“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர். ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோட்பாடுகளையும் படித்து அறிந்தார். மலேசிய அரசின் தொழில்மேம்பாட்டு இயக்குனராக உயர்ந்த பதவியில் இருந்து...

