வேதாளம் எள்ளி நகைத்து "மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் ...
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

