லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படி திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்வது அனேகமாக இல்லை. எனவே, இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது… இந்து அல்லது பதிவுச் திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி அப்படி அல்ல; ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக, முழுவதுமாக குறைக்கப் படுகின்றன. ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ளும் பொழுது தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள்… கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். அது சரியல்ல, ஆனால், ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்…

View More லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்