நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

அறிந்த தகவல் 1:

இருசொற்கள் சேரும்போது, வினைச்சொல்லில் அதன் வேர்ச்சொல் மட்டும் இருந்து,
காலத்தைக் காட்டும் பகுதி மறைந்து அதாவது ”தொக்கி” இருந்தால், அது வினைத்தொகை.

உதாரணம்: ஊறிய காய், ஊறும் காய், ஊறப் போகும் காய் என்று காலத்தை மறைத்து எப்போதும் வினை நடக்கும் வாய்ப்புள்ள ஊறுகாய் எனும் வார்த்தை வினைத்தொகை என அறிக.

அடுக்கு மொழித் தகவல்:

தெரிஞ்சுக்கோடா தொக்கின்னா அது கொக்கி
தொக்கித்தாண்டா வரும் தொகை
எனக்கும் தெரியும் அதோட வழிவகை
பரவிட்டுப் போகுதுடா பகை
கிடைக்கிற தொகைய வச்சு நாம விடுவோமுடா புகை

வள்ளுவர் சொல்லாத தகவல்:

உறுமீன் வரும்வரை
கொக்கிதேடி நிற்குமாம் அந்தக் கொக்கு
ஊறுகாய நக்குமாம் அதோட நாக்கு

அறிந்த தகவல் பற்றிய அறியாத தகவல்:

ஒரு வாக்கியத்தில் பல வார்த்தைகள் உண்டு. அவற்றில் வினைத்தொகையும் ஒன்றாக இருக்கலாம். வினைத்தொகை வார்த்தை ஒன்றில் காலம் மட்டும் அல்ல, வினை பற்றிய விவரமும் மறைந்தே இருக்கிறது. அந்த வாக்கியத்தில் உள்ள மற்ற வார்த்தைகள் தரும் தகவல்களைக் கொண்டு எப்போதும் நடக்கும் சாத்தியமுள்ள வினை பற்றிய விவரத்தை அறிய விரும்புபவர்கள் அறிந்து கொள்வர். எனவே, ஊறுகாய் என்ற வார்த்தை வெறும் ஊறுகாய் விவகாரம் இல்லை என நீவிர் அறியக் கடவீர்.

சினிமா தகவல் 1:

ஒரு தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவி பைக் மெக்கானிக்கைக் காதலிக்கிறாள். அவனை சந்திக்க தன்னுடைய ஸ்கூட்டியை வேண்டுமென்றே ரிப்பேர் செய்துகொள்கிறாள். அப்போது பக்கத்தில் இருக்கும் அவள் தோழி சொல்லும் வசனம்:

“உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா”

சினிமா தகவல் 2:

அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தபின் புனிதமான பெயரைக் கொண்ட எங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரை இந்தப் படம் கெடுத்துவிட்டது என்று பிரச்சினை செய்ததால் படம் மீண்டும் ஸென்ஸார் செய்யப்பட்டது.

சினிமா தகவல் 3:

இந்துத் தெய்வங்களைக் கேலி செய்தும், கிராமத்து உயர்நாகரீகத்தை மட்டம்தட்டியும், இந்துக்களின் பழக்கவழக்கங்களை இகழ்ந்தும் வருவதால் ஒரு நடிகருக்கு (?) பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

தெரிந்த, புரியும் தகவல் 1:

வினை [ viṉai ] , s. act, action, deed, work, தொழில்; 2. thought, temper (good or bad) கருத்து; 3. malignity, evil, misfortune, malice, தீவினை; 4. a verb, வினைச்சொல்; 5. war, போர்.

தெரிந்த, புரியும் தகவல் 2:

sec⋅u⋅lar⋅ism/ˈsɛkyələˌrɪzəm/ [sek-yuh-luh-riz-uhm] – noun

1. secular spirit or tendency, esp. a system of political or social philosophy that rejects all forms of religious faith and worship.
2. the view that public education and other matters of civil policy should be conducted without the introduction of a religious element.

Origin:
1850–55; secular + -ism
——
sec•u•lar•ism n. [sěk’yə-lə-rĭz’əm]

Religious skepticism or indifference.
The view that religious considerations should be excluded from civil affairs or public education.
——
Sec”u*lar*ism, n.

1. The state or quality of being secular; a secular spirit; secularity.
2. The tenets or principles of the secularists.
——-
secularism – noun

a doctrine that rejects religion and religious considerations

தெரிந்த புரியும் தகவல் 3:

Secular noun மதச்சார்பற்ற, சமயச் சார்பற்ற, உலகியல் சார்ந்த

தெரிந்தும் புரியாத தகவல்கள்:

1. கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி

2. செக்யூலரிசத்திற்காக என்று சொல்லிக்கொண்டு ஏற்படும் கூட்டணிகளில் எப்போதும் இடம் பெறும் கட்சி ஒன்றின் பெயர் “முஸ்லீம் லீக்”.

3. சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

4. இந்தியாவில் மிக மிக மிக மிக மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ஸிகளும், யூதர்களும் சிறுபான்மை அந்தஸ்து கோராவிட்டாலும் உயர்ந்த நிலைகளில் இருக்கின்றனர்.

5. இந்துக்களின் அன்பிற்கு மட்டுமல்ல மரியாதைக்கும் உரியவர்களான பார்ஸிகளும், யூதர்களும் “ஐயோ கொல்றாங்களே” வசனம் பேசாமல், “இந்துக்கள் எங்கள்மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்று சொல்லுகிறார்கள். தங்களின் உழைப்பால் உயருகிறார்கள். அடுத்தவர் வரிப்பணத்திற்கு ஆசைப்படுவதில்லை.

6. இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.

சமீபத்திய நற்செய்தி:

karuna_award
கத்தோலிக்க பிஷப் அமைப்பு தரும் “வாழ்நாள் சாதனை” விருது பெறும் கருணாநிதி

2009 தேர்தலுக்கு முன், இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:

பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் அறிந்ததும், அதிகம் தெரியாததும்:

பல இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள், ஆஸிட் வீச்சுக்கள், கொலைகள், கொள்ளைகள் இவற்றின் மூலமாகவும் “அமைதி மார்க்கம்” இந்தியர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. அமைதி மார்க்கத்தின் தீவிரவாதத்தால் அழிந்துபோன வங்கதேச மக்களைப் பற்றி, காஷ்மீரத்து மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், ”அன்பு மார்க்கம்”?

”அன்பே சிவம்” உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் கிருத்துவ கன்னியாஸ்த்ரீகள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை உருக்கிக் கொள்வதாகக் காட்டப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கிருத்துவர்கள் கிருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும் என்று ஒரு கிருத்துவக் கட்சி வேண்டுகோள் விடுப்பது முதலில் விசித்திரமாகவும், பின்னர் ஏளனமாகவும் தோன்றலாம். ஒரு சில கிருத்துவர்களின் தனிப்பட்ட வேலையாகத் தெரியலாம். தீர்மானத்தை நிறைவேற்றிய கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் நடந்திருப்பது ஞாபகம் வரலாம். கிருத்துவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என்றும் நாம் நினைக்கலாம். சோனியா காந்தியின் தலைமையில் கிருத்துவர்களை எம்.பிக்களாக்க வேண்டும் என்று இந்தியாவெங்கும் வைக்கப்பட்ட ப்ரம்மாண்டமான கட்-அவுட்கள் புறக்கணிக்கத் தக்கவையாகத் தெரியலாம்.

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மதத்தின் ஆக்கிரமிப்பு முகம் நமக்குத் தெரியாது என்பதே.

அறிந்த தகவல் 2:

பத்திரிக்கைகள் என்பவை லாபத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட்டு கம்பெனிகள். மண்கலங்கள் உடைந்து போவது போன்ற உப்புச் சப்பில்லாத செய்திகளை அவை வெளியிடுவதில்லை.

அறிந்த தகவல் 3:

தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த மாநிலம் கர்நாடகம். அக்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிக்கைகள் வெங்கலப் பானைகள் உடைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

சினிமா தகவல் 4:

“நொங்ங்” என்று கொட்டினார் ப்ரூஸ் லீ.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

”It’s like a finger pointing away to the moon. Don’t concentrate on the finger, or you will miss all the heavenly glory”

பல அப்பாவிகளின் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கும் வில்லன் கூட்டத்தின்மீது வன்முறையை கட்டவிழ்க்கப் புறப்பட்டார் ப்ரூஸ் லீ.

அறிந்த தகவல் 4:

என்டர் தி எட்டியூரப்பா.

பா.ஜ.க ஆட்சியின்போது கர்நாடகாவில் சர்ச்சுகள்மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன. vandalised, vandalism போன்ற வார்த்தைகள் பக்கங்களை நிறைத்தன. சர்ச்சுகள்மீது கல்லெறியப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனராம். பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்களில் சேதாரங்களைக் காட்டும் பாதிரியாரும், பாதிரியாரின் விரலும், விரலை வேடிக்கை பார்க்கும் பேஜ்3 பிரபலங்களும் தெரிந்தனர். சேதாரங்கள் தெரியவில்லை.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

அறிந்த தகவல் 5:

இருசொற்கள் சேரும்போது, இடையே வேற்றுமை உருபு மறைந்து இருந்தால், அது வேற்றுமைத்தொகை.

உதாரணம்: கல்லெறி = கல்லை + எறி. இதில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.

தர்க்கமாகிப் போன தகவல்:

காவிரியில் தண்ணீர் வருகிறது. ஒக்கேனக்கலிலும் தண்ணீர் வருகிறது. அதனால் ஒக்கேனக்கல் கர்நாடகத்திற்கே சொந்தம்.

அறியாத தகவல் 1:

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மத ஆக்கிரமிப்பின் கொடூரம் நமக்குத் தெரியாது.

அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது.

நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.

இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.

திரிபுராவில் இந்துக் கோயில்கள் அனைத்தும் மூடியே இருக்கின்றன. இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களையும், கோயில் பூசாரிகளையும் திரிபுரா தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை வெளிப்படையாகவே சர்ச்சுகள் ஆதரிக்கின்றன.

நேபாளத்தில் இருந்து ஆந்திராவரை பரவியுள்ள நக்ஸலைட்டு அமைப்புகள் சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துவ சர்ச்சினால் நடத்தப்படுபவை என்பதும் நமக்குத் தெரியாது.

நாகலாந்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களை அந்த மாநிலத்தை எப்போதும் ஆண்டுகொண்டிருக்கும் மந்திரிகள்தான் நடத்திவருகிறார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இந்தக் குழுக்களில் மிகக் கொடிய தீவிரவாதக் குழுவின் சின்னம் சிலுவை. அவர்களின் கோஷம் “நாகலாந்தை கிருத்துவத்திற்கு மீட்போம்” என்பதை ஒத்தது.

ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.

இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.

இந்துத் தெய்வ வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று கிருத்துவமும் இஸ்லாமும் போதிக்கின்றன. எனவே, கிருத்துவர்கள் தமிழ் இந்துக்களையும் சைத்தானை வழிபடுபவர்களாகத்தான் கருதுகிறார்கள். இவர்களின் கைப்பாவையாக இருக்கிற திராவிட கட்சிகளின் தலைவர்கள் மஞ்சள் துண்டு அணிவது, கோயிலுக்குப் போவது என்று சாத்தானின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு இருப்பதால் இப்போது இவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்துவதோடு, தங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை ஆட்சிபீடத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளார்கள்.

பைபிள் தகவல்கள்:

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

வெளி 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,…

தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.

அறிந்த தகவல் 3:

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் புணர்வதாம்.

உதாரணம்: சாத்தன்கை = சாத்தான்+அது+கை = சாத்தனதுகை

கவனிக்கப்படாத தகவல்:

ஒரிஸ்ஸா காடுகளில் பரிதாபகரமாக எரித்துக்கொல்லப்பட்ட ஒரு கிருத்துவ போதகரின் மனைவிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வாங்கிய பின்னர் எனது கணவரது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லிவிட்டு அம்மையார் ஆஸ்திரேலியா போய்விட்டார்.

தகவல் இல்லாத தகவல்:

இந்தியாவில் கிருத்துவப் போதகராக இருந்த ஒருவரின்மேல் ஆஸ்திரேலியாவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்லப்படும் செய்திகளை யாரும் மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிறுவவோ இல்லை.

கிசுகிசு தகவல்:

இந்துப் பெயரை வைத்துக்கொண்டு, ஆனால், இந்துக்களையும், இந்துத் தெய்வங்களையும், இந்திய கிராமத்துப் பழக்கங்களையும் ஏளனம் செய்து பிழைப்பவரின் தாயார் தன் இளவயதில் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்.

மற்றொரு சினிமாக்காரர் பற்றிய தகவல்:

இலங்கைத் தமிழர்களுக்காக சிறைக்குப் போவதாகக் காட்டிக்கொள்ளும் சீமானின் உண்மையான பெயர் சைமன் என்று சொல்லப்படுவதை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். ஆனால், அவர் எப்போதும் சட்டையில் காட்டும் சே குவாராவின் தேசத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மதம் கிருத்துவம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சர்ச்சுகள் நிறைந்த க்யூபாவில் ஒரு மசூதிகூட கிடையாது. அரசாங்க நிலைப்பாடு நாத்திகம் என்று காட்டிக்கொண்டாலும், சர்ச்சுகள் மிகச் செழிப்பாக மந்தைகளை மேய்க்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோவால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதிலிருந்து தப்ப யூதர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஆனால், அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார் போப்பாண்டவர்.

பழையவர் பற்றிய தகவல் 4:

விமானத்தில் இறங்கிய உடன் அந்த நாட்டு மண்ணை குனிந்து முத்தமிடுவது அவரின் கட்டுப்படுத்த முடியாத பழக்கம். க்யூபாவிற்குச் சென்றபோது அவருக்கு வயதாகிவிட்டது. குனிந்து முத்தமிட முடியாது என்பதால் க்யூபா நாட்டு மண்ணை ஒரு சட்டியில் போட்டு அவர் முத்தமிட ஏதுவாக உயர்த்தினார்கள். க்யூபா நாட்டு மண் கிருத்துவத்தின் வாய்க்குப் போனது.

தென்கொரியாவில் “வளர்ச்சி” பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)
தென்கொரியாவில் வளர்ச்சி பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

அனைவரும் மறந்துபோன தகவல்:

இந்தியா வந்திருந்த போப்பாண்டவர் இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் மற்ற இந்தியர்களை கிருத்துவ மதத்திற்கு அறுவடை செய்யச் சொன்னார்.

புதியவர் பற்றிய சமீபத்திய தகவல் 1:

கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப்.

On Africa trip, pope says condoms won’t solve AIDS.

YAOUNDE, Cameroon – போப் பெனடிக்ட் XVI சொன்னார் இவ்வாறு: எய்ட்ஸ் என்கிற ஆட்கொல்லி நோய்க்கு காண்டம்களால் பதில் சொல்ல முடியாது. உலகம் முழுவதும் 2007ம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு எய்ட்ஸ் வந்து இறந்த ஆப்பிரிக்கர்களால் ஏற்பட்டது. ஏறத்தாழ 22 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”எய்ட்ஸ் வியாதியை காண்டம்கள் வழங்குவதன் மூலம் தடுத்துவிட முடியாது”

The pope told reporters aboard the Al italia plane heading to Yaounde. ”அதற்கு மாறாக, காண்டம்கள் இந்த பிரச்சினையை அதிகரிக்கின்றன.”

Treatment Action Campaign in South Africaஐச் சேர்ந்த Rebecca Hodes இது குறித்துப் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: எய்ட்ஸ் வியாதியை தவிர்க்க உதவும் காண்டம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாமல், “அதற்கு மாறாக, காண்டம்களுக்கு எதிராக அவர் பேசி வருவது ஆப்பிரிக்கர்களின் உயிரைவிட அவருடைய மதக் கொள்கை அவருக்கு அதிக முக்கியம் என்பதையே காட்டுகிறது.”

”காண்டம்களை உபயோகப்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸை முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பது உண்மையாக இருப்பினும், தற்போது எய்ட்ஸ் என்கிற இந்தக் கொடூரமான ஆட்கொல்லி வியாதியைத் தவிர்க்க வேறு எந்த வழிகளாலும் முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை” என்று Rebecca Hodes சொன்னார்.

1982ல் இருந்து காமரூனை சர்வதிகாரியாக ஆண்டு வரும் ஜனாதிபதி Paul Biya போப்பாண்டவரை அரசு மரியாதைகளோடு வரவேற்றார். இவர் தனக்கு மாறான கருத்துச் சொல்பவர்களை அழித்துவிடுகிறார் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக் குறை சொல்லியுள்ளது. காமரூனில் நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து போப் நேரடியாக எதுவும் இதுவரை பேசவில்லை. ஆனால்,”நற்கதி அளிக்கும் நமது புனித நூலின் நற்செய்தியானது மிக உரக்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படுமானால் கிருஸ்துவின் ஒளியானது இருண்டுகிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டும்” Benedict said as the president and other political leaders looked on.

இந்த நற்செய்தி உலகெங்கும் விமர்சனங்களை உருவாக்கிய வேளையில், ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் நற்செய்தி பரப்ப தனது ஒருவார பயணத்தைத் தொடர்ந்தார் போப்.

மருத்துவ வரலாற்றுத் தகவல்:

அம்மை, காலரா, மலேரியா, ப்ளேக் முதலான ஆட்கொல்லி வியாதிகள் காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலகட்டங்களில் ஏற்படவில்லை. காலனி ஆதிக்கத்திற்குப் பின்பே அடிமையாக்கப் பட்ட மக்களுக்கு இவை பரவின.

Aztec smallpox victims
Aztec smallpox victims

தென்னமெரிக்க இன்கா இன மக்கள் அனைவரும் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த ஸ்பானிஷ்களிடம் இருந்து பரவிய இந்த வியாதிகளால் முற்றிலுமாக அழிந்தனர். சிகப்பு இந்திய பழங்குடிகளுக்கு சேவை செய்த கிருத்துவப் பாதிரிகள் அவர்களுக்குப் போர்வைகளைப் பரிசாக வழங்கினர். திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.

“15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நன்னம்பிக்கை முனையில் இருந்து மலபார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். உருவ வழிபாட்டு நம்பிக்கையாளர்களான பழங்குடியினரிடையே கிருத்துவத்தின் ஆசிகளை வழங்குவதே அவர்களுடைய மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்தப் புனிதமான நன்மைதரக்கூடிய மத சேவையை செய்ய ஒரு பாப்பல் புல் (போப்பாண்டவரின் புனிதக் கட்டளை) வழங்கப்பட்டிருந்தது. இந்த யூரோப்பிய ஊடுருவலின் முதல் விளைவாக ரத்தத்தைச் சிதறவைத்த போர்களும், வெறுத்து ஒதுக்கவேண்டிய வியாதிகளும் ஆசிய கண்டத்திற்கு ஏற்பட்டன. இவை மிக விரைவாகப் பரவி சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தின. இந்த வியாதிகள் பரவியபோது சின்ன அம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வியாதிகள் முதன் முதலில் அறிமுகமானபோது சீன மற்றும் இந்துக் கோயில்களில் இந்த வியாதிகளைத் தவிர்க்கத் தேவையான தெய்வீக உருவங்கள் ஏற்படவில்லை.” – பக்கம் 34. The History of the Small Pox By James Carrick Moore.

அறிந்த தகவல் 5:

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

அறிந்த தகவல் 6:

அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். அது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப் பதினான்கு வகைப்படும்.

உதாரணம் 1: தலைவணங்கு = தலை+யால்+வணங்கு.

இங்கு `ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

உதாரணம் 2: பெட்டிப் பணம்.

இங்கு `இல்’ என்னும் ஏழாம் வேற்றுமை உறுபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

அறியாத தகவல் 2:

சுனாமி பாதிப்பின்போது வீடு வாசலை இழந்தாலும் மந்தைக்குள் மாட்டிக்கொண்டதால் கிடைத்த வீடுகள் மிக மோசமான தரமற்றவையாக இருப்பதாகவும், அந்த வீடுகளை “சில அமைப்புக்கள்” சுனாமி பாதிப்பின்போது கட்டிக்கொடுத்தன என்றும் தொலைக்காட்சி சேனல்கள் சில சமீபத்திய செய்திகளின் ஊடே தெரிவித்தன.

அறியாத தகவல் 3:

கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.

அறியாத தகவல் 4:

காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச் செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள் அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள் வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது.

சோமாலிய வறுமையைப் போலக் காஷ்மீரத்து இன அழிப்பு நமக்கு வெறும் தகவல் மாத்திரமே. இலங்கையில் அழியும் நம் சொந்த ரத்தமான தமிழர்களின் அழிவு நமக்கு மரத்துவிட்டது. ரியாங்குகளின் அழிவு பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. காஷ்மீரப் பண்டிதர்களின் அழிவு நமக்கு எந்தக் கவலையையும் ஏற்படுத்திவிடவில்லை.

அறியாத தகவல் 5:

தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.

உணராத தகவல் 9000:

இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வராமல் உவமை உருபு, பண்பு உருபு முதலியன மறைந்துவரச் சொற்கள் புணர்தல் (வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணர்தல்) அவ்வழித் தொகை நிலைத்தொடர் எனப் பெயர் பெறும்.

உதாரணம்: கொள் சுரணை

எதிர்கால தகவல் 12:

வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள் அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும், நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப் போகும்போதும், ………………

இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும்.

77 Replies to “நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்”

  1. ஸ் அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே…

    பனித்துளி என்னும் மென்மையான பெயருக்குள் இத்தனை அட்டகாசமா? என்னமோ போங்க.

  2. gurubhyo namaha

    though i am aware of most of these given here reading this makes me feel depressed. pl write about
    what an induvidual do about this. hichlight the points which has kept our dharma sustained all these
    millinea . WE HAVE TO EDUCATE OUR CHILDREN So EDUCATE OURSELVES FIRDT ABOUT OUR VALUES.THIS IS SLOW BUT SURE WAY>NEVERTHELESS TIME CONSUMING.
    PROPABLY WE ARE RACING AGAINST TIME>
    SAMBHAVAMI YUGE YUGE

  3. Dear Paniththuzhi

    Are you really a drop of a snow or a outburst of a furious valcano? Your name and contents imply an oxymoron. All are hot bombshells. Let these grammatical bombardments wake up our sleeping laodiceans. Great work keep it up

    Thanks
    Viswa

  4. // கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப். //

    பனித்துளி, எப்படி சார் இப்படி எல்லாம் உங்களுக்கு எழுத வருகிறது! சல்மன் ருஷ்டி மொழியாக்கத்தில் ஒருவித அல்ங்கார நடை என்றால் இதில் நறுக்குத் தெறிக்கும் நடை.

    மத அரசியல், மதமாற்றம் பற்றி இப்படி ”இலக்கணத் தரமான” அங்கத இலக்கியம் எல்லாம் கூட எழுத முடியுமா? அசத்துகிறீர்கள். படிப்பவர்கள் மண்டை காயப் போவது உறுதி (நோக்கமே அது தானோ?)

    தகவல்களைப் பொறுத்த வரையில், விஸ்வாமித்ரா சொல்வது பொல எரிமலை தான் !

  5. கலக்கிட்டீங்க ஐயா…நாங்கதான் கலங்கி போய் நிக்கிறோம்…வெளிப்படுத்தின விசேஷ நாளைக்குள்ள தன் மதம் மட்டுமே வாழணும் தன் தேவனே உண்மை தேவன் அப்படீன்னு பிரச்சாரம் பண்ணுறவங்க மண்ணா போன உண்மையிலேயே விசேஷம்.

  6. பையன் ஒரு பூனையைப் பிடித்து அதற்கு பைபிள் வாசித்துக்கொண்டிருந்தான். பார்த்த அம்மாவுக்கு சந்தோஷம். பத்து நிமிடம் கழித்து பூனை அலறியது. பூனைக்குட்டியை தண்ணீர்தொட்டியில் முக்கி முக்கி மூச்சு திணறியது பூனை. “பூனைக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறேன்” என்றான் மகன். “இல்லை, பூனைகளுக்கு தண்ணீர் பிடிக்காது!” என்றாள் அம்மா. “பின் எதற்காக என் சர்ச்சில் சேர்ந்தது!!” என்றான் பையன்.

    பிடிபட்ட பூனைகளாக நாம். பாரத தேசம்!!

    பனித்துளி கொடுத்த தகவல்கள் நம் தூக்கத்தை கலைக்குமா!!!

    பனித்துளிக்கு போனஸ் தகவல்… 1

    போன வாரம் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். பேரன்கள் மும்பையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தயானந்த ஆங்கிலோ வேதிக் ஸ்கூல் (தயானந்தர் ஆங்கில வேதவழிப் பள்ளி) என்று முழுப்பெயர் போடக் கூடாது என்று சொல்கிறார்கள். வெறும் டி.ஏ.வீ என்றே சொல்ல வேண்டுமாம். மும்பையில் இருக்கும் ஐந்து டி.ஏ.வீ பள்ளிகளில் மூன்றில் கிருத்துவ பாதிரி பிரின்ஸ்பால் ஆகிவிட்டார்களாம். (நெருல், ஐரோலி இன்னும் ஒன்று). மீதியையும் மாற்ற முயற்சிகள் நடக்கிறதாம். பள்ளி பிரார்த்தனையிலிருந்து காயத்ரி மந்திரமும் சரஸ்வதி பாடலும் அகற்றப்பட்டுவிட்டதாம். அதற்குப் பதிலாக ஒரு மொக்ககையாக “ஹே பகவான்!” என்று ஒரு “செக்குலர்” இந்தி பாட்டு ஓடுகிறதாம்.

    பனித்துளிக்கு போனஸ் போனஸ் தகவல் – 1

    முடவனை நடக்க வைக்கும் சுவிசேஷ பிராத்தனை மேஜிக் கூட்டங்கள் இந்திய “மாஜிக் ரெமெடீஸ்” சட்டத்தின்படி தண்டனைக்குரியவை. இதில் கலந்து கொண்ட அத்தனை அரசியல்வாதிகளும் – நம்மூர் தீராவிடங்களிலிருந்து மனவாடு ரெட்டிகாரு வரை – தண்டனைக்கு உரியவர்களே.

  7. Dear Pani,

    Article is excellent. I was shoked when I saw Joshuaproject.net. We can keep talking but majority of Hindus are not aware of any of these and they are gullible.

    Artcile also helped me to revisit Tamil grammar ; Thanks for that.

    Regards

  8. அட்டகாசம்! பனித்துளியின் பணி தொடரட்டும்!!

  9. இதில் ”உருபு” என்றும் “சொற்கள்” என்றும் முடியும் வார்த்தைகளை எவாஞ்சலிக்கர்கள் மற்றும் எவாஞ்சலிக்கர்களின் கையாட்கள் என்று இடத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டால் தமிழ் இலக்கணத்திற்குப் பதிலாக தரம்கெட்டவரின் இலக்கணம் தெரிகிறது.

  10. Reading this article is a mind shattering intrigue !! Fascinating, attractive, and factitively addictive !!

    This non-linear writing is similar to genre followed by Ramesh-Prem, but very different to S. Ramakrishnan.

    It may be the first time in tamil that non-linear can be written without worrying about certain body parts and their functions, especially of the female species of homo erectus. 😉 !

    One thing is sure. I am gonna visit the site every day from now !

  11. //தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.//

    வயித்தை எரிகிறது நம்ம கையாலாகாத் தனத்தை நினைச்சு. இந்த நாட்டைக் கடவுள் தான் காப்பாத்தணும்! 🙁

  12. Dear Sir,.
    An excellent article. Just wanted to add a point on the Church not helping Harvested Souls.

    Last july my friend in coimbatore was came in touch with a Watchman in a Church through his friend in Sewa Bharathi. The gentleman was old person with 3 daughters. the first daughter had completed D.ED in a college in Tirupur, but was unable to get the certificates as she had not paid her hostel dues. This gentleman had approached the Father in the Church for help. the father right away rejected his request and said, ‘Viraluku Etha Veekam Venum’, you should not have sent her for studies if you are unable to pay her fees,

    When he narrated this to my friend, my friend contacted me and we had collected the required amount through our friends circle.

    i am just mentionuing this incident to reiterate the authors point.

    One thought: why cant we try to have trust to help the poor hindus and also propogate/educate our people on our sanathana Dharma. can we try to work with Missionary Zeal on this.

  13. அபாரம் பனித்துளி,
    இன்னமும் இங்கிலீஷ் பேசும் நபர்கள்தான் மேன்மக்கள், கான்வேண்டுதான் உண்மையான பள்ளிக்கூடம் என நம்பும் மக்களை இப்படி உண்மை நிலையை எடுத்துக்கூறி திருத்துங்கள்.

    இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு வாழும் மனிதர்களை ‘துன்பங்களில் இருந்து விடுதலை ‘ தந்து மேலே அனுப்பி வைத்த அன்பு மதம், அதை ஏன் தவறாக எண்ணுகிறீர்கள். விடுதலை தந்தார்களா இல்லையா? கொடுமை.

    அதெல்லாம் நமது மக்களுக்கு கவலை இல்லை, ஏனெனில் உப்புமாவிற்கு ரவை வாங்கினாலும் அது அமெரிக்கா தரத்தோடு இருக்கவேண்டும், அதைப்போலத்தான் எல்லாமும்.

    அரசாங்கமே ஆதரவு கொடுக்கிறது அவர்களுக்கு, என்ன செய்வது.

    நல்லபள்ளிகள் அரசு நடத்துவதாக இருந்தால் அதில் தரம் இருக்கும்.
    ஆனால் வடை தின்ன வரும் ஆசிரியர்கள் இருக்கும் வரை நம் நாடு இப்படித்தான் இருக்கும்.

    ஆரம்பக்கல்வியே கான்வெண்டில்தான் என மக்கள் நினைக்கும் அளவிற்கு நம் மக்கள் உள்ளனர், இதற்க்கு யார் காரணம்?

    ஆனால் அதில் இருந்தே மக்கள் விலை போகிறார்கள் என்பது அவர்களே அறியாத விஷயம்.

    சரி இது இப்படி இருக்க நமது நாட்டில் இந்து சமயம் சார்ந்த அறநிலையத்துறைக்கு உயர் அதிகாரியாக ஒரு கிருத்துவரை நியமித்து உள்ளார்களே அதை விட ஒரு நிலை நமக்கு வேண்டுமா. அவருக்கு நமது பாரம்பரியம் இந்து கலாசாரம் பற்றி என்ன தெரியும்.,

    நமது மக்கள் விழித்து எழும் நிலை எப்போது நிகழும்.

    கண்டிப்பாக அந்நிய மோகம் என்பது நமது மக்களை ஆட்டிவைக்கும் வரை இந்நிலை தொடரத்தான் செய்யும்.

  14. வணக்கம்,
    //அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது//

    வெறும் மத மாற்றம் என்ற பெயரில் இந்தியா விலை போய்க்கொண்டு இருக்கிறது. இதிலே மதம் மாறுவது குற்றமா என்ற சர்ச்சைகள் வேறு. எப்படியும் ஒருகாலத்தில் அவர்கள் ப்ரும்பான்மை ஆனவுடன் பாத்ரிகள் என்ற போர்வையில் வந்து நம்மை அடிமைப்படுத்த போகிறார்கள். என்னதான் கிறிஸ்துவராக இருப்பினும் நீ இந்தியன் தானே என்று இனவெறியால் மிதிக்கத்தான் போகிறார்கள்.

    நானும் கிருஸ்துவந்தான் என்று கண்ணீர் விட்டு கதறினாலும் எந்த ஏசுவும் வந்து மீட்கப்போவது இல்லை.

    அப்போதும் இரண்டு கைகளையும் விரித்தபடி ” என் கையில் என்ன இருக்கிறது ” என்ற பாணியில் நிற்ப்பார்.

  15. நண்பர்களே,
    தென்னிந்திய திருச்சபையாக இருக்கட்டும்; அல்லது
    அமெரிக்கன் அட்வென்ட் திருச்சபையாக இருக்கட்டும்;
    மற்ற எந்த திருச்சபை அமைப்பாக இருப்பினும் அவை முழுக்க முழுக்க இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு இந்தியர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது;

    அதனால் தான் அந்த நிர்வாகத்தினருக்குள் கருத்துவேறுபாடுகள் வரும்போது இந்திய நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்; அவையெல்லாம் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்பினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை;அது கத்தோலிக்க அமைப்பாக இருந்தாலும் சரி,கொள்கைரீதியிலான கட்டுப்பாடுகளைத் தவிர சொத்துநிர்வாகம் போன்றவை இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது;

    ஆனால் இவையெல்லாம் ஒரு காலத்தில் வெளிநாட்டு மிஷினரிகள் (தன்னார்வ இறைத் தொண்டர்களே தவிர அயல்நாட்டு அரசாங்கப் பிரநிதிகளல்ல) வசமிருந்தவை;

    “வெள்ளையனே வெளியேறு” எனப் போராடி வெளியேற்றினோம்;
    அது அரசியல் போராட்டம்.

    இவர்களோ தாங்களே இந்தியர்களிடம் அந்த நிர்வாகத்தினை ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்;

    இன்னும் பலர் தங்கள் சொந்த நாட்டுக்கும் செல்லாமல் தங்கள் வாரிசுகளையும் இங்கே அமர்த்தாமல் இங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டனர்; அவர்களில் பலருடைய கல்லறையும் இங்கே உண்டு.

    ஆனால் “பொருளாதார சீர்திருத்தம்” என்ற பெயரில் வெளிநாட்டு கம்பெனிகளுக்குக் கடைவிரித்த பாவத்தை ஒரு பாவமும் அறியாத இந்தியாவின் 6 இலட்சம் கிராமங்கள் சுமந்துகொண்டு இருக்கிறது.

    “டாஸ்மார்க்” கடைகளில் வெளிநாட்டு பிராண்டுகளில் இந்திய ஆலைகளில் மதுவை தயாரிக்கும் அரசு அந்த வெளிநாட்டு பிராண்டை பயன்படுத்தும் ஒரே காரணத்துக்காக பலகோடிகளை வெளிநாட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது;

    “ஹியுண்டாய்” “கோக்” “சாம்சங்” போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவை சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது;
    அங்கெல்லாம் சென்று “காயத்ரி மந்திரம்” ஓத முடியாது..!

    ஆக மொத்தத்தில் இந்தியனுக்கு எதையாவது ஒன்றைத் தன் தோளில் சுமந்தாக வேண்டும்; என்ன செய்ய, வாஸ்துபடி இந்தியா அமைந்திருக்கும் இடமும் திசையும் சரியில்லை போலும்..!

  16. பனித்துளி நத்தையின் வயிற்றில் விழுந்து விளைந்த முத்து, இந்தக் கட்டுரை.

    வெகு சிறப்பு

  17. கம்பனிகளின் வழியாக போகும் பணம் அதேபோல திரும்பி வரும். சற்று நினைத்துப்பாருங்கள் கன்னியாகுமரி மாவட்டம், கேரளா மாநிலம் இங்கெல்லாம் மலைப்பகுதியானாலும் சரி சமவெளிகளானாலும் சரி இன்றைய நிலையில் பாதிக்குப்பாதி நிலங்கள் பல்வேரு கிறித்துவ மிசினரிகளுக்குதான் சொந்தம். இந்நிலையில் திடீரென்று ரோமிலிருந்தோ இத்தாலி, இங்கிலாந்து வத்திக்கநிலிருந்தோ உலக கிரித்துவர்களே எல்லோரும் ஒன்றாகுவோம் நமது சொத்துக்களை எல்லாம் ஏசுவுக்கு சொந்தமாக்குவோம் என்றும் கடைசிநியாயதீர்ப்பு நாள் வருகிறது எல்லோரும் தேவ ஆட்டுக்குட்டியைக்கான ஆயத்தமாகுங்கள் என்று செய்தி வந்தால் இவர்களெல்லாம் சபை பிரிவு இல்லாமல் விட்டுக்கொடுக்கமட்டர்களென்று என்ன நிச்சயம். அப்போது மீண்டும் நாம் ஒரு சுதந்திரப்போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டிவரும்

  18. நண்பர் அக்னிபுத்திரன்,
    கிறிஸ்துவர்கள் ரோம் மற்றும் இத்தாலிக்கும் அடிமை பட்டவர்கள் என்று யார் சொன்னது. பொப் சொன்னவுடன் எல்லோரும் அவர் சொன்னதை செய்துவிட போகிறார்களா? இயேசு வரப்போவது போப்பிடம் சொல்லிவிட்டுதான் வருவாரா? கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள் ஐயா.
    அன்புடன்,
    அசோக்

  19. ஐயா பனித்துளி,
    நல்ல கட்டுரை (அல்லது கட்டுக்கதை). உமது அறியாமை உம்மை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. எனக்கு தெரிந்த மற்றும் உமக்கு புரியாத சில விஷயங்களை நான் இப்போது சொல்கிறேன்.

    //கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி//
    கிறிஸ்த்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு உறவு. ஆண்டவரிடம் நாங்கள் கொண்டுள்ள உறவே கிறிஸ்துவம். (நீர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதுதான் உண்மை).

    //சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.//
    மதசார்பற்றவர்கள் சிறுபான்மையினருக்காக போராடகூடாதா?

    //இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.//
    நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?

    //கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.//
    ஆண்டவரை ஏற்றுக்கொண்டால் நித்திய மரணமில்லை. அதாவது நரகம் இல்லை. மற்றபடி உலகப்பிரமான தொல்லைகள் நிச்சியம் உண்டு. முக்கியமாக உங்களை போன்றவர்களால். உலகபிரமானமான மரணமும் உண்டு. இவ்வளவு பேசும் நீங்கள், கன்னியாகுமரி சுனாமியில் மாறியபோது உங்கள் குமரி தெய்வம் என்ன செய்தது என்று யோசிக்கலாமே.

    தொடருவேன்,
    அசோக்

  20. //நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.//
    கிறிஸதுவனுக்கு சொத்து வந்தால் உமக்கு ஏன் வயிறு எரிகிறது? எப்படி ஒரு இந்தியன் கிறிஸ்துவன் ஆன உடன் வெளிநாட்டுக்காரன் ஆனான்?

    //இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.//
    உமக்கு எப்படி இது தெரியும்?
    அவை இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து என்ன சாதித்தது? எத்தனை காலம் தான் அவர்கள் இருட்டுக்குள் இருப்பார்கள். இப்போதாவது ஒளிக்கு வரட்டும்.
    இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.

    தொடருவேன்,
    அசோக்

    (Edited.)

  21. அசோகா குமார கணேச சகோதரரே….!
    மதம் மாறி குணம் மாறி இனம் மாறிப்போனப்பின்னும் கணேசரின் பெயர் மாறாத பண்பாளரே ஒரு உண்மையை சொன்னதுமே இப்படி பொத்துக்கொண்டுவரும் உங்களுக்கு போப் அப்படிச்சொன்னால் நீங்கள் சொன்னால் நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். சீயோனிலிருந்தும் இஸ்ரவெலிலிருந்தும் ஆசீர்வதிக்கும் தன்னையே பாதுகாக்க துப்பில்லாமல் என் தந்தையே என் தந்தையே என்னை ஏன் கை விட்டீர் என்று அலறித்துடித்த இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் என்கின்ற கூக்குரலுக்கு முன்னால்தலை குனிந்து நிற்கின்ற நீங்கள் உங்கள் அப்பா பாட்டா முப்பாட்டா எல்லாம் வணங்கிய சக்தியுள்ள அசுரர்களைக்கண்டு பயந்து ஓடாத கடவுள்களை விட்டுவிட்டு ஓடிவிட்டீர்களே .
    ஐயா குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அம்மன் பாதத்தில் இருந்த, விவேகானந்த பாறையில் இருந்த யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியாதா ஏன் வேளாங்கண்ணியில் பிணமாக மிதந்தபோது உங்கள் மாதா தூங்கிக்கொண்டா இருந்தாள்

  22. //கிறிஸ்த்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு உறவு. ஆண்டவரிடம் நாங்கள் கொண்டுள்ள உறவே கிறிஸ்துவம். (நீர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதுதான் உண்மை).//
    So you have decided to hijack ‘Hinduism is not a religion but a way of life’ also!
    //
    //இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.//
    நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?
    //
    So you agree that the government considers you as their own children and looks at Hindus as embarassments!?
    //மதசார்பற்றவர்கள் சிறுபான்மையினருக்காக போராடகூடாதா?//
    When secularism means religious considerations should not be given prominence where is the question of inequality in the name of religion??! That is why it is called as ‘sickularism’.
    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//
    Tell this to Irish people!

  23. //கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள்//
    //கிறிஸதுவனுக்கு சொத்து வந்தால் உமக்கு ஏன் வயிறு எரிகிறது? //
    //அவை இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து என்ன சாதித்தது? எத்தனை காலம் தான் அவர்கள் இருட்டுக்குள் இருப்பார்கள். இப்போதாவது ஒளிக்கு வரட்டும்.//
    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//

    ஒரே ஒரு அஷோக்குமார் க‌ணேச‌ன் கிறித்துவ‌த்தின் க‌ட்டுப்பாட்டுக்குள் வ‌ந்த‌த‌ற்கே இத்த‌னை அன்பு, ப‌ண்பு, ம‌னித‌நேய‌ம், ம‌ற்ற ம‌த‌த்தின்மேல் ச‌கிப்புத்த‌ன்மை எல்லாம் மிக்க‌ ந‌ல்ல‌ வாத‌ம் செய்கிறார். இதே பார‌த‌ம் முழுவ‌தும் கிறித்துவ‌த்தின் க‌ட்டுப்ப‌ட்டுக்குள் வ‌ந்துவிட்டால் சொல்ல‌வே வேண்டாம், அன்பு, ப‌ண்பு, ப‌ணிவு, பாச‌ம் தேடிப்பார்ப்போம், தென்ப‌டாது.
    சத்தியமா? அதைப்பற்றி கிறித்துவத்துக்கு என்ன கவலை?

  24. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம், அமெரிக்க செனட் சபையில் வேத மந்திரங்கள் ஓத சபை துவக்கம் என அமெரிக்காவில் சிறுபான்மை சார்பாக இருக்கும் போது சந்தோஷப்படும் நீங்கள் இந்தியாவில் மாத்திரம் சிறுபான்மை சார்பு நிலையை எதிர்க்கிறீர்கள்.

  25. சத்தியமா? அதைப்பற்றி கிறித்துவத்துக்கு என்ன கவலை? என்ன சம்பந்தம்? அஷோக்கும‌ர் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே

    இங்கே பாருங்கள், கிளாடி சொல்வதை:
    ///தென்னிந்திய திருச்சபையாக இருக்கட்டும்; அல்லது
    அமெரிக்கன் அட்வென்ட் திருச்சபையாக இருக்கட்டும்;
    மற்ற எந்த திருச்சபை அமைப்பாக இருப்பினும் அவை முழுக்க முழுக்க இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு இந்தியர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது;
    ///
    உதாரணத்துக்கு:
    Socoiety of Jesus என்று ஒரு சபை. Jesuits என்று இதன் உறுப்பினர்களக் கூறுவார்கள். அதாவது மிஷநரிகள்.

    https://en.wikipedia.org/wiki/Superior_General_of_the_Society_of_Jஎசுச்

    The Superior General of the Society of Jesus is the official title of the leader of the Society of Jesus—the Roman Catholic religious order, also known as the Jesuits. He is generally addressed as Father General. The position carries the nickname of Black Pope, after his simple black priest’s vestments, as contrasted to the white garb of the Pope. The current Superior General is the Reverend Father Adolfo Nicolás.

    1541 இலிருந்து தற்போது வரை 30 பேர் இந்தப் பத்வி வகித்து உலகமெங்கும் இருக்கும் இந்த சொசைடியை நிர்வகித்து வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் ஐரோப்பியர்களே.
    இப்ப‌டித்தான் ஒவ்வொரு ச‌பையும் புகுந்து புற‌ப்ப‌ட்டால், அத‌ன் இறுதிச் ச‌வுக்கு போப் அல்ல‌து ஒரு ஐரோப்பிய‌ ம‌த‌குருவிட‌ம் முடியும். புளுகியே எத்த‌னை நாள்தான் வாழ்வாரோ?

  26. ஒரு முக்கியமான தகவல்

    மேற்கூறிய Superior General பற்றி

    The Superior General is invested with ordinary power over the members of the Society, similar to the power given to a bishop over the people of a diocese. Superiors General submit themselves to the direct authority of and service to the Pope, not local ordinaries.

  27. //நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?
    ///
    எமது கேள்வி இது அல்ல. பக்கத்துவீட்டுக்கார அம்மாள் தந்த எல்லா இனிப்பு மற்ற பலகாரங்களை உண்ட பின்னும் ஒரு பிள்ளைக்கு வ‌யிறுமுட்ட‌ சாப்பாடு போடும் ந‌ம‌து பார‌த‌ அர‌சு என்ற‌ அன்னை, இன்னொரு பிள்ளைக்கு எதுவுமே போட‌முடியாத‌ப‌டிக்கு, க‌ம்யூனிச‌, ம‌த‌வாத(பிரிவினை மதம், பக்கத்துவீட்டு அம்மாளின் மதம் உள்பட), அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌டுக்கிறார்க‌ளே அது ப‌ற்றித்தான் கேட்கிறோம்.

  28. ////நண்பர் அக்னிபுத்திரன்,
    கிறிஸ்துவர்கள் ரோம் மற்றும் இத்தாலிக்கும் அடிமை பட்டவர்கள் என்று யார் சொன்னது. பொப் சொன்னவுடன் எல்லோரும் அவர் சொன்னதை செய்துவிட போகிறார்களா? இயேசு வரப்போவது போப்பிடம் சொல்லிவிட்டுதான் வருவாரா? கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள் ஐயா.
    அன்புடன்,
    அசோக்
    ///
    நான் மேலே கொடுத்திருப்பதுபோல ஒவ்வொரு சபைக்கும் கடைசி சவுக்கு பாரதத்தில் இல்லை என்பதை நிரூபிக்கமுடியும்.

    நமது ஊர் லயோலா காலேஜே போப்பின் ஆளுகைக்குத்தான் உள்பட்டது.

    போப் ஒரு வேற்று நாட்டு அரசின் தலைவர்.
    https://en.wikipedia.org/wiki/The_Holy_See
    The Holy See is the episcopal jurisdiction of the Bishop of Rome, commonly known as the Pope, and is the preeminent episcopal see of the Catholic Church, forming the central government of the Church. As such, diplomatically, and in other spheres the Holy See acts and speaks for the whole Catholic Church. It is also recognized by other subjects of international law as a sovereign entity, headed by the Pope, with which diplomatic relations can be maintained

    வேற்று நாட்டு அரசிடம் வேலை பார்த்துக்கொண்டு நம் அரசிடமும் subsidy போன்ற உதவிகளையும், UGC grant முதலியவற்றையும் வாங்குகிறார்கள்.

    அஷோக்குமார் கணேசன் அளவாய் யோசிக்காதீர்கள்.

  29. Dear Umashankar,
    Try proving any Protestant Church is under Pope. Just because Loyola College is under someone’s authority, that doesn’t mean, entire Christian population is under the same authority. There are only few Catholic Churches under the autority of Pope (those churches too comes under the law of Indian Government). No Protestant is under any human being. Come on man, analyze properly before you comment on anything.
    With Love,
    Ashok

  30. ////////daniel
    19 October 2009 at 5:37 pm
    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம், அமெரிக்க செனட் சபையில் வேத மந்திரங்கள் ஓத சபை துவக்கம் என அமெரிக்காவில் சிறுபான்மை சார்பாக இருக்கும் போது சந்தோஷப்படும் நீங்கள் இந்தியாவில் மாத்திரம் சிறுபான்மை சார்பு நிலையை எதிர்க்கிறீர்கள்.//////////

    ஹலோ டேனியல்…

    மறுபடியும் அரைச்ச மாவையே அரைக்காதீங்க. இதுக்கெல்லாம் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. ஒபாமாவை தீபாவளிக்கு விளக்கேற்ற வில்லை என்றால் நீ பாவியாகி நரகத்திற்கு போவாய் என்று எந்த இந்துவும் சபிக்கவில்லை. அப்படி ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டு இந்து தர்மத்தை பின்பற்றுபவர்கள் எவரும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்துவாக மாற விரும்புகிறேன் என் பெயரை மாற்றுங்கள் என்று கேட்ட பல வெள்ளையருக்கு இந்து மடாதிபதிகள் அவனது கிறிஸ்தவ பெயரிலேயே இருக்கச் செய்து பெயரில் ஒன்றும் இல்லை. தர்மம் தான் முக்கியம். இந்த தர்மங்களை கடைபிடித்து நீ இந்துவாகவே வாழ் என்று மதம் மாற்றாமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் நீங்களோ ஒருவன் ஏசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவனது பெயரை மாற்றுவதிலும் மதம் மாற்றுவதிலுமே குறியாய் உள்ளீர்கள் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால் ஒபாமா விளக்கேற்றினாலும், புஷ் விளக்கேற்றினாலும் எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு மனிதன் தெய்வீகத்தை உணர்கிறான் என்ற நிலையிலேயை அதை பார்க்க முடியும். அவன் நம் மதத்திற்கு வந்து விட்டான் என்று சந்தோஷப்பட அதில் ஒன்றும் இல்லை.

    அது சரி ஒபாமாவே தீபாவளி கொண்டாடுகிறாரே! நீங்கள் ஏன் இன்னும் சலித்துக் கொள்கிறீர்கள். நீங்களும் தீபாவளி பொங்கல், விநாயகர் சதுர்த்தி எல்லாம் கொண்டாடலாமே! டேனியல் என்ற பெயருடனேயே..நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். சரியா!

    நிஜ உலகத்திற்கு சீக்கிரம் வாருங்கள்.

  31. // Dear Umashankar,
    Try proving any Protestant Church is under Pope. //

    அன்புள்ள நண்பர் அசோக் அவர்களே,
    உங்களது வாதம் நமது நிலைப்பாட்டினை பெலவீனப்படுத்தி விடும்;
    இன்றைக்கும் ஜனனம் முதல் மரணம் வரை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு அரணைப் போல விளங்குவது கத்தோலிக்க நிறுவனங்கள்தாம்;

    அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களை வைத்து கத்தோலிக்கப் பாதிரியார்களை இங்கே சிலர் தூஷித்தாலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இந்தியர்களல்ல; அவர்கள் இந்தியர்களாக இருப்பினும் அதற்குக் காரணம்,கிறிஸ்தவமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதே.

    மற்றபடி ஒழுங்கும் கட்டுப்பாட்டுக்கும் கல்விதரத்துக்கும் பேர்பெற்றது கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள்; இன்றைக்கு இந்து மார்க்கக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் பலரும் அங்கிருந்து கல்வி பயின்றவர்கள்தான்; இதனால் அவர்கள் மதம் மாறிவிடவில்லை;

    கத்தோலிக்க ஸ்தாபன பாதிப்பு இல்லாத ஒரு கிறிஸ்தவ சபையும் வானத்தின் கீழ் இல்லை; அது எப்படி என்பதையறிய தனியாக எழுதுங்கள்; ஒரே ஒரு உதாரணம், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டர்; அது ஆங்கில கால அட்டவணையல்ல, கத்தோலிக்க கால அட்டவணையாகும்.

    // வேற்று நாட்டு அரசிடம் வேலை பார்த்துக்கொண்டு நம் அரசிடமும் subsidy போன்ற உதவிகளையும், UGC grant முதலியவற்றையும் வாங்குகிறார்கள். //

    நண்பர் உமாசங்கர்,
    ஹியுண்டாய் காரைப் பார்த்திருக்கிறீர்களா?
    சாம்சங் வாஷிங் மிஷின் மற்றும் டிவியை பயன்படுத்தியிருக்கிறீர்களா?

    வியாபார நிறுவனங்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் சேவை நிறுவனங்களுக்குக் கிடைத்தல் பாவ காரியமா?

    மேலும் அரசாங்கங்கள் சும்மா சலுகை கொடுத்துவிடவில்லை, அரசாங்கத்தின் பாரத்தினை சமூகப் பொறுப்புடன் கத்தோலிக்க நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளுகிறது; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை பொது சொத்தாக பராமரிக்கிறது; அங்கே வேலைபார்ப்பவரெல்லாம் நமது இந்தியர்கள்தான்;
    இன்னும் என்ன சொல்ல‌..?
    இதையே குறுகிய மனப்பான்மை என்கிறேன்..!

  32. அஷோக்குமார் கணேசன்,

    முதலில், இந்தியக் கிறித்தவர்கள் எல்லாரும் தனிச்சுதந்திரமாக உள்ளோம் என்றீர்கள். ஓர் உதாரணமாக, ரோமன் கத்தோலிக்கச் சாதியைச்சேர்ந்த கிறித்துவர்கள் எல்லாம் வேற்று நாடான வாத்திகனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் என்று நிரூபித்தேன். இப்போது ப்ரோடஸ்டன்ட் சாதியினர் ரோமன் கத்தோலிக்க சாதியின் தலைமை குருவுக்குக் கட்டுப்பட்டவர் என்று நிரூபிக்கச் சொல்கிறீர்கள். அது எப்படி “அறிவாய்” யோசிக்கிறீர்கள்? இரண்டுமே வெவ்வேறு சாதியாயிற்றே?

    ஒவ்வொரு கிறித்துவச்சாதியும் ஏதோ ஒருவகையில் இந்தியாவுக்கு அப்பாலிருந்து பண, அதிகார ரீதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன் என்பது உண்மை.

    இந்தியாவில் இருந்தால் இந்தியச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும் அதை என்னமோ பாரதத்திருநாட்டுக்குக் கிறித்துவச்சாதிகள் கொடுத்த பெரிய சலுகை போல் சொல்கிறீர்களே? இப்படிச் சொல்லும் போதே உங்கள் மனதில் ஓடும் ஓட்டம் தெரிகிறதே? பாரதத்தில் ஆன்மா வாங்கும் (கிறித்துவக் கல்லறைகளின் எண்ணிக்கையைக் கூட்டும்) வியாபாரம் செய்வதற்கு, மிக மிக இலகுவான பாரதச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதற்கே இப்படி அலுத்துக் கொள்கிறீர்களே, சவுதி அராபியாவில் என்ன செய்வீர்கள்?

    அட அவ்வளவு ஏன், கிறித்துவ ப்ரொடஸ்டன்ட் சாதியைச் சேர்ந்த நீங்கள், ரோமன் கத்தோலிக்கச் சாதியின் தலைமை நாடான வாத்திகனில் போய் ஒரு ப்ரொடஸ்டன்ட் சர்ச் கட்டி வழிபாடு நடத்திப் பாருங்களேன், ஒரே ஒரு வாத்திகன் கத்தோலிக்கச் சாதிக்காரனை ப்ரொடஸ்டன்டாக மதம், வேண்டாம், சாதி மாற்றிப் பாருங்களேன், பார்க்கலாம்.

    அட அது கூட வேண்டாம், இங்கே பாரதத்தில் பொது இடத்தில் கூவுவது போல், வாத்திகனிலோ, சவுதி அராபியாவிலோ கூவும், “பிட் நோட்டிஸ்” கொடுக்கும் துணிவும் தைரியமும், நேர்மையும் நெஞ்சுரமும் உங்களுக்கும், உங்கள் ப்ரொடஸ்டன்ட் சாதிக்குத் தலைமை குருவாக எங்கோ ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ இருப்பவருக்கும் இருக்கிறதா?

  33. அன்பர் கிளாடி அவர்களே,
    //ஹியுண்டாய் காரைப் பார்த்திருக்கிறீர்களா?
    சாம்சங் வாஷிங் மிஷின் மற்றும் டிவியை பயன்படுத்தியிருக்கிறீர்களா?
    வியாபார நிறுவனங்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் சேவை நிறுவனங்களுக்குக் கிடைத்தல் பாவ காரியமா?//

    சேவை சேவையாக‌ ம‌ட்டும் இருத்திருந்தால் நானும் கூடப் ப‌ண‌ம் த‌ருவேன். இல்லையே, சேவை என்ற‌ போர்வையில் போர்த்தி ம‌த‌மாற்றம் செய்வ‌தால்தானே இதுப‌ற்றி இவ்வ‌ள‌வு பேசுகிறோம்.

    //இதையே குறுகிய மனப்பான்மை என்கிறேன்..!//

    நான் கேட்பதெல்லாம், ஏன் பரந்தமனப்பான்மை பாரதத்துக்கு மட்டும் வேண்டும்? வாத்திகனுக்கோ, சவுதி அராபியாவுக்கோ இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் கூட இதயத்தின் ஓரத்தில் கூட வரவில்லையே?
    இன்னமும் எமது இறைமூர்த்திகளைச் சாத்தான் என்றல்லவோ பிரசாரம் செய்கிறார்கள்?

    உலகத்தில் உள்ள எல்லா கிறித்துவ நாடுகளையும், இஸ்லாமிய நாடுகளையும் பாரதத்தைப்போல சமதர்ம, மதசார்பற்ற நாடாக வேண்டும் என்பதை ஏன் போப்பும், இன்னபிற கிறித்துவச்சாதிகளின் மத குருமார்களும், சவுதி மன்னரும், ஒஸாமாவும், கொமேனிகளும், ‍அட அவ்வளவு ஏன் ஒரு கிளாடியும், ஒரு அஷோக்குமார் கணேசனும் கூட நினைக்கவில்லை?

    அது என்ன பரந்த மனப்பான்மை எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும்? போப்புக்கும்தான் வரட்டுமே?

  34. அன்பர் கிளாடி அவர்களே,

    //ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை பொது சொத்தாக பராமரிக்கிறது//

    உண்மையில், பொது சொத்தாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை, அந்நிய ஆங்கில, பிரென்ச், போர்ச்சுகீசிய, டேனிஷ் அரசுகள் (காலனி ஆதிக்கத்தின்போது) சர்ச்சுகளுக்கு மானியமாகக் கொடுத்தார்கள். இவற்றைப் பொதுசொத்தாக சர்ச்சுகள் எப்போது அறிவிக்கும்? த‌யாரா?

    //அங்கே வேலைபார்ப்பவரெல்லாம் நமது இந்தியர்கள்தான்;//

    அது ச‌ரி, யார் முத‌லாளி? அவ‌ர் எந்த‌ ஐரோப்பிய‌ அல்ல‌து அமெரிக்க‌ நாட்டில் இருக்கிறார் என்ப‌துதானே என் கேள்வி?

  35. ///வியாபார நிறுவனங்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் சேவை நிறுவனங்களுக்குக் கிடைத்தல் பாவ காரியமா?////

    கடைசியாக ஒத்துக்கொண்டீர்கள் உங்கள் சேவை நிறுவணங்களும் வியாபார நிறுவனங்களும் ஒன்றுதான் என்று

  36. //மேலும் அரசாங்கங்கள் சும்மா சலுகை கொடுத்துவிடவில்லை, அரசாங்கத்தின் பாரத்தினை சமூகப் பொறுப்புடன் கத்தோலிக்க நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளுகிறது; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை பொது சொத்தாக பராமரிக்கிறது; அங்கே வேலைபார்ப்பவரெல்லாம் நமது இந்தியர்கள்தான்;//
    One more proof that christians own huge tracts of land. Those working on the lands may be Indians but ‘harvested’ or ‘will be harvested’ Hindus. Isn’t it?

  37. ////உலகத்தில் உள்ள எல்லா கிறித்துவ நாடுகளையும், இஸ்லாமிய நாடுகளையும் பாரதத்தைப்போல சமதர்ம, மதசார்பற்ற நாடாக வேண்டும் என்பதை ஏன் போப்பும், இன்னபிற கிறித்துவச்சாதிகளின் மத குருமார்களும், சவுதி மன்னரும், ஒஸாமாவும், கொமேனிகளும், ‍அட அவ்வளவு ஏன் ஒரு கிளாடியும், ஒரு அஷோக்குமார் கணேசனும் கூட நினைக்கவில்லை?

    அது என்ன பரந்த மனப்பான்மை எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும்? போப்புக்கும்தான் வரட்டுமே?////

    இந்த கேள்விக்கு எந்த கிறிஸ்தவ இஸ்லாமியராலும் உண்மையாக மனதார பதில் தர முடியாது. அது தான் எதார்த்தம்.

  38. ராம் அவ‌ர்க‌ளே

    இது ந‌ட‌க்க‌வேண்டும், உல‌கில் உள்ள‌ எல்லா கிறித்துவ‌, இஸ்லாமிய‌ நாடுக‌ளையும் ம‌த‌சார்ப‌ற்ற‌ நாடாக்கப் போராட‌வேண்டும்.

    ந‌ம் பார‌த‌த்தின் மீது இந்த‌ ம‌த‌ங்க‌ள் ந‌ட‌த்திவ‌ரும் தாக்குத‌லுக்கு இதுதான் தீர்வு.
    இந்த‌ மத நிறுவன‌ங்க‌ள் ந‌ம் மீது போரை ம‌றைமுக‌மாக‌ ந‌ட‌த்துகிறார்க‌ள்.

    போர் யுக்தி என்ப‌து, போரை மாற்றானின் நாட்டுக்குள்/ வீட்டுக்குள் கொண்டுசெல்வ‌தே. அவ‌ர்க‌ள் இப்போது போரை ந‌ம் வீட்டுக்குள் செய்கிறார்க‌ள். ந‌ம‌க்கு பாதிப்பு, அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை.

    அவ‌ர்க‌ள‌து ம‌த‌ச்சார்பு முத்திரையை அழிக்க‌வேண்டும்,
    போலி ம‌த‌ச்சார்பின்மையின் முக‌த்திரையைக் கிழிக்க‌வேண்டும்.
    அத‌ற்கான‌ வ‌ழி ….
    வாத்திகனிலும், சவுதி அராபியாவிலும் விநாய‌க‌ர் கோவில் க‌ட்டி வ‌ழிபாடு செய்ய‌ உரிமை கேட்போம்.
    உல‌கில் உள்ள‌ எல்லா நாடுக‌ளிலும் எல்லா ம‌த‌த்தின‌ரும் ச‌ம‌ உரிமையோடு வாழ‌ வ‌ழி கேட்போம்.
    ஐ.நாவை இதற்காக‌ உலுக்குவோம்.
    இது த‌விர‌, ஹிந்து ஆசார்ய‌ ச‌பாவின் த‌லைமையில் இருக்கும் எந்த ஆசாரிய‌ருக்கும் போப்பைப் போல‌ Soverign Status கேட்போம்.

  39. ஏன் இப்பவும் பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில், இந்து கோயில்கள் இருக்கத்தானே செய்கின்றன. சின்மயா ஸ்தாபனம், கிருஷ்ண பக்தி இயக்கம், ஓஷோ இயக்கம் என இந்து மத ஸ்தாபனங்கள் வெளி நாடுகளில் இருக்கத்தானே செய்கின்றன, இத்தாலியில் உள்ள பெரு நகரங்களில் ஒன்றான பாரியில் கூட இந்துக்கோயில் உண்டு. ராம்தேவ் ஒரு தீவையே பிரிட்டனில் விலைக்கு வாங்கியிருக்கிறாரே.

  40. //ஐயா குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அம்மன் பாதத்தில் இருந்த, விவேகானந்த பாறையில் இருந்த யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியாதா ஏன் வேளாங்கண்ணியில் பிணமாக மிதந்தபோது உங்கள் மாதா தூங்கிக்கொண்டா இருந்தாள்//

    இது தேவையில்லாத பேச்சு, சுனாமியில் ஒரு இந்து கூட சாகவில்லையா, என்னய்யா இது என்ன எழுதுகிறோம் என யோசித்து தான் எழுதுகிறீரா, ஏன் குஜராத் பூகம்பத்தில் ஆயிரக்கணக்காக மக்கள் மாண்ட போதும், ஒரிசா வெள்ளத்தில் மக்கள் இறந்த போது அவர்களை மக்களாகத்தான் பார்த்தார்கள் அவர்களை இந்துக்களாக நினைக்கும்படியாக செய்துவிடுவீர்கள் போல‌.

  41. வணக்கம்,

    //பாதிரியார்களை இங்கே சிலர் தூஷித்தாலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இந்தியர்களல்ல; அவர்கள் இந்தியர்களாக இருப்பினும் அதற்குக் காரணம்,கிறிஸ்தவமல்ல;//

    குற்றம் சாட்டப் பட்டவர் இந்தியர் அல்ல என்பது உங்களின் கருத்தாக இருக்கலாம் ஸ்ரீ கிலாடி, ஆனால் இதற்கு முன்னால் ஒரு நபர் வேறொரு கட்டுரையின் பின்னூட்டத்தில் வெளிநாட்டவர் யாரும் இங்கே வந்து பிரச்சாரம் செய்வது இல்லை, என்கிறார் எது உண்மை என விளக்கினால் நல்லது.

    குற்றத்தில் மாட்டிக் கொண்டால் அவரின் நடத்தைக்கு காரணம் கிறிஸ்துவம் அல்ல. மாட்டாதவரை அவர் ஒரு நல்ல பாதிரி. என்கிறீர்களா? உடனே இந்துக்களில் குற்றவாளி இல்லையா என்று ஒரு கேள்வி நீங்கள் கேட்பீர்கள், அப்படி இருப்பவரை இந்துக்களே தண்டித்த செய்திகளும், சட்டத்தில் சிக்கவைத்த செய்திகளும் நிறைய உள்ளன யாரும் மூடி மறைப்பது இல்லை.

  42. வணக்கம்,

    //இவ்வளவு பேசும் நீங்கள், கன்னியாகுமரி சுனாமியில் மாறியபோது உங்கள் குமரி தெய்வம் என்ன செய்தது என்று யோசிக்கலாமே.//

    நண்பர் ஸ்ரீ டேனியல் அவர்களே ஸ்ரீ அசோக் அவர்களின் பதிவின் இந்த வரிகளின் எதிரொலியே அக்னிபுத்திரனின் வார்த்தைகள். இங்கே இந்த கட்டுரையில் கூறப் பட்டிருப்பது என்ன என்பதை கொஞ்சம் யோசித்தால் நலம். கத்ரினா சூறாவளியில் மாட்டிக்கொண்டவர்கள் ஏற்கனவே மதம் மாறியவர்கள், மதம் மாறும் முன்னர் உதவிய மெசினரிகள் பின்னர் கைவிட்டது ஏன்?

  43. Friends,

    Its waste of time to debate with people who are brain washed. Lets concentrate on our spiritual development rather than wasting our time with such people.

    Talking about Tsunami, I remember one incident. Its a well known fact that, whenever help is needed (mainly due to natural calamity) ‘Seva Bharati’ is the first to step in for service. Though the media ridicules RSS and its activities, its a fact that there is no one who can be compared with ‘Seva Bharati’ for its social service, irrespective of caste or religion, wherever it is needed. Even during Tsunami, even before anyone realized what has happened, Seva Bharathi had its service camps set up all along the coast.

    Thats a different story – what i wanted to share is – i went with a small team to distribute food to some affected people, after a week the Tsunami struck. I got a first hand information that, in one of the coastal fishermen village, which contains 9 streets, one group of christian missionaries came for service (?) and distributed food to only people in 2 streets and didnt bother about the others. The reason is – only the people in those 2 streets were converted to christianity and others refused. So they didnt get any help.

    When people were dying and struggling in such a calamity, these heartless people bargained to give boats and houses only for those who agreed to get converted.

    What a service? Really great!!!

  44. இந்து தர்மத்தில் எதுவுமே மூடநம்பிக்கை இல்லை என்பதை பலமுறை பல விளக்கங்களுடன் பல அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். அவற்றை நாத்திகர்களாக இருந்தவர்களே பிற்பாடு அனுபவப்பூர்வமாக வாழ்ந்து பார்த்து ஒத்துக்கொண்டு பின்னர் முழு ஆத்திகர்களாக மாறியிருக்கிறார்கள். இந்து தர்மம் என்பது வாழ்வியல் வழிகாட்டு முறையே அன்றி இது ஒரு ஒரு தனி நபர் ஸ்தாபித்த அடையாள மார்க்கமாக இருக்கவில்லை. இந்து தர்மம் என்பது அறிவியலும் மனோவியலும் சேர்ந்ததே ஆகும்.

    இந்தக் கருத்து இன்று அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா மூலமாகவே நிரூபனம் ஆகியிருக்கிறது. தொலை நோக்கு அறிவியல் கருவிகள் எதுவும் இல்லாமலே சூரியன் உதிக்கும் நேரமும், சந்திரன் மறையும் நேரத்தையும் கூட ஆராய்ந்து சோன்னது இந்து தர்மம்.

    சூரிய கிரகனமும் சந்திர கிரகனமும் வெள்ளைக்காரன் சொல்லும் முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடும். இந்த அறிவியல் யார் கொடுத்தது. இந்து தர்மத்தின் ஆதாரமே மூடத்தனம் இல்லாத இந்த அறிவியல் விஷயங்கள் தானே. இயற்க்கையோடு ஒன்றிப்போய் ஒன்றாய்க்கலந்து வாழ்ந்த நம்மக்கள் அதற்க்கான அடையாளங்களையும் அந்தப் பொக்கிஷங்களையும் நமக்காக விட்டுப்போனார்கள். அத்தகையப் பொக்கிஷங்களே நம் கண்முன்னே உயர்ந்து நிற்க்கும் கோவில்கள்.

    இந்த ஆடி மாதம் ஆறாம் தேதி சூரிய கிரகணம் வரப்போவதை பஞ்சாங்கம் துல்லியமாக நேரம், காலம், நாழிகை முதற்க்கொண்டு சொல்லிவிட்டது. ஆனால் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மவர்களுக்கு வேத வாக்கு. இதோ வெள்ளைக்காரன் சொன்னதாக வெளியாகியிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

    இந்த நூற்றாண்டில் மிக நீண்ட நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் இது தான். பிகார் மாநிலம் தரிகானா என்ற இடத்தில் தான் சூரிய கிரகனம் நீண்ட நேரத்திற்கு நிலவும். அதாவது சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவிற்க்கு சூரியனை மறைக்கும் சந்திரனின் நிழல் தெரியும். எனவே சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க இது தான் சரியான இடம் என்று நாசா அறிவித்துள்ளது. அதாவது பீகாரில் மாநிலத்தில் தரிகானா என்றொரு இடம் இருப்பதே அவர்களுக்கு இப்போது தான் தெரியும்.

    ஆனால் ஆரியபட்டர் என்ற இந்திய வானியல் விஞ்ஞானியாக அறியப்படும் வானியல் மேதை ஆறாவது நூற்றாண்டிலேயே இந்த இடத்தை வானியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கண்டறிந்திருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கும் முன்பாகவே சூரியனுக்கு கோவில் கட்டப்பட்டும் இருந்தது அதைவிட விஷேஷம். அந்த இடத்திலிருந்து ஆரியபட்டர் சூரியன் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இது பற்றி பல புத்தகக் குறிப்புகளும் உள்ளன.

    விஷயம் என்னவெனில், இந்து தர்மத்தில் கோவில்கள் வெறும் சிலை வைத்து வழிபடும் தளங்களாக மட்டும் இல்லாமல், மனதிற்கு நிம்மதி தரும் இடமாகவும், புவியியல் மாறுதல்களைக் கனித்து பூமியைச் சுற்றியுள்ள கிரகங்களின் அழுத்தம் நாம் வாழும் பூமியில் எந்தப் பகுதியில் பரவிக்காணப்படுகிறது என்பதையும் கணித்தே கட்டப்பட்டுள்ளது என்பதை நாஸா மூலம் மீண்டும் நாம் விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகியிருக்கிறது.

    தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும் இதே போன்ற பல நன்மைகள் கருதியே கட்டப்பட்டுள்ளன. கிரகங்களின் சுற்று வட்டப்பாதையில் அந்த இடங்கள் இவ்வாறான புவியியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டே நிரூபிக்க முடியாது. அது வாழ்ந்து பார்க்கும் போது காலத்தால் மட்டுமே நிரூபனம் ஆகும்.

    அவ்வளவு ஏன். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மகாலய அமாவாசை அன்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்பனம் செய்வார்களே! அப்படி என்ன விஷேஷம் அந்த நாளில் என்று தோன்றும். வருடத்திலேயே சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாள் அது தான். இது புவியியல் ரீதியான உண்மை. மேலும் உண்மை அறிந்தவர்கள் இன்னும் விளக்கலாம். கேட்கத்தயார்.

    இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன. ஏனெனில் இது இந்து மதத்தைப்பற்றி இச்செய்தி உயர்வாக சொல்லிவிடுமே. அதுதான் காரணம். ஆனால் உலகையே உலுக்கிய சுனாமி ஏன் இந்த இரு கோவில்களைத் தொடவில்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள்?

  45. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
    ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
    நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழந்
    தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
    (திருமந்திரம் 2962)

  46. //இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன.//
    Tsunami did not cross Santhome church in Mylapore and it was attributed by the Christians to the power of their God and highlighted by the media also. Nothing wrong. But doesn’t it actually show the power of Kapaleeswarar as Santhome Church was built after demolishing original Kapaleeswarar temple!

  47. ஐயா, இங்கு கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் அனைவரும் கெட்டு நாசமாய் போய்விடவில்லையே. பிரச்சனை வெள்ளைக்காரனிடம் தான் இருக்கிறது, கிறிஸ்தவத்தில் இல்லை.

  48. //அவற்றை நாத்திகர்களாக இருந்தவர்களே பிற்பாடு அனுபவப்பூர்வமாக வாழ்ந்து பார்த்து ஒத்துக்கொண்டு பின்னர் முழு ஆத்திகர்களாக மாறியிருக்கிறார்கள்//
    கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட எத்தனையோ இந்துக்களையும், நாத்திகர்களையும் என்னாலும் காட்ட முடியும் (உடனே காசு வாங்கிக்கொண்டான் என்ற ரெடிமேட் பதிலை ரெடியா வச்சிருப்பீங்களே)

  49. Friends,

    Its waste of time to debate with people who are brain washed. Lets concentrate on our spiritual development rather than wasting our time with such people.

    அதானே, நீங்க சொல்ரதையெல்லாம் கேட்டு நாங்க நிச்சயம் மாறப்போறது இல்லை. ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். சதீஷ் சொல்றது ரொம்ப சரி, எங்க நம்பிக்கையில் நாங்க உறுதியா தான் இருக்கோம்

  50. //i went with a small team to distribute food to some affected people, after a week the Tsunami struck. I got a first hand information that, in one of the coastal fishermen village, which contains 9 streets, one group of christian missionaries came for service (?) and distributed food to only people in 2 streets and didnt bother about the others. The reason is – only the people in those 2 streets were converted to christianity and others refused. So they didnt get any help.

    When people were dying and struggling in such a calamity, these heartless people bargained to give boats and houses only for those who agreed to get converted. //

    If this had happened it is certainly wrong

  51. Iyya Joseph Daniels!

    Ninga Hindu Mathathai Kevala padutharatha ninaichutu eluthara ellam unga mathathaiyum setthu kevala paduthuthu enru ariyamaleye senchuttu irukinga!

    ithanala Hindu matham kilzhe pogumo illaiyo theriyathu.Aana Kiristavam valara entha vakaiyuleyum intha ungal pechukkal uthava povathillai enbathu mattum nitharsanamana unmai. Ramanai kindal adicha athu yesuvukkum serthuthaan enra unmai theriyama irukira unga sirupillaithanathai ennanu solrathu.

  52. 1. வாத்திகனில் கோவில் வைப்போம் என்றால், வேறிடங்களை ஒப்புக்குக் காட்டக்கூடாது. வாத்திக‌னில் ஹிந்துக்கோவில் என்ன? ஒரு ப்ரொடஸ்டண்ட் சாதிக் கோவில் கூட வைக்க விட மாட்டார், “கிறித்துவின் வழியில் நித்தம் நடக்கும்” “அன்பும், பண்பும், மதசகிப்புத்தன்மையும் மிகுந்த”, “சாதிப்பாகுபாடு பார்க்காதவராகிய, எளிமையின் உறைவிடமாகிய” கத்தோலிக்கப் போப்.
    2. கிறித்துவ நாடு என்று ஏன் இருக்கவேண்டும்? பண்டைக்காலம் தொட்டு ஹிந்து நாடாக இருந்த பாரதம் மட்டும் இப்போது மதச்சார்பற்ற நாடாக வேண்டும், வாத்திகன், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மால்டா, ஸ்விட்சர்லாந்து, அர்ஜன்டினா, பெரு, ஆர்மெனியா, சைப்ரஸ், கிரீஸ், ஃபின்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் கிறித்துவ நாடாகவே இருக்கலாமா? சவுதி அராபியா, ஹோர்டன், குவைத், ஓமன், இரான், ஆஃப்கானிஸ்தான், வ‌ங்காள தேசம், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு முத்லியன அனைத்தும் மதச்சார்பற்ற நாடாக வேண்டும்.
    3. இங்கே கால‌னி ஆதிக்க‌த்தின்போது கிறித்துவ‌க்கோவில்க‌ளுக்கு ஆதிக்க‌ச் சாதியின‌ராகிய‌ கிறித்துவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே என்ற‌ முறையில் ப‌ட்டா ப‌ண்ணிக் கொடுத்துக்கொண்ட‌ ஆயிர‌க்கண‌க்கான‌ ஏக்க‌ர் நில‌த்துக்கு ஈடாக‌, ஹிந்து ம‌த‌க் கோவில்க‌ளுக்கு, ம‌த‌ம் சார்ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு என‌ அதே அள‌வு நில‌த்தை, ஐரோப்பா(முக்கியமாக வாத்திகனில்), அமெரிக்கா, மேற்கு ஆசியா (முக்கியமாக மெக்காவுக்கும் மதீனாவுக்கும் மஸூதிக்கு அடுத்த நிலமாக), ஆஸ்திரேலியா, ஜ‌ப்பான், கொரியா முத‌லிய‌ கிழ‌க்காசிய‌ நாடுக‌ளில் நஷ்ட ஈடாகத் த‌ர‌வேண்டும்.
    4. ஸ்வாமி ராம்தேவ‌‌ர் வாங்கிய‌ தீவுக்கான‌ தொகையை பிரிட்டன் அரசு அவ‌ருக்கே திருப்பித் த‌ர‌ வேண்டும்.
    5. உல‌கில் ஒரு நாடு கூட‌ எந்த‌ ம‌த‌த்தையும் சார்ந்த‌தாக‌ இருக்க‌க்கூடாது.

  53. வணக்கம்.

    இங்குள்ள கிருத்து(ரு)வ பாதிரிகளும் நிறுவனகளும் இந்திய சட்டத்திற்கே கட்டுப்பட்டது என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சிலர் எடுத்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் கேள்விப்பட்ட( என்னிடம் ஆவண ஆதாரமில்லை) வழக்கொன்றை நானும் இங்கு சொல்கிறேன்.

    திருவள்ளுவர் கிருத்துவர், திருகுரள் கிருத்துவ கிரந்தம்; இதற்கான செப்புப் பட்டய ஆதாரங்கள் இருக்கின்றன் என்றெல்லாம் பால் ராஜ் கணேஷ் அய்யர் என்பவர் மயிலை அர்ச் பிஷப்பை செமத்தியாக எமாற்றி லக்ஷக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதும் பின்பு கணேசய்யர் வழக்கில் மாட்டி தண்டனை அடைந்ததும் பலர் அறிவீர்கள்.

    அதையொட்டி வந்த மற்றொரு வழக்கை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    ஒரு கிருத்துவர், மயிலை அர்ச் பிஷப் மீது “ஏமாற்று வேலைகளுக்கு சர்ச் நிதியை வாரி விட்டுவிட்டார் – இது நிதி மோசடி” என்று குற்ற வழக்கொன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிந்தார்.

    அந்த குற்ற வழக்கில் பிஷப் கைது செய்யப்படக்கூடிய நிலை வந்தது; அப்போது பிஷப்பின் வழக்குறைஞர் கீழ் காணும்வாறு நமது சட்டத்தின்(அவல) நிலையை எடுதுதுரைத்தாராம்.

    இந்த நாட்டுக் குடிமக்களான தாய்-தந்தையர்க்குப் பிறந்து, இங்கேயே வளர்ந்து வாழ்ந்து பின் இப்படியான அந்த அர்ச் பிஷப் இந்த நாட்டுக் குடிமகன் இல்லையாம்; வாடிகன் வாரிசாம்; “பிஷப் ஹவுஸ்” எனப்படுகிற அந்தப் பரந்த சிங்கார சென்னையின் மனை வாடிகன் நாட்டுடையதாம்; எனவே அவரைக் கைது செய்ய முடியாதாம்; அவ்விடத்து அனுமதி வேண்டுமாம்.

    இப்படியான சட்ட நிலையை வழக்குறைஞர் எடுத்துச் சொன்னவுடன் நீதிபதி(மாண்பமை சத்யதேவ் என்று தகவல்) இந்த அவல நிலையைத் திருத்தும் யோசனைகளை அரசுக்குச் சொல்லி வழக்கை முடித்துவிட்டாராம். இங்கத்திய பணம்; இங்கத்திய மனிதர்கள்; இங்கத்திய மோசடி வழக்கு; இங்கத்திய நீதி மன்றம்; ஆனால் இங்கத்திய சட்டம் ஒன்றும் கிழிக்க முடியாது.

    நமது மதச்சார்பற்ற சட்டத்தின் மாட்சிமையை நாம் மெச்சிக்கொள்ளத்தான் வேண்டு.

    கண்ணன்,கும்பகோணம்.

  54. ///கிறித்துவ நாடு என்று ஏன் இருக்கவேண்டும்? பண்டைக்காலம் தொட்டு ஹிந்து நாடாக இருந்த பாரதம் மட்டும் இப்போது மதச்சார்பற்ற நாடாக வேண்டும், வாத்திகன், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மால்டா, ஸ்விட்சர்லாந்து, அர்ஜன்டினா, பெரு, ஆர்மெனியா, சைப்ரஸ், கிரீஸ், ஃபின்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் கிறித்துவ நாடாகவே இருக்கலாமா? சவுதி அராபியா, ஹோர்டன், குவைத், ஓமன், இரான், ஆஃப்கானிஸ்தான், வ‌ங்காள தேசம், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு முத்லியன அனைத்தும் மதச்சார்பற்ற நாடாக வேண்டும்.///

    மிகவும் உண்மை. சமீபத்தில் தானே இந்து நாடாக இருந்த நேபாளத்தை கிறிஸ்தவ கூலிப்படையினரான மாவோயிஸ்ட் கைப்பற்றி அதை மதச்சார்பற்ற நாடு என அறிவித்து இந்துக் கோவில்கள் மீதும் பூசாரிகள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். குறைந்தபட்சம் வாட்டிகனை மதச்சார்பற்ற நாடு என்று மாற்றுவார்களா?

    ஆனால் அவர்களாக மாற்ற மாட்டார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஐரோப்பா முழுவது முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் போது அவர்கள் கண்டிப்பாக அப்படிச் சொல்லியே தீரவேண்டிய கட்டாயத்திற்கு வரத்தான் போகிறார்கள். அப்போது இந்தியாவில் எப்படியெல்லாம் தறிகெட்ட முறையில் நடந்து கொள்கிறார்களோ அதை கிறிஸ்தவர்கள் அப்போது தங்கள் சொந்த நாட்டிலேயே முஸ்லீம்களால் அனுபவிக்கப் போகிறார்கள்.

    ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று கூறி போப் கவலை அறிக்கைகள் வெளியிடுவதே இதற்கு சான்று.

  55. An excerpt from ‘https://geoconger.wordpress.com/category/anglican-church-news/church-of-south-india/’ under the title ‘Sonia’s Miracle Victory dtd May 20, 04 ….
    //Sherly Isaac, editor of the Church of South India publication Good News, stated the eight years of BJP rule had been harsh for rural Christians as Hindu militants
    sought to eradicate the Church. “Many Christians were killed and many were burnt alive.”

    “Of many, their hands and legs were chopped off. Many of them were made to walk naked on the streets and were beaten up severely. Many were told that either they should renounce their religion and join Hinduism or face death. Many Churches were demolished, burnt down or were converted to Hindu temples.”//

  56. A news item under the heading ‘Church appeals against order to provide information on property’ dated 15.10.09 in the following web page – https://www.indiancatholic.in/news/storydetails.php/13585-1-6-Church-appeals-against-order-to-provide-information-on-property
    JABALPUR, India : Catholic officials in Madhya Pradesh state say they are concerned about an order from a state commission that the Church disclose details of its properties.

    The order, which appears to be directed solely at the Christian community, came from the education officer of Jhabua district on Sept. 24, say Church officials.

    The officer had ordered Bishop Devaprasad Ganawa of Jhabua to furnish details of Church assets and quoted a Jan. 15 order of the state minority commission that sought details of Church land, churches and cemeteries.

    Bishop Ganawa says the government move is “a cause of very serious concern for the Church.” He said the district education officer issued another letter on Oct. 13 asking his diocese to furnish the details in three days.

    “We have decided to approach the court against the education department’s order since its compliance has far-reaching impact” on the Church all over the country, the prelate told UCA News.

    Archbishop Leo Cornelio of Bhopal, who heads the Catholic Church in the central Indian state, also feels “there is a sinister motive behind this order.”

    “I cannot understand the wisdom behind the education department seeking details of our cemeteries and churches,” he told UCA News.

    The Church’s major concern appears to be the demand for specific information on leased assets as well as donated assets it owns. Its many schools and charitable institutions stand on either leased or donated land.

    Archbishop Cornelio said the minority commission was set up to protect minority religious communities and has no right to demand Church property details through the education department.

    He said he fears the order paves the way to bring Church properties under state government control.

  57. நண்பா அசோக் குமார் G !

    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//

    கிறிஸ்தவத்தின் கண்ட்ரோல்லில் இருக்கிற மெக்சிகோ-ல சத்தியமும் அன்பும் தல ஓங்கி நிற்கிறதா பிரதர்? பிலிபைன்சில்-ல எல்லாரும் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு வாழ்ந்துட்டு இருக்கானுங்களா பிரதர்? பிரேசில், அர்ஜன்டினா-ல எல்லாம் பீச்-ல சத்தியமான அம்மணமா ஒருத்தியும், ஒருத்தனும் சுத்தலையா பிரதர்? ஏன் ஆப்ரிக்கா-ல, ஜிம்பாப்வே மாதிரியான கிறிஸ்டியன் கண்ட்ரோல்-ல இருக்கிற இடத்தலை எல்லாம் அன்பும் இல்லை அமைதியும் இல்லை பிரதர்? ஏன் இதாலியால மட்டும் மாபியா கேங்க் அதிகமா இருக்கு பிரதர்? வாடிகன் பக்கத்துல இருக்கிறதாலை அங்கே உண்மையும் சத்தியமும் கிரிஸ்தவதாலே நிறுவ முடியாம போயிடுச்சா பிரதர்? ஏன் குரேசியாவை போட்டு ரஷ்ய தாக்குறான் பிரதர்? அந்த ரெண்டு நாட்லேயும் கிறிஸ்தவம் அதன் அன்பையும் அமைதியையும் ஏன் வளர்க்காமல் போச்சு பிரதர்?

    இன்னும் எவ்வளவோ பிரதர் உங்க கிறிஸ்டியன் கண்ட்ரோல்-ல இருக்கிற நாடுகளின் சத்தியமும் ,அன்பும்,அமைதியும் ,ஒழுக்கமும்.

    இந்தியா,ஹிந்து மதத்தோட கண்ட்ரோல் இருக்க போய் தான் நீங்க அமெரிக்காவுல வக்காந்துகினு ஹிந்து மதத்தை, ஹிந்துகளை பத்தி தப்பு தப்பா வெள்ளகாரனுக்கு சொல்லி அவன்கிட்ட எதாவது பச்சாதாபத்தை வாங்கி உங்களை பொருளாதார ரீதியா உயர்த்திகொள்ள முடியுது பிரதர்!

    எல்லாரும் கிறிஸ்டியன் ஆனா அவன் நம்மளை கண்டுக்கவே மாட்டான் பிரதர்,மெக்சிகோ மாதிரி! ஸ்ரீ கிளாடி முன்னே சொன்ன மாதிரி ஏழை இந்தியாவுக்கு அது நல்லதும் இல்லை பிரதர்.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  58. நண்பா அசோக் குமார் G !

    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//

    ஆக, கிறிஸ்தவ கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தால் தான் இந்தியா நலமாயிருக்கும், அன்பும் வாழும், சத்தியம் நிலைக்கும்.

    ஹிந்துவாகவே இருந்தால் இதற்கெல்லாம் பங்கம் வரும், கிறிஸ்தவத்தால்!

    கிறிஸ்தவத்தின் கோர முகத்தை தெள்ள தெளிவாக காட்டியமைக்கு நன்றி அசோக் !!!!!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  59. //
    An excerpt from ‘https://geoconger.wordpress.com/category/anglican-church-news/church-of-south-india/’ under the title ‘Sonia’s Miracle Victory dtd May 20, 04 ….
    //Sherly Isaac, editor of the Church of South India publication Good News, stated the eight years of BJP rule had been harsh for rural Christians as Hindu militants
    sought to eradicate the Church. “Many Christians were killed and many were burnt alive.”

    “Of many, their hands and legs were chopped off. Many of them were made to walk naked on the streets and were beaten up severely. Many were told that either they should renounce their religion and join Hinduism or face death. Many Churches were demolished, burnt down or were converted to Hindu temples.”//
    //

    If such a thing had happenend…will our ‘sickular’ media be quite? Wont they blow it out of proportion and keep the fire still burning even after so many years? We see that happening with Gujarat Riots…where no media talks about the root cause (Godhra train carnage) but till date talk about the aftermath and keep those memories still alive in the minds of the public. So if such things really happened…how come no one came to know about it and no media publicised it glaringly? Did anyone hear about this kind of news????

  60. //எமது கேள்வி இது அல்ல. பக்கத்துவீட்டுக்கார அம்மாள் தந்த எல்லா இனிப்பு மற்ற பலகாரங்களை உண்ட பின்னும் ஒரு பிள்ளைக்கு வ‌யிறுமுட்ட‌ சாப்பாடு போடும் ந‌ம‌து பார‌த‌ அர‌சு என்ற‌ அன்னை, இன்னொரு பிள்ளைக்கு எதுவுமே போட‌முடியாத‌ப‌டிக்கு, க‌ம்யூனிச‌, ம‌த‌வாத(பிரிவினை மதம், பக்கத்துவீட்டு அம்மாளின் மதம் உள்பட), அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌டுக்கிறார்க‌ளே அது ப‌ற்றித்தான் கேட்கிறோம்.//
    இது உண்மையா என்று தெரியவில்லை, அப்படி உண்மையாயிருந்தால், அரசியல்வாதிகள் இப்போதாவது ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. திருப்பதி தேவஸ்தானம் உமக்கு நலிந்த பிள்ளையாக தெரிகிறதா? இதற்க்கு அரசாங்க பணம் வேண்டுமா? உங்களின் எத்தனை சதவீத அறநிலையங்கள் சமுதாய பனி செய்கின்றன?
    அசோக்

    (Edited.)

  61. வணக்கம்,

    நல்ல கேள்விகள் ஸ்ரீ பிரதிப் பெருமாள்.

  62. வணக்கம்,

    //ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று கூறி போப் கவலை அறிக்கைகள் வெளியிடுவதே இதற்கு சான்று.//

    ஐரோப்பாவில் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள், இந்தியாவில் சிந்திப்பதை விற்க ஆரம்பித்துவிட்டார்கள் போலும்.

  63. கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டிகளல்ல‌;
    அவர்களும் சீர்திருத்தவாதிகள் என்பதற்கு இதோ ஒரு உதாரணம்..!

    https://www.jamakaran.com/tam/2009/october/aabaththu.htm

    கிறிஸ்தவத்திலுள்ள அழுக்குகளை மற்றவர் சுட்டிக்காட்டும் முன்பதாகவே அதனைத் திருத்திக் கொள்ள அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்..!

  64. ///உங்களின் எத்தனை சதவீத அறநிலையங்கள் சமுதாய பனி செய்கின்றன?////

    யப்பா அசோக்கு,
    மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி சுத்தின எடத்தையே சுத்தி சுத்தி சாமியாட்றத வுட்டுப்புட்டு…இந்த தளத்திலேயே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு தெரியரதுக்காகவே ‘இந்து சேவை அமைப்புகளின் தொண்டுன்னு ஒரு தலைப்பு இருக்கு. அதை படிச்சு பாத்திட்டு திரும்பி வாங்க. பேசுவோம்.

    நல்லா கேக்றாங்கய்யா டீட்டேய்லு!

  65. வணக்கம்,

    /////உங்களின் எத்தனை சதவீத அறநிலையங்கள் சமுதாய பனி செய்கின்றன?////

    யப்பா அசோக்கு,
    மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி சுத்தின எடத்தையே சுத்தி சுத்தி சாமியாட்றத வுட்டுப்புட்டு…இந்த தளத்திலேயே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு தெரியரதுக்காகவே ‘இந்து சேவை அமைப்புகளின் தொண்டுன்னு ஒரு தலைப்பு இருக்கு. அதை படிச்சு பாத்திட்டு திரும்பி வாங்க. பேசுவோம். //

    இந்து சேவை அமைப்பு அப்படி என்று உள்ளது, அதற்காக அங்கே உதவி பெற்ற யாரையும் இந்த அமைப்புகள் மதம் மாற்றவில்லை.
    மதம் மாற்றுவதற்காக ஏற்பட்ட அமைப்புகளும் இவை இல்லை.

  66. /////glady
    22 October 2009 at 8:41 am
    கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டிகளல்ல‌;
    அவர்களும் சீர்திருத்தவாதிகள் என்பதற்கு இதோ ஒரு உதாரணம்..!

    https://www.jamakaran.com/tam/2009/october/aabaththu.htm

    கிறிஸ்தவத்திலுள்ள அழுக்குகளை மற்றவர் சுட்டிக்காட்டும் முன்பதாகவே அதனைத் திருத்திக் கொள்ள அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்..!////////

    அத படிச்சி பாத்தேன் கிளாடி,

    அப்படி ஒன்னும் சீர்திருத்தம் தெரியலையே. அதுல மதச் சொத்தை காப்பாற்றிக்கொள்ளும் மும்மரம் தான் இருக்கே ஒழிய கடவுள் பற்றிய கேள்விகளும் சீர்திருத்தங்களும் ஒன்னும் இல்லை.

    ஆவியை நம்பச்சொல்லி ஒரு ப்ரெயின் வாஷ் சைட். அவ்வளவுதான்

  67. //கிறிஸ்தவத்திலுள்ள அழுக்குகளை மற்றவர் சுட்டிக்காட்டும் முன்பதாகவே அதனைத் திருத்திக் கொள்ள அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்..!//
    What about conversions in the name of service, fight for the downtrodden, fight against blind beliefs…….??!!!

  68. Let us not argue in the name of temple/Church or property. These kind of discussions are seems to be impenetrable.

    We are at today, thinks are changing enormously, we are in the position to look at the world and keep upgrade our thoughts and themes to venture into globalize.

    We are a great nation indeed lack of attitude. Look at the world and take part in it for shining India. Talking of ithihasangal and kambaramayanam are not making us a “proud Hindu Nation” but changing the attitude and cultivate through it, is wise.

    I feel personally, this type of debate is not even impressed by our children’s. I would like to ask one Question to the author of the article is that how many of the Indian population would appreciate your article in this regard. Does u think?

  69. Have you done anything to make ours a proud nation, Mr. Ravi other than criticising our beliefs and customs? Or do you have any plan to make ours so?
    //I would like to ask one Question to the author of the article is that how many of the Indian population would appreciate your article in this regard. Does u think?//
    Even in this thread you can check the number of responses to yours and get the ratio.
    கோமல் ஸ்வாமிநாதன் அவர்களின் அசோகவனம் நாடகத்தில் ஒரு வசனம் வரும் “பசிச்சவனுக்கு அழுகின வாழப்பழம் குடுத்தாக்கூட சாப்பிடுவான். அதுக்காக அவனுக்கு அழுகின வாழப்பழம்தான் பிடிக்கும்னு சொல்ல முடியுமா?”

  70. Yes, I have a dream and longing for our India to shine upon and willing to sacrifice any think to my worthiness but not along with a dislocate mind and souls.

    See Mr. armchaircritic I am not here to criticizing our beliefs but curious to put a note on ‘nagariham adaintha nam ippadi elluthuvathinal’ does it help us to inclination of India and our culture.

    We forgot or adamant to do the essence to our society which is now being carried out by in the name of adaptation.

    -Simple as that-

  71. நண்பர் V Ravi அவர்கள்,
    // இந்தியா முன்னேறுவதற்கு இதுபோன்ற விவாதங்கள் தடையாக இருக்கும் // என்பது போலவும் // “ஆகிற வேலய பாக்கலாமே” // என்பது போலவும் கூற, நண்பர் armchaircritic,
    // அவர்களோ நம்முடைய நம்பிக்கைகளை குறைகூறுவதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும் // என்று கேட்கிறார்;

    நண்பர் V Ravi அவர்களோ விவேகானந்தரைப் போல,
    // Yes, I have a dream and longing for our India to shine upon and willing to sacrifice any think to my worthiness but not along with a dislocate mind and souls. // மிக இதமாகக் கூறுகிறார்;

    ஆம்,விவேகானந்தரும்கூட இப்படியே நமது நம்பிக்கைகளையும் மறுக்காமல் அதை முழுவதும் ஏற்காமல் சீர்திருத்த முயன்றார்;

    மாத்திரமல்ல, நம்முடைய புறவாழ்வின் மாறுதல்களையும் நவீனத்துடனான போட்டிகளையும் முன்னேற்றங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒன்றை மறந்துவிட்டோம், நமது அக வாழ்வின் தேவைகளை ஆன்ம தேடலின் மூலமும் அதன் மூலம் பெறக்கூடிய பிரம்ம ஞானத்தின் மூலம் மட்டுமே நிறைவு செய்யமுடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

  72. நம் இந்திய தேசத்தை கெடுக்கும் விஷ காளான்கள் தீவிரவாதிஹல் ஹிந்து மதத்தில் முஸ்லிம் மதத்தில் இருக்கிறார்கள் .இந்த மாதரியான ரத்த காடேரிஹல் கிறிஸ்துவத்தில் இருக்கிறார்களா.எல்லா கிறிஸ்துவனும் யோக்கியன் அல்ல .இங்கேயும் போலி கிறிஸ்துவன் உள்ளான்.உண்மையான கிறிஸ்தவன் அன்பைத்தான் விதைக்கிறான் , இரத்தம் சிந்துவான் வாங்கமாட்டான் .ஆனால் தீவிரவாதிகள் கிடையாது

  73. நண்பனே
    ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் .. முதல்ல நம்ம நாட்டை பற்றி ,நாட்டின் வளர்சியைபற்றி கவலை படுங்க .எந்த மதமும் எவனுக்கும் எப்போதும் சோறு போடாது ,ஒரு வேளை பணத்திற்காக சென்றால்கூட எத்தனை நாளுக்குதான் அவர்களும் பணம் கொடுப்பார்கள் அல்லது கொடுக்கத்தான் முடியும் .எந்த மதத்திற்கும் மாறுவது அவர்கள் விருப்பம் .யாரையும் கட்டாய படுத்த முடியாது. ஒரு ஏழை மனிதனுக்கு வாழ வழி கிடைகிறது என்று சொன்னால் நல்லதுதானே சந்தோஷ படுங்கள் பொறாமை படாதிர்கள் அல்லது நீங்கள் உதவி செயுங்கள் .தலித் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பிரிக்கும் நீங்கள் அவர்களுக்கு வேத மந்திரங்கள் சொல்லி கொடுத்து அவர்களயும் பூஜாரியாக்குங்கள் பார்ப்போம்.ஏன் மந்திரம் சொன்னால் கடவுள் கேட்கமாட்டாரா கேட்பார்தானே .முதலில் நம்மை திருத்துவோம் பின்பு மற்றவர்களை பற்றி பேசுவோம்

  74. ‘கிறிஸ்தவர்களில் தீவிர வாதிகள் இல்லை’
    ஆஹா, நாகா தீவிரவாதிகள் யார்?
    இன்னொன்று,சர்ச் இந்த விஷயத்தில் குள்ள நரி
    எதிலும் நேரடியாகத் தலையிடாமல்
    பணத்தை விட்டெறிந்து மாவோயிஸ்டுகள் , நாகா தீவிரவாதிகள் முதலிய தீவிரவாதிகள் மூலமாகவும்,அரசியல் பயங்கர வாதிகளான திராவிடக் கட்சிகள் போன்றவை மூலமாகவும், ஊடக பயங்கரவாதிகள் மூலமாகவும், ஹிந்து சமுகத்தையும் ,ஹிந்துக்களையும் அழிக்கின்றனர்.
    ஆகவே இந்த காக்கா , நரி கதையெல்லாம் வேறு இடத்தில் சொல்லுங்கள் .

  75. மிக மிக நுண்ணிய அறிவாற்றலுடன் உண்மைகளையும் கலந்து கொடுத்துள்ள கட்டுரை
    கிறிஸ்தவம் என்பது வெள்ளைக்கார கிறிஸ்தவ நாடுகள் ஹிந்துக்களுக்கு எதிராக உபயோகிக்கும் நஞ்சு கலந்த சாக்லேட்
    அதை நாம் கையால் கூட தொடக் கூடாது
    அவர்களுக்கு நம்மை கிறிஸ்தவர்களாக ஆக்கி மேன்மை அளிக்க வேண்டும் என்றோ, முக்தி கொடுக்க வேண்டும் என்றோ எண்ணம் இல்லை
    கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் கலாச்சார வேர்களை அழித்து விட்டு , நம்மை கிறிஸ்தவ நாடுகளின் கார்பன் காபிகளாக ஆக்கிவிட்டு அவர்களுக்கு அடிமையாகஆக்க வேண்டும்
    கிறிஸ்தவர் தொகை பெருகினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுத்தி அப்போது கிறிஸ்தவ நாடுகள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டை உடைக்கலாம் .
    இதுதான் அவர்களது குறிக்கோள்

  76. “ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.”
    . இப்போது இந்தபழியையும் நம்மீதே போடுகிறார்கள்.
    கூகுள் இட்டுபார்த்தல் பகீர் என்கிறது.
    ஏகப்பட்ட இணைப்புகள். புதிய திரைகதை வசனம் -நம்ப நிறைய மக்கள். ” அநியாயம் நம்ப ஆட்களே இப்படி” என்று.
    நண்பர்கள் யாராவது இப்பொய்யை உடைக்க ஆங்கிலத்தில் உள்ள இணைப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    ஒரு பாவமும் அறியாத ஹிந்து பழங்குடிகளை கொன்று அந்த பழியையும் அவர்கள் மீதே போடுகிறார்கள். [ ஹிந்து மூட நம்பிக்கையாம். . இந்த கண்றாவி பழக்கம் அவர்கள் கண்டுபிடிபல்லவா? இதில் பல நூற்றாண்டு அனுபவம் வேறே]
    திரு அரவிந்தன் இது பற்றி ஏதேனும் உடையும் இந்தியாவில் எழுதியுள்ளாரா?
    வேல்முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *