கம்பராமாயணம் – 9 (Kamba Ramayanam – 9)

நாட்டுப் படலம் (26-30) Canto of the Country (26-30)

முட்டுஇல் அட்டில், முழங்குற வாக்கிய

நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,

பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே. 26

சொற்பொருள்: முட்டு தட்டுப்பாடு. அட்டில் சமையல். படப்பை சோலைகள்.

கொஞ்சமும் குறைபாடு இல்லாத சமையலுக்காக அரிசியைக் கழுவிய நீர் (அளவில் அதிகமாக இருந்தபடியால்) ஓசை எழுமாறு கொட்டப்படுகிறது. அவ்வாறு ஊற்றப்பட்ட கழுநீர் பாக்குமரங்கள் செழித்து வளர்ந்திருக்கும் தோப்புகளின் வழியாக ஓடி, செந்நெல் வயல்களின் நாற்றங்கால்களில் பாய்ந்து, நெற்பயிர் வளருமாறு பாய்கிறது.

அன்னசத்திரங்களில் பலநூறுபேர்களுக்குச் சோறு வடிப்பதற்கான அரிசியைக் கழுவிய நீர் பாக்குமரங்களின் ஊடே ஓடி வயல்களில் பாய்ந்தது என்பதன் மூலம், நாட்டில் அன்னசத்திரங்கள் நிறைய இருந்தன என்பதையும், அங்கே ஓயாது சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதையும், அங்கெல்லாம் சமையலுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் ஏற்படாத அளவில் அரச நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்பதையும் கவி கழுநீரின் மிகுதியைச் சொல்லிக் குறிப்பால் உணர்த்துகிறார்.

Translation: Rice was cooked in enormous quantities, with unimpeded flow of supplies. Large quantities of water used for washing rice before it is cooked, was sploshed in the backyards noisily, which ran down through groves of areca palm and fed the beds on which rice-corn was sown and nourished the tender shoots till they were transplanted to the fields.

Elucidation: The enormity of washed water thrown out indicates the quantity of rice that was being cooked, which obviously would take place in dharmashalas (choultry or inn) where hundreds of pilgrims and other traveling lot were fed. The quantity of water thus thrown out is indicative of the fact that there were many such inns; the flow of supplies to such inns was ever so smooth and that testifies to the Emperor’s administration and the state mechanism. The poet draws a picture of a drainage to point to the perfection of statecraft!

சூட்டுடைத் துணைச்செந்நிற வாரணம்

தாள்துணைக் குடைய, தகை சால் மணி

மேட்டு இமைப்பனமின்மினி ஆம்எனக்

கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27

சொற்பொருள்: சூட்டு சேவலின் உச்சிக் கொண்டை. வாரணம் சேவல். குரீஇ குருவி

கொண்டையை உடைய செந்நிறச் சேவல்களும் கோழிகளும் தம் இரண்டு கால்களாலும் குப்பை மேட்டைக் கிளற, அங்கே கிடக்கும் மாணிக்கக் கற்களை மின்மினிப் பூச்சி என்று கருதி, குருவிகள் எடுத்துச் சென்று அவற்றைத் தம் கூட்டில் வைத்துக் கொள்ளும்.

Translation: When the crested red cock and hen scratch the junkyards, specks of diamonds would be stirred up. Passing sparrows would mistake them for fireflies (glow-worms) and pick them for (lighting) their nests.

Elucidation: If the drainage showed well regulated administrative mechanism, here, the garbage vouches to the bountiful homes.

எல்லாம் ஒலிமயம் Noises Noises everywhere, Joys to the ears they always swear

தோயும் வெண்தயிர் மத்துஒலி துள்ளவும்,

மாய வெள்வளை வாய்விட்டு அரற்றவும்,

தேயும் நுண்இடை சென்று வணங்கவும்,

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28

சொற்பொருள்: ஒலிதுள்ள விட்டுவிட்டு ஒலிக்க. மாய வெள்வளை அபூர்வமான வேலைப்பாடுகளைக் கொண்ட சங்குவளைகள்.

பாறையைப்போல் இறுக்கமாகத் தோய்ந்திருக்கும் தயிரைக் கடைவதனால் ஏற்படும் மத்தின் ஒலி விட்டுவிட்டுக் கேட்கவும், அவர்கள் கைகளில் அணிந்திருக்கும்வேலைப்பாடுகள் நிறைந்தசங்கு வளைகள் ஒன்றோடொன்று மோதி ஒலி எழுப்பிய வண்ணமாக இருக்கவும், மெலிந்த அவர்களுடைய இடை முன்பக்கமாகச் சாய்ந்து தளர்ந்து போகும்படியாகவும் அவர்கள் கடைகின்ற காரணத்தால் அவர்களுடைய கைகள் சோர்வடைந்தன.

தயிர் அவ்வளவு கெட்டியாகத் தோய்ந்திருக்கிறது. அத்தனை மிகுதியாக இருக்கிறது.

Translation: Women in the households of cowherds were engaged in churning curds that hard formed rock-hard. The noise of their churning-rods (immersed in huge pots of curds) turning and twirling filled the air; the inctricately carved shell bangles* jangled as they spun the rods in the pots. The continued toil for a long time made their slender waists waving side-to-side droop and tumble; and their hands grew tired.

Elucidation: Milk is curdled overnight and is churned to dilute the curds into buttermilk and for separating butter in the process. It was a manual process those days, requiring a lot of hard labour. Obviously the pots were huge, the quantity of curds was high and were almost solid.

*Shell bangles were bangles cut from the shells of mollusks. ‘mAya veL vaLai’ says the poet. The white (shell) bangles with the magical workmanship.

தினைச் சிலம்புவ, தீம்சொல் இளங் கிளி;

நனைச் சிலம்புவ, நாகுஇள வண்டுபூம்;

புனைச் சிலம்புவ, புள்இனம்; வள்ளியோர்

மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29

சொற்பொருள்: சிலம்புவ ஒலிப்பன. சிலம்புதல் ஒலித்தல். புனை நீர்நிலைகள். வள்ளியோர் வள்ளல்கள். வள்ளை உலக்கையால் நெல்குத்தும் பெண்கள் (அச்சமயத்தில்) பாடும் பாட்டு. இரண்டாவது அடியை ‘நாகிள வண்டு, பூம்நனைச் சிலம்புவஎன்று கூட்டுக.

தினைப்புனங்களில் கிளிகளின் இனிய குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். மிக்க இளமையுள்ள வண்டுகள் பூக்களிலும் அரும்புகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். நீர்நிலைகளில் பல்வேறுபட்ட பறவையினங்களின் ஆரவாரம் கேட்டுக் கொண்டிருக்கும். கொடையாளர்களின் வீடுகளிலோ உலக்கைப் பாட்டின் ஒலியே பெரிதாகக் கேட்கும்.

விருந்தினர்களுக்கு அமுது படைப்பதற்காக எந்நேரமும் வள்ளல்களின் இல்லங்களில் பெண்கள் நெல்குத்தும் பணியில் ஈடுபட்டவண்ணமாக இருப்பதனால், அவர்கள் பாடும் பாடல் தொடர்ந்து ஒலித்த வண்ணமாக இருக்கும்.

Translation: Millet-fields were filled with the prattle of parrots; buds and blossoms surrounded by the buzz of swarming bees; pools and lakes echoed the chirp, chatter, tweet, twitter, coos and caws of every kind of bird; and in the houses of largehearted philothropists, prevailed the songs of the ‘pestle-maids’.

Elucidation: Paddy had to be manually pounded to separate chaff from grain. In the houses of philanthropists, rice was needed in huge quantities and they had engaged a large number of maids for the job. From their houses issued a continuous stream of the songs of maids-at-work, indicating the work was going on ceaselessly (and the quantity of rice obtained as well as the number of guests who would be served).

பெருகிக் கிடக்கும் நால் நில வளம் – Bounties of the lands-four

குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி

கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்

முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,

சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30

சொற்பொருள்: பாகு பாக்கு. கோள்நெறி களவு, திருட்டுத்தனம். நுளைச்சியர் மீனவப் பெண்கள். கொழிப்பனஇ கொழித்தல் ஒரு பொருளைக் குப்பை முதலானவற்றைக் களைந்து நீ்க்கிச் சுத்தமாக்குதல்.

பறித்து எடுத்து வந்த பாக்கைக் காயவைத்து, அவற்றைக் கொழித்துச் சுத்தப்படுத்துவோர்கள், அவற்றில் ‘குப்பைஎன்று பொறுக்கி நீக்குவது எதனை என்றால், கள்ளம் அறியாத, திருட்டு குணம் இல்லாத, கரிய கண்களை உடைய மீனவப்பெண்கள் தம்முடைய முற்றங்களில் வாரி இறைத்திருந்த முத்துகளைத்தான்.

இதுமுதல் ஆறு பாடல்களுக்குத் திணை மயங்கியல் என்ற உத்தியைக் கையாள்கிறான் கவிஞன். திணை, திணை மயக்கம் பற்றிய ஒரு சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது.

திணை என்பது ஐந்து வகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அவை. ஒவ்வொரு நிலத்திலும் காணப்படும் மரங்கள், பூக்கள், விலங்குகள், மனிதர்களின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்று வகைவகையாகத் தமிழ் இலக்கணம் வகுத்திருக்கிறது. ஒரு திணைக்கு உரிய பொருளை இன்னொரு திணையில் பயன்படுத்துவதாகக் கவிஞன் சொல்லக்கூடாது என்பதற்காகவே இந்த வகைப்பாடு. முறையாக இலக்கணத்தைக் கற்ற கவிஞன் என்றால், ‘வலையோடு திரிந்து கொண்டிருக்கும் உழவன், ஏர்க் கலப்பையோடு சென்று கொண்டிருக்கும் வேடன், வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்ட மீனவன்என்றெல்லாம் மயக்கம் தரும்படிப் பாட மாட்டான். ஒரு படைப்பில் இப்படி மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அப்படிப்பட்ட இடங்களைத் திணை மயக்கம் என்பது வழக்கம்.

திணை மயக்கம் எப்போதும் தவறாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இன்றைய மொழியில் சொன்னால், ‘கழிவறையில் கிடக்கும் பால்செம்பு; படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கும் காஸ் அடுப்பு‘ என்பனவெல்லாம் பொருத்தமற்ற வருணனைகள் என்பதை ஒப்புக் கொள்வோம். திணை மயக்கம் என்று இலக்கணம் குறிப்பிடுவது இதைத்தான். ஆனாலும், நல்ல எழுத்தாளனிடம் திணைமயக்கமும் ஒரு உத்தியாகப் பயன்படும். ‘(கைகழுவி வாய்) கொப்புளிக்கும் பிறையின் (வாஷ் பேஸின்) மேல் ஸ்வாமி படம் மாட்டப்பட்டிருந்ததுஎன்று எழுதினால் சிரிப்போம். ஆனால், ‘குளியலறையில் புத்தக அலமாரி இருந்ததுஎன்று சொன்னால், அது அந்த வீட்டில் இருப்பவனுடைய குணத்தைச் சித்திரிக்கிறதல்லவா? அவனுடைய புத்தகக் காதல் பெரிது என்று தெரிகிறதல்லவா? அதைப்போலவே, புத்தக அலமாரியை வைக்கும் அளவுக்கு அவருடைய குளியல் அறை பெரிதாக இருந்தது என்பதும்; குளியல் அறையே பெரியது என்றால் அந்த வீடு எவ்வளவு பெரியது என்பதும் சொல்லாமல் சொல்லப்படுகின்றன.

அப்படிப்பட்ட உத்தியைத்தான் இந்தப் பாடலிலும், இதைத் தொடர்ந்து வரும் ஆறு பாடல்களிலும் செய்கிறான் கவி.

பாக்கைச் சுத்தம் செய்யும் மருத நிலத்துப் பெண்கள் ‘குப்பை‘ என்று நெய்தல் நிலத்துப் பெண்கள் வாரி இறைத்த முத்துக்களை என்றால், பண்ணை நிலங்களும் கடற்கரையை ஒட்டிய நிலங்களும் அருகருகே இருந்தன என்பதும்; மீனவர்கள் மீன்பிடித்து வந்த சமயத்தில் அவர்களுடைய வலைகளில் அகப்பட்ட முத்துகள் அவர்களுடைய இல்லங்களின் முன்னால் குப்பையாகச் சிதறிக் கிடக்கும் என்பதும்; அந்த முத்துகள் அருகிலேயே கிடக்கும் (பறிக்கப்பட்டு, இன்னமும் சுத்தப்படுத்தாத) பாக்குகளின் குவியலோடு கலக்கும் என்பதும்; கள்ளம் அறியாத நெய்தல் நிலப் பெண்கள் அவ்வாறு (விலைமதிப்பற்ற) முத்துகள் இறைபடுவதை அறியவில்லை என்பதும்; சுத்தப்படுத்தும மருதநிலத்துப் பெண்கள், பொறுக்குவது முத்தே என்றாலும் அது தனதில்லை என்பதனால் மற்ற குப்பைகளை ஒதுக்குவதைப் போலவே இதையும் ஒதுக்குகிறார்கள், ஆகவே இவர்களும் கள்ளம் அறியாதவர்கள் என்பதும் குறிப்பால் உணர்த்தப்படுபவை.

கவிதானுபவம் என்பது இப்படிப்பட்டவற்றையும் உள்ளடக்கியதுதான.

Translation: All that the innocent girls working in the farmlands, while cleaning the dried areca-palm, threw away was nothing but the pearls that lay scattered in the front-yards of the huts where the dark-eyed, (plain living, simple) women of the fisherfolk, not skilled in ways of robbery, lived.

Elucidation: The English language has such a thing called ‘mixed metaphors’. You can never unsheathe a gun; fish in a troubled desert; or find a farmer who uses the fishnet. The ancient grammarians of Tamil have taken great pains to classify lands into five, namely, Kurinji – hills and hilly tracts; Mullai – Jungle and surroundings; Marudham – Farm and farmlands; Neidhal – Sea, seashore and adjacent area, and finally, Paalai – Deserts and desertlands. The first four categories get all the attention of poets, deserts being really deserted, uninhabitated, frequented only by a few selected birds, animals, waylayers etc.

The grammar books give also a vivid list of what, who, which, how of each category of land, which includes various plants, animals, flowers, men, their lifestyle etc. This had for long been an essential tool for every scholar, every poet and every learned person worth his salt. One should remember the geography, the size of this country and the availability of transportation in those days. A poet living in yonder hills need not have had opportunity to visit a seashore; yet he can describe the sea and the life going around it, visualizing all in his mind with the aid of his tools.

It therefore was possible for poets of those days not to write such incongruities as ‘a farmer moving about with the fishnet; a hunter going about with the plough, or a fishermen wandering with the bow’. Inappropriate, inaccurate, imponderable, incongruous descriptions. The well researched and recorded grammar books of those days, (Tholkappiyam for instance, which is estimated to be about 3000 or more years old) provided all about ‘what, how, and where’ of people, animals and plants and more. Lifestyles and even local dialects to an extent. If and when a poet mixes up the products, lifestyle or any of the other properties of one category of land with that of the other, it is then known by the name ‘thiNai mayakkam’ or the confused mixture of (description of) lands.

Let us look at the scenario in today’s language. How many of us would be able to stop a hearty laughter and scorn, if we come across such a description as ‘a milkcan lying by the urinal’ or ‘a bed spread in the kitchen’ or even ‘an image of the Lord hanging over the washbasin’! It was the aim of the grammarians to educate the writer, who is the conscience keeper of the society that he represented, to use his expressions almost accurately, for whatever is written is left for the progeny, the generations that are to come. Therefore, this kind of ‘thiNai mayakkam’ is generally considered as a thing to be avoided.

But then, to the seasoned writer, even such faults serve as beautiful tools of expression. If one scoffs and mocks at such expressions as ‘a ladle in the latrine’ he or she would not fail to admire the depth of such an expression as ‘bookshelf in the bathroom’. A ‘bookshelf in the bathroom; describes the personality that dwells in the house. That shows the obsession of the personality to read and read and read. Besides, it also suggests that the bath was large enough to accommodate a bookcase, and also suggests that the residence that houses such a bathroom must be large indeed!

Sensing how a seasoned hand can turn even a flaw into flowery expression, the grammarians had also provided for a separate class known as ‘thiNai mayangu iyal’, indicating such a mixture of strange elements is also acceptable, if it serves its purpose.

Kamban employs this technique from this verse, which is to be continued in six (including this one) verses and employs the ‘mixed metaphor’, which results in gloriously rich and unstated expressions, contained in a quick sketch of strange mixture of inconsistent factors.

Look again at the above verse. What the farmland lassies cleaning dried areca palm throw away as ‘rubbish and unacceptable’ are nothing but pearls that found their way into the heaps of ‘ready for cleaning’ arecanuts. And then how did a pearl, a product of the sea, find its way into a farm? Do you see how close and contiguous were the farmland and the seashore? Do you see the fisherfolk returning with their haul of heavy nets? Are you able to picture their ‘innocent, darkeyed, never knowing the ways of stealing’ women playing with the pearls that had come along with fish, and heaping them in the frontyards of their huts, building their ‘castles in the sand’ (sorry for the mixed metaphor, it is ‘castles in pearls’ to be more appropriate!) and leaving them at that? And the pearls, because of the nearness of farmlands and their stockyards, get mixed up with raw, unprocessed arecanuts? And look at the farmland girls, they throw away these pearls that they pick while cleaning, because it does not belong to them and it is of no value to them! A picture of richness among innocence and truthfulness.

The beauty of poetry is, ‘the unstated word states more than the stated’. If one remembers, this is what Keats stated as –

“Heard melodies are sweet, but those unheard
Are sweeter”

We are going to see such admirable non-statements in five more verses.

2 Replies to “கம்பராமாயணம் – 9 (Kamba Ramayanam – 9)”

  1. “சொல்லாத வார்த்தை சொல்லியதை விட அதிகம் சொல்லும்!” – கவிதையின் அழகு.

    “கேட்ட இன்னிசை சுவை; கேட்காதது அதை விட சுவையானது”. – கீட்ஸ்

    அழகு! திணைமயங்கியல் அற்புதம்!

    “சொல்லாமல் சொல்லுவது தான் கவிதை” என்று எங்கேயோ படித்தது தான் ஞாபகம் வருகிறது. தொடரட்டும் தங்கள் சீரிய பணி. வாழ்த்துக்கள்.

  2. திரு ஹரன்,

    சொல்லாமல் விட்ட மறுமொழிகளைக் காட்டிலும் சொல்லியிருக்கும் மறுமொழியால் மட்டுமே மகிழ்ச்சி அதிகம்.:-))

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *