா பாரதி? – 05

ஓடிப் போனானா பாரதி? 04

என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பற்றியது மட்டும்தான். ‘வாரண்டு ‘இந்தியா’ ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். ‘ஆசிரியர்தானே? நான் இல்லை,’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,’ என்ற ரா அ ப வாசகங்களும், எஸ் ஜி ராமானுஜலு நாயுடு அவர்களுடைய (மேற்காணும்) சித்திரிப்பும், பாரதி ‘தன்னையே நம்பியிருந்த ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடிவிட்டான்,’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
ஐயா பெரியவர்களே! எந்த ஊரிலாவது வாரண்டு பதவிப் பெயரில் பிறப்பிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா?

View More ஓடிப் போனானா பாரதி? 04