Posts Tagged ‘ festivals ’

ஆன்மிகம்

நவராத்திரி பற்றி பாரதியார்

September 30, 2008
-
நவராத்திரி பற்றி பாரதியார்

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம். ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

மேலும் »

சமூகம்

நாம் மட்டும் ஏன் இப்படி?

நாம் மட்டும் ஏன் இப்படி?

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…” அது வினாயக சதுர்த்தி ஆனாலும் சரி, தீபாவளி, பொங்கல் ஆனாலும் சரி அலறத் தொடங்கிவிடும் நம் தமிழ் தொலைக்காட்சிகள். நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகள், படம் உருவான கதை, அன்று வெளியாகவுள்ள படங்களின் பாடல்கள் என்று ‘களை’ கட்டிவிடும். ஒரு வாரம் முன்பிருந்தே தொடங்கிவிடும் இந்த ‘அன்புத் தொல்லைகள்’. நம்மவர்களும், எந்த டி.வி.யில் எத்தனை மணிக்கு என்ன பார்க்கலாம் என்று திட்டமே தயாரிக்க அரம்பித்து விடுவார்கள். இன்று என்ன பண்டிகை, அதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை? அதையெல்லாம் பற்றிக் கவலைப்படத்தான்...

மேலும் »