எம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்

நான் அடிக்கடி சந்திக்கின்ற கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் என்னிடம் கேட்கும் கேள்வி – நாம் வணங்குகின்ற கடவுளருடன் விலங்குகளும் இருப்பது குறித்தானது. பல அறிவொளி மிக்க கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் இந்து மதத்தின் மேன்மையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அவர்களது மதங்களைவிட ஆழமான தத்துவ அலசல்கள், நெடிய ஆன்மீகப் பாரம்பரியம், மிக உன்னதமான மகான்களையும் ஞானிகளையும் தொடர்ந்து இந்து சமுதாயம் உலகிற்கு அளித்து வருவது ஆகியவற்றை அறிந்திருப்பதால் அவர்களிடையே இந்து மதம் பற்றிய மிக உயர்ந்த கருத்தும், மதிப்பும் இருக்கிறது. ஆனால், அத்துடன் நமது வழிபாட்டு முறைகளில் சிலவற்றைப் பற்றிய சந்தேகங்களும், குழப்பங்களும் அவர்கள் மனதில் இருக்கின்றன. அதில் முக்கியமான சந்தேகம் நமது தெய்வங்களுடனும், தெய்வங்களாகவும் விலங்குருவங்கள் இருப்பது குறித்தது.

இன்னொரு வகையினரும் உண்டு. அவர்களுக்கு இந்த ஆழமான பார்வை கிடையாது, தமது முன்னோர்களின் ஞானம் (ஆம், அவர்களின் முன்னோர்களும் இந்துக்கள்தானே) பற்றிய ஆபிரகாமிய விஷக்கருத்துக்கள் அவர்களின் நெஞ்சினில் இருப்பதால் பார்க்கும் பொறுமையும் கிடையாது. அவர்களுக்குத் தமது மதம்தான் மிகவும் அறிவார்ந்த மதம், அதுதான் கடவுளால் நேரடியாக வழங்கப்பட்டது; மற்ற மதங்கள் எல்லாம் மூடநம்பிக்கை.

இந்த மாக்கள் தமது மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளைப் பகுத்தறிவு என்றும், இந்து மதக் கருத்துக்கள், தத்துவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் தவறு, மூடநம்பிக்கை என்றும் புரிந்துகொண்டு அதைப் பரப்பியும் வருகிறார்கள்.

ranganatharவெளிநாட்டு கிறிஸ்துவ அன்பர் ஒருமுறை எங்கள் வீட்டில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் உருவப் படத்தைப் பார்த்துவிட்டு “இதன் அர்த்தம் என்ன? ஏன் பாம்பின்மீது படுத்திருக்கிற கடவுள் உருவத்தை வணங்குகிறீர்கள்?” என்றார். அவரது தொனியை முதலில் நான் கேலி எனத் தவறாகப் புரிந்துகொண்டு, “நீங்கள் ஏன் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப்பட்ட மரத்தில் ரத்தம் ஒழுகும் நிலையில், ஆணியடிக்கப்பட்ட உருவத்தை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். நண்பர் சிறிது மனம் புண்பட்டு விழித்தார்.

பின்பு அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளக்க ஆரம்பித்தேன். “ஒவ்வொரு மதமும் தனக்கெனக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் இயேசு என்ற கிறிஸ்துவர்களின் தெய்வம், கிறிஸ்துவர்களுக்கு இயேசுவின் தியாகத்தை நினைவு படுத்துவதைப் போலவே இந்துக்களான நாங்களும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், கிறிஸ்துவர்கள் தங்களது முதுகைப் பார்க்காமல் மற்றவர்களின் கடவுள் உருவங்கள், வழிபாடு ஆகியவற்றின் உட்பொருளை உணராமல், ஆழமாக உற்று நோக்காமல் உடனடியாக இந்துக்களைக் கேலி செய்யத் துவங்கிவிடுகிறார்கள்” என்றேன்.

நல்ல மனிதரான அந்த கிறிஸ்துவ நண்பர் உடனடியாக தாம் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் ஒரு அக்னாஸ்டிக் (agnostic – கடவுள் இல்லை, இருக்கிறார் என்ற எந்த முடிவுக்கும் வரமுடியாதவர்) என்றுரைத்தார். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை. இன்று மேலைநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் சரித்திர ஆய்வின் மூலமும், பகுத்தறிவின் வளர்ச்சியினாலும், நேரடி அனுபவத்தின் மூலமும் கிறிஸ்துவத்தை விட்டு அணியணியாய் வெளியேறிவருகிறார்கள். அங்கே மதபோதகர்களாக இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற பிரதேசங்களிலிருந்து மதம் மாறிய கிறிஸ்துவர்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலமை மோசமாக இருக்கிறது. நமது நாட்டிலோ, சரியான புரிதல் இல்லாமையின் காரணமாகவும், சமூகப்-பொருளாதார காரணங்களினாலும் ஏழைபாழைகள், சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் பலர் கிறிஸ்துவத்தின்பால் செல்கின்றார்கள்.

“பரவாயில்லை நண்பரே நீங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளக் கேட்பது எனக்கு புரிகிறது” என்று சொல்லிவிட்டு, நேர்வழியாம் இந்து மதத்தின் சில தத்துவங்களையும், வழிபாட்டு முறைகளையும் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

மனிதனும் இயற்கையும்:

1. ஆபிரகாமிய மதங்கள் பூரணமாக இருக்கின்ற இயல்பான – ஒன்றுகொன்று தொடர்புடைய ஜீவராசிகளின் தன்மைகளைக் குலைத்து, அவற்றில் மனிதனை (குறிப்பாக, ஆண்மகனை) படைப்பின் உச்சமாகக் கருதி முக்கியத்துவம் தருகின்றன. இது தனிநபர் மனதிலும், அந்தச் சமுதாயங்களிலும், உலகிலும், ஆன்மீகப் பரவெளியிலும் நிலவும் சமச்சீர்த் தன்மையினை குலைத்து நம்மை மிருக நிலைக்குத் தள்ளி, வன்முறையையும், ஆதிக்க வெறியையும், சீர்குலைக்கப்பட்ட ஆன்மீக கருத்துக்களையும் தனிநபர்களின் மனதிலும், அந்த சமுதாயங்களிலும், உலகிலும், ஆன்மீக பரவெளியிலும் நிலவச் செய்துவிடுகிறது. இந்த நிலையையே அரக்கர்களின் வியாபகமென்று இந்துப் புராணங்களும், நாட்டார் கதையாடல்களும் தொன்றுதொட்டுச் சொல்லி அந்த நிலையிலிருந்து பலமுறை மனிதகுலம் மீண்ட கதைகளைச் சொல்கின்றன.

2. இந்த அரக்கத்தனம் மூன்று வகைகளில் செயல்படுகிறது. முதலாவது இது மனிதகுலத்தைத் தொடர்புடைய வாழ்வாதாரச் சூழலில் இருந்து பிரிக்கிறது, இரண்டாவதாக மனிதகுலத்தை ஆண் தனி, பெண் தனி என்று பிரிக்கிறது, மூன்றாவதாக ஆண்வர்க்கத்தில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து அவர்கள் விசேஷமானவர்கள், மற்றவர்களின் மீது தனது ஆளுமையை நிர்ப்பந்திக்கக் கடவுளால் ஏவப்பட்டவர்கள் என்று மூளைச்சலவை செய்கிறது. இந்த மூளைச்சலவையினால் உந்தப்பட்டவர்கள் மற்ற சமுதாயங்களை அழித்திடவும், மனிதர்களின் ஜீவாதாரச் சூழலை அழித்திடவும் உகந்த அரக்க குணமுடையவர்களாக – சிந்திக்காமல் வெறும் மூடநம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டவர்களாக மாற்றப்படுகின்றனர்.

3. இன்று உலகில் நாம் காணும் சமச்சீர்மையின்மைக்கும், சுற்றுச் சூழல் மாசுபடல், வாழ்வாதாரங்கள் குலைதல் ஆகியவற்றுக்கும் இதுவே காரணம்.

4. பெண் தன்மையை அடக்கி அழிப்பது என்பது ஆபிரகாமியக் கருத்தியலின் அடிப்படை என்பது இன்று உலகில் சிந்திக்கும் நல்லோர் அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொள்வது. ஆதாமை சொர்க்கத்திலிருந்து நரக-பூமிக்கு தள்ளிய ஏவாள் (Eve) கதையாடல்கள் போன்றவற்றின் மூலமாக புனிதப்பெண்மையை(Sacred Feminine) தாழ்த்தி மனிதர்களைக் கீழே தள்ளும் சாத்தானின் கைப்பாவையாகப் பெண்மையைச் சித்தரிப்பதிலிருந்து இது துவங்குகிறது. விவிலியத்தின்படி ஏவாள் தனியாகப் படைக்கப்பட்டவளும் அல்ல. ஆதாமின் விலா எலும்பை எடுத்துச் செய்யப்பட்டவள் என்பதால் ஆண்மகனைப் போல முழுமை பெற்றவளாகவும் கருதப்படுவதில்லை.

சாத்தானாக அப்போது கிறிஸ்துவம் சித்தரித்த பால் (Baal) கடவுளின் உருவகமான நாகம் இந்த பழையஏற்பாட்டு (Old Testament Bible) ஆசிரியர்களால் போதிக்கப்பட்டது. இந்த பால் கடவுளிடமிருந்து அக்கடவுளின் இணையான பெண் கடவுளைப் பிரித்து பெண்மையினை சாத்தானுக்கு துணைபோவதாக ஆதாம் – ஏவாள் கதையினை உருவாக்கி, பெண் தன்மையினை நசுக்கி அது இல்லாத நிலையில் அரக்கத்தனமடையும் ஆண் தன்மையினை மட்டும் கொண்டவராகத் தத்தம் கடவுளரை உருவகித்து ஆபிரகாமிய மதங்கள் தூக்கிப் பிடித்து ஏக இறைவனாகப் பிரச்சாரம் செய்து பலரது மதியினை பேதலிக்கச் செய்தன.

5. இந்தக் கட்டுக்கதையை கேள்வியேதும் இல்லாமல் யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் போன்ற மார்க்கங்களை உண்மை என நம்பி ஏற்பவர்கள், தொடர்ந்து பெண்மையைத் தாழ்வானதாகவும், ஆதிக்க ஆண்மையை உத்தம குணமாகவும், கடவுளின் பிரதிபலிப்பாகவும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை கேள்வி கேட்பவர்கள் apostates, heretics என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார்கள், லட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

6. டா வின்சி கோட் என்ற பிரபல நாவலில் இவை மிகவும் அழகாக விளக்கப்படுகின்றன. எப்படி பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எரிக்கப்பட்டார்கள் என்பதை அந்நூல் விவரிக்கின்றது. மூலிகை வைத்தியர்கள், விலங்குகள் மீது பரிவோடு இருந்தவர்கள், வான்வெளி நிபுணர்கள் என்று எல்லோரும் சூனியக்காரர்ர்களாக, சைத்தானின் கையாட்களாக கருதப்பட்டதை அந்நூல் விவரிக்கின்றது. நூலைப் படிக்கின்ற போது, எப்பேர்ப்பட்ட மனச்சிதைவை இந்த ஆபிரகாமிய மதங்கள் மனித குலத்திடையே தோற்றுவித்திருக்கின்றன என்ற ஆயாசம் நமக்கு ஏற்படுகிறது.

7. ஆனால் இன்று இதுபோன்ற நூல்கள் வருவது, பெருமளவில் வரவேற்பு பெறுவது மேலைநாட்டு ஆபிரகாமியக் கருத்தியல் என்ற இருள் சூழந்த காலகட்டத்தைவிட்டு அறிவும், அன்பும், அமைதியும் விளங்கும் அற்புதக் காலத்திற்குள் நுழைவதற்கு மனிதகுலம் தயாராகிவிட்டதை காட்டுகிறது. இந்துமதத்தின் மேன்மைமிகு கருத்துக்களை உலகம் தன்னகத்தே பெற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டதை இது காட்டுகிறது.

மனிதனும் இயற்கையும் ஆபிரகாமிய மதங்களும்

Goddess with Animal and Plants
Goddess with Animal and Plants

Canaanite Goddess (Astarte-Ashtoreth, Companion of Baal)
gold plaque from Lachish. 13th century BCE
(Israel Museum, Jerusalem)

1. இஸ்ரவேலர்களுடைய மண்ணின் கடவுளாக ஜெஹோவா அல்லது யெஹ்வா என்ற யூத-ஆண் கடவுளையும், பிற இனத்தவர்களின் கடவுள் மற்றும் கடவுள்களாக பால், பாலிம் (பாலிம் என்றால் பல கடவுள்கள் – இவை பாலின் வெவ்வேறு தோற்றங்கள், இந்து மதத்தில் கடவுள் பல உருவங்களில் வழிபடப்படுவது போன்று), அஷெரா போன்ற பெண் தெய்வங்கள் மற்றும் இத்தெய்வங்களுடன் அதுவரை சம்பந்தப்பட்டிருந்த இயற்கைக் குறியீடுகள், விலங்குகள் ஆகிய எல்லாமே நிராகரிக்கப்பட்டவையாக இஸ்ரேலில் இருந்த யெஹ்வா – ஜெஹோவா கடவுளின் ஆதரவாளர்களால் சித்தரிக்கப்பட்டன. இதற்கும் அடிமை மனோபாவத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தொடர்புண்டு. தாழ்வு மனப்பான்மையிலிருந்து பிறப்பவையே ஆபிரகாமியக் கருத்தியல்கள் என்றுகூடச் சொல்லலாம், எனவேதான் இதே மனநிலையில் செயல்படுவோரை விரைந்து ஈர்த்துக்கொள்கிறது – இதை இன்றும் நாம் காணவும் முடிகிறது.

2. இந்த மூடத்தனம் பரவிய கதைபற்றி விரிவான ஆராய்ச்சிகள் தற்போது மேலைநாடுகளில் நடத்தப்பட்டு வருவதால் இவற்றின் ஊடே நான் அதிகம் செல்லவிரும்பவில்லை.

3. சுருக்கமாகச் சொல்வதானால், இயற்கையை, இயற்கையான வாழ்க்கையை, இயல்பான ஆன்மீகத்தை, நாட்டார் வழக்குகளை எல்லாம் சாத்தானாக விவரிக்கும் போக்கு ஆபிரகாமிய மதங்களால் உலகில் பரப்பப்பட்டது. சாத்தானுடன் தொடர்புடையதாக மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பெண்கள் சித்தரிக்கப் பட்டனர். இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பு இஸ்ரேலில் நிலவிய சமூகச் சூழலே காரணம், இதற்குப் பின்னால் எவ்வித ஆன்மீகக் காரணங்களும் கிடையாது. இன்றும் ஆபிரகாமிய மதங்களில் பெண் மெஸைய்யாக்கள், நபிகள், போப், கலீபாக்கள், அமீர்கள் கிடையாது. இது குறித்து கேள்வி கேட்பதே குற்றம் என்ற அளவுக்குப் பெண்ணியம் குறித்த வெறுப்பைக் கொண்டிருக்கின்றன இந்த மதங்கள். ‘இத்தனை நபிகளுக்கு இடையில் ஏன் இல்லை பெண் நபி?’ என்ற கேள்வியை எழுப்பியதற்காக ஹெச்.ஜி. ரசூல் என்ற தமிழ் எழுத்தாளரை முஸ்லீம் சமூகத்திலிருந்து வெளியேற்றுகிற அளவுக்கு மோசமான மனநிலையை இந்தச் சமூகங்கள் கொண்டிருக்கின்றன.

மனிதனும் இயற்கையும் இந்து மதமும்

1. மனிதன் இயற்கையின் அங்கம். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது இந்து மதத்தின் அடிப்படையான கொள்கை. (இதை இன்று ecosystem என்ற பெயரால் ஏதோ புதுக் கண்டுபிடிப்புப் போல மேலைநாடுகள் கூறுகின்றன.) இதனாலேயே இந்து மதம் பரவிய இடங்களில் எல்லாம் இயற்கை மனிதர்களுக்கு எல்லா வளங்களும் தந்து, மங்களமான சூழலை உருவாக்கியது. இந்த சூழல் ஆபிரகாமியத் தாக்குதலால் இன்று குலைந்துபோய் வன்முறையும், அமைதியின்மையும் நிலவும் சூழலாக உருவாகியுள்ளது.

2. ரமண மகரிஷியிடம் ஒருவர் விலங்குகள் தாழ்வானவை என்ற கருத்தில் பேசியபோது அவர் அந்த கருத்தை கண்டித்திருக்கிறார். விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகொடிகள், ஆறுகள், கடல், மழை என்று எல்லாமே புனிதமான ஒரு சுழற்சியின் அங்கங்கள் என்பது நம் கொள்கை. மனிதர்களுக்கு முக்தி இருப்பதுபோல, விலங்குகளுக்கும் உண்டு என்பதை ரமண மகரிஷி குறிப்பிடுகிறார்.

3. எனவே எப்படிப் பெண் கடவுள்கள், பெண் நபிகள், பெண் மெஸையாக்கள் ஆபிரகாமிய மதங்களில் இல்லையோ – அப்படி இருப்பது வித்தியாசமான விஷயமாக, அசாதாரணமாக, கடவுளுக்கு விரோதமானதாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோன்று விலங்குகள் கடவுள் தன்மையுடன் இருப்பதும் இந்த ஆபிரகாமிய மதங்களால் விரோதமாகப் பார்க்கப்படுகின்றன. இந்த மதங்களின் வன்முறைக்கு பயந்து இதை யாரும் சுட்டிக்காட்டாததால், இது உலகில் எல்லா இடங்களிலும் – இந்த மதங்களிலிருந்து வெளியேறிவிட்ட சீரிய சிந்தனையாளர்களால் கூட வித்தியாசமாய் பார்க்கப்படும் விஷயமாகிவிட்டது.

4. கடவுள் ஒரு தூதரை தேர்ந்தெடுத்து அவர்மூலம் மனித குலத்திற்குச் செய்திகளை அளிக்க முடியும், அவர் மூலம் எப்படி வாழ்வது என்று போதிக்க முடியும் என்றால், அதே கடவுள் விலங்கு உருவத்தில் வந்து போதிக்க, வழிகாட்டவும் முடியும் என்பதை ஏனோ இவர்களால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. மூளைச்சலவைதான் இதற்கு காரணம்.

கடவுளருடன் இருக்கும் விலங்குகள் எதைக் குறிக்கின்றன?

முதல் பகுதியில் நான் எழுதியிருப்பது போன்று பலசமயங்களில் இந்துக் கடவுள்களுடன் இருக்கும் விலங்குகள் ஆழமான பல விஷயங்களைக் குறிக்கும் குறியீடுகளாகும். உதாரணத்திற்குச் சில:

நாகம்

1. இந்து மத ஞானியர் தமது ஆழமான ஆன்மீகப் பார்வையின் மூலம் ஆதார சக்தியொன்றைக் கண்டுணர்ந்தார்கள். இந்தச் சக்தி நமது அகவெளியின் ஆழத்தில் அடிப்படையாக இருக்கிறது. இது பல்வேறு விதங்களில் நம்மிடையே வெளிப்படுகின்றது – சிந்தனையில் சீர்மையைத் தருவதாக, அமானுஷ்ய சக்திகளாக, பாலியல் சக்தியாக, அன்றாட வாழ்வின் திறமைகளாக, ஆன்மீக சக்தியாக – இப்படிப் பல விதங்களில் வெளிப்படும் இந்தச் சக்தியை விவரிக்கும்போது சுருண்ட நிலையில் இருப்பதை அகவெளியின் ஆழத்தில் இருக்கும் சக்தியாக விவரிக்கின்றனர். விழிப்படைந்த நிலையில் இருப்பதை வெவ்வேறு குறியீடுகள் மூலம் விவரிக்கின்றனர். வஜ்ராயுதமாக (மின்னலைப் போன்ற சக்தி), படமெடுத்த நாகமாக என்றெல்லாம் இதை விவரித்தனர் நமது முன்னோர்கள்.

2. இதுகுறித்துச் சொல்லும் விவேகானந்தர், வாழ்வில் திறமைகளை வெளிப்படுத்தும் எவராயினும் – எழுத்தாளர், ஓவியர், கவிஞர், தத்தமது துறைகளில் வல்லுனர்களாக விளங்குபவர்கள் என்று அனைவரிடத்திலும் இந்தச் சக்தி விழிப்படைந்து இருக்கிறது என்கிறார்.

serpentpower

3. இந்தச் சக்தியை விழிப்படையாத நிலையில் சுருண்டிருக்கும் சுழலாகவும் (குண்டலம் – சுருண்டிருப்பது – பெண் தன்மையைக் குறிக்கும் விதமாய்க் குண்டலினி, சுருண்டிருக்கும் பெண் நாகம் என்ற பெயரிட்டு யோக மார்க்கத்தில் அழைக்கின்றனர்), விழிப்படைந்த நிலையில் ஊர்ந்து எழும் நாகமாகவும், மின்னலைப் போன்று விரைந்து செல்லும் இடியாகவும் இன்னும் பலவிதங்களிலும் குறியீடுகளாக, விவரித்து இந்து ஞானியர் மட்டுமல்ல, உலகெங்கும் இருந்த விழிப்படைந்த சான்றோர் இதே குறியீடுகளைப் பயன்படுத்தினர். உதாரணமாக ஆபிரகாமியத் தாக்குதலால் அழிந்துபோன பண்டைய எகிப்து நாட்டில் எழுந்த நாகம், விழிப்புணர்வையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் குறித்தது.

God in Snake Wisdom
God in Snake Wisdom

(மேலே கண்ட ஓவியம் இடம் பெற்றிருக்கும் தளம்: https://www.plim.org/2Luciferian.htm Luciferian Worship: It’s beginning in Serpent, Dragon, and Sun Worship. இந்த தளத்தில் மேலை நாட்டினர் தமது புரிதலை மிகவும் அழகாக விளக்கியுள்ளனர். உலகமே இன்று விழிப்படைந்து இந்து மதத்தைப் புரிந்து ஏற்க ஆரம்பித்துள்ளதற்கு அறிகுறி இதுபோன்ற கட்டுரைகள்)

snakeinheadgear(எகிப்தின் ரா கடவுள் தலையில் இருக்கும் நாகம்)

souljourneyegypt(எகிப்திய ஓவியங்கள், ஆன்மீக அனுபவ விவரணைகளில் நாகம்)

4. இந்து மதத்தில் கடவுளுடன் இருக்கும் நாகங்கள் இந்தச் சக்தியையே குறிக்கின்றன. சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாக, விஷ்ணு யோகநித்திரையில் படுத்திருக்கும் படமெடுத்த நாகமாக, அம்மன் தலையில் இருக்கும் நாகமாக எல்லாம் வெவ்வேறு நிலையில் இந்தச் சக்தி குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகிறது. இது தியானத்தின்போது மனதை அமைதிப்படுத்தவும் (உதாரணமாக கடல், வானம், பனிப்பிரதேசம் போன்றவை மனதை அமைதிப்படுத்த தியானத்தில் பயன்படுத்தப் படுகின்றன), அதற்கு அடுத்த கட்டமாக நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை உருவகிக்கவும், அச்சக்தியுள் இருக்கும் உணர்வு நிலையை பாவனை செய்யவும் (சுருண்ட நாகத்திற்கு நடுவே இருக்கும் சிவலிங்கம், பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், கயிலாயத்தில் பனியிடை தியானிக்கும் சிவன் போன்றவை) தியான சாதனங்களாக இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.

கடவுளரின் வாகனங்களாக விலங்குகள்

1. அது போலவே வாகனங்கள் தியான நிலையில் ஏற்படும் பல தளங்களையும், அதில் மனம் பிரயாணிப்பதையும் குறிப்பிட பயன்படுத்தப் படுகின்றது.

2. முருகனின் மயில் வாகனம், விஷ்ணுவின் கருடன் போன்ற குறியீடுகள் இதையே குறிக்கின்றன. ஆத்மா விடுதலை பெறுவதையும் சில சமயங்களில் பறவைகள் குறிக்கின்றன.

3. இதுபோன்ற குறியீடுகளை ஏன் என்றே தெரியாமல் ஆபிரகாமிய மதங்களும் பயன்படுத்துவதை உற்று நோக்குவோர் உணரமுடியும். உதாரணமாகப் புறாவாக விரைந்து பறக்கும் பரிசுத்த ஆவி (Holy Ghost) கிறிஸ்துவத்தில் உள்ளது. இது பெண் தன்மையினைக் குறிக்கும் அதே சக்தியின் வடிவம்தான். கிறிஸ்துவத்துக்கு முன்பு பரவியிருந்த மதங்களை அழித்துவிட்டுக் கிறிஸ்துவம் பரவினாலும், அப்போதிருந்த இந்த குறியீடுகள் ஆதரவாளர்களை சேர்க்கவென்று கிறிஸ்துவர்களால் சேர்க்கப்பட்டு பின்னாளில் மதத்தில் சேர்ந்து கொண்டுவிட்டது.

Sould attaining Liberation
Sould attaining Liberation

(விழிப்படைந்த ஆத்மா பறப்பதை குறிக்கும் எகிப்திய ஓவியம்)

holyghost(கிறிஸ்துவம்: புறா வடிவில் சித்தரிக்கப்படும் பரிசுத்த ஆவி)

4.அது போன்றே புராக் என்ற வாகனத்தில் இஸ்லாத்தின் இறைத்தூதர் விண்மண்டலப் பயணத்தை மேற்கொண்டதாக அறியாத அரபி மக்களிடையே ஒரு கதை உண்டு. இதெல்லாம், அறியாவிட்டாலும் ஆபிரகாமிய மதங்களில் சிக்குண்டோரும் எதோ ஒருவிதத்தில் இந்தக் குறியீடுகளை அறிந்துள்ளதையும், தம்மையும் அறியாமலேயே தெளிவில்லாத நிலையில் அவற்றைப் பின்பற்றுவதையும் குறிக்கிறது.

mohamedjourney(இஸ்லாம்: நபிகள் அகவெளியில் புராக் வாகனத்தில் பிரவேசிப்பதைக் குறிக்கும் ஓவியம்)

6. எனவே விலங்குகளின் குறியீடுகள், விலங்குகளின் விவரணைகள் எல்லா மதங்களிலும் இருந்தாலும், இந்து மதத்தில் மட்டுமே அது விரிவான ஆராய்சியின் விளைவாகவும், புரிதலோடும், ஆன்மீகப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான நிலையிலும் விவரிக்கப்படுகிறது, வழிபாட்டின் பகுதியாக இருக்கிறது.

இதெல்லாம் புரியாமல் வணங்குகிறோமே?

1. “இதெல்லாம் எத்தனை இந்துக்களுக்கு புரியும்?” என்ற கேள்வி உடனடியாக படிப்பவர்களின் மனதில் எழலாம். இதெல்லாம் அறிவுநிலையில் புரியாவிட்டாலும், யாரும் போதிக்காவிட்டாலும் உணர்வு நிலையில் இவை தியானத்திலும், ஆன்மீக அனுபவங்களிலும் பேருதவி புரிகின்றன.

2. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர். டெம்பிள் க்ராண்டின்(Temple Grandin) என்றொரு பேராசிரியர் எழுதி மிகவும் பிரபலமான நூலின் தலைப்பு, ‘விலங்குகள் நம்மை மனிதர்களாக்குகின்றன’ (Animals make us Human) என்பதாகும். அவர் விலங்குகள் எப்படி நுண்ணுணர்வு கொண்டிருக்கின்றன என்பதையும் அவற்றுடன் பழகும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் விவரிக்கின்றார்.

3. விலங்குகளுடன் பழகும்போது நம்முள் இருக்கும் மானுடம் விழிப்படைவதைப் போல, குழந்தைகளுடன் இருக்கும்போது நம்முள் இருக்கும் கனிவான மனம் வெளிப்படுவதைப் போல, விலங்குகள் – பறவைகள் – இயற்கை ஆகியவற்றுடன் கடவுளை வணங்கும்போது, தியானம் செய்யும்போது நமது மனதின் மென்மையான, இனிமையான, நற்குணங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகள் வெளிப்பட்டு ஆன்மீக மறுமலர்ச்சியை நம்முள் அது ஏற்படுத்துகின்றது. ஆன்மீக சாதகர்கள் கடவுளை பெண்ணாக, விலங்குடன் கூடிய உருவமாக வழிபடும்போது அவர்களின் மனதில் இருக்கும் இருண்ட பகுதிகள் ஒளிபெறுவதால், ஆன்மீக ரீதியாக கிடுகிடுவென முன்னேற முடிகிறது.

4. உலகிலேயே வன்முறை என்பது மிகக் குறைந்த அளவில் நிகழ்த்தப்பட்டது இந்து மதத்தால் மட்டுமே. அமைதியை போதித்த புத்த மதத்தவர்கள் கூட வரலாறு நெடுகப் பெரும் படுகொலைகளை செய்துள்ளனர், ஆபிரகாமிய மதங்களை பற்றி நான் இங்கே அதிகம் சொல்ல வேண்டியதில்லை – அனைவருக்கும் தெரியும் அவை பரவிய இடங்களில் எல்லாம் நிகழ்த்திய வன்முறைகள்.

5. இந்த இந்து மதத்தின் மென்மை விபத்தாக நிகழ்ந்தது அல்ல. இதற்குப் பின்னால் நமது ஞானிகளின் தரிசனங்களில் கிட்டிய மத வழிபாட்டு முறை காரணமாக இருக்கிறது. அவற்றுள் ஒரு பகுதியே விலங்குகளையும், இயற்கையையும் வழிபாட்டின் அங்கமாக ஆக்கியது.

6. மேலே கண்டவற்றை விளக்கியவுடன் நண்பர், ‘ஓ இத்துணை ஆழமான விஷயங்கள் இந்து மதத்தில் இருக்கின்றனவா’ என்று சொல்லிவிட்டு அவரது பூர்வீக ஸ்காண்டிநேவிய வழிபாடுகளிலும் இது போன்றவை இருந்ததாகவும் ஆபிரகாமிய வன்முறை நெறிக்கு அவர்கள் ஆட்பட்ட காலகட்டத்தில் அவை மறைந்ததையும் நினைவுகூர்ந்து, இந்த வன்முறை நெறிகளுக்கு அடிபணியாமல் ஆயிரமாண்டுகளாக அசையாத உறுதியுடன் இருந்து தொன்மையான ஞானத்தை இந்த நவீன காலத்தில் எடுத்துக் கூறும் இந்து மதத்தைப் புகழ்ந்து, “இந்து மதம் அழியாமல் விளங்குவதால் தான் இதெல்லாம் எங்களுக்கு இப்போது புரிகிறது. அழிந்திருந்தால் விளக்கிச் சொல்வதற்குக் கூட ஆளில்லாமல், இந்த ஆபிரகாமிய மனமயக்கம் சொல்வதே உண்மை என்று நம்பும் நிலைக்கு மனித குலம் தள்ளப் பட்டிருக்கும்” என்றார்.

உண்மைதான் என்றேன் நான்….

(தொடரும்)

8 Replies to “எம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்”

  1. Very good informative article,Thank you
    Let us also not forget that historical Jesus Christ never existed and whole religion of Christianity is based on Jesus Christ’s myth.

  2. மிகத் தெளிவான விளக்கம். இந்துக்களும் இக்குறியீடுகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் குறியீடுகளும் மொழி முதலிய தடைகளுக்கு அப்பால் இந்துக்களையும் இந்துப் பண்பாட்டினையும் ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்கின்றது எனலாம். நன்றி . முத்துக்குமரசுவாமி

  3. மிக நல்ல கட்டுரை. அனைத்து இந்துக்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. மகேந்திரன், தொடர்ந்து எழுதி அறிவு கொளுத்துங்கள்.

  4. மகேந்திரன் அவர்களே

    அருமையான கட்டுரை நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். தொடர்ந்து சொல்லுங்கள்

    அன்புடன்
    ச.திருமலை

  5. Tamilhindu.com should also start publishing articles from non-hindus who have realised the greatness of hinduism. For example, Arthur Avalon has written a lot about these. His famous book, Serpent Power also explains these in detail.

  6. வரலாறு, ஆன்மிகம், உளவியல் என்று பல தளங்களுக்கு உள் செல்லும் அருமையான கட்டுரை. மகேந்திரன் அவர்களே, தொடர்ந்து தங்களது இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

    // தனிநபர் மனதிலும், அந்தச் சமுதாயங்களிலும், உலகிலும், ஆன்மீகப் பரவெளியிலும் நிலவும் சமச்சீர்த் தன்மையினை குலைத்து நம்மை *மிருக* நிலைக்குத் தள்ளி, வன்முறையையும், ஆதிக்க வெறியையும் //

    இங்கே வில‌ங்குக‌ளின் தெய்வீக‌ம் பேச‌ப் ப‌டுகிற‌து. அத‌னால் “அர‌க்க‌ நிலைக்குத் தள்ளி” என்று இருக்க வேண்டும்.

  7. எதையும் குதர்க்க வாதமாகவே பார்த்து பழகிய தரம் தாழ்வான சில இந்துக்களின் மூலம் அழிந்து விடாமல் நம் மதததை காக்க வேன்டியது நம் கடமை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

    நன்றி

    தொடர்ந்து சொல்லுஙகல்…

  8. மிகவும் அருமையான கட்டுரை. புதிய விளக்கங்கள், சுவாரசியமாக் உள்ளது.
    நம் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றைக் காக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு கட்டாயம் உள்ளது.

    தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *