UP – Animation Movie. ( பறக்கும் வீடு)

தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.

View More UP – Animation Movie. ( பறக்கும் வீடு)

பைத்ருகம் – ஒரு பார்வை – 2

தன் மகனை ஒரு நம்பூதிரியாக வளர்க்கக் கூடாது, ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்றும், தன் மகன் எப்படி வளர வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் ஆவேசமாகச் சண்டை போடுகிறான். அமைதியாகக் கேட்டுக் கொள்ளூம் அப்பா நம்பூதிரி, அப்படியானால் நான் உன்னை என்னைப்போல் அல்லவா வளர்த்திருக்க வேண்டும் என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் வெளியேறுகிறான்…

View More பைத்ருகம் – ஒரு பார்வை – 2

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்க்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல் விபூதியைப் பூசிக் கொள்ளும் ஒரு வேடதாரியாகவே இருந்திருக்கிறார். திருப்பதி சென்று ஏழும்லையானை வணங்கியதற்காக சிவாஜி கணேசனை திராவிடக் கட்சிகள் வெளியேற்றின. இன்னும் பல இயக்குனர்களும் கலைஞர்களும் தங்கள் கடவுள் நம்பிக்கையை மறைத்துக் கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை தமிழ்த் திரைப் பட உலகத்தில் தொடர்ந்தது.

View More பைத்ருகம் – ஓர் அறிமுகம்