ஆன்மிகம், போலி ஆன்மிகம், துறவு, சாமியார்கள் : ஒரு கேள்வி-பதில் - ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்
இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை - 4
By ஆர்.பாலாஜி
Posted in அரசியல், பயங்கரவாதம் on 30 January 2010
Stats: பார்வை: 367 and 3 Comments

பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.

போகப் போகத் தெரியும் - 43
By சுப்பு
Posted in பொது on 20 December 2009
Stats: பார்வை: 1,079 and 8 Comments

ஜின்னாவின் முஸ்ஸீம் லீக் வைத்த பாக்கிஸ்தான் கோரிக்கை எவ்வளவு அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதில் ஓரளவு தன்மான உணர்வாவது இருந்தது. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல காலாகாலாத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சேவகம் செய்வதையே அவர் இயக்கத்தின் லட்சியமாக வைத்திருந்தார்.

ஓடிப்போனானா பாரதி? - 11
By ஹரி கிருஷ்ணன்
Posted in தொடர், வழிகாட்டிகள் on 16 December 2009
Stats: பார்வை: 967 and 10 Comments

“நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று
வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா?

போகப் போகத் தெரியும் - 42
By சுப்பு
Posted in அரசியல், தொடர், வரலாறு on 5 December 2009
Stats: பார்வை: 981 and 8 Comments

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்… உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்
By ம வெங்கடேசன்
Posted in அரசியல், தொடர் on 5 November 2009
Stats: பார்வை: 1,036 and 22 Comments

தாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
– வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்

போகப் போகத் தெரியும் - 39: அண்ணாத்துரையின் தோல்வி
By சுப்பு
Posted in அரசியல், தொடர் on 30 October 2009
Stats: பார்வை: 1,237 and 6 Comments

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
By ம வெங்கடேசன்
Posted in அரசியல், தொடர் on 25 October 2009
Stats: பார்வை: 1,534 and 42 Comments

”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!
By ம வெங்கடேசன்
Posted in அரசியல் on 10 October 2009
Stats: பார்வை: 1,409 and 36 Comments

”சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பது அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி மத பேதங்களை அகற்றுவதும். மூடப்பழக்கங்களை ஒழிப்பதும் பொருளியில் சமதர்மமாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரசாரம் செய்யவும் அமுலுக்குக் கொண்டுவரவுமான காரியங்கள் நடைபெறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயம்”.

போகப் போகத் தெரியும் - 37
By சுப்பு
Posted in அரசியல் on 7 October 2009
Stats: பார்வை: 1,610 and 13 Comments

உடல் என்ற அடையாளத்தை உதற வேண்டும் என்று நினைக்கும் சமணத் துறவிகள் மீது தாக்குதல்; நிர்வாண ஆராய்ச்சி செய்த ஈவெராவுக்கு சிலை வைத்து பாராட்டு. தமிழகமே இதுதானா உன் தலைவிதி?

போகப் போகத் தெரியும் - 36
By சுப்பு
Posted in அரசியல் on 29 September 2009
Stats: பார்வை: 989 and 10 Comments

வைரப்பன் போலிஸ்காரரை அப்படியே அரைகுறை சவரத்தோடுவிட்டுவிட்டு எழுந்துவிட்டார். போலிஸ்காரர் மிரட்டிப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் மசியவில்லை. இறுதியில் போலிஸ்கார் வைரப்பன் மீது பொய்வழக்கு போட்டு அவரை கோட்ர்டுக்கு இழுத்துச் சென்றார். நீதிபதி வைரப்பனிடம் ‘மிச்ச சவரவேலையும் செய்து முடி’ என்றார். அதற்கு வைரப்பன் சொன்னார். ‘நம்மாலே அது முடியாதுங்க, சாமி வேணுமானா நீங்களே செய்துவிட்டுடுங்க’ என்று சொல்லிக்கொண்டே தனது ஆயுதப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீதே வைத்துவிட்டார்.

போகப் போகத் தெரியும் - 35
By சுப்பு
Posted in அரசியல் on 23 September 2009
Stats: பார்வை: 872 and 5 Comments

வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்தபோது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும் அவருடைய இளவல்களும் அறிவார்களா? அகலமும், ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 16: வைக்கம் போராட்டம்
By ம வெங்கடேசன்
Posted in அரசியல், தொடர் on 14 September 2009
Stats: பார்வை: 1,687 and 2 Comments

வைக்கம் போராட்டத்தினுடைய வெற்றி காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும் போய்விடக்கூடாது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே அந்த வெற்றி சேரவேண்டும் என்ற கேவலமான ஆசைதான். காந்திஜியினுடைய பங்கை சொன்னால் எங்கே வைக்கம் வீரர் பட்டம் போய்விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்!

போகப் போகத் தெரியும் - 33
By சுப்பு
Posted in அரசியல், தொடர் on 7 September 2009
Stats: பார்வை: 1,324 and 12 Comments

‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது.

“…நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே - பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே - அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே…”
–மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்

இசைக்கூறுகள் - 6 : குறியீட்டு முறையின் வரலாறு
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 6 September 2009
Stats: பார்வை: 602 and 1 Comment

1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் - “இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்” - என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?
By ம வெங்கடேசன்
Posted in அரசியல், தொடர் on 4 September 2009
Stats: பார்வை: 2,163 and 83 Comments

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு - வீரமணி)

“பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.” — (கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை - 2004.)

போகப் போகத் தெரியும் - 32
By சுப்பு
Posted in அரசியல், தொடர் on 31 August 2009
Stats: பார்வை: 1,086 and 19 Comments

….. சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்லவேண்டி வருமானால், அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்..

எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக்கொள்ளுவதும் இல்லை….

காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயமாகும்.
– தோழர் ஈ.வெ.ராமசாமி அறிக்கை

போகப் போகத் தெரியும் - 30
By சுப்பு
Posted in அரசியல் on 24 August 2009
Stats: பார்வை: 1,575 and 43 Comments

மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.



"));