நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

professorராமலிங்க ஐயர் மற்றும் நாகம்மாள் தம்பதிகளின் மகனாக பிறந்தவர் பேராசிரியர்பரமசிவம். பேராசிரியர் பரமசிவன் குடும்பத்தினர் அனைவரும் சமுதாய சமத்துவத்தினை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்கள். இவரது குடும்பத்தினர் அனைவரும் சுவாமி சிவானந்தரின் சீடர்கள். இவரது தந்தையார் சுவாமி சிவானந்தரின் நெருங்கிய சீடர். அவரின் வேண்டுகோளினை ஏற்று பரமசிவன் உட்பட 4 சகோதரர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்திட விரதம் பூண்டவர்கள்.இவரது குடும்பத்தினர் காந்தியக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு அதன்படி வாழ்ந்துவருபவர்கள். ஜாதி சிந்தனை கடுகளவு கூட இவர்கள் வீட்டில் இருக்கின்ற எவரிடமும் காண முடியாது. பேராசிரியர் பரமசிவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர் இளைஞர் முன்னேற்றத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதற்காக “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்” (ABVP) அமைப்புடன் தம்மை இணைத்துக்கொண்டவர், சமூகநீதி கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏபிவிபி மூலம் கருத்தரங்குகளை மதுரையில் நடத்தியவர். சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்தவர். பல இஸ்லாமிய மாணவர்களுக்கு இவர் நிதி உதவி செய்திருக்கிறார். இந்து தருமத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்புடைய இவர் தமது கொலைக்கு சில நாட்கள் முன்னால் கூட சில கோவில்களுக்கு கிருஷ்ண விக்கிரகங்களை அளித்துள்ளார்.

Acetylcysteine can be used by children with severe renal disease. The first form of the chemo Taroudant clomid vs letrozole cost pill (called "avalon") was introduced in 1961. You must have an account of your drug before you can use all the features of the website.

In the first four months of 2019, prescription painkillers were involved in the deaths of more than 9,000 people, according to the centers for disease control and prevention. This time we not only have a superb selection of our best selling products up for sale, but in addition we have a range of other incredible products, such as our best-selling mersa super pilsner, our signature clomid for sale near me line mersa beer and mersa light, our finest hand selected craft beers, fresh juices and juices and many more. I would like to thank you and all the other friends who were so close to her.

If the drug you have to buy is one you do not feel comfortable with you should check the prices with the other pharmacies in the area. Ordering of the drugs is done in a pharmacy or in a hospital, for which the patient has to arrange an appointment, which is generally done at http://davepowers.com/author/mid-admin/ the same time as the date of delivery. The fda's review of pfizer's atarax drug will provide a "powerful weapon" that can be used to force the company to increase production and allow people to get their prescriptions.

28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.” students
வாழ்வின் சேவை நினைவிலும் தொடர்கிறது:

சுவாமி விவேகானந்தர் வழி வாழ்ந்த ஏழைகளுக்காகவே வாழ்ந்து வந்த பேராசிரியரின் இலட்சியப் பணிகளைத் தொடர்ந்து செய்து வர மதுரை நகர் ஏபிவீபி கார்யகர்தர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பேராசிரியர் படுகொலை செயப்பட்டு ஓராண்டு நினைவு நாளில் (28.03.1999) அவரது பெயரில் வாராந்திர மருத்துவ ஆலோசனை மையம் நடத்திட துவங்கினார். இம்முகாமினை பா ஜ க வின் பொதுச் செயலாளரராக அச்சமயத்தில் இருந்த திரு கே என் கோவிந்தாச்சாரி அவர்கள் வந்து துவக்கி வைத்தார். திரு கோவிந்தாச்சாரி அவர்களால்தான் பரமசிவன் அவர்கள் ஏபிவீபி பணியில் ஈடுபடத் துவங்கினார். அன்றிலிருந்து இந்த வாராந்திர இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக நடை பெற்று வருகிறது. வாரந்தோறும் சராசரி 75 முதல் 125 நோயாளிகள் பயன் அடைந்து வருகின்றனர். நல்ல டாக்டர்கள் வருகின்றனர். கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. நல்ல தரமான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக நோயாளி வருகின்ற சமயத்தில் மட்டும் பதிவுக் கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப் படுகிறது. இதுவரை 515 வாராந்திர மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

வாரம்தோறும் சுமார் ரூ,5,000/- ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாம் நடைபெற்று வருகின்ற இடத்திற்கு மாதம் தோறும் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு ரூ. 6,000/- ஆகின்றது. மொத்தமாக வருடத்திற்கு சுமார் 3.5 லட்சம் தேவைப்படுகிறது. ஏபிவீபி முன்னாள் தொண்டர்கள், ஆதரவாளர்கள், மெடிக்கல் ரெப் மற்றும் தற்போதைய ஏபிவீபி தொண்டர்கள் பலரின் ஆதரவினால் இம்முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகாமினை தொடர்ந்து நடத்துவதற்கு மதுரையில் தொண்டர் குழு உள்ளது. இந்த முகாமினால் அதிக அளவில் பயன் பெற்றவர்கள் சௌராஷ்ட்ர சமுதாயத்தினர், கூலிவேலை, பாரம்சுமக்கும், ட்ரை சைக்கிள் ஓட்டும் சமுதாயத்தினர், கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் ஆவார்கள். இதிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயனடைதுள்ளனர். இந்த இலவச மருத்துவ முகாமின் 11 வது ஆண்டு துவக்கவிழா மார்ச் 22 அன்று நடைபெற்றது. பேராசிரியர் கே ஆர் பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ ஆலோசனை மையத்தினை ஏபிவீபி மற்றும் இளய பாரதம் சேவா டிரஸ்ட் இணைந்து நடத்தி வருகிறது.

medical-1பரமசிவம் நினைவு மருத்துவ முகாம்

பேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அவருடைய வாழ்க்கையின் தூய சிறப்பினை மேலும் நிலைநாட்டுகிறது. அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைகரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம். தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து இந்துக்களும் அவருக்கு சாதி, கட்சி, இயக்க பாகுபாடு இல்லாமல் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இந்து.காம் அவருக்கு தமது சிரத்தாஞ்சலியை செலுத்துகிறது.

[தகவல்களுக்கு நன்றி: விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன்]

17 Replies to “நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்”

 1. அன்புள்ள ஆசிரியர்கள் திரு. அரவிந்தன் நீலகண்டன் மற்றும் சடகோபன் அவர்களுக்கு,
  இந்தக் கட்டுரைக் கருத்தை சில நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, நிதியுதவி செய்யக் கருதலாம் எனக் குறிப்பிட்டிருந்தேன். யாரும் பதிலனுப்பவில்லை, ஒருவரைத்தவிர.

  அவர் பதிலின் முதல் வரி இதுதான்: ‘அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயாராக இருக்கிறேன், மதத்தை விட்டுவிட்டு மதச்சார்பின்மையுடன் இருந்தால்’.

  மேலும், இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் சேர்த்து நாம் உதவிசெய்தால் கூட ஹிந்துக்களின் அறக்கட்டளை என்று சொல்லக் கூடாது, ஹிந்து மதத்தின் பெயரால், ஹிந்து இயக்கங்களின் சேவையாக‌ இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  அவருக்கு முதல் வரியே கடைசி வரியாக ஒரு பதில் எழுதிவிட்டேன் : ‘உங்களின் விரிந்த கரங்கள் எங்களுக்கு தேவையில்லை; நீங்கள் போடும் பிச்சைக் காசுக்காக நாங்கள் மதம் மாறத் தயாராயில்லை’

  பல வருட நண்பரிடம் இவ்வாறு பேசியது சரியா எனத் தெரியவில்ல.

  கார்கில்

 2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைகப்படும்.

  ம்றைந்த பேராசிரியர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவர் விட்டுச்சென்றுள்ள பணிகளைத் தொடர்ந்திடும் ஏபிவீபி தொண்டர்களைப் பாராட்டுவோம். ஒன்று பட்ட‌ ஹிந்து சக்தியே ஹிந்துஸ்தானத்தைக் காத்திடும். பேராசிரியர் பரமசிவன் பற்றி நினைவு அஞ்ச‌லிக் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ள தமிழ் இந்து டாட் காம் மிற்கு நன்றி.‌

 3. //பல வருட நண்பரிடம் இவ்வாறு பேசியது சரியா எனத் தெரியவில்ல.//
  நிச்ச்யமாக தவறல்ல. சரிதான்.

 4. அரவிந்தன் மிக முக்கியமான சேவை செய்கிறார் இம்மாதிரி நினைவூட்டல்கள் மூலம். இதெல்லாம் அச்சு சாதனத்தில் வெளியாகவேண்டும், இப்படி வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து தமக்குள் பேசிக்கொள்வது போன்ற இணையத்தில் தானே இதற்கெல்லாம் இடம் கிடைக்கிறது என்று ஒவ்வொரு முறையும் தமிழ் ஹிந்துவில் மாத்திரமே பேசப்படும் விஷயங்கள் பற்றி நினைத்து அங்கலாய்த்துக் கொள்வேன். இங்காவது இதற்கு இடம் கிடைக்கிறதே, பேச அரவிந்தன் போன்றவர்கள் இருக்கிறார்களே என்று மனம் சமாதானம் கொள்கிறது. இணையமும் இல்லையெனில் பேரா. பரமசிவம் பற்றி எனக்குத் தெரிந்தே இராது. நினைவும் வந்திராது. பத்திரிகைகள் வெள்ளமாகக் கடைகளில் பெருகிவரும் இந்நாட்களில் பேரா. பரமசிவத்தை நினைவு கொள்ள ஒரு பத்திரிகை கூட இல்லையே. அதுதான் பரவலாகவும் அதிகச் செலவில்லாமலும் விஷயங்களை எடுத்துச் செல்லும்.

 5. பேராசிரியர் பரமசிவம் மதுரைக் கல்லூரி மாணவர்களிடமும், மாணவர்கள் அவர் மீதும் வைத்திருந்த அன்பு அளவிடற்கரியது. இந்து இயக்க தலைவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலை செய்து வந்தனர் இஸ்லாமிய தீவிர‌வாதிகள். தன்னலம் கருதாது சமுதாயத்திற்காக உழைத்த பேராசிரியர் பரமசிவம் என்றும் நமக்கு வழிகாட்டி. அவரது பெயரில் இயங்கும் இந்த இலவச மருத்துவ சிகிச்சை முகாம்கள் அவரை என்றும் மக்கள் நினைவில் வைத்திருக்கும்.

 6. நல்லவன் வாழ்வான் என்பது இறந்தும் நமது நினைவில் வாழும் பேராசிரியர் பரமசிவம் போன்றவர்களைகுறிப்பிடுவதுதான். ஏபிவிபிஐ எதிர்க்கும் “போலி மதச்சாரபின்மை”வாதிகள் காம்ரேடுகளின் வன்முறை சித்தாந்ததையோ இஸ்லாமிய பயங்க்ரவாதத்தையோ எதிர்க்கத்துணிவதில்லை. அஞ்சலி செலுத்தும் தமிழ் இந்துதளத்துடன் இணைந்து பேராசிரியர் பரமசிவத்திற்கு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்

 7. Dear Aravind Neelakandan,
  Namaste. Thanks a lot for a nice article on Prof.K.R. Paramasivan.i am an ABVP activist who derived a lot of inspiration from Professor and continuing the social work till today.
  one information to you. there was a nationwide protests against brutal murder of Paramasivanji.huge demonstrations were held at more than 400 places throughout the country including in states like UP .Hp mp bihar rajastan, manipur. i have not seen any Tamil social activist respected in such manner in allover india.In comemoration his services the ABVP Madurai branch has started this Medical Project. this is the another way of paying homage.

 8. மிக உன்னதமான காரியம் செய்துள்ளீர்கள். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்கள் பணியை வெளி உலகிற்கு உணர்த்திய அரவிந்தன், சடகோபன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இந்தச் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் பேராசிரியர் பரமசிவன் அவர்களின் ஆசிகள் என்றும் இருக்கும்.

  //பல வருட நண்பரிடம் இவ்வாறு பேசியது சரியா எனத் தெரியவில்ல.//

  இதை விடச் சரியாக ஒரு பதில், அதுவும் சாட்டையடி போல், வேறு ஒன்று கொடுக்க முடியாது. பாராட்டுக்கள் கார்கில் ஜெய்!

  அன்புடன்

  ப.இரா.ஹரன்.

 9. தவறு பேராசிரியர் பரமசிவம் மீது என்று கூட சொல்லி விடுவார்கள். சிறுபான்மை சகோதரர் கத்தியை விசிறிக் கொண்டிருந்த போது இவராக குறுக்கே சென்றது ஏன்? பரமசிவம்ஜி பிழைத்திருந்தால், சிறுபான்மை சகோதரரை எதிர்த்து தாக்கினார் என்று வருண் காந்தி போல என்.எஸ்.ஏ.யில் அடைத்திருப்பார்கள். அந்த சிறுபான்மை சகோதரருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மன்மோஹன் ஜி தூங்கி இருக்க மாட்டார். இந்தியாவின் வளங்களை அழிப்பதில்… மன்னிக்கவும். அனுபவிப்பதில் முஸ்லிம்களுக்குதான் முத‌லிடம் என மன்மோஹன் ஜி கூறியதை மறக்க வேண்டாம்.

 10. அன்புள்ள திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு, இந்த மையத்துக்கு நிதி உதவி செய்வது எப்படி? அதற்கான விவரஙகளை வெளியிட்டால் என் போன்றவர்களுக்கு உதவுமே!

  கர்கில் ஜெய் எழுதியிருந்தது சரியே. ‘மதச்சார்பற்ற’ என்ற போலித்தனமான ஒரு போர்வையை இன்னும் பலர் அணிந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதுதான் இவர்களுக்கு உண்மை விளங்கப் போகிறதோ!

 11. மறைந்த பேராசிரியர் கே.ஆர். பரமசிவன் நினைவு வாராந்திர மருத்துவ சேவை மையத்திற்கு உதவி செய்திட விரும்புபவர்கள் ஏபிவீபி இன் முன்னாள் மாநில செயலாளர் திரு.சடகோபன் ஜி அவர்களைத் தொடர்பு கொண்டால் அவர் தேவையான தகவல்களைத் தருவார். அவர் தற்போது விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராக இருக்கின்றார். அவர் பேராசிரியர் குடும்பத்தினருடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருக்கின்றார். நிறைய ஏழைகள் பயன் பெற்றுவரும் இந்த முகாமிற்கு நிதி உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும். இது ஒரு ட்ரஸ்ட் பெயரில் நடைபெற்று வருகிறது. தனது வருமானம் அனைத்தையும் பிறருக்கு கொடுத்து வாழ்ந்து வழி காட்டிச் சென்றுள்ளார் பேராசிரியர் கே.ஆர்.பரமசிவன்.

  வித்யா நிதி

 12. dear aravindan…
  your article is very much enlightened… i am close associate of
  prof k.r paramasivamji… we together worked in abvp as 15 long years.
  ABVP WORKERS WHO WORKED IN THE DECADE OF 1980 AND 1990 KNOWS HIM VERY
  WELL… EVEN AFTER HIS MARTYER HE LIVES IN THE FORM OF MEDICAL CAMP..
  EVERY YEAR ABVP OBSERVE IS DEMISE DAY IN C OLLEGE AND AREA.
  ABVP MAGAZINE “MANAVARSAKTHI” PUBLISHING ARTICLE ON HIM AND
  RELATED ARTICLES….
  IN THE NET YOU HAVE BROUGHT THIS ARTICLE WILL REACH MAXIMUM NO
  OF LIKE MINDED PEOPLES….

  IF ANY BODY WANTS TO HELP THE MEDICAL CAMP ACTIVITIES
  THEY CAN HELP TO DONATEIN THE NAME OF “ELAYA BHARATHAM SEVA TRUST”
  OR CONTACT O44-2434 3457….

 13. அவருக்கு முதல் வரியே கடைசி வரியாக ஒரு பதில் எழுதிவிட்டேன் : ‘உங்களின் விரிந்த கரங்கள் எங்களுக்கு தேவையில்லை; நீங்கள் போடும் பிச்சைக் காசுக்காக நாங்கள் மதம் மாறத் தயாராயில்லை’

  பல வருட நண்பரிடம் இவ்வாறு பேசியது சரியா எனத் தெரியவில்ல
  நண்பரே,
  இன்றுதான் படித்தேன். இது தான் சரியான பதில். இவர்கள் போன்றவர்கள் மதச் சார்பற்ற என்ற போர்வையில், நடமாடுபவர்கள். அவர்களுக்கு மத உணர்வின்றி பரமசிவன் செய்து கொண்டிருந்த உதவி கண்களுக்குப் படாது. ஏன்; இப்போது கூட அவர் பெயரில் நடக்கும் இலவசமருத்துவ முகாமில் மத உணர்வின்றிதான் மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.
  அவர்கள் உதவி நக்மக்குத் தேவையில்லை.
  நரசய்யா

 14. திரு. அரவிந்தன் அவர்களுக்கு ABVP சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பரமசிவம் அவர்களின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு, குமரி ABVP சார்பாக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் “இரத்த தான முகாம்” நடைபெற்றது என்பது பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சமீபத்தில் “போலீஸ் பக்குருதின்” என்ற பயங்கரவாதி கைது என்று நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். இந்து இயக்க தலைவர்கள் கொலையிலும், அத்வானிஜி ரத யாத்திரையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்திற்காகவும் அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

  1998ல் பரமசிவம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இதே “போலீஸ் பக்குருதின்” கைதானான். ஆனால், ஆதாரங்கள் இல்லை என்று இவன் விடுதலை செய்யப்பட்டான்! என்பதை வருத்ததுடன் நினைவு கூறுகிறேன்.

 15. Pingback: Indian Secularism
 16. உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.