மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இந்திய ஜனநாயத்தில் பெருந்தலைவர்களாக பவனி வரும் சிலரின் நடத்தையைக் காணும்போது, இதுபோன்ற நபர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது. மும்பையில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டிருக்கும் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் விடிய விடியப் பார்ட்டி நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தாராம். ஆறாய்ப் பெருகி ஓடும் குருதி பற்றி அவருக்கு என்ன... [மேலும்..»]






