இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

(தொடர்ச்சி…)

இடதுசாரிகளின் எல்லையில்லா உலகம்

பிரச்சினைகளே இல்லாத இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கும் இடதுசாரிகள், இதைப்போன்ற விஷயங்களை விட்டு விடுவார்களா! சமுதாயம் ஒழுங்காக இருந்தாலும் புரட்சியை ஏற்படுத்தி பாரம்பரியச் சின்னங்களை அழித்து புதிய சமுதாயம் படைக்க வேண்டும் என்று உளறிய கார்ல் மாக்ஸின் அடிவருடிகளாயிற்றே!.இவர்களில் சிலர் கூறும் புதுமைகளை சற்று நோக்குவோம். “Boundaryless World” என்னும் எல்லை இல்லா உலகைப் படைக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் எந்த மனிதனும் எந்த நாட்டிலும் வாழலாம், எதையும் படிக்கலாம், எங்கேயும் எந்த வேலையும் செய்யலாம் என்ற “Utopian Thought” உடையவர்கள். பாஸ்போர்ட், விசா போன்ற எந்தக் கட்டுப்பாட்டையும் எந்த நாடும் விதிக்க முடியாது. Utopian thought என்றாலே நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம் என்றுதானே அர்த்தம். இவர்களின் குறிக்கோள் வறுமையை ஒழிப்பது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வேலை இல்லாதவர்கள் ஐரோப்பாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்று வேலை செய்து நல்வாழ்க்கை வாழலாம். இத்தத்துவத்தை முதன்முறையாக வாசிப்பவர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு பதிலடியாக இங்கிலாந்து நாட்டின் ஒரு சமூக அறிவியலாளர் கூறிய பதிலை நோக்குவோம். மேற்கத்திய நாடுகள் இன்று மனிதனின் அத்தியாவசியத் தேவையை பெரும்பான்மையான அளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு அகதிகள் இந்நாடுகளின் பெரிய நகரங்களில் குடிபுகுந்தால் ஏற்படும் இட நெருக்கடி, மருத்துவத் தட்டுப்பாடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், சட்டங்களை எப்படி மாற்றுவது என்பதில் ஏற்படும் குழப்படிகள் மற்றும் சமூக, கலாசார மாற்றங்கள் போன்றவைகளால் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் சோமாலியா, எத்தியோப்பியா போன்றவைகளைப்போல் மாறிவிடும். இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தானிலிருந்து தாலிபான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் நம் கலாசார சின்னங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இதில் உள்ள ஒரே நல்ல விஷயம். எல்லையில்லா உலகம் என்பது ஏற்படவே ஏற்படாது என்பதுதான். (Source – New Scientist)

சில புள்ளிவிபரங்கள்

(1) அமெரிக்காவில் லடினோ அல்லாத வெள்ளை இனத்தவரின் மக்கள் தொகை 65 சதவிகிதம். இது 2050களில் 49%ஆக குறையும் என்று கணித்துள்ளார்கள்.1700களில் சுதந்திரம் பெற்றதிலிருந்து 2050களில்தான் வெள்ளை இனத்தாரின் மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாக மாறப்போகிறது. இதனால் ஏற்படப்போகும் சமூக மாற்றங்களைப் பற்றி எவரேனும் பேசினால் அவர்கள் கடும் போக்காளர்களாகக் கட்டம் கட்டப்படுகிறார்கள்.

(2) பிரிட்டனில் குடியுரிமை பெறும் 100 பேரில் 35 பேர் மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள். மற்றவர்கள் சிறிதளவே ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அல்லது முற்றிலுமாக ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள். பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து படிக்க வருகிறார்கள். ஆனால் இவர்களில் எவ்வளவு பேர் படித்து முடித்தவுடன் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்ற கணக்கு அரசாங்கத்திடம் இல்லை.

 

“இன ஒற்றுமை” நீதியினால் பரிதவிக்கும் மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள் இன்றிருக்கும் நிலையைப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்ப்போம்.

(1) அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட். இங்கு கிட்டத்தட்ட 25 பேர் வேலை செய்கிறார்கள். மூவர் முஸ்லீம்கள். வேலைக்குச் சேரும்போது எவ்வித வேலையையும் செய்யத் தயார் என்று கூறிவிட்டு ஒரு வருடம் கழித்து இந்த மூவரின் கோரிக்கையைக் கேளுங்கள். அவர்களின் மதப் புத்தகங்களின்படி தாங்கள் பன்றி இறைச்சி இருக்கும் உணவுப் பொருள்களைத் தொட முடியாது என்றும் அவை இல்லாத இடங்களில் மட்டுமே தாங்கள் வேலை செய்ய முடியும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். நிர்வாகத்திற்கு முழி பிதுங்குகிறது. சில பெரிய கடைகளில் பிரச்சினைகளில் இருந்து தப்ப முஸ்லீம் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அனுப்புவதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

rmit-muslim-students-boycotting-and-protesting-against-sharing-their-prayer-rooms-with-the-kuffar-and-pray-in-bowen-street(2) ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 75,000 பேர் இந்தியர்கள். இங்குள்ள பல்கலைக் கழகங்களில் பிரார்த்தனைக்காக தனி அறைகள் உண்டு. உதாரணமாக மெல்போர்ன் பல்கலைகழகத்தில் 12 பிரார்த்தனை அறைகள் உள்ளதாம். 80களின் இறுதி வரையில் இந்தப் பிரார்த்தனை அறைகளில் சிலுவையும், அன்னை மேரியின் சிலையும் இருந்துள்ளன. ஆனால் வெளிநாட்டு மாணவர்கள் அதிகமானதால் இந்தச் சின்னங்கள் அகற்றப் பட்டுள்ளன. இதையும் இங்குள்ளவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எல்லா மதத்தினரும் ஒரே அறையில் பிரார்த்தனை செய்துவந்தனர். முஸ்லீம் மாணவர்களின் தேவை வேறுவிதமானது. குரானின்படி தாங்கள் வேறு மதத்தினருடன் பிரார்த்தனை செய்ய முடியாதென்றும் தங்களுக்கு தனியான பிரார்த்தனை அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியதால் 3 அறைகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

(3) ஐரோப்பிய நாடொன்றில் நடந்தது இது. முஸ்லீம் பெண்ணொருவர் போலீஸ் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய மத நம்பிக்கையின்படி தான் முகத்தை மூடிக்கொண்டே (பர்தா அணிந்துகொண்டே) வேலை செய்ய அனுமதி கோரினார். இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டவுடன் இவர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.

(4) முஸ்லீம்களை பற்றியேதான் கூறவேண்டுமா?!. பிரிட்டனில் ஒரு இந்துக் கோயில். இங்கு ஒரு பசு வளர்க்கப்படுகிறது. பசுவிற்கு ஒரு வைரஸ் தொற்றுநோய் ஏற்படுகிறது. அங்குள்ள சட்டத்தின்படி நோயைக் கட்டுப்படுத்த அம்மாதிரி பசுக்கள் கொல்லப்படுகின்றன. தங்கள் மத வழக்கப்படி பசுக்கள் கொல்லப்படக் கூடாது என்று தாம் நம்புவதால் பசுவைக் கொல்ல தடை விதிக்குமாறு கோயில் நிர்வாகிகள் நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர்.

britains-first-open-air-cremation-held-in-secret(5) பிரிட்டனில், சட்டப்படி, திறந்த வெளியில் பிணத்தை எரிக்க முடியாது. தங்கள் மத வழக்கப்படி பிணத்தை திறந்த வெளியில் எரிக்க இந்துக்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஒரு படி மேலே சென்று தன் குடும்பத்தினர் ஒருவரின் பிணத்தை ஆளரவமில்லா இடத்தில் திறந்த வெளியில் எரித்து அதைப் படமும் எடுக்கிறார். அதை இணையத் தளங்களிலும் வெளியிடுகிறார்.

(6) அமெரிக்காவில் தீயணைப்புப் படையில் வேலை செய்வோரின் பதவி உயர்விற்காக ஒரு பரிட்சை நடக்கிறது. இதில் வெள்ளை இனத்தவர்களும் ஒரு லடினோ இனத்தவரும் தேர்ச்சி பெறுகிறார்கள். கருப்பினத்திலிருந்து எவருமே தேர்ச்சி பெறவில்லை. முடிவு தெரிந்தவுடன் பரிட்சையை நடத்தியவர்கள் பதவி உயர்வு ஆணையை இடை நிறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் வேடிக்கையானது. கருப்பினத்திலிருந்து எவருமே தேர்ச்சி பெறாததினால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விடுவார்கள் என்றார்கள். சரி, கருப்பினத் தலைவர்கள் கூற முயன்ற காரணங்கள் அதைவிட வேடிக்கையானது. அதாவது, வெள்ளையர்களால் மட்டுமே பதில் எழுதக்கூடிய வகையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டன என்றார்கள். (ஆஹா! என்னவொரு சிந்தனை!!) கடைசியாக நான் அறிந்தவரையில் தேர்ச்சி பெற்ற வெள்ளையர்கள் தங்களுக்கு பதவி உயர்வு ஆணை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். இதைப் படிப்பவர்கள் கூட பதவி உயர்விற்கு ஏன் பரிட்சை வைக்க வேண்டும் என்று நினைக்கலாம். இந்தப் பதவி உயர்வு கீழ் நிலை பதவிகளுக்காக இல்லை. Lieutenant மற்றும் Captain பதவிகளுக்காக. மேலும் அமெரிக்காவில் தீயணைப்புத் துறையில் வேலை செய்ய தீயை அணைக்கும் விதம் தெரிந்தால் மட்டும் போதாது. வருடா வருடம் கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் “காட்டுத் தீ” பரவும். அப்பொழுது எந்த இடங்களில் முக்கியமான கட்டிடங்கள் (மியூசியம், ஆராய்ச்சி மையம் போன்றவை) உள்ளன என்ற விவரங்கள் ஒரு தீயணைப்பு அதிகாரிக்குத் தெரிய வேண்டியது அவசியம். இது போன்ற பொது அறிவு விஷயங்களைப் பற்றி படித்து பரிட்சை எழுதி தேர்ச்சி பெறுவது நியாயமா? இல்லை சிறுபான்மை இனத்தவர்கள் பரிட்சையில் தேர்ச்சி பெறாமலேயே பதவி உயர்வு பெற வேண்டுமா?

(7) அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூடம். இங்கு ஒரு வகுப்பறையில் 35 மாணவர்கள் படிக்கிறார்கள். 15 குழந்தைகள் வெள்ளை இனத்தவர்கள். சிலர் யூதர்கள். சிலர் கருப்பினத்தவர்கள். கருப்பினத்தவர்களில் சிலர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். சிலர் ஆப்பிரிக்காவிலிருந்து சில வருடங்களுக்கு முன் குடியேறியவர்கள். சிலர் இந்துக்கள். ஒரு அராபிய முஸ்லீமும் உண்டு. ஒரு பாகிஸ்தானிய முஸ்லீமும் உண்டு. நிதானமாகச் சிந்திப்போம். அந்த ஆசிரியரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். தமிழ் சினிமாவில் வடிவேலு கூறுவதைப் போல அவர் பாவம் இல்லையா? இதில் வெள்ளை மாணவர்கள் மற்றும் அமெரிக்க கருப்பு மாணவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். வெளியிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். இவர்களுக்கு “Moral Science” வகுப்பில் எந்த மதத்தைப் பற்றிச் சொல்லித்தருவது? நிதானமாக சிந்தித்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இனி பல பள்ளிக்கூடங்களில் உருவாகும் என்பது புரியும்.

(8) சில நாள்களுக்குமுன் பிரிட்டனில் வெளிவந்த செய்தி. அந்நாட்டின் கால்பந்துக் கழகம் 2 1/2 லட்சம் பவுண்டுகளை முஸ்லீம் பெண்கள் விளையாட்டு அமைப்புக்கு ஒதுக்கியது. இந்த அமைப்பு இந்தப் பணத்தைக்கொண்டு பிரிட்டனின் முஸ்லீம் பெண்களை விளையாட ஊக்குவிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் முஸ்லீம் பெண்களில் பலர் எல்லோரும் பார்க்க (அதாவது ஆண்களும் பார்க்கும்படி) விளையாட விரும்புவதில்லையாம். ஆகையால் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அரங்கினுள் முஸ்லீம் பெண்கள் பர்தா போன்ற உடைகள் அணியாமல் விளையாடுவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தப் போகிறார்களாம். எப்படி இருக்கிறது இந்த விளையாட்டு? இந்த முஸ்லீம் பெண்கள் அமைப்பு கூறும் காரணம்– முஸ்லீம் பெண்களின் உடல் மற்றும் மனது சீராக இருக்க இது போன்ற விளையாட்டு உதவுமாம். ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இதற்கு இவ்வளவு செலவில் லண்டனிலும் பர்மிங்காமிலும்தான் விளையாட வேண்டுமா? வீட்டளவில் உடற்பயிற்சி செய்ய வைத்தால் போதுமே என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வன்முறையைத் தூண்டுபவர் என்று கட்டம் கட்டப்படுவீர்கள்.

மேற்கூறியவை மேற்கத்திய நாடுகளின் சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் சில உதாரணங்களே.

 

அரசியல்வாதிகளின் பங்கு

(1) அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஒரு காலியிடம் உருவானது. அங்குள்ள வழக்கத்தின்படி அமெரிக்க அதிபர் ஒரு நீதிபதியை முன்மொழிவார். அதை அங்கிருக்கும் சபை (நாடாளுமன்றம் போன்றது) வழிமொழிந்தால் அந்த நீதிபதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார். இன ஒற்றுமை என்ற கோஷத்தையே கொள்கையாகக்கொண்ட ஒபாமா “லடினோ” என்ற அமெரிக்க சிறுபான்மை இனத்தவரை முன்மொழிந்தார். முக்கியமாக அவர் மற்றொரு பிரம்மாஸ்திரத்தை ஏவினார். அதாவது ஒரு பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக முன்மொழிந்தார். ஓர் இடைச்செய்தி. துக்ளக் ஆசிரியர் சோ ஒருமுறை எழுதியது. “இன்றைய காலகட்டத்தில் எந்தவொறு தலைவரோ அல்லது ஊடகமோ பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அல்லது சிறுபான்மையினர் போன்றோரைப்பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை”.

latina-woman-associate-justice-sonia-sotomayorசரி, நாம் அமெரிக்க விஷயத்திற்குச் செல்வோம். ஒபாமா முன்மொழிந்த லடினோ இனத்துப் பெண்மணி எல்லா தகுதியையும் பெற்றிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர் சில வருடங்களுக்கு முன் கூறிய விஷயத்தைப் பார்ப்போம். சிக்கலான வழக்குகளில் ஒரு வெள்ளை இனத்து ஆண் நீதிபதியை விட ஒரு லடினோ இனத்து சிறுபான்மைப் பெண் சரியான மற்றும் நியாயமான தீர்ப்பினை வழங்க முடியும் என்றார். அதாவது பெண்கள் இயல்பாகவே கருணையானவர்கள் என்று இவர் எண்ணுவதால் பலருக்கு தன்னால் நியாயம் வழங்கமுடியும் என்று கூறுகிறார். கருணையின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சாட்சி மற்றும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை யார் இவருக்குப் புரியவைப்பது? சரி, இவரின் புரிதல் இப்படி இருக்கையில் அதிபர் ஒபாமா ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஆராய்ந்தார் தெரியுமா? ஒபாமா தன்னால் முன்மொழியப்படும் நீதிபதிக்கு “Empathy” இருக்க வேண்டும் என்றார். இந்த ஆங்கில வார்த்தைக்கும் கருணை என்றே அர்த்தம். ஆனால் இந்தக் கருணை சற்று சிறப்பு வாய்ந்தது. அதாவது அடுத்தவருக்கு ஏற்படும் சிரமங்களை தனக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அதைத் தீர்க்க முயல வேண்டும் என்று அர்த்தம். உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருணைக் கடலாக இருக்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குகையில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனக்கு முன்னால் இருக்கும் வாதி, பிரதிவாதிகள் ஆணா அல்லது பெண்ணா, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரா அல்லது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரா, அவர்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, பார்க்கவும் கூடாது. அரசியல் சாசன மாட்சிமையை நிலைநிறுத்துவது ஒன்றே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் குணாதிசயமாக இருக்க வேண்டும் என்பதை யார் அதிபர் ஒபாமாவுக்குப் புரிய வைப்பது?

இதைப் படிக்கும் சிலர் கருணை என்பது தவறா என்று கேட்பது புரிகிறது. ஒரு உதாரணத்துடன் இதை பார்க்கலாம். மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் சட்டபூர்வமற்று குடியேறியவர்களைப் பற்றிய ஒரு வழக்கில் இவர் நீதி வழங்க வேண்டிய நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். மெக்ஸிகோவிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைவார்கள் என்றெல்லாம் அவர் கருணையோடு ஆராய வேண்டியதில்லை. மெக்ஸிகோ அரசாங்கம்தான் அவர்களைக் கருணையோடு கவனிக்க வேண்டுமே தவிர அமெரிக்க அரசாங்கமல்ல. சட்டபூர்வமற்ற குடியேறிகளைத் தண்டணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுவதால் அதை நடைமுறைபடுத்துவது ஒன்றுதான் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கடமை.

(2) அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரத்திற்கு வந்தவுடன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதிகார மையமான பெண்டகனில் 100 முஸ்லீம்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தார். அதிபரின் உள்நோக்கத்தையும் இதனால் பிற்காலத்தில் இது முன்மாதிரியாக வருவதால் ஏற்படப்போகும் பிரச்சினைகளையும் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

obama-gave-his-historic-speech-in-cairo(3) அமெரிக்க அதிபர் ஒபாமா தான் பதவியேற்றவுடன் முஸ்லீம் நாடுகளுடன் நல்ல உறவு ஏற்பட பாடுபடப்போவதாகக் கூறினார். வரவேற்க வேண்டியதுதான். எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார். அதில் அமெரிக்க வரலாற்றில் முஸ்லீம்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றார். அமெரிக்க வளர்ச்சிக்கும் முஸ்லீம்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். வெள்ளையர்களும் கருப்பர்களும் மட்டுமே அமெரிக்க வளர்ச்சிக்கு சொந்தம் கொண்டாட முடியும். சரி, பின் ஏன் ஒபாமா இவ்வாறு கூற வேண்டும். நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. “கேட்பவன் கிறுக்கனாக இருந்தால், எருமையும் ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்கள்”. அரசியல்வாதிகள் சிறுபான்மை ஓட்டிற்காக எதையும் செய்வார்கள்தான். ஆனால் வரலாற்றைக்கூட மாற்றத் தயாராகி விட்டார்கள்.

(4) அமெரிக்காவின் கதியே இப்படி மாறியிருக்க இந்தியாவின் நிலை! அதிகாரம் உள்ள கீழ்நிலை பதவிகளிலிருந்து ஜனாதிபதி வரை இங்கே சிறுபான்மையினர் அமர்த்தப்படுவர். “Operation Bluestar”க்குப் பிறகு சீக்கியர்களை தாஜா செய்ய, சீக்கிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லீம்கள் ஜனாதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நம்மூர் அரசியல்வாதிகளின் சிறுபான்மைப் பித்தைப் பற்றி அனைவருமே அறிவதால், மேலே செல்வோம்.

(5) ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் குறிப்பாக பிரிட்டனில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஷரியா சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. கிரிமினல் குற்றங்களைத் தவிர மற்ற வழக்குகளை அந்த மதத் தலைவர்களே தீர்த்துக்கொள்ள உதவும் இம்முறைகள் வெள்ளையர்களின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

 

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இன வேற்றுமை

இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் இன வேற்றுமை நாளடைவில் அல்லது சில தலைமுறைகளில் சரியாகி விடும் என்று நினைப்பீர்கள். அது போன்று நடப்பதில்லை என்பதற்கு மூன்று உதாரணங்கள்.

jaffna-mayor-alfred-duraiappaஇலங்கை: கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் இலங்கையில் வசிக்கின்றனர். 70களின் கடைசியில் நடந்த இரு சம்பவங்கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மாற்றமுடியாத முறுகல் நிலையைத் தோற்றுவித்தது. ஒன்று யாழ்ப்பாண மேயர் சுட்டுக்கொல்லப்பட்டது. இரண்டாவது வட இலங்கையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள சேனைவீரர்கள் கொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து 1983ல் நடந்த இன வன்முறைகளைச் சிலர் அறிந்திருப்பீர்கள். இன்று வரை தொடரும் தீரா பிரச்சினையையும் நாம் நோக்கலாம்.

ரோமானிய வல்லரசு: கி.பி. 300களில் நடந்த வரலாறு இது. ரோமானிய வல்லரசில் மக்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள். இந்நாட்டிற்கு வடக்கே இருந்த பிரதேசங்களில் “Barbarians” என்ற காட்டுமனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இக்காட்டு மனிதர்களில் சிலர் கி.பி. 100 முதலே ரோமானிய நாட்டின் சேனையில் சேர்ந்து போர் புரிந்திருக்கிறார்கள். சரி, கி.பி. 300களில் இந்த காட்டுமனிதர்களின் இராஜா ரோமானிய வல்லரசோடு போரிட வருகிறான். இதை அறிந்த ரோமானியச் சக்கரவர்த்தி தன் சேனையில் உள்ள அனைத்து காட்டுமனிதர்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். பெரும்பான்மையான காட்டு மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். சிலர் உயிர் பிழைத்து தங்கள் குடும்பத்துடன் ஓடிச்செல்கிறார்கள். (Source-Ancient Rome-The rise and fall of an empire-BBC- 6th part)

genocide-after-indiras-assassinationஇந்தியா-1984: இந்திரா காந்தி இரு சீக்கியக் காவலாளிகளினால் கொல்லப்பட்டார் என்று தெரிந்தவுடன் இந்தியத் தலைநகர் டில்லியில் மட்டுமே 2700க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் என்றுமே முறுகல் நிலையே இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது புதிய செய்தியல்ல. ஆனால் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டிருக்கவில்லை. இரண்டு சீக்கியர்கள் செய்த கொலைக்காக 2700 அப்பாவி சீக்கியர்கள் அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவுடன் கொல்லப்பட்டனர்.

மேற்கூறிய மூன்று உதாரணங்களிலிருந்து நாம் பெறும் செய்தி இதுதான். எவவளவு தலைமுறையாக ஓற்றுமையுடன் இரு இனங்கள் வாழ்ந்தாலும் சில காரணிகளால் தங்கள் இனம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்ற நிலை தோன்றும்போதோ அல்லது தங்களுக்கு எதிரியாக அவர்கள் உருவெடுத்து விட்டார்கள் என்று நம்பும்போதோ, தலைமுறைகளாக இருந்த இன ஒற்றுமை, இனதுவேஷமாகப் பரிணமித்து இனப் படுகொலையில் முடிகிறது.

 

வெள்ளையர்களின் இயற்கையான மனநிலை

இவ்விஷயத்தைப் புரிந்து கொள்ள இரு சினிமா உதாரணங்கள்.

the-proposalThe Proposal: இப்படத்தில் கதாநாயகி கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு “Work Visa” (வேலை செய்வதற்கான உரிமை) மூலமாக வந்து ஒரு புத்தகப் பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருப்பாள். ஒருநாள் Immigration Office லிருந்து அதிகாரிகள் கதாநாயகியை சந்தித்து அவளின் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாகவும் அவள் தன்னுடைய தாய்நாடான கனடாவிற்கே திரும்பிச் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். அவள் அந்த அதிகாரிகளிடம் கூறும் பதில். “Deported, Come on, Come on , It is not like I am an Immigrant, I am from Canada for God’s sake!.” இதற்கு நேரடியான மொழிபெயர்ப்பு இதோ. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா! நான் ஒன்றும் சாதாரணக் குடியேறி இல்லை. நான் கனடாவிலுருந்து வந்திருக்கிறேன்.”இப்பொழுது இதற்கான வெள்ளையர்களின் மனநிலையை ஒட்டிய மொழிபெயர்ப்பு இதோ!. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா! நான் ஒன்றும் பஞ்சம் பிழைக்க வந்தவளில்லை! கனடா என்னும் பணக்கார நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்.” இதை சினிமாவில் அந்தக் கதாநாயகி ஏற்ற இறக்கங்களுடன் immigrant என்னும் வார்த்தையை கூறக்கேட்டால் நாம் இவ்விஷயத்தை முழுவதுமாக உணரலாம்.

gran-torino-movieGran Torino: வெள்ளைக்காரர்களின் மனநிலையை அறிய இப்படத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம். இப்படத்தின் கதாநாயகன் ஒரு கிழவர். தன் பிள்ளைகளுடன் நகரத்தில் சென்று வாழாமல் தன்னுடைய கிராமத்து வீட்டிலேயே வாழ்ந்து வருபவர். இவர் வசிக்கும் கிராமத்தில் பெரும்பான்மையான வீடுகளில் மாங்க் (Hmong) எனப்படும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பழங்குடியினர் குடியேறி விடுவார்கள். அவருக்கு இது சற்றும் பிடிக்காது. தன்னுடைய ஆத்திரத்தை பலவகைகளில் அவர்கள் மீது வெளிப்படுத்துவார். படம் முழுவதும் அவர் அந்தப் பழங்குடியினரை வசைபாடுவது தொடரும். அந்தப் பழங்குடியினரில் ஒரு சிறுவனுக்கு வேலை வாங்கித் தருவார். நாம் இப்படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் நோக்குவோம். அந்தச் சிறுவனுக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது. ஒரு நாள் அவனை ஒரு முடி திருத்தகத்திற்குக் கூட்டிச்செல்வார். வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கவனிக்குமாறு அச்சிறுவனிடம் கூறுவார். முடிதிருத்துபவரும் கதாநாயகனும் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக வசைபாடிக் கொள்வர். இதைக் கவனிக்கும் சிறுவனுக்கு தலையும் புரியாது வாலும் புரியாது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது– இச்சிறுவனைப்போல் உள்ள குடியேறிகளுக்கு அமெரிக்கக் கலாசாரத்தின் சாரமும் தெரியாது. அவர்களின் பாஷையும் புரியாது. அவர்களால் வெளியிடங்களில் வெள்ளையர்களிடம் பழகவும் முடியாது. இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தங்களுக்குரிய சிறிய வட்டங்களிலேயே வாழ முடியும். தங்களின் இன மக்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள முடியும்.

 

வெள்ளையர்களின் எதையும் யாரையும் விமர்சிக்கும் தன்மை

மேற்கத்திய ஜனநாயகத்தையும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஜனநாயகத்தையும் ஒன்றென்று எவரேனும் கூறமுடியுமா? பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஜனநாயகம் பெயரளவிற்குத்தான் உள்ளது. தனி மனித சுதந்திரம், பெண்ணுரிமை, எழுத்துரிமை போன்றவை எழுத்தளவில்தான் உள்ளன. ஆனால் வெள்ளையர்களின் ஜனநாயகமோ ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் 1776ம் வருட சுதந்திரப் பிரகடனத்தில், “Life, Liberty and the Pursuit of Happiness are unalienable rights” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உயிர், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிக்கும் உரிமைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதை எழுத்தளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் அவர்கள் பேணுகிறார்கள். முக்கியமாக எழுத்துச் சுதந்திரம் என்பது, எவ்வகையான விமர்சனத்தையும் எவர் மேலும் வைக்கலாம் என்பதே அவர்கள் வாழ்க்கை. இதில் மத ரீதியான விஷயங்களையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. சில உதாரணங்கள்…

Da Vinci Code: டேன் பிரௌன் என்பவர் எழுதிய இந்தப் புத்தகத்தை சிலராவது படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவிற்கு அவருடைய சிஷ்யை மேக்டலீனுடன் திருமணம் நடந்ததாகவும் அவர்களின் இரத்த வாரிசுகள் உலகில் இன்றளவும் ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா என்பது இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது. ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், வெள்ளையர்கள் தங்கள் கடவுள் முதற்கொண்டு எவரையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. ஒரு பாதிரியார் இப்புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் படியான ஒலிக்கற்றையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் அந்த பாதிரியார் இது போன்ற புத்தகத்தை மறுதலித்து உண்மையை மக்களுக்குச் சொல்ல தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே தான் பார்ப்பதாகக் கூறினார். இதிலிருந்துதான் எனக்கு வெள்ளையர்களின் ஜனநாயகம் பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்திருப்பதும், தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட இயல்பாகவே உள்வாங்கிக்கொள்ளும் புரிதலை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றும் புரிந்தது. இப்புத்தகத்தின் விளைவாக எந்த வன்முறையும் மேற்கத்திய நாடுகளில் உருவாகவில்லை.

protest-against-satanic-versesThe Satanic Verses என்றொரு புத்தகம். இதை எழுதிய சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த முஸ்லீம். உயர்குடியில் பிறந்து மேற்கத்திய கலாசாரத்துடன் வளர்ந்தவர். இவருக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை என்று ஒன்றும் இல்லை. இப்புத்தகத்தில் முஸ்லீம்களின் இறை தூதரான முகமது நபி சாத்தானின் வசத்தில் கூறியதாக நம்பப்படும் விஷயத்தை விளக்கி எழுதியிருந்தார். இப்புத்தகத்தை பிரிட்டன் நாட்டின் ஒரு பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு எதிராக ஐரோப்பிய முஸ்லீம்கள், குறிப்பாக பிரிட்டனின் முஸ்லீம்கள் வரலாறு காணாத போராட்டங்களை நடத்தினர். அந்நாட்டு அரசால் பதிப்பகங்கள் எந்தப் புத்தகத்தை வெளியிடலாம், எந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்றெல்லாம் உத்திரவு போட முடியாது. கடைசியில் அப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன. இன்றும் விற்பனையில்தான் உள்ளன.

இதைப்போன்றே முகமது நபிகளின் கேலிச்சித்திரங்கள் டென்மார்க் நாட்டின் ஒரு தினசரியில் வெளிவந்தன. அப்போதும் உலக அளவில் பெரிய போராட்டங்கள் வெடித்தன. இங்கு நாம் பார்க்கவேண்டிய முக்கிய விஷயம். இச்சித்திரங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு பல ஐரோப்பிய நாடுகளின் பத்திரிகைகள் இச்சித்திரங்களை தாங்களும் வெளியிட்டன. அதற்கு அவர்கள் கூறும் காரணத்தைத்தான் நாம் பார்க்க வேண்டும். இச்சித்திரங்களை தாங்கள் வெளியிடுவது அதற்கான எதிர்ப்பால்தான் எனவும் தாங்கள் எதை அச்சிடவேண்டும் எதை அச்சிடக்கூடாது என்பதை எவரும் தங்களுக்கு நிர்பந்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.

மேற்கூறிய விஷயங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். வெள்ளையர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். தங்களுடைய சுதந்திரத்தை, கண்ணுக்குக் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்கின்றனர். கடவுள் உட்பட எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று நம்புவது மட்டுமல்லாமல் செயலிலும் காண்பிக்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்பது தாங்கள் அச்சிடுவதை விரும்புபவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் அப்பத்திரிகையை வாங்கத் தேவையில்லை; அவ்வளவுதான். முஸ்லீம்களோ மற்றவர்களோ வெள்ளையர்களின் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அங்கு நிம்மதியாக வாழ முடியும். வெள்ளையர்களின் இந்த மனநிலையை மாற்றுவது என்பது கனவிலும் சாத்தியமில்லாதது.

 

சிறுபான்மையினரின் நிலை

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மையினர்– குறிப்பாக முஸ்லீம்கள்– தனித் தனித் தீவுகளிலேயே வாழ்கிறார்கள். அதாவது பெரும்பான்மை சமூகத்தினருடன் ஒட்டி வாழாமல் தனித் தனிக் குடியிருப்புகளில் வாழ்பவர்களே அதிகம். இவர்களால் வெள்ளையர்களின் கலாசாரத்துடன் ஒன்றவும் முடியவில்லை. ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக சில சமாதானங்களைச் செய்துதான் தீர வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் தாங்கள் பிறந்த கலாசாரத்தையும் விட முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆகிவிட்டது அவர்கள் வாழ்க்கை.

சில வாரங்களாக பிபிசி தமிழ் ஓசையில், “தலைநகர் தமிழர்கள்” என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இந்தியாவிற்குள்ளேயே டில்லியில் அதுவும் ஒரே மதத்தினருடன் ஆனால் வேறு மொழியினருடன் வாழ்வதிலேயே தமிழர்கள் பிரச்சினைகளை சந்திப்பதாகக் கூறுகிறார்கள். பின் மதம், நிறம், மொழி, உணவு, உடை போன்ற மனிதனின் அனைத்து நிலைகளிலும் வேறுபட்டு இருக்கும் வெள்ளையர்களுடன் மற்றவர்கள் எவ்வாறு சேர்ந்து வாழ முடியும்? நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

 

கடும்போக்கு வலதுசாரிகளின் உற்பத்தி

இதற்கு உதாரணங்களாக பிரிட்டன் மற்றும் நெதெர்லாந்து நாட்டின் கடும்போக்கு வலதுசாரிகளை எடுத்துக்கொள்வோம். [கடும்போக்கு வலதுசாரிகள் என்றால் யார்? உதாரணமாக வலதுசாரி என்றால் பா.ஜ.க-வாகவும் கடும்போக்கு வலதுசாரிகள் என்றால் ஸ்ரீராம் சேனா போன்ற அமைப்புகளையும் குறிக்கிறேன்.]

nick-griffin-vs(1) சில நாட்களுக்கு முன் BBC Question time நிகழ்ச்சியில் British National Partyஐச் சேர்ந்த நிக் கிரிப்பின் (Mr.Nick Griffin) கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது நினைவிருக்கலாம். நாம் சர்ச்சையை விட்டுவிடுவோம். இந்த நிக் கிரிப்பின் United Kingdom ஐக்கிய இராஜ்ஜியத்தில் புதியதாக எவரையும் விடக்கூடாது என்ற கொள்கை உடையவர் (Freezing of Immigration). நீங்கள் ஊகிக்கிறபடி அந்நாட்டின் பிரதான மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் நிக் கிரிப்பினை பிடிபிடியெனப் பிடித்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த நீதித் துறை அமைச்சர், தான் பிறந்த நகரில் 30% சதவிகிதம் வெள்ளையர் அல்லாதோர் குடியேறியுள்ளதாகவும் அதனால் அந்நகரில் பாரம்பரியமாக வாழும் வெள்ளை இனத்தினர் திகைத்து இருப்பதாகவும் கூறினார். ஆனால் அம்மக்கள் ஏன் திகைத்துள்ளனர் என்பதற்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை. (சிறுபான்மையினருக்கு ஜால்ரா போடுவது நம் அரசியல்வாதிகளால் மட்டும்தான் முடியுமா?). நம்முடைய நிக் கிரிப்பின் சற்றும் கவலைப்படாமல் அந்த விளக்கங்களைக் கூறினார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அது போன்ற நகரங்களில் வெள்ளையர்கள் வசித்து வருகின்றனர். முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். இவருடைய கட்சியிலிருந்து 2 எம்.பிக்கள் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிதானமாக சிந்தியுங்கள். அவர் கூறியது அநியாயமா? நம்மை அவரிடத்தில் வைத்து யோசித்துப் பாருங்கள். நாம் உயிராக நினைக்கும் நம்முடைய கலாசாரம் மஹரிஷிகளால் உருவாக்கப்பட்டு நம் மூதாதையர்களால் பேணப்பட்டு நம் வரைக்கும் வந்துள்ளது. நம்மில் பலருக்கு நம்முடைய கிராமத்தில் பரம்பரை வீடு இருக்கும். அக்கிராமத்தில் பெரும்பாலான புதிய வீடுகளை வெள்ளைக்காரர்கள் கட்டிக்கொண்டால் நம் மனதும் திகைக்கும்தானே?

fatwa-against-fitna-geert-wilders(2) நெதெர்லாந்து நாட்டில் The Dutch Party for Freedom என்றொரு கட்சி. இக்கட்சிக்கு கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) என்பவர் தலைவர். 2004 வரை இவர் யாரென்று டச்சுக்காரர்களுக்கே தெரிந்திருக்காது. இவர் உருவாக்கிய “பிட்னா” (Fitna) என்ற ஆவணப் படம் இஸ்லாமில் பெண்களின் நிலையை கடுமையான விமர்சனங்களுடன் கூறியது. முஸ்லீம்களிடேயே இவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் பலர் இவருக்கு ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். முஸ்லீம்கள் நெதெர்லாந்து நாட்டிற்குள் குடியேற அனுமதிக்கக் கூடாது, இஸ்லாம் என்பது மேற்கத்திய கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் என்பன போன்ற சிந்தனைகளை உடையவர். இவருக்கு இன்றளவில் 25 சதவிகித ஆதரவு மக்களிடம் உள்ளதாம்.

மேற்கூறிய விஷயங்களிலிருந்து எந்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு ஆளும் கட்சியிலிருந்து கிடைத்தால் கடும்போக்கு வலதுசாரிகளே தோன்றுவார்கள் என்பது திண்ணம். இவர்களால் வன்முறைகளே பெருகும்.

 

மனித உரிமையாளர்களின் மாய்மாலங்கள்

இந்தியாவில் இந்த மனித உரிமையாளர்கள் அடிக்கும் கொட்டங்களை எழுதி மாளாது…..

(தொடரும்…)

5 Replies to “இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3”

 1. //எந்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு ஆளும் கட்சியிலிருந்து கிடைத்தால் கடும்போக்கு வலதுசாரிகளே தோன்றுவார்கள் என்பது திண்ணம். இவர்களால் வன்முறைகளே பெருகும்//
  இது எப்போது நம் ‘sickularists’க்குப் புரியும்?

 2. அன்பிற்கினிய பாலாஜி அவர்களுக்கு, இனவாதம் பற்றிய தங்கள் ஆய்வு பாராட்டுக்கு உரியது. எனினும் பாரத நாட்டை பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்ந்து வந்த யூதர்கள், ஜரதுஷ்டிரர்கள் என்கிற பார்சிகள் மற்றும் வெவ்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் தன்மானத்தோடும் சகல வசதிகளுடனும் வாழ்த்து வந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இனத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை வேறுபடுத்திப்பார்த்து கீழ்த்தரமாக நடத்துவது என்பது நமது சமுதாயத்தில் காலம் காலமாக கண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதிசங்கரர் போன்ற மகான்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் நல்ல உதாரணம்.

 3. திரு வரதராஜன் அவர்களுக்கு,
  உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. நம் நாட்டில் இன வேறுபாட்டை
  ஆதி சங்கரர் போன்றோர் கண்டித்துள்ளது பற்றி கூறியுள்ளீர்கள். சரிதான்.
  ஆனால் எனக்கு புரிந்ததைப்பற்றி கீழ்வருமாறு எழுதுகிறேன்.
  என்னதான் நாம் இன ஒற்றுமையை பற்றி கூறினாலும் சில கருப்பு புள்ளிகள்
  நம் மீது இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக கடந்த
  காலங்களில் தாழ்த்தப்பட்டோர் நடத்தப்பட்ட விதம், 1940களில் நடந்த
  இந்து, முஸ்லிம் கலவரங்கள் (இதில் 10 இலட்சம் இறந்துள்ளதாக படித்திருக்கிறேன்) அண்மையில் நடந்த குஜராத் மோதல்கள் போன்றவை
  நம் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்பதை மறுப்பதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published.