ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை
சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம், சைவம், நிகழ்வுகள், பண்டிகைகள், பொது, வீடியோ on 12 February 2010
Stats: பார்வை: 1,341 and 28 Comments

ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

மஹாபாரதத்தில் ஒரு நாள்
By ராம்குமார்
Posted in மஹாபாரதம், வழிகாட்டிகள் on 19 November 2009
Stats: பார்வை: 1,538 and 17 Comments

கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான்.

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்
By ஜடாயு
Posted in இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது on 11 November 2009
Stats: பார்வை: 975 and 21 Comments

… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது… விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

மஹாபாரத உரையாடல்கள் - 007 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in பொது, மஹாபாரதம் on 20 December 2008
Stats: பார்வை: 1,097 and 9 Comments

நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?…

மஹாபாரத உரையாடல்கள் - 006 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in இந்து மத விளக்கங்கள், பொது, மஹாபாரதம் on 15 December 2008
Stats: பார்வை: 838 and 7 Comments

திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.

மஹாபாரத உரையாடல்கள் - 005 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in மஹாபாரதம் on 10 December 2008
Stats: பார்வை: 589 and No Comments

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

எதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

மஹாபாரத உரையாடல்கள் - 004 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in மஹாபாரதம் on 3 December 2008
Stats: பார்வை: 1,237 and 2 Comments

கர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன்.

மஹாபாரத உரையாடல்கள் - 003 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in இந்து மத விளக்கங்கள், மஹாபாரதம் on 25 November 2008
Stats: பார்வை: 683 and 4 Comments

ஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that.

மஹாபாரத உரையாடல்கள் - 002 கர்ணன்
By ஹரி கிருஷ்ணன்
Posted in இந்து மத விளக்கங்கள், மஹாபாரதம் on 19 November 2008
Stats: பார்வை: 964 and 6 Comments

துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.

மஹாபாரத உரையாடல்கள் - 001 கற்றலும் சாதியும்
By ஹரி கிருஷ்ணன்
Posted in இந்து மத விளக்கங்கள், கவிதை, மஹாபாரதம் on 11 November 2008
Stats: பார்வை: 1,996 and 23 Comments

வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன்.



"));