
நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.