மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்

பின் வருவது அருணகிரி அவர்கள் எழுப்பிய கேள்வி:

ஹரிகி அவர்களுக்கு,எனக்கு இதில் வரும் சந்தேகம் ஒன்றைக்கேட்டு விடுகிறேன்: பாண்டவ-கௌரவர்களுக்கு தனுர் வித்தை சொல்லிக்கொடுத்து முடித்து அதன் முடிவில் (நடக்கும் க்ராஜுவேஷன் போன்ற ஒரு போட்டியில்) தானே கர்ணன் வருகிறான்? அதன் பிறகுதானே துரியோதனன் அங்க நாட்டையும் தந்து அவனைத்தன் நண்பனாகவும் ஏற்கிறான்? அதன் பிறகும் துரோணர் தொடர்ந்து கற்பித்திருந்தால்தான் பாண்டவ- துரியோதனர்களோடு கர்ணனும் துரோணரின் மாணவனாக இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அப்படித்தான் நடந்ததா அல்லது என் புரிதலில் தவறு ஏதும் உள்ளதா?

அருணகிரி.

கேட்டதற்கு நன்றி அருணகிரி. கேட்டால்தானே பேச வாய்ப்பு கிடைக்கிறது!

நீங்கள் சொல்லும் அந்த இடத்தில்தான் கர்ணனுடைய என்ட்ரி பல சித்திரங்களில் காட்டப்படுகிறது. கர்ணன் சினிமாவிலும் சரி, மகாபாரத தொலைக்காட்சித் தொடரிலும் சரி, இவ்வாறுதான் காட்டப்படுகிறது. கர்ணனுக்கு முதலில் இடப்பட்ட பெயர் வசுசேனன். அவன் எவ்வாறு கர்ணன் என்றழைக்கப்படலானான் என்று மஹாபாரதம் இவ்வாறு சொல்கிறது:

“The son of Surya was before this known by the name of Vasusena. But since he cut off his natural armour, he came to be called Karna (the cutter or peeler of his own cover).’

கவச குண்டலங்களோடு பிறந்ததால் கர்ணன் என்ற பெயர் ஏற்பட்டதாகப் பலர் சொல்வார்கள். மஹாபாரதம் சொல்லும் விளக்கம் இதுதான். தன்னுடன் பிறந்ததான கவசத்தைத் தானே பிளந்துகொண்டவன் என்ற காரணத்தால் கர்ணன் என்று பிற்காலத்தில் அறியப்பட்டான். (ஆதிபர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 61)

ஆகவே, கர்ணன் என்ற பெயரோடுகூட வசுசேனன் என்று குறிப்பிடப்படும் இடங்களையும் தேடி இனங்கண்டால்தான் சித்திரம் முழுமையடையும். அதுவும் போதாது, ராதேயன் என்று சொல்லப்படும் இடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கௌரவர்களிலேயே (நூற்றுவரில்) ஒரு கர்ணன் உண்டு. எந்தக் கர்ணன் குறிப்பிடப்படுகிறான் என்று கான்டெக்ஸ்ட்டும் பார்க்க வேண்டிவரும். சிரமமான பணிதான்.

எனவேதானோ என்னவோ, கர்ணனுடைய முதல் என்ட்ரியை எல்லோரும் நீங்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் காட்டிவிடுகிறார்கள். ஆனால், அதற்கு முற்பட்ட பல இடங்களில் கர்ணனுடைய பெயர் வருகிறது. துரியோதனுடைய தம்பியான கர்ணன் இல்லை, வசுசேனனாகிய கர்ணன்தான் இது என்று தீர்மானிக்க நிறையவே இடமிருக்கிறது.

“இவ்வாறு துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் பல உபாயங்களால் பாண்டவர்களைக் கொல்ல முயன்றார்கள்” (ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ஸ்ரீ மஹாபாரத ஸாரம், கௌரவ பாண்டவ யௌவன லீலை, அத்தியாயம் 128, ஸ்லோகம் 40)

பீமனுக்கு நஞ்சூட்டிக் கொல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் சொல்லப்படுவது.

“When that terrible poison intended for the destruction of Bhima failed of its effect, Duryodhana. Karna and Sakuni, without giving up their wicked design had recourse to numerous other contrivances for accomplishing the death of the Pandavas

[HK1]Karna is here alredy.
[HK2]Still clueless as to when he returned.

இது சம இடத்தில் கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் காணப்படுவது. (HK என்று காணப்படும் குறிப்புகள் என்னுடையவை)

இதன் வடமொழி வடிவம்:

tato vaikartanaḥ karṇaḥ śakuniś cāpi saubalaḥ
anekair abhyupāyais tāñ jighāṃsanti sma pāṇḍavān

ஆகவே, துரோணர் பயிற்சி அளிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே கர்ணன் அந்த அரண்மனையில் பரிச்சயமானவனாகவும், துரியோதனனுடைய தோழனாகவும் இருந்திருக்கிறான். பாண்டவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.

ஸம்பவ பர்வம் 130ம் அத்தியாயம் சொல்வது இது:

“Vaisampayana continued, ‘Hearing these words, the Kuru princes remained silent. But Arjuna, O king, vowed to accomplish it whatever it was. Drona then cheerfully clasped Arjuna to his bosom and took the scent of his head repeatedly, shedding tears of joy all the while. Then Drona endued with great prowess taught the sons of Pandu (the use of) many weapons both celestial and human. And, O bull of the Bharata race, many other princes also flocked to that best of Brahmanas for instruction in arms. The Vrishnis and the Andhakas, and princes from various lands, and the (adopted) son of Radha of the Suta caste, (Karna[HK1] ), all became pupils of Drona. But of them all, the Suta child Karna, from jealousy, frequently defied Arjuna, and supported by Duryodhana, used to disregard the Pandavas. Arjuna, however, from devotion to the science of arms, always stayed by the side of his preceptor, and in skill, strength of arms, and perseverance, excelled all (his class-fellows). Indeed, although the instruction the preceptor gave, was the same in the case of all, yet in lightness and skill Arjuna became the foremost of all his fellow-pupils. And Drona was convinced that none of his pupils would (at any time) be able to be equal to that son of Indra.

[HK1]Karna, disciple of Drona

தெள்ளத் தெளிவாக, கர்ணன் துரோணரிடம் பயிற்சி பெற்றான் என்பது சொல்லப்படுகிறது. (அத்தியாயம் 134)

இங்கே மட்டுமன்றி, குருதட்சிணையாக, பாஞ்சால மன்னனை வெற்றிகொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துரோணர் சொல்லும்போது முதலில் துரியோதனாதியர் போருக்குச் செல்கின்றனர். அவர்கள் பாஞ்சாலினடம் தோற்றுத் திரும்பிய சமயத்தில், பாண்டவர்கள் சென்று, வென்று வருகின்றனர். துரோணரிடம் கற்றதற்காக குருதட்சிணை செலுத்த வேண்டி பாஞ்சாலன்மேல் படையெடுத்துச் சென்ற கௌரவர்கள் பட்டியலில் கர்ணன் பெயரும் இடம் பெறுகிறது:

“Vaisampayana continued, ‘Beholding the Pandavas and the son of Dhritarashtra accomplished in arms, Drona thought the time had come when he could demand the preceptorial fee. And, O king, assembling his pupils one day together, the preceptor Drona asked of them the fee, saying, ‘Seize Drupada, the king of Panchala in battle and bring him unto me. That shall be the most acceptable fee.’ Those warriors then answering, ‘So be it’, speedily mounted up on their chariots, and for bestowing upon their preceptor the fee he had demanded, marched out, accompanied by him. Those bulls among men, smiting the Panchalas on their way, laid siege to the capital of the great Drupada. And Duryodhana and Karna [HK1] and the mighty Yuyutsu, and Duhsasana and Vikarna and Jalasandha and Sulochana,–these and many other foremost of Kshatriya princes of great prowess, vied with one another in becoming the foremost in the attack. And the princes, riding in first class chariots and following the cavalry, entered the hostile capital, and proceeded along the streets.

[HK1]This emphasises the fact that Karna had studied under Drona and that he went in battle to ‘pay his fees’.

(மஹாபாரதம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 140)

எனவே, கர்ணன் முதலில் க்ருபரிடத்தும் பின்னர் துரோணரிடத்தும் பயிற்சிபெற்றதன் பின்னரேயே பரசுராமரிடம் பயிற்சிபெறுவதற்காகச் சென்றான் என்பது உறுதியாகிறது. கர்ணன் பரசுராமரிடம் பயிற்சி பெற்ற கதை, யுத்தமெல்லாம் முடிந்து, ‘அண்ணனைக் கொன்றுவிட்டேனே’ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தர்மபுத்திரனிடம், நாரதர் விவரிப்பதாக வருகிறது. எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவன் பரசுராமரிடம் போய்ச் சேர்ந்தான் என்பதைப் பற்றி வியாச பாரதம் சொல்வதை அடுத்த முறை சொல்கிறேன். துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.

போட்டிக் களத்தில் அவன் நுழைவதும், ‘இது யார்’ என்று மக்கள் எல்லோரும் வியப்போடு பார்ப்பதும் வியாச மூலத்தில் இருக்கிறது. எனவே, இடையில் சிறிது காலம் அவன் (may be for being trained by Parasurama) பிரிந்து சென்றிருக்கிறான். அது மட்டுமில்லை. கர்ணனைப் பற்றி அதற்கு முன்னால் துரியோதனனுக்குத் தெரியவே தெரியாது, ஏதோ அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்து இருவரும் நட்புப் பூண்டனர் என்பது போன்ற சித்திரிப்பெல்லாம் தவறே என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களால் நிரூபிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், விளையாட்டரங்கில் கர்ணன் வந்து திடீரென்று தோன்றுவான் என்பது துரியோதனனுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தது என்று ஊகிக்கவும் நிறையவே இடமிருக்கிறது. இவற்றுக்கான ஆதாரங்களை எல்லாம் இந்தத் தொடரில் அடுத்தடுத்த தவணைகளில் தருகிறேன்.

இதற்கு அருணகிரியின் எதிர்வினை:

ஹரிகி அவர்களே,பிரமாதம், இது முக்கியமான விஷயம், யாராலும் அதிகம் பேசப்படாத விஷயம். கர்ணன் என்ற தேரோட்டி மகனுக்கு இளவரசுகளுடன் சேர்த்து துரோணர் தனுர் வித்தை பயிற்றுவித்தார் என்பதே பல சுவாரஸ்யங்களுக்கும் சாத்தியக்கூறுகளுக்கும் இடம் தருவதாக எனக்குத் தெரிகிறது:
1. மற்ற இளவரசுகளோடு சூத புத்திரன் கர்ணன் என்று தனித்துச் சொல்வதால், ராஜ குலப்பயிற்சியில் எக்ஸப்ஷனாக இவன் மட்டுமே சேர்க்கப்பட்டான் என்று கொள்ளலாம் என நினைக்கிறேன். (லாமா?)

2. ஏன் அவ்வாறு சேர்க்கப்பட வேண்டும்? கவச குண்டலத்தோடு பிறந்தவன் என்ற செய்தி பரவியிருந்ததால் இவன் ஸ்பெஷல் என்று முடிவு செய்து இவனைச் சேர்த்திருக்கலாமோ?
3. கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்ற செய்தி பரவலாகத்தெரிந்ததென்றால் குந்திக்கும் இது கட்டாயம் தெரிந்திருக்கும். அதனாலேயே அவனைத் தன்மகன் என அப்போதே யூகித்து அவனுக்கு இளவரசுகளோடு பயிற்சி கொடுக்க அழுத்தம் தந்திருக்கலாம். துணியை அணிந்து உடல் தகிக்கும் கதையெல்லாம் வியாசபாரதத்தில் இல்லை என நினைக்கிறேன். முன்னமேயே அவளுக்குத் தெரிந்திருந்ததோ? குந்தி தன்னைத் தாயெனச்சொல்கையில் கர்ணன் பெருவியப்பு அடைந்ததுபோல் படித்ததாக நினைவில்லை. குறைந்தது குந்திக்கு கர்ணன் யாரென்பது முதலிலேயே தெரிந்திருக்க வேண்டும். சந்தேகோபாஸ்தமாக கர்ணனுக்கும் கூடத் தெரிந்திருக்கலாம். இது பாண்டவ கௌரவர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். இப்படி யோசித்தால் தேரோட்டி மகனுக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகை என்பதற்கு சில புதுவிளக்கங்கள் கிடைக்குமோ?

அருணகிரி

தொடர்ந்து நடராஜன் ஸ்ரீனிவாசன் எழுதியது:

கர்ணன் திரைப்படத்தில் வில்வித்தைக் காட்சியில் ‘நானும் உங்கள் மாணவர்களில் ஒருவன்’ என்று கர்ணன் சொல்வதாக நினைவு.நடராஜன்.

இவற்றுக்கும் இதன்மேல் வாசகர்கள் எழுப்பப்போகும் கேள்விகளுக்கும் தொடர்ந்து வரும் தவணைகளில் விடை சொல்கிறேன். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். கேள்விகளை எழுப்புவதாக இருந்தால் அவற்றை editor@tamilhindu.com என்ற முகவரிக்கு அனுப்பவும். உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி விவரங்களுடனும், விடையுடனும் வெளியிடப்படும். பெயரோ, மின்னஞ்சல் முகவரியோ அல்லது இரண்டுமோ குறிப்பிடப்பட வேண்டாம் என்று கருதுபவர்கள், அந்த விவரத்தைத் தனியே குறிக்கவும்.

முந்தைய தவணை

அடுத்த தவணை


8 Replies to “மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்”

  1. மகாபாரதத்தின் தமிழாக்கம் ந்ருஸிம்ஹப்ரியா பத்திரிகையில் தொடர்ந்து வந்தவற்றைச் சேர்த்து வைத்துள்ளேன். அதைத் துருவிப் பார்த்ததில், தாங்கள் குறிபிட்ட 61-ம் அத்தியாயம் “அம்சாவதரண பர்வத்தில் வருகிறது. அதில் வைசம்பாயனர் பாரத் கதையைச் சுருக்கமாகச் சொல்வதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் கர்ணன் பற்றித் தாங்கள் கூறியபடியே இருக்கிறது.
    ஆனால், கர்ணனின் முதல் பிரவேசம் 146 வது பர்வத்தில் அரங்கில் அவன் நுழையும்போதே குறிப்பிடப்படுகிறது. அப்போதுதான் அவனைப் பார்த்து “உன் தாய் தகப்பன் பேரைச் சொல்” என்று கிருபாசாரியார் கேட்கிறார்.
    எனவே கர்ணன் முன்னதாகவே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் தெரிந்திருப்பதாகக் காணப்படவில்லை.
    அடியேன் குறிப்பிட்ட பர்வத்தைப் பார்த்துக் கொள்ளுமறு கேட்டுக்கொள்கிறேன்.
    சீனிவாசன்

  2. வில்லியில் ஒரு பாடல்:

    ” ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியளா மென்று
    ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்
    சோதிடம் பொய்யாதென்றும் தோன்றுவர் உரியோரென்றும்
    தாதியர் தேற்றத் தேற்றத் தன்மனம் தளர்வு தீர்வாள்”

    திரௌபதி சுயம்வரம் கட்டத்தில் வரும் பாடல்.

    அவள் ஐவரை மணந்தது ஒரு விபத்து, தர்மன் சொன்னதை தாயார் குந்தி சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லியதால் , நிகழ்ந்த விபத்து என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ( என்போல் பலர் இருப்பார்கள் எனவும் எண்ணுகிறேன் ) . ஆனால் அவள் ஐவர்க்கும் உரியள் என்பது, திரௌபதிக்குமுன்பே தெரிந்திருந்தது என்பது தொனிக்க இப்பாடல் அமைந்துள்ளதே.

    அர்சுனனை மணம் புரியக் கூடிய ஒரு மகள் வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே துருபதன் யாகம் செய்ததாகவும் படித்திருக்கிறேன். அப்படியிருக்க ” ஆதியில் ஐவர்க்கும் ” என்றது எவ்வாறு ?

    தன்னுடைய மணத்திற்கு முன்னரே, திரௌபதிக்கு, தான் குந்தியின் மைந்தர் ஐவருக்கும் உரியள் என்று தெரியுமா?
    அதில் உவகை கூர்ந்தாள் ?

    வரத ராஜன்.

  3. திரு ஸ்ரீனிவாசன்: சந்தவசந்தம் குழுவில் தாங்கள் எழுப்பியிருந்த இந்த வினாவுக்கு அங்கே அளித்த விடையை இங்கேயும் இடுகிறேன்:

    //அதில் வைசம்பாயனர் பாரத் கதையைச் சுருக்கமாகச் சொல்வதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் கர்ணன் பற்றித் தாங்கள் கூறியபடியே இருக்கிறது.//

    வைசம்பாயனர்தான் முழுக் கதையையுமே சொல்கிறார். ரோமஹர்ஷணர் தொடங்குகிறார்; வைசம்பாயனர் இடையில் சேர்ந்துகொண்டு, கட்ட கடைசி வரையில் ஜனமேஜயருக்கு அவர்தான் சொல்லி முடிக்கிறார். ஆகவே, சுருக்கமாக இல்லை, விரிவாகவே வைசம்பாயனர்தான் சொல்கிறார்.

    //ஆனால், கர்ணனின் முதல் பிரவேசம் 146 வது பர்வத்தில் அரங்கில் அவன் நுழையும்போதே குறிப்பிடப்படுகிறது. அப்போதுதான் அவனைப் பார்த்து “உன் தாய் தகப்பன் பேரைச் சொல்” என்று கிருபாசாரியார் கேட்கிறார்.
    எனவே கர்ணன் முன்னதாகவே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் தெரிந்திருப்பதாகக் காணப்படவில்லை.//

    பதிப்புக்குப் பதிப்பு பர்வங்களின் எண்கள் மாறுபடுகின்றன. ஆகவே, எண்கள் match ஆகிறதா என்று பார்ப்பது இந்த ஆய்வுக்குப் போதாது. சம்பவங்களை, சம்பவத்துக்குச் சம்பவம் பொருத்திப் பார்க்க வேண்டும். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

    நீங்கள் வைத்திருக்கும் பதிப்பைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கிஸாரி மோகன் கங்கூலி பதிப்பிலும், ஸமஸ்கிருதப் பதிப்பிலும் நான் காட்டியுள்ள மேற்கோள்கள் உள்ளன. வேண்டுமானால் லிங்க் தருகிறேன். நீங்களே பார்த்துக் கொள்ள இயலும்.

    இதற்கு அடுத்த தவணையில் உரிய ஆதாரங்கள், எந்த ஸ்லோகத்தின் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுகிறது என்பன போன்ற முழுவிவரங்களையும் தருகிறேன். பல பதிப்புகளில் முழு விவரங்கள் தரப்படுவதில்லை. இணையத்தில் உள்ள சமஸ்கிருதப் பதிப்பு முழு விவரங்களுடன் கூடியது. அதுபோன்றே கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பும் ஒரு ஸ்லோகம் விடாமல் ஒவ்வொன்றையும் வர்பாடிம் மொழிபெயர்த்திருக்கிறது.

    என் ஆய்வு எப்போதுமே வெளிப்படையானது. பூடகமான வார்த்தைகளைப் போட்டு மழுப்பவதும், இல்லாததை இருப்பதுபோன்ற தோற்றத்துடன் உருவாக்குவதும் இல்லாத மிகத் திறந்த அணுகுமுறை என்னுடையது. கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் என் செயல்பாடுகளைப் பார்ப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

    //அடியேன் குறிப்பிட்ட பர்வத்தைப் பார்த்துக் கொள்ளுமறு கேட்டுக்கொள்கிறேன்.//

    I understand, value and appreciate your concern. ஆனால், நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் ஆதாரபூர்வமானது, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரம் தர இயலும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் தரும் ஆதாரங்கள் மிகவும் திறந்த தன்மையுடயவை. யார் வேண்டுமானாலும் க்ராஸ் செக் செய்துகொள்ள முடியும்.

    கர்ணன் தொடர்பான விவாதம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இதன் அடுத்தடுத்த தவணைகளில் வரப்போகும் விவரங்கள் இன்னமும் அடி வேரை அசைக்கும் தன்மை உள்ளவை. Rest assured that wherever necessary the necessary textual evidence would be provided.

    ====
    இனி அங்கே சொல்லாதது ஒன்றையும் இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். எவ்வளவோ பதிப்புகளில், கர்ணன் துரோணரிடம் கற்றது சொல்லாமல் விடப்பட்டுள்ளது. கர்ணன் அதே ஹஸ்தினாபுரத்தில் வளர்ந்தவன் என்ற போதிலும், விளையாட்டரங்க நிகழ்வின்போது தர்மனுக்கு 29 வயது. தர்மனை விடவும் கர்ணன் 16 வயது பெரியவன். (டாக்டர் கே என் எஸ் பட்நாயக் அவர்கள் செய்துள்ள மஹாபாரத காலக்குறிப்புப் பட்டியல் இங்கே கிடைக்கிறது: https://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html )

    ஆக, சுமார் 45 ஆண்டுகள் வரையில் அதே ஹஸ்தினாபுரத்தில் வளர்ந்த கர்ணனைப் பற்றி (மக்களை விடுங்கள்) கிருபருக்கோ துரோணருக்கோ ஏதும் தெரியாது என்பது பொருத்தமான முடிபில்லை. இதைக் குறித்த மற்ற குறிப்புகள் பின்னால் வரும் தவணைகளில் இடம்பெறுகின்றன.

    நன்றி.

  4. திரு வரதராஜன்: தாங்கள் எழுப்பியிருக்கும் வினா பயனுள்ளது. இதற்கு நீண்டதொரு விடை எழுதவேண்டும். இந்தப் பதிவுகளின் ஒரு பகுதியாகவே அது அமையவேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் அது முழுப் பயனையும் தருவதாக அமையும்.

    ஆனால், விடை எழுதுவதற்குச் சற்றுக் காலம் பிடிக்கும். நான் இதர பணிகளில் இதனை மறந்துவிடக் கூடும். எனவே, இந்தக் கேள்வியை அருள்கூர்ந்து editor@tamilhindu.com முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  5. கண்டிப்பாக அது செய்கிறேன்

  6. கர்ணன் வில் வித்தை சூரியனை குரு வாக நினைத்து வில் வித்தை பயின்றார் . அனால் கர்ணனின் முதல் பிரவேசம் 146 வது அரங்கில் நுழையும் போது கிருபசாரியார் , துரோணர் அவையில் இருந்தனர் அப்போது கிருபசாரியார் அவரிடம் உன் அப்பா பெயர் சொல்லு என்று வினவுகிறார் இதில் இருந்து அவர் துரோசாரியார் கிருபச்ரியரிடம் வில் வித்தை பயிலவில்லை என்று புலபடுகிறது . அவர் வில் வித்தை
    வில் வித்தை கலையேல் அவர் அருசுனக்கு நிகராக இருந்தார் .
    அவரிடம் நாகசுரம் இருந்தது அதை தடுக்கும் பாணம் அர்ஜுனரிடம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *