Posts Tagged ‘ movie ’

UP – Animation Movie. ( பறக்கும் வீடு)

தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர். [மேலும்..»]

வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள். [மேலும்..»]

பைத்ருகம் – ஒரு பார்வை – 3

பைத்ருகம் – ஒரு பார்வை – 3

மனிதனுக்கு ஆஸ்திகத்தின் மீது நம்பிக்கை வரவழைக்க ஆழமான தத்துவார்த்தமான தாக்கத்துடன் கூடிய படங்களே எடுக்கப்பட வேண்டுமே ஒழிய விட்டலாசார்யா பாணி, ராம. நாரயணனின் குரங்கு/நாய் படங்கள் அல்ல. ரஜினிகாந்தின் அரைவேக்காட்டுத் தனமான பாபா போன்ற படங்களும் அல்ல. மேலும் இதுபோன்ற படங்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையை அழகாக, கவித்துமாகச் சொல்லவும் வேண்டும். பார்த்தவுடன் அந்தக் கோவில்களுக்குச் செல்லவோ, அந்தச் சடங்குகளை அனுபவிக்கவோ தோன்றவேண்டும்... [மேலும்..»]

பைத்ருகம் – ஒரு பார்வை – 2

பைத்ருகம் – ஒரு பார்வை – 2

தன் மகனை ஒரு நம்பூதிரியாக வளர்க்கக் கூடாது, ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்றும், தன் மகன் எப்படி வளர வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் ஆவேசமாகச் சண்டை போடுகிறான். அமைதியாகக் கேட்டுக் கொள்ளூம் அப்பா நம்பூதிரி, அப்படியானால் நான் உன்னை என்னைப்போல் அல்லவா வளர்த்திருக்க வேண்டும் என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் வெளியேறுகிறான்... [மேலும்..»]

பைத்ருகம் – ஒரு பார்வை – 1

பைத்ருகம் – ஒரு பார்வை – 1

கேரள மண்ணின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அபரிதமான தாக்குதலால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் கோவில்களும் சாஸ்தாக்களும் யாகங்களும் பகவதிகளும் அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் அழிந்துவிடுமோ என்று கவலைப் பட்டிருக்கிறான் ஒரு கலைஞன்! அப்படி அழியாமல், மதம் மாறாமல் மிச்சம் மீதி இருக்கும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை தளராமல் இருக்க ஓர் அதிர்ச்சி வைத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ்... [மேலும்..»]

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்க்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல்... [மேலும்..»]