சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!

டிசம்பர் 24 மாலை ஐந்து மணிக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங்  பர்னாலா, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் முன்னிலை வகிக்க ஹிந்து ஆன்மீக-சேவைக் கண்காட்சி துவங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் 94 இந்து இயக்கங்கள் பங்கு பெரும் இந்த மாபெரும் கண்காட்சி ஐந்து நாட்களுக்கு (டிசம்பர் 24-28) நடை பெற்றது.

Available in 3 sizes, the ziverdo series is a practical choice for storing dry foods and canned items, or for storing ice. It also includes Jovellanos out of pocket cost for clomid full product information and all available product information at the point of use. It is the most effective weight loss drug for weight loss and for weight loss.

Cialis reçetesiz fiyatı ödeneceğine karşınca ve bütün zamanlarının konforu çok kısıtlandı. Generic medication is less expensive because manufacturers http://davepowers.com/event/hyde-park-prime-steakhouse/ of generic medication use cheaper, unrefined plant materials that are produced using more environmentally friendly methods than those used by the brand. It is also used to treat some sexually transmitted infections, including syphilis.

I have a doctor who will be prescribing this to me, in the near future, but i cannot find anyone to purchase this medicine for me, even though its cheap in other places. There are specific requirements of patients which are Tartu treated with various medicines. Many people think that the puffing hernia is a disease that only happens in older people, but the opposite is true.

th_banner_at_the_hindu_fair1

திருமலை திருப்பதி தேவஸ்தானம்,  ஸ்ரீராமகிருஷ்ண மடம்,  சின்மயா மிஷன், காஞ்சி  காமகோடி மடம்,  உடுப்பி பெஜாவர் மடம், சத்யா சாய் சேவா சமிதி, மாதா அமிர்தானந்தா மயி மடம்,  ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு, நாடார் மகாஜன சங்கம், வனவாசி சேவா கேந்திரம் போன்ற பிரபல இயக்கங்கள் முதல் குரோம்பேட்டையில் பல பேருக்கு (அனாதைகள்) ஈம கிரியைகள் செய்து வரும் ராகவன் என்பவர் நடத்தும் ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட் வரை பல சேவை அமைப்புக்கள் பங்கு பெறும் இந்தக் கண்காட்சியில் இம்முறை தமிழ்ஹிந்து .காம் தளமும் முதல்முறையாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

ஆர்வத்துடன் விசாரிக்கும் இளைஞர்
ஆர்வத்துடன் விசாரிக்கும் இளைஞர்

சென்னை விவேகானந்த கேந்திரத்தின் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் தமிழ்ஹிந்து.காம்  அரங்குக்கான பணிகளை ஒருங்கிணைத்து திறம்பட செய்தனர்.  விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகை தந்த பார்வையாளர்களை வரவேற்று, தமிழ்ஹிந்து.காம் தளம் பற்றிய அறிமுகத்தை அளித்தனர்.

நமது தளம் பற்றிய விவரங்கள் மற்றும் இந்து தர்மத்தின் சீரிய கூறுகள் ஆகியவற்றை  விளக்குமாறு பேனர்களை வடிவமைத்து  தமிழ்ஹிந்து.காம் அரங்கில்  அவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தோம்.  மேலும், தளம் பற்றிய அறிமுகம்  துண்டுப் பிரசுரமாக (pamphlet)  வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது.  இவற்றை வடிவமைத்தவர்  நமது வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான அரவிந்தன்  நீலகண்டன்!

பார்வையாளர்கள் பலர்  பேனர்களை ஆர்வத்துடன் படித்தனர். அண்மையில் நமது தளத்தில் வெளிவந்த ‘அவதார் : திரைப்பார்வை’ கட்டுரையும் துண்டுப் பிரசுரமாக வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது.  பலர் ஆர்வத்துடன் அங்கேயே அதைப் படிக்கத் தொடங்கி விட்டனர்!

நமது அரங்கில் இந்து தர்மம், கலாசாரம் தொடர்பான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டன. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தமிழ்ஹிந்து தளத்தில் தொடராக எழுதி, இப்போது புத்தகமாக வந்திருக்கும் “ஓடிப்போனானா பாரதி?”, வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் “தொடரும் பயணம்” ஆகியவையும் இதில் அடக்கம்.

அவதார் கட்டுரையை ஆர்வத்துடன் படிக்கும் சுவாமிஜி
அவதார் கட்டுரையைப் படிக்கும் பூஜ்ய சுவாமி அபிராமானந்தர்

இரண்டாவது நாள் விடுமுறையாதலால்  கண்காட்சியில் நல்ல கூட்டம். சுமார் 7000 பேர் வந்திருந்தனர். நம்முடைய அரங்கிற்கு சுமார் இரண்டாயிரம் பேர் வந்திருந்தனர்.  பலர் எல்லா அரங்குகளையும் சுற்றிப் பார்க்காமல் பாதியிலேயே திரும்பி விட்டனர். அரங்கத்தின் அமைப்பு அப்படி. நடுவில் ஒரு பெரிய இடைவெளி. அதன் பிறகு மற்ற ஸ்டால்கள். இந்த குறையை  நிவர்த்தி செய்ய மூன்றாவது நாள் முதல் ஒரு நபரை அந்த இடைவெளியில் ( கலை நிகழ்ச்சிகளுக்காக அமைக்கப் பட்ட அரங்கம்) நிறுத்தி வைத்து வருபவர்களிடம் சொல்லி மற்ற ஸ்டால்களை பார்க்க சொல்வதென ஏற்பாடு செய்யப் பட்டது. மூன்றாம் நாளும் வருகையாளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டாம்  நாள் அளவே இருந்தது.   எல்லா நாட்களும் பிரபலங்களும்,  பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை புரிந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ண மட துறவி பூஜ்ய சுவாமி அபிராமனந்தர் மற்றும் சக துறவியர்,  சின்மயா மிஷன் பூஜ்ய சுவாமி மித்ரானந்தா மற்றும் சின்மய யுவ கேந்திர இளைஞர்கள்,   இந்து இயக்கத் தலைவர்கள் ஆர்.பி.விஸ்.மணியன் மற்றும் வீரத்துறவி இராம. கோபாலன், அரசியல் தலைவர்கள் வெங்கையா நாயுடு, இல.கணேசன் மற்றும் ஷேக் தாவூத்,  தினமலர் அதிபர் கோபால்ஜி, எழுத்தாளர்கள் சுப்பு மற்றும் B.R. ஹரன், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாசிரம சகோதரர் ராமகிருஷ்ணன், திரைப்பட நடிகர் விவேக், திரைப்பட நடிகைகள் ரோகிணி மற்றும் சுகன்யா  உள்ளிட்ட பிரபலங்களும் வருகை புரிந்தவர்களில் அடங்குவர்.

நமது அரங்கிற்கு வருகை தந்தவர்களில் பலர் தமிழ்ஹிந்து.காம் தளம் பற்றி அறிய வந்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர். பலர் தொடர்புக்காகத் தங்கள் மின் அஞ்சல் முகவரிகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

படங்கள்:

நமது அரங்கில் பூஜ்ய சுவாமி மித்ரானந்தா – சின்மயா மிஷன்  & எழுத்தாளர் ”போகப் போகத் தெரியும்” சுப்பு –

th_stall_visit_celeb_0

நமது அரங்கிற்கு வருகை தரும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் & இந்து முன்னணி தலைவர் வீரத்துறவி இராம. கோபாலன்

th_stall_visit_celeb_1

நமது அரங்கில் வெங்கையா நாயுடு  (பா.ஜ.க அகில இந்திய செயலாளர்),  ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர்) & இல.கணேசன் (பா.ஜ.க தமிழ்நாடு தலைவர்)-

th_stall_visit_celeb_2

கண்காட்சியின் ஒரு பகுதியாக வேள்வி புரியும் வேத யுவதிகள் –

hindu_fair_girls_performing_homam

அகில இந்திய அளவில் இந்து இயக்கங்களின் ஒட்டுமொத்த  சேவைப் பங்களிப்பு குறித்த ஒரு விவரணப் பலகை –

hindu_seva_orgs_stats

மொத்தத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும்,  இணையத்துடன் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் கூட தமிழ்ஹிந்து தளத்தை அறிமுகப் படுத்துவதற்கு இந்தக் கண்காட்சி ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.

இக்கண்காட்சியை பற்றி செய்தி வெளியிட்ட பிரபல நாளிதழ்களும், தமிழ் இந்து டாட் காமின் அரங்கத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் நமது தளத்தை அறியும்படி செய்தன. வெளியான செய்திகளில் சில:

இந்து கண்காட்சியில் தமிழ் இந்து தளம்
தினமணி
இந்து கண்காட்சியில் தமிழ் இந்து தளம்
தினமணி

18 Replies to “சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!”

 1. இந்த தளத்தை தொடர்ந்து படித்து பல விஷயங்களை புதிதாக நான் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டைவிட்டு வெளியே இருந்தாலும் எங்கள் மனதில் தமிழகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. நமது கோவில்களும், பக்தியும், மரபும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உன்னத நோக்கில் தன்னலமில்லா தொண்டு செய்துவரும் தமிழ் இந்து டாட் காம் ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுக்கள்.

  உங்களது சேவை பற்றிய செய்தி இப்போது பல லட்சக்கணக்கான தமிழ் இந்துக்களுக்கு தெரிகிறது என்று தெரியவரும்போது மிகவும் மகிழ்சியாக இருக்கிறது.

  தமிழரின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்திடும் அந்நிய சக்திகளையும், அந்நிய துர்கடவுள்களையும் புறக்கணித்து தமிழர் தமது முன்னோர்கள் வழியில், இனிய நல்லறக் கடவுள்களை தொழுது மண்ணிலும், விண்ணிலும் புகழோடும் பெருமையோடும் பெரு வாழ்வு வாழவேண்டும்.

  கந்தன் துணையிருப்பான்!

 2. தமிழ் ஹிந்து டாட்காம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றதும் அதன்மூலம் இந்தத் தளத்தைப் பற்றிய அறிமுகத்தை பல்லாயிரம் பேருக்கு எடுத்துச் சென்றதும் மிக நல்ல விஷயங்கள். இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். நாம் நமது தர்மத்தைக் காக்க, நமது தர்மம் நம்மைக் காக்கும்.

 3. விவேகானந்த கேந்திரத்தின் முக்கிய விழாவான சமர்த்த பாரத பருவம் அதாவது விவேகானந்தர் கன்னியாகுமாரியில் தவமிருந்த நாட்களில் (டிச25-28) மிக சிறப்பாக நடந்த கண்காட்சியைப் பற்றிக்கேட்டு மகிழ்கிறேன்.

 4. இது ஒரு அருமையான முயற்சி. இந்த முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல நமது ஈஸ்வரனும் மகாவிஷ்ணுவும் துணை நிற்கட்டும் .
  ஹிந்து என்று சொல்லுவோம் ,தலை நிமர்து செல்லுவோம்
  ஜாதி பேரை சொல்லாதை ,ஹிந்து என்று சொல்லுங்கள் .

  வாழ்க சனாதன (ஹிந்து) தர்மம் .

 5. இந்தக் கண்காட்சியின் மூலம் பலர் அறியாதன அறிந்தனர். திரு. அரவிந்தன் நீலகண்டனை சந்திக்கும் வாய்ப்பும் திரு சுப்பு அவர்களோடு கைபேசியில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி யளித்தது. இதுபோன்ற கண்காட்சிகள் தற்போதைய நிலையில் அவசியம் தேவை.

 6. நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.இந்த கண்காட்சி பற்றிய விளம்பரம் நமது தளத்தில் ஏன் முன்கூட்டியே இடம்பெறவில்லை.

 7. இது போன்ற கண்காட்சியை தென் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி, ராமநாதபுர மாவட்டங்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய ஒன்று.

 8. அடடா! இப்படி ஒரு கண்காட்சி நடைபெறுவதே எனக்கு தெரியாதே!! தெரிந்திருந்தால் வந்திருப்பேன். அடுத்த முறை, இதை போன்ற நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துங்களேன்.

  அவதார் திரைப்படத்தை பற்றின விமரிசனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்மவர்கள் பார்க்க வேண்டிய படம் அது. ஆனால், திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் பார்வையில் எனக்கு வேறுபாடு உள்ளது.

  அந்த படத்தினை பற்றின என் பதிவு…

  http://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html

 9. A wonderful experience every one would have had during this fair.this is to be duplicated every year in different cities like bangalore, mumbai etc and also in rural areas so as to create an awareness about Hindu service organizations among public. Dr. S.Venugopalan, Tiruvallur. Tamil nadu.

 10. This program is very great i am really enjoy this function our suggestion is to conduct this function in many parts of the country then only people get the affection of the organisations. thank you for the organizers.

 11. இதுபோன்ற ஒரு கண்காட்சியை தென் தமிழகத்தில் குறிப்பாக, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கூடிய விரைவில் நடத்த முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 12. இது போன்ற கண்காட்சியை தென் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி, ராமநாதபுர மாவட்டங்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய ஒன்று
  ஐயா எனது வேண்டுகோளும் இதுவே
  சே சுந்தரராஜன்

 13. அடடா !இந்த கண்காட்சி நடந்தது எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் கண்ண்டிப்பாக வந்திரூப்பேன்

Leave a Reply

Your email address will not be published.