Posts Tagged ‘ Thoughts on Pakistan ’

அம்பேத்கரும் தேசியமும்

அம்பேத்கரும் தேசியமும்

அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண முடியும். இந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர்... [மேலும்..»]