இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க,

இந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள். இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.

மூலம்: Complete-Works / Volume 3 / Lectures from Colombo to Almora / << THE COMMON BASES OF HINDUISM

நன்றி: எழுமின் விழுமின்! விவேகானந்த கேந்திர வெளியீடு, பக்கம் 15.

2 Replies to “இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்”

  1. ஒவ்வொரு இந்துவும் படித்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய சத்திய வசனங்கள். இந்த உணர்வு இல்லாததால்தான் இந்து தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு வாழ்கிறான். சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *