பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்

பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்
— பி.ராமன் [கூடுதல் செயலாளர் (ஓய்வு)]

திருமதி சோனியா அவர்களுக்கு,

sonia_gandhiபாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்களைத் தவிர வேறு யாரும் பலுசிஸ்தானியர்களைப் போல இந்தியாவின் பக்கம் உறுதியாகவும் விசுவாசமாகவும் துணிவாகவும் பாசமாகவும் இருந்தது கிடையாது. பாகிஸ்தானில் உள்ள எல்லா மக்களைவிடவும் பலுசிஸ்தானியர்கள் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ், பி.வி. நரசிம்ம ராவ் போன்றவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். 2004க்கு முற்பட்ட காங்கிரஸார், பலுசிஸ்தானியர்களை மிகவும் நேசித்தார்கள்.

1947ஆம் ஆண்டு இந்தியா பிளவுபடுத்தப்பட்டது. பாகிஸ்தான் தனிநாடானது. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவும் சுதந்திரத்தின் போதும் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பும் கலவரம் வெடித்தது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களும் விரட்டியடிக்கப்பட்டார்கள். சிந்துவிலிருந்தும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலிருந்தும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அரணாக இருந்தார். பாகிஸ்தானிலேயே முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கிய ஒரே பகுதி பலுசிஸ்தான் மட்டும்தான்.

1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இதற்கு எதிரொலி கேட்டது. ஹிந்து ஆலயங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன. சிந்துவிலும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலும்கூட ஹிந்துக்களின் ஆலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் நடைபெற்ற அளவிற்கு இந்த மாநிலங்களில் உக்கிரமான நிகழ்வுகள் நடைபெறவில்லை. பலுசிஸ்தானில் மட்டும் ஹிந்துக்கோயில் எதுவும் இடிக்கப்படவில்லை. பலுசிஸ்தான் தலைவர்கள் காயிர் பக்ஸ் மாரி, அதுல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்றோர் ஹிந்துக்களின் ஆலயங்களுக்குப் பாதுகாவலர்களாக விளங்கினார்கள். இதனால்தான் பலுசிஸ்தானில் குடியேறிய பாகிஸ்தான் பஞ்சாபைச் சேர்ந்த முஸ்லிம்களால் கூட ஹிந்துக்களின் ஆலயங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

பலுசிஸ்தானில் ஹிந்துக்களின் ஜனத்தொகை சமீபகாலமாகக் குறைந்துள்ளது. ராணுவத்திலிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுதான் இதற்கு காரணமாகும். சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் குவாடர் துறைமுகம் ஹிந்துக்களுக்குப் பாதகமானது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ ஹிந்துக்களை எல்லாம் பகுப்பாய்வு நிறுவனமான ‘ரா’வின் ஏஜெண்டுகள் என்று கருதி வருகிறது. இதனால்தான் ஹிந்துக்கள் ஓரங்கப்பட்டுவருகிறார்கள்.

இவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையிலேயும் பலுசிஸ்தானை விட்டு வெளியேற விரும்பாத ஹிந்துக்களை பலுசிஸ்தான் தலைவர்கள் பரிவுடன் பாதுகாத்து வருகிறார்கள். முஷாரப் அரசு 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்த ராணுவ நடவடிக்கையின் போது நவாப் அக்பர்கான் புக்தி கொல்லப்பட்டார். அவரோடு அவருக்கு உறுதுணையாக இருந்த பலுசிஸ்தான் ஹிந்துக்களும் கொல்லப்பட்டார்கள்.

1980களின் தொடக்கத்தில் இந்திரா இந்தியப் பிரதமராக இருந்தார். indira-gandhiஅப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ‘உங்களது மகளின் திருமணத்தை பலுசிஸ்தானிலேயே நடத்திக்கொள்ளுங்கள்’ என்று பலுசிஸ்தான் தலைவரிடம் இந்திரா தெரிவித்துவிட்டார். பலுசிஸ்தான் தலைவரை இந்திய ஏஜெண்ட் என்று ஐ. எஸ். ஐ முத்திரை குத்தி ஆயுள் காலம் முழுவதும் சித்திரவதை செய்யும் என்று இந்திரா கவலைப்பட்டதுதான் அவரது மனமாற்றத்திற்குக் காரணமாகும்.

1990களின் தொடக்கத்தில் நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தார். முதலாவது பலுசிஸ்தான் சுதந்திரப் போரின் போது தீவிரமாகப் போராடிய ஒரு முக்கியத் தலைவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு வரவிரும்பினார். அதுமட்டுமல்லாமல், இந்திய மண்ணிலேயே அவர் மரணம் அடையவும் விரும்பினார். இந்தியாவிற்கு காட்டும் மரியாதையாகவும் நன்றியாகவும் அதை அவர் கருதினார். அவரது விருப்பத்திற்கு இந்தியாவும் இசைவு தெரிவித்தது. அவர் இந்தியாவிலேயே மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது சடலம் அடக்கத்திற்காக பலுசிஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மதச்சார்பின்மை பலுசிஸ்தானியர்களின் ரத்தத்திலேயே ஊறியுள்ளது. இளைஞர்களாக இருந்தாலும் முதியவர்களாக இருந்தாலும் கிராமவாசிகளாக இருந்தாலும் நகரவாசிகளாக இருந்தாலும் நன்கு படித்த அறிஞர்களாக இருந்தாலும் படிப்பறிவற்ற பாமரர்களாக இருந்தாலும் அவர்களிடம் காணப்படுகின்ற பொதுப் பண்பாக மதச்சார்பின்மை உள்ளது. ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக உள்ளனர். சிலர் அடிப்படைவாதக் கட்சிகளில் சேர்ந்துள்ளனர்.

ஜிகாதி பயங்கரவாத அமைப்பில் பலுசிஸ்தானியர் அங்கம் வகிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் ஜிகாதி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளவர்களின் பட்டியலில் பலுசிஸ்தானியர் இடம் பெற்றுள்ளனர் என்று யாரேனும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல் கொய்தாவிற்காகவோ அல்லது தாலிபானுக்காவோ பலுசிஸ்தானியர்கள் பரிவு காட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எங்காவது நடைபெற்ற பயங்கரவாதச் செயலில் தொடர்புடையவர்கள் என்று செய்தி வெளிவந்திருக்கிறதா? பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படையில் பலுசிஸ்தானியர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று எப்போதாவது செய்தி வெளிவந்திருக்கிறதா? இதற்கெல்லாம் இல்லை என்றுதான் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில விலக்குகள் உள்ளன. அதற்கும் ஒரு காரணம் உள்ளது.

அல்-கொய்தா இயக்கத்தில் எமினி-பலுசிஸ்தானியர்கள் உள்ளனர். அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர் என்பது உண்மைதான். 2002ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் பிரபல அமெரிக்க செய்தியாளர் டேனியல் பியர்ல் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதிலும் எமினி-பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். எமினி-பலுசிஸ்தானியர்கள் என்பவர்கள் கலப்பின மக்களாவார்கள். பலுசிஸ்தானைச் சேர்ந்த ஆண்களுக்கும் எமினியைச் சேர்ந்த பெண்களுக்கும் பிறந்தவர்கள்தான் எமினி-பலுசிஸ்தானியர்கள் ஆவார்கள். பொதுவாகக் கலப்பற்ற பலுசிஸ்தானியர்கள் ஜிகாதி பயங்கரவாதத்திலிருந்து விலகியே இருந்து வருகிறார்கள்.

பலுசிஸ்தானியர்கள் பல்வேறு இடையூறுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இடையே தொடர்ந்து தொய்வின்றி உறுதியாக சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். வங்காள தேசம் உதயமானதை அடுத்து 1970களின் நடுப்பகுதியில் பலுசிஸ்தானியர்கள் முதலாவது சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. வங்காள தேசத்தைப் போல நாமும் சுதந்திரம் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்களது போராட்டத்தை பலுசிஸ்தானியர்கள் தீவிரப்படுத்தினார்கள். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த ஜுல்•பிகர் அலி புட்டோ விமானப் படையைப் பயன்படுத்தி பலுசிஸ்தானியர்களின் சுதந்திரப் போராட்டத்தை மிகக் கடுமையாக நசுக்கினார்.

தங்களுக்கு உதவி செய்யுமாறு இந்தியாவுக்கு பலுசிஸ்தானியர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். பலுசிஸ்தானியர்கள் மீது இந்திராவுக்கு மிகுந்த அபிமானம் இருந்துவந்த போதிலும் அவர்களது கோரிக்கைக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர்களது கோரிக்கையை ஆதரிப்பது சரியானதாக இருக்காது என்று இந்திரா நினைத்ததே இதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் ஈரான் மன்னரைப் பற்றியும் இப்பிரச்சினையில் நினைத்துப் பார்க்கவேண்டியிருந்தது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பலுசிஸ்தானியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு உதவினால் அது ஈரான் மன்னர் ஷாவுக்குப் பாதகமாகிவிடும் என்பதும் இந்திரா ஆதரவுக் கரம் நீ¢ட்டாததற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

பஞ்சாபியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானியர்களை மிகக் கடுமையாக ஒடுக்கியது. 2004-ஆம் ஆண்டுவரை இதுதான் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் பலுசிஸ்தான் மக்களின் சுதந்திரக் கனலை முற்றிலுமாக சாம்பலாக்கிவிட முடியவில்லை. அவர்களது சுதந்திர வேட்கை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆவது சுதந்திரப்போர் ஆரம்பமானது. இதை ஒடுக்க முஷாரப் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது ஆட்சியில் உள்ள ஆசிப் அலி சர்தாரியும் பலுசிஸ்தானியர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்க அடுக்கடுக்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முஷாரப் அரசு நவாப் அக்பர்கான் புக்தியை கொன்றுவிட்ட பிறகும் கூட அவரது வழித்தடத்தில் இளம் தலைவர்கள் பலர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்ட பிறகும் புதியவர்கள் முன்னின்று சுதந்திரப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பலுசிஸ்தான் 2 ஆவது சுதந்திரப் போர் ஆரம்பமானபோது ஒரு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன். ”பலுசிஸ்தானின் 2ஆவது சுதந்திரப் போர் இந்தியாவிற்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா யார் பக்கம் சாயவேண்டும் என்று முடிவு எடுத்தாக வேண்டும். பிரிட்டிஷாருக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம் நடத்தியபோது பலுசிஸ்தானியர்கள் மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று அவர் காட்டிய வழியில் செயல்பட்டார்கள்.

”இந்தியப் பிரிவினையை பலுசிஸ்தானியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாகிஸ்தான் உருவானதை அவர்கள் வரவேற்கவேயில்லை. இந்தியாவில் இருந்து வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் அடிப்படையில் பலுசிஸ்தானையும் தனி நாடாக ஆக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். பலுசிஸ்தானியர்கள் மகாத்மா காந்தியின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள்.

balochistan”பலுசிஸ்தானியர்கள் முதலாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்தியபோது நாம் அரசியல் காரணங்களுக்காக அவர்களை ஆதரிக்க முன்வரவில்லை. அதே அரசியல் காரணங்கள்தான் இப்போதும் நமது கரங்களைக் கட்டிப்போட்டுள்ளன. நாம் செயலற்றவர்களாக இருக்கிறோம். இது துன்பம் தருவதாக இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக இருந்தபோது கூட பாகிஸ்தான் ராணுவத்தால் பலுசிஸ்தான் பிரஜைகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்படுவதை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் தயக்கம் காட்டாமல் இருக்கவேண்டும். பலுசிஸ்தானியர்களுக்கு நாம் நமது தார்மீக ஆதரவைத் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். பாரதப் பிரிவினை முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடவில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டமும் பாரத பிரிவினையோடு தொடர்புடைய ஒரு தொடர் நிகழ்வுதான்”.

பலுசிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து டாக்டர் மன்மோகன் சிங் அரசு அக்கறை காட்டத் தொடங்கியவுடன் எனக்கு மன நிறைவு ஏற்படத்தொடங்கியது. ஆனால் மன்மோகன்சிங் அரசு திடீரென பல்டி அடித்துவிட்டது. அது மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் ஈவிரக்கமில்லாமல் ஒடுக்கி வருவதுடன் பலுசிஸ்தானியர்களையும் இந்தியர்களையும் சம்பந்தப்படுத்தி அது புனைகதைகளையும் பரப்பி வருகிறது. பலுசிஸ்தான் போராட்டத்தை இந்தியர்கள் தூண்டிவிடுகிறார்கள் என்பதாக பாகிஸ்தான் பொய்யுரைப் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் இந்தப் பிரசாரம் இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல.

தொடக்க நிலையில் பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களை சமூக விரோதிகளாக பாகிஸ்தான் உளவுப் பிரிவு சித்தரித்தது. ஆனால் அவர்களைப் பாகிஸ்தான் உளவுப் பிரிவால் ஒடுக்க முடியுவில்லை. இதையடுத்து பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் உளவு அமைப்பு முத்திரை குத்தியது. அவர்களும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்களைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள் என்று சேற்றை வாரி இறைத்தது. அவர்களுக்கு இந்தியா பக்கபலமாக இருந்துவருகிறது என்று பழி சுமத்தியது. இது அடிப்படையற்ற அபாண்டமாகும்.

பாகிஸ்தான் தனது ராணுவத்தை பலுசிஸ்தானியர்களுக்குbraman எதிராகத் துஷ்பிரயோகம் செய்து வருகிறது. இதை நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். அல்-கொய்தாவையும் தாலிபானையும் ஒழிப்பதற்காக அமெரிக்காவிடமிருந்து பெற்ற நவீன ஆயுதங்ளையும் தளவாடங்களையும் பலுசிஸ்தானியர்களை ஒழிப்பதற்காகப் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திவருகிறது. ஆனால் இந்த அடக்குமுறைகளையெல்லாம் மீறி துணிவுமிக்க பலுசிஸ்தானியர்கள் தொய்வின்றி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திபெத்தை சீனா தன் வசப்படுத்திக்கொண்டது. தலாய்லாமாவின் ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் என்று சீனா முத்திரை குத்தியுள்ளது. அவர்கள் அல்-கொய்தாவினருக்குச் சமமானவர்கள்தான் என்று பொய்ப் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தலாய்லாமாவின் ஆதரவாளர்களைப் பற்றி எவ்வாறு சீனா அவதூறு பரப்பிவருகிறதோ அதைப்போல, சுதந்திரற்காகப் போராடிவரும் பலுசிஸ்தானியர்களைப் பற்றி பாகிஸ்தான் அவதூறு பரப்பிவருகிறது.

Mideast Egypt Non-Aligned Summitஇந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் பாகிஸ்தான் பிரமர் யூசூப் ரஜாகிலானியும் எகிப்தில் உள்ள ஷர்ம் எல்ஷேக் நகரில் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றபோது கலந்துரையாடினார்கள். இதன் அடிப்படையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் பற்றியும் அவதூறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூட்டறிக்கை நிந்திக்கிறது.

பலுசிஸ்தான் தலைவர்களும் மக்களும் இந்தியர்களோடு, குறிப்பாக காங்கிரஸாராடு இணக்கமான, வலுவான நல்லுறவுடன் இருந்து வருகிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவரான நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் தனது விவேகம் அற்ற செயலால் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் உங்கள் கட்சிக்கும் ஊறு விளைவித்துள்ளார். நீங்கள் இதை சரிப்படுத்த முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். மன்மோகன் சிங்கால் விளைந்த ரணத்திற்கு மருந்து தடவ நீங்கள் முன்வருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

இத்துடன் என் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

தமிழில்: ஆர். பி. எம்.

நன்றி: விஜயபாரதம்.

9 Replies to “பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்”

  1. Good article. Echos the sentiments of patriotic and self respecting Indians. Baluchistani Muslims represent a face of Islam that is liberal and offers hope to humanity. India should side with them.

  2. சிறப்பான பதிவு. பலுசிஸ்தான் பற்றி நமக்கு அதிகம் தெரியதது தான்!

    கார்கில் போரின் போது இந்திய மந்திரியொருவர், பலுசிஸ்தான் இன்னொரு பங்களாதேஷ் ஆகி விடும் ஜாக்கிரதை என்று கூறியது மட்டும் நினைவிருக்கிறது.

  3. While Pakistan is indulging in all sorts of hindrance, economical, political and social for Hindustan to suffer, taking advantage of sympathetic elements on the soil of Hindustan, Hindustan is wasting her time in the efforts to maintain good relations with Pakistan. In Rajneethi, if you do NOT counteract timely, you will be the loser. Whevever there are communal clashes in Hindustan, Pakistan and Bangladesh do NOT hesitate to shout from the roof top drwaing the attention of the international community. But Hindus in those two countries are subjected to all kinds of insults and injuries and our central govt. maintains a stoic silence in order to nurture neighbourly relations!

    It is hightime Hindustan raised the Baluch suppression by Pak at international fora, as this has never come to the knowledge of the global community. We must lobby to persuade Amnesty International, UN etc., to send their reps to Baluchistan and make it known that Pak is ruthlesly supressing Baluch rights under cover of war on terror.

    MALARMANNAN

  4. ஈழத்தமிழரின் சுதந்திரத்தை ஒடுக்கிய
    காங்கிரஸ் அரசுக்கு என்னதகுதி இருக்
    கிறது பாலுஸ்தானை ஆதரிக்க என்பது
    புரியாத புதிர்.

  5. ”ஈழத் தமிழ்ரின் சுதந்திரத்தை ஒடுக்கிய காங்கிரஸ் அரசு” என்று எந்த ஆதாரத்தில் தமிழ் நேசன் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஈழத் தமிழர் வ்தைபடும்போது இந்திய அரசு ஒன்றும் செய்யவியலாது நடுங்கிச் செத்துக்கொண்டிருந்தது. இப்போதும் அந்த நடுக்கம் அடங்கவில்லை. இவர்களை நம்பிய எந்த மக்களை இந்தியாவோ காங்கிரஸோ காப்பாற்றியிருக்கிறது? இதன் சரித்திரத்திலேயே இல்லை அந்த மாதிரி சம்பவம் எதுவும். கபார் கான் சொல்லவில்லையா? “உங்களை நம்பிய எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீர்கள்” என்று. 1947 லிருந்து சாகும் வரை கபார் கானை பாகிஸ்தான் அரசு தேசத்துரோகி என்று சிறையில் தான் வைத்திருந்தது.

  6. பலூசிஸ்தானில் ஒரு முக்கிய சக்தி பீடம் ஹிங்ளஜ் என்ற ஊரில் உள்ளது. இப்பொழுதும் கூட வருடாவருடம் அங்கு ஹிந்து பண்டிகைகள் நடக்கின்றன, பாகிஸ்தானிலிருந்து ஹிந்து யாத்திரீகர்கள் அங்கு செல்கின்றனர். ஹிங்ளஜ் , 52 சக்தி பீடங்களில் ஒன்றாகும்

    https://en.wikipedia.org/wiki/Hinglaj

  7. During the times of Smt Indira Gandhi, Hindustan did take suitable steps to help the cause of Elam Tamils. Sri Rajiv tried to continue. It was non co operation and absence of unity among the forces working for Eleam in Sri Lanka that resulted in the gradual withdrawal of support to the cause of Elam. Had Elam Tamil groups jointly consented to try the Thimpu solution, the matter would not have gone out of hands. Hindustan would have questioned Sri Lanka had it not followed Thimpu resolution with sincerity. Hindustan had moral right and authority to question Sri Lanka as the mediator between Sri Lanka and Elam Tamil groups. But LTTE spoiled the situation in self interest.

    It is true the present Sonia Gongress govt headed by puppet Man Mohan with Sonia acting behind the screen has brought down Hndustan’s repute as the regional leader in this part of teh globe. It has made Hindustan the most weakest nation of all in the world.

    MALARMANNAN

  8. please tell me about the caste in tamilnadu “Sozhia chetty” and also what are their occupation and history? Please provide in tamilfont.

    2. who is the best archeror warrior in mahabharatha?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *