மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல முடியாது. பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவருடைய பாடல்கள் மிகப் பெரும்பான்மையானவற்றுள் தேசபக்தி கலந்து நிறைந்தே இருக்கிறது. ‘நாட்டு மாந்தர் எல்லாம், தம்போல் நரர்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்றே உலகில் அரசர் எண்ணிவிட்டார்’ என்பன போன்ற பகுதிகளில் பாஞ்சாலி சபதத்திலும்…