இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

somnath_templeகிபி 1025 : ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினி எனும் நகரின் அரசன் முகமது வெறிகொண்டு இந்தியாவின் மீது படையெடுத்தான். குஜராத்தின் சோமநாதபுரம் ஆலயத்தைச் சூறையாடினான். மீண்டும் மீண்டும் சூறையாடினான். மீண்டும் மீண்டும் எழுந்த சோமநாதபுர கோவிலை மீண்டும் மீண்டு உடைத்தான். ஹிந்துக்களைக் கொன்று குவித்தான். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன.

கிபி 2009 இல் மீண்டும் வருகிறார் ஒரு முகமது கஜினியிலிருந்து.   அதே சோமநாதபுரம் இருக்கும் குஜராத்துக்கு. படையுடன் அல்ல. பணிவுடன். குஜராத் செழிப்புடன் முன்னேறிக்கொண்டிருக்க கஜினி இன்று கோரயுத்தங்களால் பாழடைந்து கிடக்கிறது. குஜராத் நகராட்சியின் நகர்ப்புற நிர்வாகிகளிடம் கஜினியை மீண்டும் புனர்நிர்மாணிக்க உதவி கேட்கிறார் முகமது இப்ராஹீம். ஆப்கானிஸ்தானின் நகர மேம்பாட்டு திட்ட அமைப்பின் இயக்குநர் சையது உஸ்மான் கூறுகிறார்:  “எங்களுக்கு ஒரு வேண்டுதல் மட்டுமே உண்டு. இந்திய மக்கள் எங்கள் நகரத்தை மீண்டும் எழுப்ப உதவி செய்ய வேண்டும்”.

சோமநாதபுர  ஆலயத்தின் கோபுரத்தில் பட்டொளி வீசி பறக்கிறது காவிக்கொடி.

நன்றி:   DNA India செய்தி

… Using Google images, a team of 15 architects and urban planners from the Urban Management Centre (UMC) is working on a reconstruction blueprint for Ghazni.  The Ghazni reconstruction plan is part of a project called Afghanistan Municipal Strengthening Programme.

A four-member delegation from Afghanistan, including the director of urban development department Saied Usman and the MoUD and director for administration and finance Mohammad Ibrahim, recently met officials of the UMC and the Ahmedabad Urban Development Authority (AUDA) to learn about urban planning and urban designing projects.

…. “We have a request,” Usman said. “We have come to invite the people of India to help us rebuild Afghanistan.” …

8 Replies to “இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது”

  1. நல்லது,
    இந்து தர்மம் சிலைகளையும் கட்டிடங்களையும் வைத்து அல்ல. மக்களையும் அவர் வாழும் தர்மங்களையும் கொண்டதே என்பது காலம் காலத்திற்கும் உறுதியாகிறது. சோமநாதர் ஆலையத்திலிருந்த சிவனுக்கு ஒரு சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதாவது தரையில் பிரதிஷ்டை செய்யாமல் சிவன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற அற்புதமான சிவனாக இருந்ததாகவும் கஜினி அந்த ஆற்புதமான சிவன் சிலை எந்த ஈர்ப்பு சக்தியினால் தொங்குகிறது என்று ஆராய்ந்து அந்தக் கற்கலை உடைத்த போது சிவன் சிலை தொப்பென்று கீழே விழ அதை எடுத்து தரையில் போட்டு உடைத்துவிட்டு சென்றதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

    அத்தகைய அழிவைசந்தித்த சோமநாதர் கோவில் இன்னும் பக்தி பரப்பி நிற்பது இந்துக்களின் அசைக்க முடியாத பக்தி மார்க்கமும் சிலைகளிலும் கட்டிடங்களிலும் கடவுள் இல்லை, பக்தி மனதிலும் வாழும் வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற பகுத்தறிவோடு வாழ்வதாலேயே ஆகும் என்பது தெளிவு

  2. இதில் தான் இருக்கிறது ஹிந்து தர்மத்தின் வெற்றி. அடுத்து பாகிஸ்தானும் நம்மிடம் கெஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. அறுவடை செய்ய அறைகூவல் விடுத்த அரைகுறைகளும் நம்மால் அறுவடை செய்யப்படும் நாளும் வெகு தொலைவில் இல்லை.

    நாரதர்
    rrkumar2808@gmail.com

  3. கஜினி என்பவன் வாளோடு வரவேண்டியதில்லை …எதோ எல்லோரும் ஒரு மதமதப்பில் இருப்பது தெரிகிறது.. இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவேன்

  4. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    ………………….

    ஆப்கனில், வரலாற்றுச் சின்னமான நெடிய புத்தரை, மமதயுடன் வெடிவைத்து உடைத்த திவீரவாதக் கூட்டம் இன்று பதுங்கு குழிக்குள் பயந்து வாழ்கிறது.

    வரலாறு பல பாடங்கள் புகட்டியும், படித்துக் கொள்ளாத வெறியர்கள் …..

    ஆரோக்கியசாமி

  5. வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்.. அராபிய முதலாளிகளிடம் செல்லாமல் இங்கு வந்ததன் பிண்ணனியை நாம் ஆராய வேண்டும்.

  6. நாம் பிறந்த இந்துமதம் நாம் வளர்ந்த நம் மதம் பல வரலாறுகளை கொண்ட நம் மதம் அழிய ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

  7. உலகின் தலை சிறந்த வாழ்வியல் தத்துவமான இந்து மதத்தை எந்த ஒரு அந்நிய சக்திகளாலும் அழித்துவிட முடியாது.

  8. பாரத மாதாவிற்கு ஜெய், உங்களது வலைதளத்தை தற்போதுதான் கண்டேன். மகிழ்ச்சி ஆனது மனம். நமது தேசத்தின் ஒற்றுமைக்கு மிகவும் தேவையான தேசிய நதிநீர் இணைப்பு பற்றிய கட்டுரை தமிழ் ஹிந்துவில் வெளிவர வேண்டும் என வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *