தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார்.

ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.

 

14 Replies to “தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்”

  1. Dear Mr Jayamohan
    The respect we have for your talent in writing has increased after reading this article of yours.
    Not everyone in Tamilnadu has the guts to call a spade a spade -You have done it and hats off to you.
    Your punch lines at the end are good and hope the concerned understand .
    Swami Vivekananda said this -even a 100 years ago, things were the same.
    Apologies for writing in English-I dont have access to Tamil fonts.Once again hats off to your article.
    Lets not stop calling a spade a spade.
    Regards

  2. ஒரு மாபெரும் வரலாற்று மோசடியின் பின்னணியைத் துணிந்து கண்டித்திருக்கும் ஒரு அபூர்வமான கட்டுரை இது. தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழ் சிந்தனை உலகில் இருந்து இப்படி ஒரு மனசாட்சியின் உண்மைக் குரல் வந்தது எதிர்பாராத ஒன்று. இதை அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுத்து மீள்பிரசுரம் செய்து அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்த தமிழ் இந்துவுக்கு எனது நன்றிகள்.

    இது போன்ற கிருத்துவ மிஷனரிகளின் பித்தலாட்டங்களை துணிந்து துகிலுரிக்க அசாத்திய துணிவு வேண்டும். தமிழ்நாட்டு எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் மிஷநரிகளின் திரிப்புகளைப் பொதுவாகக் கண்டு கொள்வது இல்லை அல்லது அவற்றை நியாயப் படுத்துவதே தங்கள் பணியாகக் கொண்டிருக்கின்றனர் இஸ்லாமியத் தீவீரவாத விஷயத்திலும் தமிழ் நாட்டின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மதச்சார்பின்மை என்ற போர்வையில் தீவீரவாதிகளுக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவித்தே வருகின்றனர். அல்லது எது வியாபாரம் ஆகும் அல்லது யார் பணம் கொடுப்பார்கள் என்பதை வைத்தே தமிழ் நாட்டு எழுத்தாளர்/சிந்தனையாளர்களின் பொதுச் சிந்தனை, கருத்து சமூக விரோத கருத்தாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது. கோவையில் குண்டு வைத்த தீவீரவாதிகளின் விடுதலைக்காகக் காசு வாங்கிக் கொண்டு கையெழுத்து வேட்டை நடத்தும் எழுத்துலக விபச்சாரிகளாகவே பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள் இயங்கி வரும் நிலையில், தம் பாரம்பரியமும், வரலாறும் சிதை படுவது கண்டு மனம் பொறாமல் உண்மையை உரக்கச் சொல்லத் துணிந்த இந்தக் கட்டுரை பேராண்மையின் குரலாக ஒலிக்கிறது.

    படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்று பாரதி சொன்னார் ஆனால் தமிழ் நாட்டிலோ சூது செய்வதற்கென்றே தனியாகப் படித்து விட்டு வருபவர்களே இன்றைய தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உலவி வருகிறார்கள். இது போன்ற சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும், தீமைகளைக் கண்டு கொள்ளாமல் அவற்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் போலி அறிவு ஜீவி/எழுத்தாளர்கள் மத்தியில் உண்மையை உரக்கவும், துணிந்தும் சொன்ன ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். பல்லாயயிரக்கணக்கான வருடப் பாரம்பரியம் உடைய ஒரு மாபெரும் வரலாற்றை, இலக்கியத்தை மாற்றி மோசடியாக எழுதத் துணிந்த புளுகர்களின் முகமூடியைத் துணிந்து களைந்த ஜெயமோகன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகுக.

    இன்றைய தமிழ் சூழலில் மைனாரிட்டிக்கள் எதைச் செய்தாலும் அதைக் கண் மூடித்தனமாக ஆதரிப்பதுதான் மதச் சார்பின்மை என்று செயல் பட்டு வரும் தமிழகச் சூழலில் ஒரு மாபெரும் வரலாற்று மோசடியை ஆணித்தரமாகக் கண்டித்த ஜெயமோகன் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

    அன்புடன்
    ச.திருமலை

  3. //ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு.//

    இதனை இங்குள்ளவர்கள் உணறுவார்கள் என்று நான் நம்பவில்லை. தமிழர்கள் பெரும்பாலும் தாங்கள் இந்து இல்லை என்றே நம்புகிறார்கள். இதற்கு பெரியாரின் தொண்டு மிக அதிகமாகவே இருக்கிறது. பெரியாரிஸ்டுகளை பொருத்த வரை இந்து மதத்தை விட மற்ற மதங்கள் மேலானவை என்ற கருத்தினை கொண்டிருப்பதே. ஆனால், மற்ற மதங்களை காட்டிலும் இந்த எ௯cலுவிசிட்ச் ஆப்ரகாமிய மதங்கள் ஆபத்தானவை. இன்று இந்து மதத்திற்கு எதிரான போக்கிற்கு வக்காலத்து வாங்குபவர்கள், நாளை அதற்கான விலையை கொடுக்கவேண்டும்.

    சரி! ஒரு வேளை திருவள்ளுவர் கிருத்துவத்தை தான் போற்றினார் என்றே மக்கள் நம்பத்தொடங்கி, திருவாசகம் கிருத்துவத்தையே பிரதிபலிக்கிறது என்ற நிலை வருமானால் இங்குள்ள திராவிட இயக்கங்கள் என்ன சொல்லும்? வரவேற்குமா / வசை பாடுமா? எனகென்னவோ வரவேற்கும் என்று தான் தோன்றுகிறது.

  4. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, திட்டமிட்டு மறைக்கப்படுகின்ற அண்மைக்கால வரலாற்றையும் அதற்குத் துணைபோகின்றவர்களின் அடையாளத்தையும் சுட்டிக் காட்டுகின்ற துணிவு இன்று நம் தமிழகத்தில் சில பேருக்கே இருக்கின்றது. அச்சிலரில் தாங்களும் ஒருவர். பிராமண எதிர்ப்பும் வடமொழி வெறுப்பும் தமிழகத்தில் கால்டுவெல் போன்ர மிஷனரிகளால் ‘டைம்பாம்’ ஆகப் புதைக்கப்பட்டு, அவை வெடிக்கத் தொடங்கியுள்ளன. வைணவர்களைக் காட்டிலும் வடமொழி வெறுப்பும் பார்ப்பனத்துவேஷமும் கொண்ட சைவர்கள் தெய்வநாயகம், தேவகலா போன்றவர்களின் பொய்மொழிகளுக்கு எளிதில் இரையாவது கண்டு என்னைப் போன்ற சைவர்களுக்கு வருத்தமும் கலக்கமும் உண்டாகின்றது. இந்த பதிவினை நகல் எடுத்து என் நண்பர்களுக்கு வழங்குகின்றேன்.

  5. Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
    திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
    Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
    “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

    இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

  6. தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்
    கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
    கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.

    கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
    கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

    திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.

    திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.

    பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”

  7. From the Book-
    திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
    பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
    Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

    The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

    இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

    1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

    அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

    இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
    கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போத்ள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

    The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
    போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
    ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.
    Dr.சு.ராஜசேகரன்.,1989,

    தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
    மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
    The Ninth Act: of the Wife of Charisius.
    87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;

  8. Apologies for writing in English.

    I have been reading the articles in this site and its really a great work by the tamilhindu team. Mr.Jayamohan’s article is amazing. Thanks for the wonderful work sir.

    Madam Devapriya’s comment is very much revealing. Sambandar has sung Kapleeswarar and Arunagiri’s tirupugazh gives the geographical location of the Kapli temple, which is surely not the current position.

    The current Santhome Church was built on top of the Kapli Temple after demolishing the kapli temple. The basement of the Santhome church has epigraphs, which clearly says there was a siva temple and a jain temple nearby. Dr.Nagasamy, one of the great historians of our time has researched and wrote on this. Also, I heard that there is an epigraph in current Kapli temple, which is upside down, clearly mentioning that its not the original structure, but a reassembled one with stones from the original temple. The irony is, the epigraph in the basement of Santhome church has been covered for ever by cement, in the name of renovation in 2006. (Like wise one of Mahendra varmans kudavari, one of the 6 or 7 he built, has been converted as a mosque in Pallavaram and the proof’s have been erased for ever by tiles and cements)

    coming to the St.Thomas part – I wanted to get a first hand info and hence read the original version of Travels of Marco Polo, because Marco Polo is the one quoted often for he has mentioned his visit to the tomb of St.Thomas. Marco describes the land as Maabar (malabar) but its assumed that he mentions all the part north of Kanyakumari (end of Malabar region) as Maabar by mistake. There is no mention of any hill (St.Thomas Mount). Though christians were present and people made pilgrimage to St.Thomas tomb, Marco never says that St.Thomas was killed by brahmins. He mentions that the legend is, a hunting community, whom he calls as Gaur or Gave (not sure) who does not kills cows, but eats cows if killed by Sarcasens (I think muslims). This hunting community, while hunting for Peococks, accidentally shoots an arrow, which hits St.Thomas and hence he dies.

    This is the actual version from Marco Polo. I am not sure how the story of brahmins killing St.Thomas came into Picture.

    People should raise up to the occasion and try to understand that whatever has been told to us in the name of history is all bluff and try to understand the real history.

    Satish

  9. Ada payetheyame.!!!.. too good and hillarious.. keep the good work .. it was fun reading it..!!..

  10. பொய்கள் நீண்ட நாட்கள் வாழ முடியாது. ஜெயமோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  11. Sorry for typing in English !

    Aayiram kaigal maraitthu nindraalum aadhavan maraivadhillai !
    Mundaka Upanishad says “Sathyameva Jayathe naanritham” ( Truth alone triumphs, not lies )

    In Chritstianity, St.Thomas is called “Doubting Thomas”, because he did not believe other Christians’ claim that Jesus was resurrected !
    https://en.wikipedia.org/wiki/Doubting_Thomas

    So no doubt that people will surely doubt this new Thomas blah-blah by the Missio”naris”.
    But we Hindus have to blame ourselves for all this..We stand divided by castes. Then what is the solution ? No problem if one maintains the uniqueness of his caste, but he has to remember that he has a bigger brotherhood called Hinduism and all other caste people are his own brothers.

  12. கிறிஸ்துவ மதமாற்ற பிரச்சாரத்தை சந்திப்பவர்களுக்கு ஒரு அற்புதமான நூல், ஆறுமுக நாவலர் அவர்களுடையது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது.

    (Link dead)

  13. நண்பர்களே,

    மன்னிக்கவும்.

    ஆறுமுக நாவலர் அவர்களின் – சைவதூஷண பரிகாரம் என்ற நூல் தான் நான் சென்ற முறை இணைப்பு கொடுக்க முயன்றேன்.

    நானே இப்பொழுது இணையத்தில் ஏற்றி உள்ளேன்.
    தொடுப்பு கீழே உள்ளது.
    https://www.esnips.com/doc/188f7995-5f94-46fa-83f8-079334a33047/SaivaThushanaPaarikaram-AarumugaNavalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *