காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

tears-in-kashmir-templeஇருபது வருடங்கள் முன் இஸ்லாமிய தீவிரவாதத்தால் தங்கள் தாய் மண்ணை விட்டு விரட்டப்பட்ட காஷ்மீர் இந்துக்கள் நேற்று புதன்கிழமை கீர்-பவானி கோயிலில் வழிபட்டனர். இந்த கோயில் ஸ்ரீநகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

1989ல் பிரிவினைவாதம் காஷ்மீரில் வெடித்ததும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இந்துக்கள் ஸ்ரீநகரை விட்டு துரத்தப்பட்டார்கள். அவர்கள் காஷ்மீரின் தெற்கு பிரதேசங்களிலும் (முக்கியமாக ஜம்முவில்), இந்தியாவின் மற்ற இடங்களிலும் அகதிகளாக வாழ்ந்துவருகிறார்கள்.

பல வருடங்களுக்குப்பின் இந்த கோயிலின் திருவிழாவில் எப்போதும் காணாத கூட்டம் கூடியது. உணர்ச்சிப்பெருக்குடன் இந்துக்கள் ஒருவரை ஒருவரை கட்டி அணைத்து கண்ணீர் மல்கினார்கள்.

“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.

ஆனால், சில காஷ்மீர் இந்துக்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டார்கள். வேறு சிலர் கலவரத்தில் தங்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள்.

பத்து வருடங்களுக்கு முன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தினசரி 10 பேர் இறந்துகொண்டிருந்த காஷ்மீரில் இன்று தினசரி இரண்டு பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் காஷ்மீரின் இன்றைய “அமைதி” நிலை.

தகவல் ::: https://afp.google.com/article/ALeqM5gOuA4PvK_jRT5r3pN7BFrW4gBg1w

One Reply to “காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்”

  1. காஷ்மீர் இன்று நம் நாட்டிற்கு நிரந்தர புற்று நோயாக மாற காரணம் பண்டிட் நேருவும்,அவரின் திருமகள் இந்திரா காந்தியும்தான்.
    நேரு அவர்கள் இந்திய சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்க்கும்போது சர்தாரின் ஆலோசனைப்படி கஷ்மீரை சேர்த்திருந்தால் இந்த அவலம் அன்றே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
    மற்றொரு வாய்ப்பான இந்திய பாகிஸ்தான் போரில் நம் நாட்டு வீரர்களின் தியாகத்தால் பிடிபட்ட பாகிஸ்தான் பகுதிகளை திரும்ப ஒப்படைக்கும்போது காஷ்மீர் பிரச்சினைக்கு இந்திராகாந்தி முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதை செய்யாமல் இந்தியர்களை நாய்கள் என்று திட்டிய புட்டோவுடன் சிம்லா ஒப்பந்தம் போட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவாராமல் விட்டதுதான் இந்தியாவிர்க்குள்ளே இந்துக்கள் அகதிகளாக இருக்கும் அவலம். இருவரும் அதற்குரிய பரிசுகளை பெற்றுகொண்டது அனைவருக்கும் தெரியும்
    என்றுதான் இந்த பிரச்சினைக்கு முடிவு வருமோ தெரியவில்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *