Posts Tagged ‘ ramayana ’

ராமாயணம்

மலைக்குல மயில்

மலைக்குல மயில்

ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை "மலைக்குல மயில்" என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்....

மேலும் »

ராமாயணம்

பகைவனும் பாராட்டும் பகழி

பகைவனும் பாராட்டும் பகழி

பொதுவாக உலகில் ஒருவரை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவருடைய பகைவனே அவரைப் பாராட்டுவது என்பது மிகவும் அருமை. அதிலும் யாரைப்பற்றி, யாருடைய வீரத்தைப் பற்றி முன்னொரு முறை மிக இழிவாக, மிக ஏளனமாகப் பேசினானோ அவரைப் பற்றியும் அவருடைய வீரத்தைப் பற்றியும் மனம் திறந்து பாராட்டுகிறான். ஒரு தடவை அல்ல பல தடவை. பலவகையாகப் பாராட்டுகிறான். பாராட்டுபவர் யார்? பாராட்டுப் பெறுபவர் யார்?...

மேலும் »

ராமாயணம்

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் "இஸ்லாமுக்கு எதிரானவை" என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன...

மேலும் »

ராமாயணம், வைணவம்

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.

மேலும் »

கம்பராமாயணம்

நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரை

June 12, 2008
-

நடிகர் சிவகுமார் சமீபத்தில் சென்னையில் மக்கள் தொடர்பு அமைப்பின் சார்பில் நிகழ்த்திய கம்பராமாயண உரையை இங்கு நீங்கள் கேட்கலாம். நன்றி: பாட்பஸார்.காம்

மேலும் »

வைணவம்

ஸ்ரீ மகாவீர வைபவம்

ஸ்ரீ மகாவீர வைபவம்

தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.

மேலும் »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 1

பால காண்டம் 1. ஆற்றுப் படலம் – The Canto of the River மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும், காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 சொற்பொருள்: ஆசலம்: சஞ்சலம். காசு – வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் – போர். சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க...

மேலும் »

வைணவம்

பெரிய திருவடி

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். 'இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. 'தாவடி ஓட்டும் மயிலிலும்' என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி...

மேலும் »