இன்னுமொரு சிரவணன் இந்த பூமியில்…

காந்தியடிகள் சிறுவனாய் இருந்தபோது பார்த்த ‘சிரவணனின் பிதுர்பக்தி’ என்ற நாடகம் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைப் பார்க்கும்போது கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்ததாகவும் தனது எல்லாப் பாவங்களையும் அது போக்கிவிட்டதாகவும் தனது சுயசரிதையான சத்திய சோதனையில் காந்தியடிகள் கூறி இருக்கிறார்.

அந்தக் கதை இப்படிச் செல்கிறது: கண் தெரியாத பெற்றோர்களைத் தீர்த்த யாத்திரையாக அவர்களது மகன் சிரவணன் கொம்பின் இருபுறமும் கட்டிய கூடைகளில் வைத்துத் தோளில் சுமந்து செல்கிறான். இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் பெற்றோர்களை வைத்துவிட்டு குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவரச் செல்கிறான் சிரவணன்.

சிரவணன் கிணற்றிலிருந்து தண்ணீர் மொள்ளும் சத்தம் யானை தண்ணீர் குடிப்பதுபோலக் கேட்க, அங்கு வேட்டையாட வந்த ஒருவன் சிரவணனை அம்பெய்து கொன்று விடுகிறான். தண்ணீர் எடுக்கச் சென்ற மகனைக் காணாத பெற்றோர்கள் கதறித் துடிக்கும் சத்தம் கேட்டு அங்குச் சென்று அவர்களைப் பார்த்ததும், வேட்டையாட வந்தவனுக்குத் தான் செய்த தவறின் ஆழம் தெரிகிறது. சிரணனின் பெற்றோர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லித் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்கிறான் அவன். அவர்கள் உனக்கும் மகன் பிறந்து அவன் உன்னைப் பிரியும் சோகத்தை அனுபவிப்பாய் எனச் சாபமிடுவதாக முடியும் அந்தக் கதை.

அம்பெய்தவன் தசரதன். அவர்களது சாபம்தான் ராமன் காட்டுக்குச் செல்ல வழிவகுத்தது என ராமகாதையில் சொல்லப்படுகிறது, ஒரு கிளைக்கதை வழியாக.

இளமையில் எதெற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருந்த காந்தியடிகள் வீட்டிலிருந்த பணிப்பெண் ரம்பா சொல்லிக்கொடுத்த ராமநாம ஜெபமே தனது வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் சொல்லி இருக்கிறார் சத்திய சோதனையில்.

நாகரீகத்தின் உச்சியை அடைந்துவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில்தான் பெரும்பான்மையான பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் இரவல் குழந்தைகளுடன் தங்களது முதுமையைக் கழிக்கின்றனர்.shravana

இதுவரை தனது மகன், மருமகள் என நினைத்த தனது பிள்ளைகள் இப்போது தங்களை பாரமாக நினைத்து விட்டார்களே என மருகும் ஒரு வகையான சோகம், பெற்ற பிள்ளைகளை பிரிந்திருக்கும் சோகம் ஒருபுறமுமாக அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டிய முதுமை சோகத்தில் கழிகிறது.

தற்போது சுயநலத்தினாலும், இன்ன பிற காரணங்களாலும், என் வீடு, என் குடும்பம் எனச் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில்தான் தான்தோன்றிப் பிள்ளைகளும், பெற்றோரை மதிக்காத குழந்தைகளும், சமூகத்தில் வளர்கின்றனர். ’அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம்’, ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று வாழ்ந்த நமது பாரம்பரிய வாழ்க்கை அதீத நுகர்வுக் கலாச்சாரத்தால் பாழ்பட்டுக் கிடக்கிறது.

நமது பாரதத்தில்தான் வயதான பசுவைக்கூட பாதுகாக்க கோசாலைகள் ஏற்படுத்துகிறோம். தங்களது முயற்சியின் மூலம் அதிகபட்ச உழைப்பை நல்கி, கடன் வாங்கியாவது படிக்கவைத்து வாழ்க்கையில் ஒருநிலை அடையும்வரை பாதுகாத்த பெற்றோர்களுக்குத் தற்போதைய தலைமுறை வழங்கும் பரிசு தனிமை… தள்ளிவைப்பு.

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் குழந்தைகளுக்கு தெரியுமா அங்கு அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள்? உலகெங்கிலும் உள்ள முதியோர் இல்லங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதும், அவர்கள் மீதான வன்முறைகளும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆயினும் நாம் பேசுவது பொது நடைமுறையைப் பற்றித்தான்.

வயதாக ஆகக் குழந்தைகளைப் போல நடந்துகொள்ளும் பெற்றோர்கள் மீது நாமே சில சமயங்களில் சுடுசொல்லும் கோபமும் காண்பிக்கிறோம். முதியோர் இல்லங்களில் எல்லோருமே சேவை மனப்பான்மையுடன் வேலைசெய்பவர்களா? எவ்வளவு தூரம் முதியவர்களை அவர்கள் அன்புடன் நடத்துவார்கள் என்று கூறமுடியுமா? ஏன், அவர்கள் மீது வன்முறை கூட கட்டவிழ்த்துவிடப் படலாம். அவர்கள் சிறுமைப்படுத்தப்படலாம். அடிக்கடி குடும்பத்தினர் யாராவது சென்று நலம் விசாரிக்காவிட்டால் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் தெரியக்கூட வாய்ப்பில்லை.

இதைவிட ஒரு பாவம் எந்த மகனுக்காவது, அல்லது மகளுக்காவது வேண்டுமா? இன்று நமது பெற்றோருக்கு நாம் செய்வது, நமக்கும் நமது மக்களால் செய்யப்படலாம் என்பதை உணரவேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை நாம் மறந்ததெப்படி?

பாரத தேசத்தில் நமது புராண இதிகாசங்கள் பேசும் அறிவுரைகள் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் சில நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதை மெய்ப்பிக்கிறான் இந்தச் சிறுவன். கடந்த பதிமூன்று ஆண்டுகளாகத் தனது தாயாரைத் தோளில் சுமந்து தீர்த்த யாத்திரையாகக் கொண்டு செல்கிறான் ஒரு நவீன சிரவணன். தற்போது கம்யுனிஸ்டுகளின் பிடியிலிருக்கும் நேபாளமே வியந்து போற்றுகிறது இந்த இந்தியச் சிறுவனது பிதுர்பக்தியை. பாரதத்தின் உயிர்நாடி ராமாயணமும் மகாபாரதமுமே. அவற்றின் உயர்ந்த தத்துவம் மீண்டும் உலகமக்களுக்கு அழுத்தமாக இந்தச் சிறுவனின் வாயிலாக நம் அனைவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. இவனைக் குறித்து முழுதும் படிக்க இங்கே சொடுக்கவும்.

8 Replies to “இன்னுமொரு சிரவணன் இந்த பூமியில்…”

  1. மிக நல்ல கட்டுரை. சிறப்பாக எழுதியிருக்கிறார்.

    ஆனால் ஏன் காந்தியைப் பற்றிய குறிப்பு வரவேண்டும் என்று புரியவில்லை. காந்தி சத்திய சோதனையில் இதையெல்லாம் குறிப்பிட்டிருந்தாலும், அவர் என்றுமே தாய் தந்தையரை நன்றாகப் பேணியதாகக் குறிப்பில்லை. கிட்டத்தட்ட காந்தி எந்த புராணத்தையும், நீதிக் கதையையும் தன் வாழ்க்கையில் பின்பற்றியதாகத் தெரியவில்லை. கீதையைப் படித்ததாகச் சொன்ன மகாத்மா கீதைக்கு நேரெதிராக, ஓவ்வொரு செயலையும் பிரதிபலனை எதிர்பார்த்தே செய்தார். உதாரணத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாத கிலாஃபத் இயக்கத்தை பிரதிபலனை எதிர்பார்த்து இந்தியாவில் வளர்த்தார்.

  2. I agree with Kargil Jay. I am not a fan of Gandhi. I feel the problems India is facing at present are due to the misguided policies of appeasement of Muslims by Gandhi. For a starter,please refer to Nathuram Godse’s speech.I consider him more of a patriot than Gandhi.
    Good article, this story of Seravanan should be taught at school from an early age to all children. I am waiting for the day when Ramayana/ Mahabharatha will be taught in school and study of Sanskrit becomes compulsory. I can only dream on!

  3. ஒவ்வொரு இந்துவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான கட்டுரை. குறிப்பாக பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, பெற்றோரைப் புறந்தள்ளி வாழும் சிலர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. காந்தியடிகளின் வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றலாம். காந்தியடிகள் பின்பற்றியது தசரதனை. தான் ஒரு பெரிய சக்கரவர்த்திதானே, தான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றில்லாமல், செய்த தவற்றிற்கான பிராயச்சித்தத்தை செய்ய முன் வந்ததை, அந்தப் பணிவை காந்திஜி முன்மாதிரியாகக் கொண்டார். சிரவணன் தன் பெற்றொருக்குச் செய்தது கடமை. அதை தசரதன் செய்ய முன் வந்தது அவன் உயர்வை, மனிதாபிமானத்தை, நேர்மையைக் காட்டுகிறது. சிரவணனின் நன்னடத்தையைப் போல அதுவும் வாழ்வில் பின்பற்றத் தகுந்தது. வாழ்த்துகள் வெற்றிச்செல்வன்.

  4. அன்புள்ள வெற்றிச்செல்வன்

    அருமையானதொரு கட்டுரை. அமெரிக்கா போன்ற வசதியான (!!!!????) நாடுகளில் சோஷியல் செக்யூரிட்டி என்ற ஒரு அமைப்பு உண்டு. வேலை பார்க்கும் பொழுது ஒரு குறிபபிட்ட தொகையை அரசுக்குக் கட்டிக் கொண்டே வந்தால் ஓய்வு காலத்தில் அரசாங்கம் ஓய்வூதியமும், மருத்துவச் செலவுகளும் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பு இல்லை. உரிய வேலையில் இல்லாமலிருந்து வயதாகி விட்டாலோ, வறுமையில் இருந்தாலோ அரசாங்கம் ஒரு துருமைக் கூடக் கிள்ளிப் போடாது. அப்படியானால் வயதானவர்களை யார் பாதுகாப்பார்காள் என்று அமெரிக்க போன்ற மேலைநாட்டினர் அதிசயமாகக் கேட்ப்பார்கள். அந்தக் கேள்விக்கான விடையை உங்கள் கட்டுரை அளிக்கிறது. நமது சோஷியல் செக்யூரிட்டி என்பது நமது பாரதப் பண்பாடும் கலாச்சாரமும்தான். அதை இழந்து விட்டால் நாம் செக்யூரிட்டி இல்லாதவர்களாகி விடுவோம். நம் புராணங்கள் நமக்கு பெற்றோர்களைக் காக்க வேண்டிய கடமையை நினைவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பது நம் கலாச்சாரம். அரசாங்கம் செய்ய முடியாத வேலையை மறைமுகமாக நம் கலாச்சாரம் செய்ய வைக்கின்றது. இல்லாவிட்டால் கோடிக்கணக்கான முதியோர்களை எப்படி இந்திய அரசாங்கம் பாதுகாக்க முடியும். ஆகவே நம் இந்துப் பண்பாடு நம்மிடம் இந்த சமுதாயப் பாதுகாப்பைக் கொணர்கிறது. அருமையாகச் சொல்லியுளளீர்கள். தொட‌ர்ந்து இது போன்ற‌ செய்திக‌ளைச் சொல்லி வாருங்க‌ள்

    விஸ்வாமித்ரா

  5. பெற்றோரை காப்பது மகனின் கடமை
    அந்த கடமை தவறினால் அதனால் விளையும் பாவத்திற்கு அவன் பொறுப்பாளி
    ஆனால் அனைவரையும் காப்பாற்றுவது இறைவனே.
    எப்படி.?
    என்றோ பிறக்கும்போகும் குழந்தைக்காக பால் வழங்க பெண்களுக்கு மார்பகங்களை இறைவன் படைத்திருக்கிறார்.
    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருள்மொழிகள்.

    மகாத்மா காந்தி உண்மைக்குதான் முதலிடம் கொடுத்தார்
    பகவத் கீதைக்கும், ராம நாமத்திற்கும் சர்வமத பிராத்தனைக்கும் முதலிடம் அளித்து அனைவரையும் ஒன்று படுத்தி தீண்டாமை கொடுமை, ஏழை நெசவாளர்கள் வாழ்வு முன்னேற்றம், இந்திய குடிசை தொழில், முன்னேற்றம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு கள்ளை உண்டு நாசமாக போகும் ஏழை குடும்பங்களின் வாழ்வில் ஒளி போன்ற பல இனங்களில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு
    பாடுபட்டதையும், பகவான் கிருஷ்ணர் போல் ஆயுதம் இன்றி உண்ணா விரதம், ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சை போன்ற ஆங்கில அரசை எதிர்த்து போராடியதை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்.
    அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
    அவர் பகவான் கிருஷ்ணனை போல் அவதாரமல்ல அனைத்து தீய சக்திகளையும் அழிப்பதற்கு.
    ஏன் பகவான் கிருஷ்ணனை அவர் காலத்தில் பல மன்னர்கள் எதிர்க்கவில்லையா? அவரை குற்றம் சொல்லவில்லையா?
    எப்போதும் நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு.
    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் அன்ற வள்ளுவரின் கூற்றுப்படி காந்தியின் வாழ்வை விமர்சித்தலை தவிர்த்தல் நலம்

  6. மகாநதி, அன்பேசிவம், போல சில படங்களை பார்த்தாலும் கண்ணில் தாரை தாரையாக எனக்கு கண்ணீர் வருகிறது. எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஆனால் யாரும் உருப்பட்டா மாதிரி தெரியலையே!

  7. //என்றோ பிறக்கும்போகும் குழந்தைக்காக பால் வழங்க பெண்களுக்கு மார்பகங்களை இறைவன் படைத்திருக்கிறார்.//

    ஆணுக்கும் ஏன் படைத்தார்!
    பறவைகளுக்கு ஏன் இல்லை!

    அது முட்டையிடுவதால் என்றால் ஏன் ப்ளாட்டிபஸுக்கு மார்பகம் இருக்கிறது!

    இந்த பக்கம் நான் வர்றதில்லை! யாரோ ஒருத்தர் என்னை சிக்க வைக்கவே இந்த லிங்கை என் பதிவின் பின்னூட்டத்தில் தந்திருக்கிறார்!

  8. If an unbiased assessment was made on Gandhi and his role in the political arena of Hindustan, I regret to state that he would come out as a very good strategist and schemer to hijack the Congress movement and to project him as the leader of both Hindus and Mohmedans, say, the entire population of Hindustan! He always took sides with Mohmedans, misleading and confusing Hindus. In fact, he desreved to be called Father of Pakistan, becuase, when Jinnah and his Moslem League demanded partitioning of Hindustan on the basis of Hindu-Mohmedan two nation theory and represented Mohmedans, Gandhi should NOT have participated in the parlance, as he was calling himself common to all. Had he really had conscience, which he used to call his inner voice, he would have told that he was NOT fit to hold talks because he was not representing Hindus and the issue was Hindu-Mohmedan. It is hightime Hindus identified their real leaders so that they do not commit mistakes in choosing their leaders in future.

    Dr Ambedkar rediculed the demand of Pakistan on the basis of religion and warned if it became a reality, there should also be exchange of population on the basis of religion, fsailing which, we woudl have a permanent headache! But Gandhi and Nehru assured Mohmedans that they could continue to reside in Hindustan . In the border of Rajasthan and Gujarat, many converted Mohmedans came forward to return to their parent faith that is Hindu because their area fell in Hindustan; and Gandhi huriedly told them that they need not become Hindus just because their region had become Hindustan!

    When Subhash Chandra Vasu took sides with Japanese and Germans during the Second world war to oppose the British, Gandhi declared that he would oppose him if he entered Hindustan with the help of Japanese. But this very same Gandhi, during his Khilafat movement said he would not hewsitate to invite the Amir of Afganistan to drive out the British! This was the Gandhi brand of patriotism! Until you make a thorough study of the behaviour of Gandhi in evry one of his steps, you will continue to hold him in high esteem. gandhi advised Koran to be read in temples but never dared to say Gita to be read in the mosque!

    Gandhi’s autobiography is NOT a completed one to claim that his life was an open book. His hands are soaked with the blood of thousands of innocent Hindus during Khilafat, as well as during the days of vivisection of Hindustan. Hiding the pages of history will only result in keeping the younger generation to live in a fool’s paradise.

    Truth is bitter and especially the truth related to Gandhi is more bitter! And our children should be taught the truth.

    MALARMANNAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *