போகப் போகத் தெரியும் – 4

கண்ணாடிக் குடுவைக்குள் காதல்

sadhuகங்கைக் கரையில் ரிஷிகேசம். அற்புதமான இடம். எத்தனையோ ஆச்ரமங்கள், மஹான்களின் உறைவிடம். அங்கே ஒரு யோகி. திடீரென்று பாலத்தில் நின்று கொண்டு, “ஐயோ! என் இடுப்பு தாங்க முடியாமல் வலிக்கிறதே! யாராவது வந்து ஓங்கி என்னிடுப்பில் உதையுங்களேன்! என் வலி தீர வேறு வழியேயில்லை” என்று கூவுகிறார். அவர் வேதனை எல்லோரையும் கலக்கியது. ஆனால் தினமும் தாங்கள் வணங்கும் அவரை, யார் உதைப்பார்கள்? அவரோ புரண்டு துடிக்கிறார். இவர்களோ செய்வதறியாது திகைக்கிறார்கள்.

எங்கிருந்தோ வந்தார் ஒருவர். ராணுவத்திலோ, காவல் துறையிலோ பணியாற்றுபவர் போலிருக்கிறது. அவர் இந்த யோகி படும் துயரத்தைக் கண்டார். அவரது ஓலத்தையும் கேட்டார். எந்தவித தயக்கமுமின்றி, தனது முரட்டு பூட்ஸ் காலால் ஓங்கி அந்த யோகியின் இடுப்பில் விட்டார் ஓர் உதை. அவ்வளவுதான்! அந்த யோகி வலி தீர்ந்து எழுந்து, ஒன்றுமே நடவாதது போல் விரைந்து சென்றுவிட்டார்.

உதைவிட்ட ஆள் என்னானார்? அந்தக் கணமே திடீரென்று யோகியாகி விட்டார். ஆம், அவர்தான் காரைச் சித்தர் என்ற பெயர் கொண்டு கனக வைப்பு என்ற நூலை எழுதியவர்.

எல்லோர்க்கும் தந்தை இறைவன்/ரமணன்/ஆக்கம் வெளியீடு

அக்கம் பக்கத்தில் நடப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. தவத்திரு காளிதாஸ் சுவாமிகளின் பேட்டியையும் அதற்கான எதிர்வினைகளையும் இங்கே வாசிக்கலாம். கோவில் தீண்டாமை பற்றி சில எதிர்க்குரல்களும் ஆங்கு எழுந்துள்ளன.

தீண்டாமை கூடாது என்பதுதான் என்னுடைய கட்சி. ஆனால் தீண்டாமை குறித்து இங்கே நிலவும் சில மயக்கங்களைத் தெளிவு செய்ய விரும்புகிறேன்.

தொடுவது என்பது தீட்சை முறைகளில் ஒன்று. கங்கைக் கரையில் இருந்த யோகி அதைத் தொடப்படுவது என்று மாற்றிக் கொண்டார். ஆன்மிக வழி முறைகளில் இடம்பெறும் தொடுதலுக்கும் வாழ்க்கையில் அன்றாடம் உணரப்படும் தொடுதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதைப் பற்றி இந்த முறை பார்க்கலாம்.

யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்ற பழக்கத்தை சாதி அடிப்படையில் வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை. அதை எல்லாத் தளஙகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியதுதான். அதற்கான சாம, தான, பேத, தண்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

ஆனால் வழிபாட்டுத் தலங்களில் நடப்பது தீண்டாமை அல்ல. பூஜை செய்வோர் பக்தர்களிடமிருந்து விலகியிருப்பது ஆசாரத்தின் அடிப்படையில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் ஆண்களையெல்லாம் ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு பெண்கள் மட்டும் பகவதிக்குப் பொங்கல் வைக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஒரு வித்தியாசமான மரபு என்று கொள்ள வேண்டும். இது தீண்டாமை அல்ல.

விக்கிரகங்கள் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வழிபாட்டுக்குரியதாக ஆகின்றன. அந்த விக்கிரகங்கள் மூலமாக தெய்வம் செயல்படுகிறது என்பது மத நம்பிக்கை. விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்பவர் அந்த நேரத்தில் விலகி இருக்கிறார். இதற்கும் தீண்டாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூஜை செய்பவர் இன்ன சாதியாரைத் தொடுவேன் இன்ன சாதியரைத் தொடமாட்டேன் என்று வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை.

மற்றபடி தொடுவதால் வேதியல் மாற்றம் ஏற்படுமா, என்பது தளங்களில் ஏற்படும் தடுமாற்றம். அனுபவங்கள் எல்லாவற்றையும் அறிவியல் சாதனங்களால் அளக்க முடியாது. கண்ணாடிக் குடுவைக்குள் காதலை அடக்க முடியுமா? தாய்ப்பாசத்திற்குத் தரக் கட்டுப்பாடு உண்டா? கவிதைக்குத் தேவையான கலோரி எவ்வளவு?

எங்கே யார், எதை நுழைக்கிறார்கள் என்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் சிதம்பரம் நடராசர் சந்நிதியில் தேவாரம் பாட வேண்டுமென்று போராடிய வழக்கறிஞரைப் போல ஆகிவிடும். அந்த வழக்கறிஞர் ஒரு முஸ்லீம். தாழ்த்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்படுவது என்பது இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்று சிலர் பிரசாரம் செய்கிறார்கள். இது தவறு என்பதை பெரியோர்கள் விளக்கியுள்ளனர். இருந்தாலும் இந்தப் பொய்ப் பிரசாரம் ஓயவில்லை.

இந்து மதத்திற்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி உண்டு. அதற்கான உதாரணங்கள் இதோ:

திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோரின் தலைவராக இருந்த எம்.சி. ராஜா இதை எதிர்த்திருக்கிறார்.

பெரியார் திடலில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய திருமதி. சத்தியவாணிமுத்து ஈ.வெ.ராவிடம் “உங்கள் பேச்சு உங்கள் முன் வீற்றிருக்கும் ஒரு சில சமுதாய சீர்திருத்த கருஞ்சட்டை வீரர்களுக்குத்தான் உயர்வை அளித்துள்ளது. பார்ப்பனர்கள் எந்தத் தொல்லையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தருவது இல்லை. பார்ப்பனர் அல்லாதவர்களால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

எனது போராட்டம்/டாக்டர். சத்தியவாணிமுத்து

சுயமரிதை இயக்கத்தின் முன்னணித் தலைவரைப் பற்றி நாளிதழ் ஒன்றில் கி.ஆ.பெ. விசுவநாதம் கட்டுரை எழுதினார். அந்தத் தலைவருக்கு ஏற்பட்ட கோபத்தில் வேலையாளை எட்டி உதைத்ததாகவும், அதில் வேலையாளின் பற்கள் இரண்டு உடைந்து விழுந்ததாகவும் எழுதினார். ஏழையின் பல்லை உடைக்கும் பகுத்தறிவு, பகுத்தறிவைப் பாராட்டி நிற்கும் தமிழ்ப் புலமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புத் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் ஜனார்த்தனன். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் (18.03.2008) இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சுரேஷ்ராஜன் பயனீட்டாளர்கள் பட்டியலில் சிலரைச் சேர்க்க வேண்டுமென்றார்; துணை ஆட்சியர் உடன்படவில்லை. கோபடைந்த அமைச்சர் துணை ஆட்சியரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சருடைய உதவியாளர் ஷேக் தாவூத் துணை ஆட்சியரைத் தாக்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.

மேற்கோள் மேடை:

கிறிஸ்தவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை. கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப் போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறிஸ்தவ சமயம் பரவுவதற்கு இடையூறாக இருப்பது இப்போதனையே.
(டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரி 1609ல் எழுதிய கடிதம்.)

கிறித்தவமும் சாதியும்/ஆ. சிவசுப்பிரமணியன்/ காலச்சுவடு பதிப்பகம்

போகப் போகத் தெரியும் – 3

11 Replies to “போகப் போகத் தெரியும் – 4”

  1. தீண்டாமைக்கும் ஆசாரத்துக்கும் இருக்கும் நுண்ணிய வித்தியாசத்தை சொன்னது அழகு. இப்போதிருக்கும் பயம்பீடித்த சூழலில் இந்த அடிப்படை உண்மைகளைச் சொல்லக்கூட பயப்பட்டு பலர் மௌனியாய் இருந்துவிடுகிறார்கள். இதனால் பொய்யர்களின் குரலே நின்றுவிடுகிறது. சுப்பு அவர்களின் கட்டுரை போகப்போக எழில் கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள். வழங்கிய தளத்திற்கு நன்றி.

    ஜயராமன்

  2. மிக அருமையான கட்டுரை. சுப்புவா சும்மாவா?

    சில குல தெய்வ கோயில்களின் பூசாரிகள் வைதீகர் அல்லாத குலத்தவர். அவர்கள் பூஜை செய்ய தயாராகிற நேரத்தில் இருந்து அவரை யாரும் தொடக்கூடாது – பிறப்பால் தங்களை பிராமணர் என்று கருதுபவர்கள் உட்பட. இதில் இருந்து ஆச்சாரம் என்பது பிறப்பின் அடிப்படையில் அமையாது என்பது தெளிவு.

    இருப்பினும், இந்த கட்டுரை ஆச்சாரத்தின் எல்லை குறித்து பல கேள்விகளை எழுப்பும். ஆச்சாரமாய் இருப்பதற்கும் எல்லைகள் உண்டு. இந்த நவீன காலத்தில் ஆச்சாரத்தின் எல்லைகள் எங்கே முடிவடைகின்றன என்பது பற்றிய தெளிவான வரையறை தேடி கேள்விகள் எழும். அவை எழுவதற்கு முன்னரோ பின்னரோ பதில் அளிக்கப்பட்டால் பாமர மக்களை பொய் சொல்லி குழப்புகிறவர்களுக்கு வேலை சிரமம் ஆகும்.

    இந்த கட்டுரை தவறுதலாக திரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று எண்ணுகிறேன். எனவே, குழப்பும் வேலை ஆரம்பிக்கப்படும் முன்னால் பதிலளித்துவிடுவது நலம்.

  3. //சுயமரிதை இயக்கத்தின் முன்னணித் தலைவரைப் பற்றி நாளிதழ் ஒன்றில் கி.ஆ.பெ. விசுவநாதம் கட்டுரை எழுதினார். அந்தத் தலைவருக்கு ஏற்பட்ட கோபத்தில் வேலையாளை எட்டி உதைத்ததாகவும், அதில் வேலையாளின் பற்கள் இரண்டு உடைந்து விழுந்ததாகவும் எழுதினார்…..//

    கி. ஆ. பெ. அவர்கள் யாரை விமரிசத்தார் என்பது பிரபலமான செய்தி. வேலை உதவியாளரின் பல்லை உடைத்தது அதே ஆள்தானா?

    ஏனெனில் அந்த ஆளுடைய‌ மனிதர்களை மதிக்கும் வழக்கங்கள் மிகவும் பிரபலமாக்கப்பட்ட தகவல்கள்.

    அந்த ஆள்தான் இந்த ஆள் என்றால், அந்த ஆளைப் பார்த்து வடிவேல் பாணியில் தமிழ்நாடே இந்த கேள்வியை கேட்கும்:

    “அவனா நீயி?”

  4. காலம் தோறும் தவறான வழிமுறைகளைக் களைந்து சரியான வழிமுறைகளைப் பின்பற்றும் மனித இயக்கம்தான் இந்த இந்து மதம். எனவேதான் சாதி வெறிக்கு எதிராகப் போராட ஆரம்பித்தவர்களை இந்து மதமும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டது. (ஆபிரகாமிய மதங்களைப்போல இப்படிப்பட்டவர்களை அழிக்கவில்லை.)

    எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் இந்து மதம், நவீன காலத்திலும் சாதி வெறியை களைய தீவிரமாக செயல்பட‌ ஆரம்பித்தது. இந்து மதம் தன்னை சீர்திருத்திக்கொள்ளுவதில் முனைப்பாக இருந்த இந்த காலகட்டத்தில், புதுப்பித்துக்கொள்ளும் இந்து மதத்தை எதிர்த்துத் தோன்றியதுதான் எவாஞ்சலிக்கர்கள் உண்டாக்கிய இந்த திராவிட இயக்கம். திராவிட இயக்கம் உருவான காலகட்டத்தை கவனித்தாலே இந்த உண்மை தெரிந்துவிடும்.

    சாதி வெறி நிலைத்தால் இந்து மதத்தை அழிப்பது எளிது என்று புரிந்துகொண்ட எவாஞ்சலிக்கர்கள் சாதி வெறியை வளர்க்க‌ 300-400 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியா‍ன முயற்சிகளின் ஒரு பாகமாக‌, இந்துக்களில் சாதி வெறியர்களாக உள்ள தலைவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் அவர்கள் ஆரம்பித்ததுதான் திராவிட‍ ‍சுயமரியாதை இயக்கங்கள். இந்த உண்மையை சுப்பு அவர்களின் இந்த கட்டுரை ஆதாரங்களோடு மிகத் தெளிவாக நிறுவுகிறது.

    மேலும், கிருத்துவ எவாஞ்சலிக்கர்கள் ஆரம்பித்துவைத்த அமைப்புத்தான் திராவிட இயக்கம் என்று கிருத்துவ பாதிரிகளுடைய நாளேடுகளைப் படித்த தற்கால திராவிட இயக்கத்தினரேகூட‌ இப்போது ஒத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். உதாரணமாக முன்னாள் அமைச்சர் காளிமுத்து இதனை குமுதத்தில் வந்த தனது வாழ்க்கை வரலாற்றில் இந்த உண்மையை சொல்லியுள்ளார்.

    சாதி வெறியை வளர்க்க‌த் தேவையான வெறுப்பை ஊக்குவிக்க கிருத்துவர்கள் ஆரிய‍ திராவிட இனங்களையும் கண்டு பிடித்தார்கள். இந்த இனவெறியை எரியூக்கியாகக் கொண்டுதான் திராவிட இயக்கங்கள் இங்கு செயல்படுகின்றன. தங்களுடைய சாதியை பாதுகாக்க, தங்களுடைய சாதியார் மற்ற சாதியாரின்மேல் ஆதிக்கம் செலுத்த‌ மட்டுமே இந்த திராவிட இயக்கத்தினருடைய கொள்கை, நோக்கம், செயல்கள் அமைந்து வருகின்றன.

    ஆரிய‍ திராவிட இன கண்டுபிடிப்பு சாதிவெறியின் உயிர்மூச்சு. இந்த புரட்டு கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தியாவில் சாதிவெறி அழிந்தேவிடும். அதனால்தான் தற்போதைய இந்து மதப் பெரியவர்கள் ஆரிய திராவிட என்னும் புரட்டுக்களை எதிர்க்கின்றனர்.

    எனவே இந்த இந்து மத அமைப்புக்களையும், தலைவர்களையும் அழிக்க திராவிட இயக்கத்தார் புரட்டு வேலைகள் செய்கின்றனர். நேர்மைவாதிகளின் நோக்கத்தினை பொதுமக்கள் நம்பாதிருக்கத் தேவையான புழுதி எறியும் பிரச்சாரத்தில் இந்த புரட்டுவாதிகள் ஈடுபடுகின்றனர்.

    நன்மையை திரித்து தீமையாகக் காட்டுவதும், தீமையை திரித்து நன்மையாகக் காட்டுவதும் கேவலமான பிறவிகள் செய்யும் வேலை.

    ஆனால், இருட்டின் கனம் எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், ஒரு சிறிய தீபத்தின் வெளிச்சத்தை அந்த இருட்டினால் அழித்துவிட முடியாது. இந்த புரட்டுவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்டு, நேர்மைவாதிகளின் குரலுக்கு தமிழர்கள் ஆதரவளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேர்மைவாதிகள் எழுதும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு காட்டப்படும் வரவேற்பு இதை உறுதி செய்கிறது.

    ஒளியூட்டும் தீபத்திற்கு சுப்பு அவர்களின் கட்டுரை நெய் வார்க்கிறது.

  5. அருமையான பதிப்பு. பகுத்தறிவு சிங்கங்கள் படிக்க வேண்டுமிதை. படிப்பார்களா? படித்தால் மண்டையில் தான் ஏறுமா?

  6. இன்றைய(3/1/2009) தினமலரில் வெளியாகியுள்ள கட்டுரை இது,

    காத்மண்டு : நேபாளத்தில் வரலாற்று புகழ் பெற்ற பசுபதிநாதர் கோவிலில் உள்ள இந்திய பூசாரியை வெளியேற்ற மாவோயிஸ்டுகள் அத்துமீறி நுழைந்து பெரும் அமளியை ஏற்படுத்தினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுபதி நாதர் கோவில் நேபாளத்தில் உள்ளது. இந்த கோவிலில் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் தலைமைப் பூசாரியாக இருக்கிறார்.
    இவரை மாற்ற வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு, பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் இந்து மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேபாள நாட்டின் சுப்ரீம் கோர்ட்டும் புதிய மதகுருவை நியமிக்க தடை விதித்திருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி விஷ்ணு பிரசாத் தகால் என்பவரை மத குருவாக, மாவோயிஸ்ட் அரசு நியமித்தது.நேற்று முன்தினம், மாவோயிஸ்ட் மற்றும் இளம் மாவோயிஸ்ட் லீக் அமைப்பை சார்ந்த ஏராளமானோர் புதிதாக தாங்கள் நிர்ணயம் செய்து அறிவித்த பூசாரியுடன் , கோவில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. இவர்கள் தங்களின் பூசாரியை நியமிக்க முயன்றதால் , பதட்டம் அதிகரித்தது. அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்செயலுக்கு, இந்துக்கள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
    ஏற்கனவே பல நூற்றாண்டுகளுக்கு முன், நேபாளத்தை ஆண்ட இந்திய வம்சாவளியை சார்ந்த சம்சுதீன் என்பவர், ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாக நினைத்து கோவிலில் உள்ள சிவலிங்கத்தை மூன்றாக உடைத்த சம்பவம் நடந்தது . ஆனால், லிங்கத்திற்குள் தங்கம் அல்லது நவரத்தினங்கள் இல்லை என்பதை வரலாற்று ஆசிரியர் தினேஷ் ராஜ் பான்டா பதிவு செய்திருக்கிறார். இது 13ம் நூற்றாண்டில் நடந்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார். அதற்கு முந்தைய காலத்தில் இருந்து பசு பதிநாதர் வழிபாட்டை இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பூஜாரி தலைமையில் வழிபாடு நடத்தப்படும் நடைமுறை தொடர்கிறது. அதைத் தகர்க்கும் வகையில், மாவோயிஸ்டுகள் நடந்த விதம் இங்குள்ள இந்துக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    மாவோயிஸ்டுகளுக்கும் நம் நாட்டு பகுத்தறிவுவாதிகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை தெரிகிறதா? கடந்த ஆண்டு இப்படித்தான் வலுக்கட்டாயமாக தமிழ் புத்தாண்டு தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டது, மேலும் கடந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த கூடாது என்று வாய்மொழி உத்தரவு இடப்பட்டதாக கேள்வி

  7. சுப்பு அவர்களுக்கு
    அருமையான தொடர். பல பொதுப்புத்தியாளர்களின் கண்களை உங்கள் கட்டுரைத் தொடர் திறந்தால் நான் மகிழ்வேன். கேரளத்தின் தெய்யம் ஆட்டத்தில் ஈடுபடுபவர்கள் வண்ணார்கள். ஜாதி அடுக்குகளில் கீழே இருப்பவர்கள்தான். ஆனால் அவர்களது கலையான தெய்யம் ஆட்டத்தை போஷிப்பவர்களோ ஊரில் உள்ள நம்பூதிரி போன்ற உயர் ஜாதியினர்கள். ஜாதியில் கீழாக இருக்கும் இதே தெய்ய ஆட்டக்காரர்கள் அந்த ஆட்டத்துக்குரிய வேடம் தரித்து விட்டால் அவர்கள் கடவுளுக்கு ஈடானவாராகி விடுகிறார்கள். எவ்வளவு பெரிய நம்பூதிரியாக இருப்பினும் கூட அவர்களை வணங்கி நிற்கிறார்கள். ஆக ஆச்சார, ஆகம நம்பிக்கை விதிகளின் படி ஒரு சில நியமங்களில் ஈடுபடுபவர்கள் பிறரிடம் இருந்து விலகி நிற்பது ஜாதி பேதமின்றி பல குழுக்களிடமும் இருந்து வரும் வழக்கம்தான். தெய்யம் ஆடும் கலைஞர்களின் ஜாதி மறைந்து போய் அவர்கள் கடவுளின் வடிவங்களாகப் போற்றப் படுவது இன்றும் கேரளாவில் நடைமுறையே. பூஜை பணிகளில் இருப்பவர்கள் எவரையும் தொடுவதில்லை. அதில் ஜாதி வேற்றுமையும் இல்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் சில ஈனர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் விருதுநகரில் இரண்டு சர்ச்சுக்களுக்கு நடுவே பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப் பட்டுள்ளது. ஏன் தெரியுமா? தலித்துக்கள் தொழும் சர்ச்சை தங்கள் கண்களால் கூட காணக் கூடாது என்று நாடார் கிறித்துவர்கள் நினைப்பதினால்தான். அதுதான் தீண்டாமை.

    மேலும் தொடருங்கள்
    விஸ்வாமித்ரா

  8. போகப்போக தெரியும் தொடர் பல சுவாரசியமன தகவல்களுடன் அருமையாக செல்கிறது. இல்லாத பிரச்சினைகளை கிளப்பி அதில் குளிர்காயும் வேற்றுமத நன்பர்களின் கைவேலையை சிதம்பரத்தில் பார்த்தோம். தொடர்ந்து அருமையாய் எழுதி வரும் சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும். ஜெயக்குமார்

  9. Mr.RKW
    Is it possible to change the pot to its original mud after burning it in the fire? So also these people who are spreading hatread against indu customs and bramins.cannot be convinced are mended. They will end their lives spreading hatred among peace loving communities.
    If you throw a stone on a dog it will run lifting its leg as if the stone has hit its leg.
    As such these fanatics are branding all the hindus as fanatics
    and for anything and everything they dinigrade bramins who never retaliate .

  10. உண்மையான ஆசாரத்தை குறிப்பிட்டு காட்டியது நன்று! மிக நன்று!

  11. Pingback: Dr. B.R. Ambedkar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *