தோற்றுப்போன நாடுகள்?

2005ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் அமைதிக்கான நிதி ( Fund for Peace) என்ற சிந்தனையாளர்கள் குழுவும், வெளிநாட்டுக்கொள்கை ( Foreign Policy) என்ற பத்திரிக்கையும் இனைந்து ஒவ்வொரு ஆண்டும் தோற்றுப்போன நாடுகளின் பட்டியலை வெளியிருகின்றன. இவை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தினராக உள்ள நாடுகளை மட்டுமே பட்டியலிடுகின்றன. உலகின் பல பகுதிகள் ’நாடு’களாக இதர நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், உலக நாடுகளின் சட்டத்திட்டங்களின்படி நாடுகளாக ஐக்கிய நாடுகள் சபையினரால் அங்கீகரிக்கப்படாததினால் விடுபட்டுள்ளன. உதாரனமாக, தைவான், பாலஸ்தீனப்பகுதிகள், வடக்கு சைப்ரஸ், மேற்கு சஹாரா மற்றும் கொசாவா ஆகிய பகுதிகளைச் சொல்லலாம்.

View More தோற்றுப்போன நாடுகள்?

மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?

மீண்டும் ஒரு பயங்கர செயல். சற்று முன் வரை கிடைத்த தகவலின்படி, எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாதிகளின் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிரவாத சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் (ATS chief) ஹேமந்த் கார்காரே கொல்லப்பட்டிருக்கிறார். இது தவிர, இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் மக்களை பிணை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் டெக்கான் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.

View More மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?

தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.

View More தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

“அமர்நாத் கோயில் நில விவகாரம்” என்பது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், பத்திரிகைகளும், காஷ்மீரிகள் என்று சொல்லை காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களை மட்டுமே குறிக்கும்படி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் காஷ்மீரிகள் யார்? பண்டிட்கள் என்பவர்கள் யார்? இன்னும் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையாக அமைகிறது.

View More ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)

ஆரியப் படையெடுப்பு என்ற புரளியைப் பயன்படுத்தி எவ்வாறு பாரத மக்களுக்குள் பெரும் பிளவு உண்டாக்கப்பட்டது? மதம் பரப்ப வந்தவர்கள் எவ்வாறு இந்தியாவை மனம் துவளச் செய்வதற்காகச் சரித்திரப் புரட்டுச் செய்தனர்? உண்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் சான்றுகளோடு அறிய ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ. இவ்வரிசையில் இரண்டாவது பகுதி இது.

View More Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)