Posts Tagged ‘ விவேகானந்தர் 150வது ஆண்டு விழா ’

விவேகானந்தம்-150: இணையதளம்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) பாரத நாடும், உலகெங்கும் உள்ள இந்துக்களும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதையொட்டி, சுவாமிஜியின் சிந்தனைளை, படைப்புகளை, வாழ்க்கைக் குறிப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தேசிய சிந்தனை கழகம் என்ற அமைப்பு விவேகானந்தம்-150 என்ற இணையதளத்தை சில மாதங்களாக நடத்தி வருகிறது. http://vivekanandam150.com சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த இணையதளம் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பழைய, புதிய எழுத்தாளர்கள் சுவாமி விவேகானந்தர் குறித்து பல்வேறு விதமான பதிவுகளூம், நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் இந்தத் தளத்தில் உள்ளன. மேலும், தினந்தோறூம் புதிய எழுத்தாளர்கள் எழுதும்... [மேலும்..»]

விவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்

விவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்

கன்யாகுமரி  விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி  இதனை அறிவித்துள்ளது. விவரங்கள் கீழே..     [மேலும்..»]

எழுமின் விழிமின் – 7

"...எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?..." [மேலும்..»]

எழுமின் விழிமின் – 6

என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப் படாமல் இருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று. உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையர்களின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும், வீர நம்பிக்கையையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது. பெரியோர்களான நமது முன்னோர் களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது. [மேலும்..»]

எழுமின் விழிமின் – 5

கோழைகள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோலத் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள் - இது மட்டரகமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்வ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும்... கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள் பிராடெஸ்டெண்டுகளாக மாறினார்கள்... சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 4

பாரதம் இப்பொழுதும் உயிர் வாழ்கிறது. ஏனெனில் உலக நாகரிகமாகிற பொதுநிதிக்குப் பாரதம் தனது சொந்தப் பங்கினைத் தர வேண்டியிருக்கிறது...தர்மம் முக்தியுடன் சேர்ந்து பொருந்தி வாழ்ந்த ஒரு காலம் பாரத நாட்டில் இருந்தது. யுதிஷ்டிரன், அர்ஜுனன். துரியோதனன், பீஷ்மன் போன்று தர்மத்தை வழிபட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் கூடவே முக்திக்காக விழைந்த வியாசர், சுகர், ஜனகர் போன்றோரும் இருந்தனர். புத்த மதம் தோன்றியபோது தர்மமானது அடியோடு புறக்கணிக்கப்பட்டு, மோட்சப் பாதை மட்டுமே செல்வாக்குப் பெறுவதாயிற்று. [மேலும்..»]

எழுமின் விழிமின் – 3

நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான "சாது ஹிந்து"விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை... பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது வாழ்கிறது... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 2

மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது... இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 1

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக 2013ம் ஆண்டு மலரவிருக்கிறது. இந்தப் புனித தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிகு சிந்தனைகளை இந்தப் புதிய தொடரில் தொகுத்து வழங்குவதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இத் தொடர் அடுத்த 10 மாதங்களுக்கு சுவாமிஜியின் சிந்தனை அமுதத்தைத் தாங்கி வரும்... தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறுகிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும், அற்பத் தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உருவாக்குகிறது... [மேலும்..»]

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார். நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. [மேலும்..»]