2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….

View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?

Bofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? […] முக்கியமாக ராஜீவ் காந்தி […] குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். […] ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.

View More கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?