ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை
அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா
By ச.திருமலை
Posted in பண்டிகைகள் on 14 May 2009
Stats: பார்வை: 420 and 1 Comment

பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விரோதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் [...]

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு
By நமது நிருபர்
Posted in நிகழ்வுகள் on 28 January 2009
Stats: பார்வை: 1,118 and 18 Comments

தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்… புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன…

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
By வினோத் ராஜன்
Posted in ராமாயணம் on 16 January 2009
Stats: பார்வை: 1,064 and 8 Comments

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…

தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
By வெற்றிச்செல்வன்
Posted in நிகழ்வுகள் on 16 December 2008
Stats: பார்வை: 411 and 4 Comments

உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது…

மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம் on 13 December 2008
Stats: பார்வை: 543 and 6 Comments

மகாத்மா காந்தி தனது வார்தா ஆசிரமத்தில் பாம்புகளைக் கண்டால் பத்திரமாக அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே அவற்றை விட்டுவிட்டு வர அவர் வைத்திருந்த Y வடிவக் கம்பையும் அதனுடனிருந்த பெட்டியையும் பார்த்து “பாம்பிடம் கூட இத்தனை அகிம்சையா?” என வியக்கலாம். பாம்பு இருக்கும் மூட்டையைக் காட்டி தன்னுடன் வந்த நகரவாசியிடம் “குழந்தை குட்டி நிறைய இருக்குற எடத்துல இது வரக்கூடாது. அதுக்கு ஏத்த குளிர்ச்சியான எடத்துல விட்டுட்டா அது பாட்டுக்கு கெடக்கும். அதான் இத நேத்து பார்த்தபோதே பிடிச்சு மூட்டைக் கட்டிட்டோம். [...]

அகரமும் ஓங்காரமும்
By எஸ்.கே
Posted in வீடியோ on 18 June 2008
Stats: பார்வை: 381 and No Comments

சேமிக்க/பகிர்ந்துகொள்ள

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?
By முரளி
Posted in கேள்வி-பதில் on 14 June 2008
Stats: பார்வை: 800 and 6 Comments

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். [...]

ஜெகா மாமா
By ஜயராமன்
Posted in இந்து மத மேன்மை on 13 June 2008
Stats: பார்வை: 705 and 3 Comments

“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.
ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் [...]

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத மேன்மை on 11 June 2008
Stats: பார்வை: 1,327 and 9 Comments

“..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது…..

நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.”

பல கடவுளரா, ஒரே கடவுளா?
By முரளி
Posted in இந்து மத விளக்கங்கள் on 9 June 2008
Stats: பார்வை: 918 and 6 Comments

வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது.
எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது.
குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் [...]

இந்து மகத்துவக் கும்மி
By முரளி
Posted in கவிதை on 6 June 2008
Stats: பார்வை: 384 and No Comments

கும்மியடி பெண்ணே கும்மியடி - கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் - தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

ஹிந்து எழுச்சிப் பாடல்
By முரளி
Posted in கவிதை on 26 May 2008
Stats: பார்வை: 430 and No Comments

இந்து நானென்று சொல்லடா! - நீ
நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்
By ஆசிரியர் குழு
Posted in அறிவியல் on 30 April 2008
Stats: பார்வை: 1,128 and 4 Comments

இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது.
இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் [...]

சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்
By ஆசிரியர் குழு
Posted in வழிகாட்டிகள் on 22 April 2008
Stats: பார்வை: 521 and 5 Comments

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர்.
1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் [...]



"));