கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்… (Verses 16-20)

View More கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

அந்த மதிலில், (தொலைதூரத்துக்கு அம்புகளை எறியக் கூடிய மிகப் பெரிய) விற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கூர்மை மிகுந்த, கொல்லக் கூடிய வாளையும், கோடரிகளையும், இரும்புத் தடிகளையும், சக்கரங்களையும், எறியீட்டிகளையும், உலக்கைகளையும் வீசக்கூடிய கணக்கில் அடங்காத எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன… (Verse 11-15)

View More கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10)

View More கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

(நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City)

View More கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி – கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது… (பாடல்கள் 56-61 End of Canto of Country)

View More கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)

கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)

‘செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான்… பாடல்கள் 51-56)

View More கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)

கம்பராமாயணம் – 13 (Kamba Ramayanam – 13)

இளம்பெண்களின் இனிமை நிறைந்த, குழறலான மழலைப் பேச்சை ஒத்துக் குயில்கள் கூவின. அவர்களுடைய நடையின் ஒசிவைப் பார்த்தே மயில்கள் நடனம் பழகிக் கொள்கின்றன. அவர்களுடைய பற்களின் வெண்மையையும் பிரகாசத்தையும் ஒத்த முத்துகளையே சங்கினங்கள் ஈனுகின்றன (பாடல்கள் 46-50)

View More கம்பராமாயணம் – 13 (Kamba Ramayanam – 13)

கம்பராமாயணம் – 12 (Kamba Ramayanam – 12)

எல்லா வீடுகளிலும் அகில் கட்டைகளை எரிக்கும் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளையும் ஓதியபடி வளர்க்கும் ஓமங்களில் எழும் புகையும் அடர்த்தியாகப் பரந்து, சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பையும் கவித்தன. (Verses 41-45)

View More கம்பராமாயணம் – 12 (Kamba Ramayanam – 12)

கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam – 11)

மிக முக்கியமான குறிப்பு ஒன்றைக் கவி இங்கே பேசுகிறான். பெண்களுக்கு முழுமையான கல்வி இருந்தது என்பதும், ‘பொருந்து செல்வம்‘ என்று அவன் அழுத்தந் திருத்தமாக அடிக்கோடிட்டுச் சொல்வதைப்போல், பெண்களுக்கென்று தனிப்பட்ட செல்வவளம் இருந்தது; அதன் காரணமாக…. (பாடல்கள் 36-40)

View More கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam – 11)

கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)

(பாடல்கள் 31 முதல் 36 வரை) பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது…

View More கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)