பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸீ, ஜுலை 12, 2009.

நான் முதலை மாதிரி நீந்தப் போறேன்” என்று ஊர்வதுபோல் பாவனை செய்தாள், ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கலையரங்கத்தில் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுமி லக்ஷ்யா.

நான் குரங்கு மாதிரியே மரமேறுவேனே” என்று துள்ளிக் குதித்தான் ரமேஷ்.

இது மாதிரி நண்டு, சிண்டெல்லாம் ஆர்ப்பரித்து மெய்மறக்க என்ன காரணமாக இருக்கும்? புதிதாக வந்திருக்கும் 3-D படமா என்று யோசிக்கிறீர்களா, அதுதான் இல்லை. வயது வித்தியாசமில்லாமல் பார்வையாளர் அனைவரின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டது, பவித்ரா ஸ்ரீனிவாசனின் பரதநாட்டியம்தான்!!.

ஜூலை 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னார்வbalaji-temple-nj நிறுவனமான IACRF (Indo-American Cultural & Religious Foundation, Inc., ) பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, பிரிட்ஜ் வாட்டர், பாலாஜி கோயில் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. ஞாயிறு அன்று மலர்ந்த திங்களாக கலையரங்கத்தையே ஒளிரவைத்தார் பவித்ரா ஸ்ரீனிவாசன். பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்ற நீதிநெறிக் கதைகளை, நிரம்பி வழிந்த அரங்கத்தில் பார்வையாளார் கண்முன்னே கொண்டுவந்தார் பவித்ரா.

பூஜைமுதலில் பூஜைகளுடனும், பின் பூஜைக்கான அத்தியாவசியங்கள், விளக்கங்களுடனும், மந்திர உபாசனைகளுடனும், நம் கலை, கலாச்சாரங்களை மிகச்சரியாக அனுஷ்டித்துத் துவங்கியது பஞ்சதந்திரக் கதைகள்.

துவங்கியது தந்திரம் மட்டுமல்ல!. மந்திரமும்தான்!!. காக்கைகரையும் காக்கை நடப்பதையும், மயில் தோகை விரித்தாடுவதையும், முதலை பக்கவாட்டில் நகர்ந்து ஊர்வதையும், தத்ரூபமாக பவித்ரா அபிநயம் பிடித்துக் காட்டி எல்லாப் பிராணிகளையும் மேடைக்குக் கொண்டுவந்து மந்திர ஜாலமே நடத்தினார். அழகு, அசைவு, அபிநயம் அனைத்திலும் மெய்மறந்த பார்வையாளர்கள் ‘awesome…. awesome…’ என நிகழ்ச்சிக்கு இடையிலேயே பலமுறை பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் தொடர்ந்த கரகோஷம் நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றியது.

கவலையில் தேவதத்தன்சின்மயா கேந்திரத்தின் மும்மாநிலத் தலைவர் வணக்கத்துக்குரியவரும், பக்தகோடிகளின் பெருமரியாதைக்கும் பேரன்புக்கும் பாத்திரமானவருமான ஸ்வாமி சாந்தானந்தர், நிகழ்ச்சியின் முதன்மைப் பார்வையாளராகக் கலந்துகொண்டு கௌரவித்தார். அவர் பேசுகையில், “பொதுவாக, நான் பக்தர்களுக்காக தாராளமாகவே பேசுவேன். ஆனால் பவித்ராவின் நடனம் என்னை விமர்சகனாக இல்லாமல் ரசிகனாக்கி வார்த்தையற்றுப் போகச் செய்துவிட்டது” என்று சொல்லி நெகிழவைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே, இதுவரை பஞ்சந்திரக் கதைகளை யாரும் நடனத்தில் கொண்டுவந்ததில்லை எனவே கூறினர்.

பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம்pavithra-srinivasan பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கருவான ஒவ்வொரு கதையும் நம் கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும் கதையாக மட்டுமின்றி, பிஞ்சு மனங்களில் விதைப்பவைகளாக, கதையை ஒட்டிய நீதியைப் பாடம் புகட்டுவையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சற்றும் எதிர்பாராதது, 3-D படங்கள் டிஜிடல் ஒலித்துல்லியத்துடன் கொடுக்கும் அனுபவத்தைப் பழகிய அல்ட்ரா மாடர்ன் குழந்தைகளிடம் ஒரு ‘கர்நாடக’ பரதநாட்டிய நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாக அமைந்ததுதான்.

தேவதத்தன் கனவு

சாதனை என்பது கைதட்டல்களுடன் மறக்க வேண்டிய விஷயமல்ல. சாதனையின் பின்புலம் போதனை (நல்ல குருவிடம் இருந்து கல்வி), வேதனை (கடும் பயிற்சி) என்பது எப்போதுமே உண்மையானது. பஞ்சதந்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களான காக்கை, முயல், முதலை, நரி என ஒவ்வொரு பாத்திரத்தையும் தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்த அபிநயத்தாலும், அசைவாலும் அந்தச் சாதனைக்குப் பின் அவர் செய்திருக்கக் கூடிய அவதானிப்பும், கடும் முயற்சியும் கொஞ்சநஞ்சமல்ல.

குதூகலித்த குழந்தைகளுக்கு பஞ்சதந்திரக்கதையின் நீதியே பாடம்; அழைத்து வந்த பெரியவர்களுக்கு? “முயற்சி திருவினையாக்கும்” என்பதுதான் பவித்ராவிடம் கற்ற பாடம்.

உதவி: யோகா. ராமநாதன்.

10 Replies to “பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்”

  1. நல்ல விமர்சனம், படங்கள். பரதநாட்டியத்தில் இது புது முயற்சியா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் பஞ்ச தந்திரக்கதைகள் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படவேண்டும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பரத நாட்டியம் கிறிஸ்தவர்களால் திருடப்படும் முன்னர் நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

    நல்ல கட்டுரை கார்கில் ஜெய்.

  2. பஞ்சதந்திரக் கதைகள் universal appeal கொண்டவை. அவற்றை பரதத்தின் மூலம் வழங்குவது அந்தப் பாரம்பரியக் கலை வடிவம் மீது இளம் தலைமுறையினருக்கு ஈர்ப்பையும் ஏற்படுத்தும். பவித்ராவுக்குப் பாரட்டுக்கள்.

  3. நல்ல கட்டுரைக்கு நன்றி ஜெய். ஜெயக்குமார் சொல்வது போல இது பரதத்தில் ஒரு புதிய முயற்சி என்றே நினைக்கிறேன். இந்தியாவிலேயே பஞ்ச தந்திரக் கதைகளை மறந்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஹாரி பாட்டர் போன்ற அன்னிய கதைகளிடம் தஞ்சம் அடைந்துள்ள போது, அமேரிக்காவில் நம் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் பஞ்ச தந்திரக் கதைகளின் மகத்துவத்தைப் புரிய வைத்த பவித்ரா ஸ்ரீனிவாசன் நம் நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவராகிறார். அவரின் இந்த முயற்சி இந்தியாவில் உள்ள பரதக் கலைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். இம்மாதிரியான முயற்ச்சிகள் வெற்றிகரமாக அமைந்து நம் கலாசார மறுமலர்ச்சிக்கு வித்திடட்டும். நம் குழந்தைகள் நல்வழியில் நீதிக் கதைகள் கற்று சத்துள்ள குழந்தைகளாக வளரட்டும். ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

  4. கேட்க சந்தோஷமாக இருக்கிறது. அங்கு உங்க ஊரில் குழந்தைகள் தமிழில் பேசுமா என்பதே சந்தேகமாக இருந்தது எனக்கு. ஆனால் குழந்தைகள், நம்மை எப்பவும் ஆச்சரியப் படுத்தும்.

    சம்பிரதாயமாக சொல்லிக்கொடுக்கப் பட்டதை, சொல்லிக்கொடுப்பவரும் தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதைத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். வழக்கம் மாறாத் வழக்கம். பரதமும், ஒரு மொழி தானே. கற்றுக்கொண்ட மொழியை வைத்துக் கொண்டு தானே ஏதும் சொல்லவிரும்புவதைச் சொல்லவேண்டும்.

    இதை முதலில் நான் கண்டது, கென்னெத் ரெக்ஸ்ராத் என்னும் அமெரிக்க கவிஞரின் ஜப்பானிய கவிதை மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டின் போது, வந்திருந்த ஒரு பரதம் ஆடும் அம்மையார், ரெக்ஸ்ராத்தை நோக்கி, “நீங்கள் உங்கள் கவிதை ஒன்றை மெதுவாக வரி வரியாக நிறுத்திப் படியுங்கள். நான் பரதத்தில் ஆடுகிறேன்: என்று சொல்லி அவர் சொல்லச் சொல்ல ஆடினார். அதற்குத் தேவையான முத்திரைகள், பாவங்கள் அவர் கற்ற பரதத்திலிருந்தே அவருக்குக் கிடைத்தது. இது நடந்தது 1967=ல், சாஹித்ய அகாடமி செயலர், ப்ரபாகர் மாச்வே வீட்டில். அன்று எனக்கு பரதத்தின் ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது.

    பவித்ரா ஸ்ரீனிவாசன் நிகழ்த்தியது பற்றி இப்போது படிக்கும் போது பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது. இது சாத்தியம். பரதம் ஆடுபவர் கதை சொல்பவரும், கதையை நிகழ்த்திக் காட்டுபவரும் தான்.

    மிக அபூர்வமாக வே இது நிகழ்கிறது. அனேகம் நாம் பார்க்கக் கிடைப்பது, படித்த பாடத்தையே திரும்பத் திரும்ப திருப்பிச் சொல்வதைத் தான். கற்ற மொழியை வைத்துக்கொண்டு தனதென புதிய சம்பாஷணைகளைக் யாரிடமும் கேட்பது அபூர்வமாகத் தான் இருக்கிறது.

    ஒரு நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது தான் படிக்கக் கிடைத்தது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

  5. Thank you for the tip about the 1967 incident. That made this page sweeter.

    The truth is children don’t speak Tamil very commonly in US. ( Though Telugu children learn and speak ). In New Jersey Chinmaya mission has granted high quality room, A/C, boards free of cost to both Telugu and Tamil classes. surprisingly, I clearly see that, Tamil group do not pray or enter the mission’s temple while Telugu people do. Tamil children’s parents never said a note of thanks to this Hindu organization.

    I took a few Tamil classes to the children there, however I stopped after hearing comment like ‘you have no children, not even married, why you are wasting his time here? you really look strange’…

  6. Dear Jay
    It is extremely painful to know from you the mindset of Tamils there. This is the first time I am coming across such an undesirable opinion about Tamils (Not the ‘Dravidian’ lot, but others) living there. Disgusting!

  7. முன்பு வலைப்பதிவுகளில் எழுதிவந்தாரே, அவரா இவர்?

  8. நியூ ஜெர்ஸீயில் தமிழ் பாடம் எடுத்த போது ‘உங்கள் குழந்தை இங்கில்லாத போது ஏன் இங்கு சுயலாபம் ஏதுமின்றி சொல்லிக் கொடுக்கிறீர்கள்? ஒரு மாதிரி தான் நீங்கள்’ என்றார் ஒரு குழந்தையின் தாயார். ஆது பரவாயில்லை, அவர் கருத்து. வருத்தம் என்னவென்றால், ‘நாங்கள் பணம் வசூலிப்பது இல்லை, பணம் ஆசிரியர்களுக்கு தருவதும் இல்லை, *நாஙகள்* எல்லாவற்றையுமே ஃப்ரீயாகத்தான் செய்கிறோம்’ என்றனர். யாருமே ஒரு வார்த்தை கூட ‘சின்மயா மிஷன் ஃப்ரீயாகத் தருகிறது’ என்று சொல்லவில்லை.

  9. Anbulla Jay avargalukku

    Pancha-thanthira kadhaiyai Theme-aaga, Bharatha-nahttiyam moolam siruvar-galukkum, periyavar-galukkum nattiyam aadi magizhvaithar Pavithra Srinivasan.

    Adhai miga azhagaaga yezhudhi-ulleergal neengal.

    Idhai paditthu thamizh matrum matha bharadha makkal magizhchi adaindhiruppargal yendu naan nambugiraen.

    French Fables (sirukadhaigal)
    Arabian Nights
    patri kadhagalai, niraya paergal kaelvi patri iruppaargal,
    aanal Pancha-thanthiram yenbathu Indiargallukku matrum thaan theriyum.

    Indha Bharatha-naatiyam moolam, America perumakkalum, India kadhaigal, matrum India naattiyangalai therindu kol-vaargal yendru nambugiraen.

    Nanri, vanakkam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *