சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி

முந்தைய,  மற்ற பகுதிகள்

சரி. ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது?

அத்தகைய எண்ணம் தவறானது. உலகில் மற்ற எல்லா சமுதாயங்களிலும் மதங்களால் அங்கீகரிக்கப்பட்ட சாதி அமைப்பு இருந்தது. இன்னமும் வேறுபல நாடுகளில் அது இருக்கிறது.

medieval_europe_social_structure1செயிண்ட் அகஸ்டைன் என்பவர் இன்றளவும் கிறிஸ்தவ இறையியல் மாணவர்களுக்கு உலகெங்கும் முக்கிய இறையியல் குரு ஆவார். இன்றைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் இவரது கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானவையே ஆகும். ஆனால் இவர் ஐரோப்பாவில் இருந்த பாணர்களை (ஊர் ஊராகச் சென்று பாடுபவர்கள்) மனிதர்களாகவே கருதவில்லை. பாவப் பிறவிகளாகக் கருதினார். இவர்கள் கிறிஸ்தவ உலகில் தீண்டத்தகாதவர்களாகவும், கிறிஸ்தவ கம்யூனியன் வாங்க தகுதியற்றவர்களாகவும் இருந்ததோடு மட்டுமல்ல குடிமக்களாகவே கூட சேர்க்கப்படவில்லை.
16 ஆம் நூற்றாண்டு வரை நெசவாளர்கள், நாவிதர்கள், துப்பரவு தொழிலாளர்கள், பாணர்கள் போன்ற தொழிலாளர் குலங்களுக்கு எதிராக அவர்களது உடைகள் வரை கட்டுப்படுத்தப்பட்டன. அவர்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தலையாரி சமுதாயத்தினருக்கு எதிரான இழிவுபடுத்தும் நடைமுறைகள் 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் கிறிஸ்தவ சமுதாயங்களில் நடைமுறையில் இருந்தன.

ஐரோப்பாவில் சமுதாயம் ஏழு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ் மட்டத்தில் இருந்த விவசாயத் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டில் கூட இங்கிலாந்து ஆவணங்கள் இந்தப் பரம்பரை விவசாய அடிமைகள் அவர்கள் பூட்டி உழும் விலங்குகளைப் போன்ற அறிவுடையவர்கள் என்றே குறிப்பிடுகின்றன. (ஆனால், மிகப்பழங்காலம் முதல் பாரதத்தில் நான்கு பிரிவுகளாக சமுதாயம் பிரிக்கப்பட்டு, அனைத்து வர்ணங்களும் இறைவனின் அங்கங்கள் என்றே சொல்லப் பட்டிருந்தது. ஒரு காலகட்டம் வரை, நான்காவது வர்ணத்தினரான சூத்திரர்களும் அரசாட்சி செய்யவும், யாகங்கள் நடத்தவும் முடிந்தது.)

இஸ்லாமிய அரேபியாவிலும் நான்கு சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. ஸொலூபிகள் என்பவர்கள் தீண்டத்தகாத சாதியாக இஸ்லாமிய அரேபிய சமுதாயங்களில் நடத்தப் படுகின்றனர். அரேபியாவில் பல மசூதிகளின் முஃப்தி பொறுப்பு பரம்பரையாக சில குலத்தவர்களாலேயே ஏற்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சவுதி அரேபியாவில் 6000 பேரே கொண்ட அரச சாதியே ஆள்கிறது. அமெரிக்க உதவியுடனும், அங்குள்ள மதத்தலைவர்களின் விருப்பத்தின்படியும் அவர்களது முழு ஆதரவுடனும், கட்டுக்கடங்காத ஆடம்பரத்துடனும் இது நடைபெறுகிறது. ஒவ்வொரு அரச சாதி ஆண்களுக்கும் அரசாங்கமே ஒரு பெரும் தொகையை (500,000 அமெரிக்க டாலர்களுக்குச் சமம்) உபரி ஊதியமாக வழங்குகிறது.

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மேல் சாதியினர் அஷ்ரஃப்கள் ஆவர். இவர்களுள் மேலும் நான்கு பிரிவுகள் உள்ளன.. அவையாவன: ஸயீத்துகள், ஷேக்குகள், பஷ்டூன்கள் மற்றும் மொகலாயர்கள். மேல் சாதியில் வந்தவர்களே சுல்தான்களாக ஏற்கப்பட்டார்கள். மைசூரை ஆட்சி செய்த திப்பு மேல்சாதியினர் இல்லை என்பதால் அவரை சுல்தானாக ஏற்க டெல்லி பாதுஷாவும், அவருக்கு பெண் கொடுக்க ஹைதராபாத் நிஜாமும் மறுத்துவிட்டனர்.

எனவே, சாதி -பரம்பரையான சமுதாய அடுக்கு முறை- என்பது அனைத்து தேச, மத சமுதாயங்களிலும் இருந்தது. இன்றைக்கும் பல நாடுகளில் தொடர்கிறது.

ஆனால் முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது?

17 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து அபரிமிதமான மூலதனம் ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது. ஐரோப்பிய இனம் ஆசிய,அமெரிக்க,ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியெனப் பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பும் ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகள் தேவையற்றதாகி விட்டன.

வேறுவிதமாகச் சொல்லவேண்டுமென்றால், காலனி ஆதிக்கத்தினால், ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டினரைவிட உயர்ந்தவர்களானார்கள். வேறு நாட்டினர் அடிமைகளாகக் கிடைத்ததால், தங்கள் நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஐரோப்பியர்களை, மற்ற ஐரோப்பியர் தங்களுக்கு சமமாக நடத்த ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த தாழ்த்தப் பட்டவர்களும் அடிமைப் படுத்தப்பட்ட நாட்டினரை விட உயர்ந்தவர்களாக மாறினர். இதனால், ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆசிய, ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன; அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய சமுதாயத்தின் சாதியமானது ஆசிய-ஆஸ்திரேலிய-ஆப்பிரிக்க-அமெரிக்க கண்டங்களின் பூர்விகக் குடிகளின் இரத்தத்தால் துடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல், ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் காலம் தோறும் எழுந்தவண்ணம் உள்ளன. தற்போதும் அது தொடர்கிறது.

ஆனால், இந்த உண்மைகளை நாங்கள் ஏன் இதுவரை கேள்விப்படவில்லை?

slaveryஇன்றைய தீண்டாமை மற்றும் சாதியக்கொடுமைகளை ஆதாயமாக்கிக் கொண்டு இந்து தருமத்துக்கு எதிராகவும், இந்து சமுதாயத்துக்கு எதிராகவும் இயங்கும் போலி-சமூகநீதி அமைப்புகள் இந்த வரலாற்றினைத் தான் மறைத்து விடுகின்றன. சாதிக்கொடுமை ஏதோ இந்து தருமத்தினால் மட்டுமே ஏற்பட்டது என்று பொய் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்து பகைமை வளர்க்கின்றனர்.

மேலும், பிற நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, அந்த அடிமை முறையின் மூலம் தன்னுடைய நாட்டில் இருந்த சாதியத்தை அழிக்கும் காலனிய தந்திரத்தையும், ஆக்கிரமிப்பு முறைகளையும் நாம் செயல் படுத்தவில்லை. ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து, ஜனநாயகம் மூலமும், அரசியல் சட்டம் மூலமும், இட ஒதுக்கீடு போன்ற உரிமைப் பகிர்தல்கள் மூலமும் சாதியத்தை அழிக்க முயல்கிறோம். இது ஹிந்துக்கள் பெரும்பான்மையுள்ள இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.

ஓட்டு வங்கி அரசியல் வாதிகள், சுயநல சமூகத் தலைவர்கள், சாதி வெறியர்கள், அன்னிய மத பிரச்சாரகர்கள் போன்றவர்கள் நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள சாதிய சிக்கல்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் பார்த்தாலும், அதனையும் மீறி இந்து சமுதாயம் ஒருங்கிணைந்து சாதியத்தை அழிக்க முயன்று வருகிறது. இது மிகவும் பெருமைக்கூடிய, பாராட்டுக்குரிய விஷயம்.

பிற நாடுகளில், பிற மத சமுதாயங்களில் இல்லாத அளவுக்கு, இந்து சமுதாயம் தொடர்ந்து சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது என்று சொல்கிறீர்களா?

ஆம்.

உலககுரு ஆதிசங்கரர் காசியில் நீராடி வருகையில், எதிரே வந்த புலையரிடம் அவரது சீடர்கள் ஒதுங்கச் சொன்னார்கள். அதற்கு மதுக் கலயத்தை ஏந்தி நாய்களுடன் வந்த அந்தப் புலையர், “நீங்கள் ஒதுங்கச் சொல்வது உடலையா ஆத்மாவையா?” என வினவினார். இந்தக் கேள்வியில் பொதிந்திருந்த ஞான உபதேசத்தை ஹிந்து மதப் பெரியோரான ஆதிசங்கரர் உடனே புரிந்து கொண்டார். அந்தப் புலையரையும் தம் குருவாக ஏற்று, சிவ சொரூபமாகவும் கருதி, அவர் காலில் வீழ்ந்து வணங்கினார். அவரைத் துதி செய்து “மனீஷா பஞ்சகம்” எனும் துதிப் பாடலையும் இயற்றினார்.

இந்துமத நெறி தத்துவமாக முடங்கிவிடக்கூடாது, அது மானுட நேயத்திற்கு வழிகோல வேண்டும் என்பதனை சங்கரரின் வாழ்க்கை இவ்வாறு நமக்கு உணர்த்துகிறது.

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களை அரவணைக்கும் அன்பை திருநாவுக்கரசரும் பாடுகிறார்:

”அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”  (திருத்தாண்டகம்)

என சாதியத்தை மறுத்து, விளிம்பு நிலை மக்களிடம் இறைவனாகவே அன்பு செலுத்த சமுதாயத்தைப் பணிக்கிறார் திருநாவுக்கரசர்.

பாணர்களையும் மேலும் சில மக்கள் சமுதாயங்களையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கும் போக்கு ஏறக்குறைய எல்லா மானுட சமுதாயங்களிலும் இருந்திருக்கின்றது. ஆனால் இந்த மக்களின் ஆன்ம எழுச்சியையும், விடுதலை வேட்கையையும் குறித்த இலக்கியப் பதிவுகளை பாரத சமுதாயத்தின் பக்தி இலக்கியங்களில் அல்லாமல், பிற சமுதாயங்களில் காணமுடிவதில்லை.

உதாரணமாக, ஐரோப்பிய மத்திய கால பேரிலக்கியங்களில் உழைக்கும் மக்கள், சமுதாயத்தின் கீழடுக்கு மக்கள் கதாநாயகர்களாக ஏற்கப்பட்டதே இல்லை. ஆனால், இந்து சமுதாயத்தில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் இலக்கியங்களில் நாயகர்களாக விளங்க முடிகிறது. இறைவனே இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக பக்தி இலக்கியங்களில் வெளிப்பட்டது பாரதத்தின் சிறப்பாகும்.

அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” – “பாணர்களுக்கு சேவை செய்பவன் நான்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். நம்பியாண்டார் நம்பிகள் ஒருபடி மேல் சென்று “பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே” என்று கூறுகிறார். (இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)

அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் தொகையடியார் ஒன்பதின்மரின் குலங்களைப் பார்த்தால் இது மேலும் தெளிவாக விளங்கும். (இப்படி செய்வது, இந்துதர்ம நெறிப்படி தவறானதும், அடியார்களுக்குச் செய்யும் அபசாரமும் ஆகும் என்றாலும், ஐயம் தெளிதலுக்காகக் கூற நேர்வதால் பரம்பொருள் பொறுத்தருள்வாராக!). அடியார்களில், திருமறையோர், சிவவேதியர் – 18; முடிமன்னர் – 6, குறுநிலமன்னர் – 5. வணிகர் – 5. வேளாளர் – 13. ஆயர் – 2. மாமாத்திரர், சாலியர், குயவர், செக்கார், பரதவர், சான்றார், ஏகாலியர், வேடர், புலையர், பாணர் குலங்கள் முறையே ஒன்று.  மரபறியாதார் – 13.

பாணர் குலத்தினராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரது பெருமையினை திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் வாக்கிலேயே கேட்போம் –

thiruneelakanda-yaazh-panarசுந்தரர் பாடியது அறுபது நாயன்மார்களைப் பற்றியேயென்க. அந்த அறுபது நாயன்மார்களில் முதலில் நின்றவர் திருநீலகண்ட நாயனார். இறுதியில் நிற்பவர் திருநீலகண்ட யாழ்ப்பாணராகும். தில்லைவாழ் அந்தணர் என்பது இறைவன் அடியெடுத்துக் கொடுத்த தொகையடியாராகும். தனியடியார் அறுபதில் முதலிலும் முடிவிலும் நின்று அணிசெய்பவர்கள் திருநீலகண்டர் என்ற பேருடையவர்களே. முதலிலே நின்ற, மாதுசொன்ன சூளால் இளமை துறந்த திருநீலகண்டரினும் இவரைப் பிரித்து அறியும் பொருட்டே, இவருடைய பேருடன் யாழ்ப்பாணர் என்ற அடைகொடுத்துச் சேக்கிழார் கூறியருளினார். எனவே, சுந்தரர் கூறிய அறுபது நாயன்மார்களில் முடிமணியாக நின்று அலங்கரிப்பவர் இந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனின் இவர் பெருமை அளவிடற்கரியதன்றோ?

… பாணர்கள் பண்டைநாள் ஆலயத்திற்குப் புறத்தே நின்று வழிபட்டார்கள். அந்த நியதி அருள்ஞானம் கைவரப் பெற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றோருக்கு இல்லை என்பதையும் உணர்க. அதனாலேயே, மதுரையில் பெருமான் உள்ளே வரச் செய்து அருளினார். இவருடைய பாடலைக் கேட்ட மதுரைப் பரமனார், ஈரத்தரையின் குளிர்ச்சி பட்டு நரம்பின் முறுக்கு அவிழ்ந்து சுருதி கெடும், அதனால் பாடலின் இசை கெடும் என்று கருதிப் பொற்பலகை இடச் செய்தார் எனின், இவருடைய பாடலின் அருமை எத்துணை விழுமியது என்று சிந்தித்துணர்க. மேலும், இறைவர் திருமுன் பீடத்தில் அமரும் பேறு பெற்றார் என்பது அதனினும் விழுமியது. இவரை நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் திருஞான சம்பநதரும் பாராட்டி இறுதிவரை தன்னுடனேயே இருந்து யாழ் வாசிக்குமாறு அருளிய அருமைப்பாடும் சிந்தனைக்குரியது.

… இவரை அந்தணர் குலமணியாகிய திருநீலநக்க நாயனார் தமது யாகசாலையில் தங்க வைத்ததும், இவர் அங்குச் சென்றவுடன் யாகாக்கினி வலம் சுழித்ததும் இவர் பெருமையை விளக்குகின்றன. பாணர் மரபினர் ஆலயத்துள் சென்று வழிபடும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. அவ்வாறு இருந்தும், சிவபக்தியுடைய இவருக்கு அந்த நியதி இலதாயிற்று. எனவே, இவரைப் போன்ற சிவநேசமும், ஒழுக்கமும் உடையார்க்குக் கட்டுப்பாடு இல்லை என இது அறிவிக்கின்றது.

(நன்றி:  பெரியபுராணம், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.  பக்கம் 680-682)

மானுட சமத்துவமின்மை தாண்டவமாடிய உலகில் இந்து அருளாளர்கள் சமுதாயப் போக்கில் தாழ்த்தப்பட்ட பாணர்குல பெருமையை பதிந்துள்ளனர். ஒரு இந்து என்கிற முறையில் இன்றைய விளிம்பு நிலை சமுதாயத்திடம் எவ்வாறு சேவை செய்திட வேண்டும் என்பதற்கு இந்த அருளாளர்களின் வாக்கும், வாழ்வும் எடுத்துக்காட்டாய் அமைகின்றன.

தொண்டரடிபொடியாழ்வார் திருமாலின் குரலாகவே மேல்சாதியினரைக் குறிப்பிட்டு கூறுகிறார் –

பழுதிலா ஒழுக்கலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்களாகில்
தொழுமின் நீர், கொடுமின், கொள்மின்.  (திருமாலை)

மேலும், “ஆண்டவன் அடியவர்களில் சாதி குறித்து பேசினால் பேசிய மறுகணமே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சாதியம் எனும் பாவத்தை பொறுத்தவரையில் அடுத்த ஜென்மம் வரை இந்துக்களின் இறைவன் பொறுக்க மாட்டான்” என்ற கருத்தை பாரத நாட்டின் பல பகுதிகளிலும் தோன்றிய எல்லா பக்தி இயக்கங்களிலும் காண்கிறோம்.

வைணவப் பெரியார் ஸ்ரீ மத் பி.ஸ்ரீ ஆச்சாரியா விளக்குகிறார்:

வேத வேதாந்தங்களை எல்லாம் தெரிந்து பரம பக்தனாயிருப்பவனுக்கும் அடியார்களைப் பழிப்பது அபாயத்தையே விளைக்கும் என்கிறார் (தொண்டரடிப் பொடியாழ்வார்.) பழிப்பு என்றால் தூஷிப்பது கூட அல்ல; சாதியைக் குறிப்பிடுவதே பழிப்பதாகும் என்பர். இதற்குத் தண்டனை மறுமையில் எமலோகத்திலோ வேறு எங்கேயோ என்பதில்லையாம். தூஷித்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே கிடைத்து விடுகிறதாம்.

மற்றொரு காட்சியையும் பாருங்கள்:

thirumazhisai-azhwar2காலம் ஏறத்தாழ கி.பி 8-ஆம் நூற்றாண்டு. பெரும்புலியூரில் புலியூர் அடிகள் எனும் தீட்சிதர் வேள்வி ஒன்றினை செய்து கொண்டிருந்தார். அவர் திருமழிசையாழ்வாரின் பொன்னடிகள் பணிந்து தாம் செய்து வரும் வேள்விக்கு வரவேண்டும் என விண்ணப்பம் செய்து கொண்டார். திருமழிசையாழ்வாரின் திருமுகப்பொலிவே தீட்சிதரைப் பிரமிக்க வைத்தது; “இவரே மெய்யடியார்; இப்படி ஒரு பரம பாகவதரைக் காணக்கூடுமானால் இதுவே கண் படைத்த பயன்; இந்த வேள்வியின் பயனும் இதுதான்!” என்று அவரை எண்ணமிடச் செய்தது. ஆழ்வாரை அழைத்துக்கொண்டு யாகசாலைக்குள்ளே போய் ஆழ்வாருக்கு அக்ரபூஜை (தலைமை வழிபாடு) செய்தார்.

அது கண்டு அங்குள்ள அத்வர்யு (வேள்விக்குத் தலைமை தாங்குபவர்) முதலான சடங்கிகள் கோபம் கொண்டார்கள். தீட்சிதரை நோக்கி “பிரப்பங்கூடை முடைந்து விற்றுப்பிழைக்கும் இத்தாழ்குலத்தவனை இப்படி இங்கே பூஜித்து யாகத்தை கெடுத்து விட்டீரே!” என்றெல்லாம் பொறுக்க முடியாத வார்த்தைகளைச் சொல்லிப் பழித்தார்கள்.

ஆழ்வார் நீறு பூத்த நெருப்பு போல இருந்தார். தீட்சிதரோ நெஞ்சம் கொதித்து, “அந்த நாளில் தரும புத்திரனின் ராஜசூய யாகத்தில் கண்ணனுக்கு அக்கிர பூஜை நடந்ததை அக்கிரம பூஜை என அதை சிசுபாலன் பழித்ததை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்தும் அந்த எச்சரிக்கையும் பயனளிக்கவில்லை.

தீட்சிதர் ஆழ்வாரை நோக்கி “சுவாமி இவர்களும் உய்ந்துபோகும் படி உண்மையை வெளியிடலாகாதா?” என்று கதறினார். உடனே நீறு விலகி நெருப்பு ஜொலிப்பது போல் ஆழ்வாரின் மேனி அற்புதமாக ஜொலிக்கத் தொடங்கியது. ஆழ்வார் தமது இதய கமலத்தில் அந்தர்யாமியாக திகழும் அற்புதனை நோக்கி,

“அக்கரங்கள் அக்கரங்கள்
என்றுமாவதென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை
ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே
சடங்கர்வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே
புறம்பொசிந்து காட்டிடே”

என பிரார்த்தித்தார்.

ஆழ்வாருடைய தோற்றத்தில் திடீரென்று ஏற்பட்ட மாறுதல் அந்த வேள்விச்சாலையில் இருந்த வைதிகர்களையெல்லாம் பிரமிக்கச் செய்கிறது. அவரது திருமார்பிலே அனற்பிழம்பு வீசி சக்கரம் சுழன்றது. பகவானுடைய சுதர்சனம் என்கிற சக்கரதாயுதத்தின் அம்சமாகத் திருமழிசைப்பிரான் அவதரித்திருக்கிறார் என்கிற உண்மையை அந்த காட்சி உறுதிப்படுத்தியதாம்.

விரைவில் கடல் முழங்குவது போல ஒரு முழக்கம் கேட்கிறது. “அந்த மகா சர்ப்பத்துக்குத்தான் எத்தனை தலைகள்!” என பார்த்தவர்கள் பயப்படுகிறார்கள். இந்திர நீல வர்ணமுள்ள மேகம் ஒன்று மலை உச்சியில் சாய்ந்து கிடப்பது போலக் காண்கிறது. அது வர வரப் பெரியதாகி பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாறு மழை பெய்யப்போவது போல காட்சி அளிக்கிறது. அந்த மின் வெட்டின் அழகைத்தான் என்னவென்பது. பகவான் பாற்கடலோடும் அனந்த சயனத்தோடும் சங்கு சக்கரங்களோடும் திருமகளும் தானுமாக காட்சி அளிக்கிறானாம் ஆழ்வார் திருமேனியிலே.

ஆழ்வார் திருவடிகளே சரணம் என அந்த சடங்கர்கள் செருக்கடங்கி தாழ்ந்து வணங்கினார்கள். இவரைப் பரிவுடனும் பக்தியுடனும் பிரம ரதத்தில் (பெருமைக்குரிய தேரில்) ஏற்றி “திருமழிசைப் பிரான் வந்தார். திருமாலின் மெய்யடியார் வந்தார்.” என்று போற்றி அந்த ஊரை மும்முறை வலஞ் செய்வித்தார்கள். தீட்சிதரின் உள்ளம் குளிர்ந்தது.

(நன்றி: துயில் எழுப்பிய தொண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கலைமகள் காரியாலயம். பக்கம் 103-104)

மகாபாரதத்தில் வீட்டைத்துறந்து ஞானத்தைத் தேடி அலைந்த முனிவர் ஒருவர் இறுதியில் தர்மவ்யாதன் எனும் கசாப்புக் கடைக்காரரைப் பணிந்து அவரிடமிருந்து ஞானம் பெற்ற வரலாறு சொல்லப்படுகிறது. ஸ்ரீ வராக புராணத்தில் நம்பாடுவான் எனும் தாழ்த்தப்பட்ட குலத்தை சார்ந்த ஒரு மகானின் அருளினால் திருக்குறுங்குடி திவ்வியதேசத்தில் ஒரு அந்தணன் சாப விமோசனம் பெற்ற வரலாறு சொல்லப்படுகிறது.

இப்படி எத்தனையோ புராண வரலாறுகளையும், அடியார்கள் வரலாறுகளையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

(தொடரும்)

21 Replies to “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2”

  1. தாழ்ந்த குலத்தவராக கருதப்பட்ட திருமழிசை ஆழ்வார் எப்படி பிராம்மணர்களுக்கு பாடமாக இருந்தாரோ அவ்வண்ணமே பிள்ளை உறங்கவில்லி தாசரும்

    ராமானுஜர் பிராமணர் அல்லாதவரான உறங்கவில்லி தாசரிடம் இணக்கமாக இருந்தது பல பிராமணர்களுக்கு பிடிக்க வில்லை – இதை அறிந்து கொண்ட ராமானுஜர் அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க முடிவு செய்தார் – அதன் படி கொடியில் காய போட்டிருந்த அந்த பிராமணர்களின் லண்கோட்டி மற்றும் வேஷ்டியை சற்று கிழித்து விடும்படி ஒருவரை பணித்தார் –

    அவர்கள் துணி கிழிந்திருப்படை கண்ட பிராமணர்கள் – கிழித்தவன் யாரோ அவன் இப்படி போகட்டும் அப்படி ஆகட்டும் என்று பெரும் குரலில் சாபம் இட தொடங்கினர்

    இது ஒரு புறம் இருக்க – ராமானுஜர் அந்த பிராமணர்களை அழைத்து – ஒரு காரணம் சொல்லி இதனால் நீங்கள் போய் உறங்கவில்லி தாசரின் மனைவி தூங்கிகொண்டு இருக்கும் பொது அவரின் நகைகளை கொண்டு வாரும் என்று சொன்னார் – அவ்வண்ணமே சென்ற பிராமணர்கள் தாசரின் மனைவி நகை அணிந்து கொண்டிருப்பதை கண்டு மெல்ல மெல்ல அவரது உடலிலிருந்து நகைகளை கலைந்தனர் – இதை தெரிந்து கொண்ட தாசரின் மனைவி நகைகளை எடுப்பவர்கள் பிராமணர் ஆயிற்றே பாவம் என்ன கஷ்டமோ என்று நினைத்து அவர்கள் எடுப்பதற்கு ஹேதுவாக திரும்பி படுத்துக்கொண்டார் – இதை கண்ட பிராமணர்கள் தாசரின் மனைவி விழித்துக்கொள்வார் என நினைத்து அங்கிருந்து சென்றனர் –

    பின்னர் ராமானுஜர் உறங்காவில்லி தாசரிடம் நான் தான் நகைகளை ஒரு காரணமாக கொண்டு வர சொன்னேன் என்றார் – அதற்க்கு தாசர், ஐயோ எனக்கு என்று சொத்து வைத்துக்கொண்டு விட்டேனே நானே அல்லவே தந்திருக்க வேண்டும் என்று சொன்னார் – மேலும் அவரது மனைவி இடம் நீ ஏன் புரண்டு படுத்தாய் அதை கண்டு இவர்கள் மொத்த நகைகளையும் எடுக்க முடியாமல் போய் விட்டதே என்றார்

    ராமானுஜர் பிராமணர்களை அழைத்து – நீங்கள் ஒரு முழம் துணி கிழிந்ததர்க்கு என்னென்ன ஆரவராம் செய்தீர் – தாசரை பாருங்கள் இதுவே ஒரு பக்தனுக்கு அழகு என்று அவரை மேம்படுத்தி காட்டினார்

    எனக்கு தெரிந்த இன்னொரு பாணன் பற்றிய கதையையும் சொல்கிறேன்
    – பாணன் குலத்தை சேர்ந்த திருச்சி உறையூரில் பிறந்த திருப்பன் ஆழ்வார் அரங்கனை பாடியே காலம் கழித்தார் – ஒரு முறை அவர் காவிரியில் நின்று கொண்டு மெய் மறந்து பாடிக்கொண்டிருந்த பொது – ஆனந்கனுக்கு நீர் எடுக்க வந்த லோக சரங்க முனி என்ற கோவில் தீட்சிதர் பானை அங்கிருந்து போக சொன்னார் – பானோ மெய்மறந்து அரங்கன் நினைவில் இருந்தார் – முனி சொனது அவர் காதில் விழவில்லை – இதை பார்த்து கோவம் கொண்ட முனி அவரை ஒரு கல்லால் அடித்தார் நகர சொன்னார்

    இந்த செயலை எண்ணி வருந்திய அரங்கன், முனியிடம் நீர் செய்தது எமக்கு உகப்பில்லை, பாணனை உமது தொழில் தூக்கி வாரும் என்றார் – முனியும் அரங்கன் கட்டளையை பானனிடம் சொல்ல, பாணன் தயங்க, அவரை வலுக்கட்டாயமாக தொழில் தூக்கினார் முனி –

    முனி தோளில் இருந்தவாறே பாணன் அரங்கனின் அடி முதல் முடி வரை பாடியது தான் அமலாந்திபிறான் என்ற பத்தே பாடல்கள் – அரங்கன் சன்னதியுள் நுழைந்து கடைசி பாடலில் என் இனிய அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று சொல்லி அரங்கனுள் அப்படியே மறைகிறார் – இவரது தமிழ் பிரயோகமோ மிக அழகாக இருக்கும் – பெரியவாகி புடை பறந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப் பெரியவாகிய கண்கள் என்னை பேதைமை செத்தனவே என்று அரங்கனின் கண்களை வர்ணிக்கிறார்

    மாற ஆழ்வார்கள் நூறு, ஆயிரம் என்று பாடிக்கொண்டிருக்க பத்தே பாடலில் மொத்த விழயத்தையும் சொல்லி தலை கட்டுகிறார் இந்த ஆழ்வார் – இவரது தான் quickest மோக்ஷம்

    ராமனுஜரின் ஆசார்யரான பெரிய நம்பி தாழ்ந்த குலத்தவரான மாறன் ஏறி நம்பி என்ற தனது சக சிஷ்யருக்கு அந்திம சம்ஸ்காரம் செய்தார் அதற்க்கு அவர் ராமன் ஜடாவிர்க்கு அந்திம சம்ஸ்காரம் செய்ததையே காரணம் காட்டினார் – இந்த செயலுக்காக இவரை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்தனர் – அரங்கனின் தேரோட்டஹின் பொது – தேர் இவரது வீட்டின் முன் நகராமல் நின்றது – அவருக்கு தகுந்த மரியாதை செய்த பின்னரே தேர் நகர்ந்தது
    நம்மாழ்வாரின் பிறந்த தினத்தை குறிக்கையில் – மணவாள மாமுனிகள்
    “உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள் உண்டோ சடகோபருக்கு ஒப்போருவர் என்றார்”

    நஞ்சீயர் என்பவரும் (ராமானுஜரை போலவே) தனது மனைவி தாழ்சட குளத்தில் பிறந்த ஒரு பக்தருக்கு சரியான பணிவிடை செய்யவில்லை என்பதற்காகவே விட்டு துறவு பூண்டார்

    மதுரகவி ஆழ்வாரும் தாண்ட குளத்தில் பிறந்த தன்னில் வயதில் சிறியவரான நம்மாழ்வாரிடம் பணிந்து சிஷ்யரானார் – அவர் மேலே கண்ணினும் சிறு தாம்பு என்னும் 11 பாசுரம் பாடினார் (கண்ணனை விட இந்த ஆழ்வானே சிரதவர் இவரையே நான் சரண் புகுவேன் என்று)

    இப்படி நன்கு விஷயம் தெரிந்த பலரும் ஜாதி வித்யாசம் பாராமலேயே இருந்தனர்

    இதை எல்லாம் விட – திருவரங்கத்தில் தினமும் முதலில் அரங்கன் மேல் மீள காதல் கொண்டிருந்து உயிர் நீத்த துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்படும் டில்லி பாதுஷாவின் மகளுக்கு முதலில் ரொட்டி சமர்ப்பணம் ஆனா பயந்தார் அரங்கனே ஆராதனம் கொள்வார்

    பக்தியே முக்கியம் ஜாதி இல்லை என்பது திண்ணம்

  2. இந்த கட்டுரையின் ஆசிரியர் குழுவிடமிருந்து எனது சில கேள்விகளுக்கு பதில் எதிர்பார்க்கிறேன்.

    சாதிகொடுமை என்று வரும்பொழுது ஏன் ஐயா பிராமிணனையும் இந்து மதத்தையும் ஏசுகிறார்கள் ?
    பாம்பையும் பார்பானையும் கண்டால் முதலில் பார்பானை அடி என்ற அளவுக்கு காழ்புணர்வை ஏற்ப்படித்தியதற்க்கு யார் காரணம் ? அவர்கள் அந்த அளவுக்கு கொடுமை செய்தார்களா ?
    நீதீக்கட்சிக் காரர்கள் தான் பிராமிண துவேஷத்தை தூபம் போட்டு வளர்த்தார்களா ? ஏன் அவர்கள் அதை செய்தார்கள் ? அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன ?

    இந்தியாவில் உள்ள ஹிந்து கோவில்களில் மொத்தஎண்ணிக்கையில்௦ 80 சதவிகிதற்குமேல் தமிழகத்தில் தான் உள்ளது (3500௦௦ கோவில்கள்) இந்த கோவில்களில் என்றும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்படி இருந்தும் தமிழ் மக்கள் கடவுள் எதிர்பு கட்சிகளையே ஆட்சியில் அமர்த்துவது ஏன் ?
    தமிழகத்தில் பிராமிணனை தவிர மற்ற மேல் சாதியினரின் பல உட்பிரிவை கீழ் சாதி பிரிவில் சேர்த்துள்ளார்கள். இந்த மேல் சாதியினர் பல பேர் நொடிப்பொழுதில் போலிசான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டு சாதியின் பங்கை விழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஏன் எதிர்பு தெரிவிப்பதில்லை ? இவர்கள்தான் இன்று அரசியலை ஆக்கிரமித்துள்ளார்கள்.

    ஹிந்துமதத்திற்கும் ஆண்மிகத்திற்கும் பிராமணர் அல்லாத தமிழ் சமூகத்தினர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்கள் என்று தெரிந்தும் தங்கள் முன்னோர்களின் பெருமையை உணராதவர்களாக ஏன் இந்த திராவிடகட்சிகளின் பின்னால் போகிறார்கள் ? கிருஸ்துவர்களாக மாருகிறார்கள் ?
    மனு நான்கு வர்ணங்களைப் பற்றிக் கூறினான், ஆனால் மண்டலகமிஷன் 4000 ஜாதிகளை அடையாளம்கண்டுள்ளது. இதற்க்கும் பிராமணன்தான் காரணமா ? மனு சொன்னது தவறு என்றால் ”மனுநீதீசோழன்” போற்றப்பட்டிருப்பானா ? இந்தவர்ணமுறை எல்லா நாடுகளிலும் கடைபிடித்துத்தான் வந்தார்கள் ஆனால் அதற்க்கு ஒரு பெயர் சூட்டவில்லை. மேலும் மேலைநாட்டில் நான்காம் வர்ணத்தாரை அடிமைகள்போல் நடத்தினார்கள் அவ்வாறு ஹிந்துக்கள் செய்யவில்லை என்பது உண்மைதானே ?

    (edited and published)

  3. //இப்படி இருந்தும் தமிழ் மக்கள் கடவுள் எதிர்பு கட்சிகளையே ஆட்சியில் அமர்த்துவது ஏன் ?//
    Maybe தமிழ் மக்கள் மேடையில் மட்டுமே உயிரோடு இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே தமிழக அரசியல் கட்சிகளின் கடவுள் எதிர்ப்பு கொள்கையையும் நினைக்கிறார்களோ?!

  4. திரு. (உ.வே?) சாரங் அவர்களே, விளக்கங்களுக்கு நன்றி. இராமானுஜரைப் பற்றிய திரைப்படம் ஒன்றில் இது போன்ற கண்குளிரச் செய்யும் நிகழ்வுகள் சிலவற்றை படப்பிடிப்பாக வெளியிட்டுள்ளனர்:

    திருக்கச்சி நம்பிகள், திருப்பாண் ஆழ்வார் நிகழ்வுகள்: https://www.youtube.com/watch?v=ifbVgKAyJ7w

    உறங்காவில்லி தாசர் நிகழ்வு: https://www.youtube.com/watch?v=AMgtNASlLrA

  5. இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வந்தது. அந்தணர் வீட்டில் வளர்ந்த ஆண்டாள் நாச்சியார், “குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே” என்று (திருப்பாவை 11-இல்), அதாவது மாடு மேய்க்கும் ஆயர குலத்தொரைக் “குற்றம் இல்லாத குலத்தவர்”, என்று பாடியது குறிப்படத்தக்கது.

  6. இராமானுஜர் பெறும் கடினப்பட்டு பதினெட்டு தடவை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் (கோஷ்டி பூர்ணரிடம்) சென்று பெற்ற அர்த்தத்தை அனைவர்க்கும் சாதி-மத வித்தியாசம் இல்லாமல் கற்பித்தல்:

    https://www.youtube.com/watch?v=I-QByBFHakM

  7. கந்தர்வன் அவர்களே

    உ.வேi?) – இதற்கு சத்தியமாக நன் அதிகாரி இல்லை – நான் உண்மையிலே மிக இழிவானவன்

  8. இப்படியெல்லாம் விஷயம் தெரிந்த முன்னோர்கள் சீர்தித்தம் செய்து வைத்தார்கள் – ஆனால் இப்போது சிலர் ஒரு புது trend அல்லது சமாதானம் சொல்கிறார்கள்

    அதாவது மேலே சொன்ன தாழ்டப் பட்டவர் எல்லாம் பெரிய பிகடர்கலாம் அதனால் ஜாதி வித்யாசம் இல்லையாம் – நீ என்ன அவர்களை போல பாக்டனா வெறும் ஆசாமி தானே உன்னை சமமாக நான் ஏன் கொல்லனும் என்று சமாதானம் சொல்கிறார்கள் – மிகவும் வருத்தமாக உள்ளது

    மேலும் இது தவறான முடிவும் ஆகும் – உறங்கவில்லி தாசர் ஒரு பக்தராக இல்லை – அடியில் தன் மனைவியின் அழகின் மீது தீராத ஆசை கொண்டு அவர் மனைவிக்கு குடை பிடித்துக்கொண்டே போவார். அப்போது அவர் ஒரு சாமானிய மனிதராக தான் இருந்தார் – இதை அறிந்த ராமானுஜர் அவரை அழைத்து நீ மனைவிக்கு குடை பிடிப்பது விந்தையாக உள்ளதே என்றார் – அதற்கு தாசர் அவளது விழி அழகிருக்கு அடிமை நான் என கூற – ராமானுஜருக்கு அரங்கனின் பெரியவாகிய புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப் பெரிவாகிய கண்கள் நினைவுக்கு வர – தாசரை அரங்கனிடம் அழைத்து சென்று நேத்ர தரிசனம் தர அரங்கனை பணித்தார் – அரங்கனும் தாசருக்கு மட்டும் ப்ரத்யக்ஷமாகி கண்களை காட்டினார் – தாசர் உண்மை அறிந்து மஹா பக்தரானார்
    முதலியாண்டான், கூரத்தாழ்வானுக்கு ஏன் ராமானுஜருக்கே கிட்டாதது இவருக்கு கிட்டியது – அதுவும் முதலியாண்டான் பூர்வாஷ்ராமத்தில் ராமானுஜருக்கு cousin 🙂

    இதிலிருந்து பக்தனோ இல்லையோ எல்லோரும் சமமே என்பது திண்ணம்

    ராமானுஜருக்கு மனைவிக்கு குடை பிடித்தது அன்று விந்தையாக இருந்தது – அவர் இன்று இருந்தால் நம்மில் பலருக்கு நேத்ரா தரிசனம் கிட்டும் தகுதி இருந்திருக்கும் 🙂

  9. திரு சாரங்,

    //
    இதற்கு சத்தியமாக நன் அதிகாரி இல்லை
    //

    மரியாதைக்கு சொன்னேன். தவறானால் மன்னிக்கவும்.

    //
    நான் உண்மையிலே மிக இழிவானவன்
    //

    இதில் உங்களுடன் போட்டி போட நான் தயாராக உள்ளேன் 😀

  10. good attempt.but totally unconvincing.
    why do you have to go everywhere and try and bring parallels.
    the fact of the matter is manu is persona non grata in dravidian land.
    and if you are trying to win him some acceptance through your efforts,what is it that you are trying to achieve other than spread your religion.

    at the same time,there is anger when others do the same,try and spread their religion.

    why does the dmk rule in tamilnadu.because the people know who they are and they know that this manu is from outside.

    manu only told about four and yet there are 4000.
    the four thousand are the various sets which have nothing to do with manu and his four.

  11. Samurai,

    // what is it that you are trying to achieve other than spread your religion. //

    We are trying to spread Hinduism in its own land and people. What’s wrong in that ??

    // at the same time,there is anger when others do the same,try and spread their religion.//

    Let them spread their religion in its own land and people, no anger. But what are they doing in India ? We even welcome that, but that spreading the religion should be done in a fair way, not by a business of offering money, false claims and curses thrown over Hindu Gods and customs !

    // why does the dmk rule in tamilnadu.because the people know who they are and they know that this manu is from outside. //

    Oh ! Manu is from outside and people realized it and vote for DMK ?
    Then where are Christ and Nabi from ? inside ? Then why does DMK beg for Christian and Muslim votes ? Good logic man !

  12. raja,
    in the same fair manner that you prescribe,let us begin by acknowledging that the religion of manu is not the religion of the tamils and the dravidians.
    it is also trying to get converts,that is all very well.
    but when there is an attempt to tell the tamils that the religion of manu is actually their religion,which it is not,then there is a problem.
    when the ruling party is targeted because it is not conducive to your missionary work,mixed with politics,then the problem gets bigger.
    what suffers is the religion of manu,as its proponents go about mixing their religion and politics.
    its practitioners do not want to accept that it was fashioned towards overcoming the natives and their civilisation.
    nothing very wrong about that in the beginning,but over time,the religion of manu actually began to believe that it can erase the history.
    it might be a good religion with good morals,but there is no need for the religion of manu to believe that it is exalted.

    the name of rama lost its value,when the people realised that it is just a political ploy.
    the people do not worship rama,but are secular to accept rama.
    that very secularism is used against them when the people who have used names with rama in them are told that their name contains the name of rama,as in manu needhi chozhan.
    henceforth,the people will realise that their secularism is being used against them and their way of life.

  13. HI samurai

    1. First of all I am an Indian & I expect all the people living in India irrespective of their religion should have the same feeling. This feeling is totally absent in most of the other religious people including the atheist , communist & brain washed converts in India like you

    2. Second I am a Hindu and I am very proud of the same. Also not against other religious peaceful practices in India

    3. Understand God is not a solid stuff to be sold in the fish market by shouting & canvassing

    4. Given below the statement of a Christian woman (Dr.Annie Besant) :-

    “ After a study of some forty years and more of the great religions of the world, I find none so perfect, none so scientific, none so philosophical and none so spiritual that the great religion known by the name of Hinduism. Make no mistake, without Hinduism, India has no future. Hinduism is the soil into which India’s roots are stuck and torn out of that she will inevitably wither as a tree torn out from its place. And if Hindus do not maintain Hinduism who shall save it? If India’s own children do not cling to her faith who shall guard it. India alone can save India and India and Hinduism are one”

    5. Now India is facing three major threats. ( JIHAD – SOUL HARVESTING – PSEDO SECULARISM) I consider these are TERRO & DEVIL. Pseudo secularism is the major root cause encouraging the above with the funds floated from all the Christian & Arab nation and destructing the religious harmony as per Abrahamic religious plan

    6. Are you aware the whole print & electronic media in India is taken over by the Christian /Arab mafia? Misguiding the people with false news and planning to launch a civil war soon in India like Sri Lanka

    7. Assume (ASS/U/ME) Hinduism also vanished due to the wicked plan & what is next fight within Abrahamic Religion. Assume Christianity also vanished then fight within Arabic Religion (note non of the Muslim country in the world is democratic)

    8. Islam is FIRE & Christianity is FUEL both never allows the peaceful existence of Human Race.

    “ OH ALLAH – JESUS – RAM SAVE THE MOTHER EARTH “

  14. சமிபத்தில் படித்த இரண்டு புத்தகத்தின் சில நான் கோடிட்ட வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவை தீர்கதரிசி விவேகாநந்தரின் கூற்றாகும்.

    1. சமுதாயத்தில் பொதுவுடமை கோட்பாடு
    2. நாகரிகமும் சமுதாய கோட்பாடும்

    ரூபாய் 25- எல்லா ராமகிருஷ்ணா புத்தக கடையிலும் கிடைக்கும்

    ”மிருகத்தை மனிதனாகவும் மனிதனை தெய்வமாமகவும் உயர்த்தும் கருத்தே மதம் ”
    ”தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன்”

    மதம் என்பது மாதா (தாயார்) என்ற சமஸ்கிருத சொல்லிருந்து வந்தது. எனவே ஒருவனுக்கும் தன் தாயை மாற்றும் உரிமை கிடையாது (மதம் மாறும் உரிமை) அப்படி மாருபவன் நிச்சியம் அன்னியனே?

    விவேகாநந்தர் பிராமிணர்களை போற்றியதுபோல் யாரும் போற்றவில்லை அவரைபோல் பிராமிணர்களை யாரும் கடுமையாக தாக்கி பேசியதும் இல்லை. அவர் ஒவ்வொருகுடிமகனும் பிராமிணர்களாக மாறவேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் நடைமுறையில் பிராமிணன் சூத்திரன் நிலைக்கு மாறியதுதான் நடந்துள்ளது

    ” பிராமிணர்களுக்கு எந்த அளவு மதத்தில் உரிமை உள்ளதோ அந்த அளவு மற்றவர்களுக்கும் உரிமைஉண்டு என்பதை எல்லோர் மனத்திலும் உறுதிப்படுத்துங்கள். இந்த அக்கினி மந்திரத்தை உழைபாளர்கள் முதல் அனைவருக்கும் கொடுங்கள். நீங்கள் இதைசெய்யாவிட்டால் உங்கள் கல்வி நாசமாக போகவேண்டிய கல்வியே”

    ” பிராமிணர்கள் ஆளும்பொழுது பிறந்தகுலத்தை காரணம்காட்டி மற்றவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். அவர்களை தவிற வேறுயாருக்கும் எந்த அறிவும் கிடைக்கவில்லை. அவர்கள் மனத்தை பண்படுத்தி அதன் மூலமே வாழ்ந்தார்கள். பல்வேறு விஞ்ஞானிகளின் அஸ்திவாரம் இடப்பட்டது இந்தகாலத்தில்தான்” (எந்த நாட்டை ஆண்டார்கள் ?)

    ”இதன்பின் வந்த ஷத்ரியர்கள் ஆட்சி (புத்த சமண மத தோற்றத்திற்குபின்) இவர்கள் ஆட்சி கொடூரமானது. இவர்கள் காலத்தில்தான் கலைகளும் சமுதாய பண்பாடுகளும் உச்சநிலையை அடைந்தன” (என்ன கொடூரம்?)

    ” இதன்பின் வந்த வைசிய ஆட்சி (முகலாய பிரிட்டிஷ் படையெடுப்பு) இதனிடம் மௌனமாக அமுக்கி நசுக்கி ரத்தத்தை உறிஞ்சும் சக்தி இருந்தது. அவன் வியாபாரி எல்லா இடத்திற்கும் செல்வான். இவன் முந்திய இரண்டு நிலைகளில் சேர்த்துவைக்கப்பட்ட கருத்துக்களை பரப்பினான். இவர்கள் ஆதிக்கத்தின் போது பண்பாடு நெலியத்தொடங்கியது ” (பிராமிண துவேஷம் இந்து எதிர்பு கடவுள் மறுப்பு மத மாற்றம் ?)

    ”இறுதியாக சூத்திரர்கள் ஆட்சி ( உழைக்கும் வர்கத்தினர் ) இதன் போக்கு பௌதிக வசதிகளை பலருக்கு பகிர்ந்து அளிப்பதுதான் அனுகூலமாகும். அதன்பிரதிபலனாக பண்பாடு ஒருவேளை தாழ்வுறுமாறு இருக்கலாம். இதில் சாதாரன கல்வி ஒரளவு பரவும். ஆனால் அசாதரமான மேதைகள் குறைந்துகொண்டே போவார்கள். நிக்கிலிஸம் அனார்கிஸம் கம்யூனிசம் சோஷலிஸம் போன்ற புரஷ்சிகள் இதன் முன்னோடியே” ( ஆண்மிகத்தை மறந்து கல்வியில் நற்பண்புகளை போதிப்பதை விடுத்ததன் பலன் எல்லா துறைகளிலும் லஞ்ச லாவண்யம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சட்டத்தை காக்கவேண்டியவர்களே தெருவில் இறங்கி ஆற்ப்பாட்டம் செய்கிறார்கள்)

    ”பிராமிணர் காலத்தின் அறிவையும் ஷத்ரியர் காலத்தின் பண்பாட்டையும் வைசிய காலத்தின் பகிர்ந்து அளித்தல் போக்கையும் சூத்திர காலத்தின் சமத்துவ லஷ்சியத்தையும் சேர்த்து அவற்றின் தீமைகளை விலக்கி ஒருநிலை அடையமுடியுமானால் அதுவே லஷ்சிய நிலையாகும்”

    ”இந்துகளைபோல் ஆண்மிகத்திலும் மொகலாயரைபோல் மத பற்றிலும் கிருஸ்துவர்கள்போல் பொதுதொண்டிலும் ஈடுபடவேண்டும். ”
    (உள்நோக்கில்லாத மதம் மாற்றாத)

    மேலே பிராமிணர் பற்றி கூறிய குற்றசாட்டுகளை என்னால் முழூமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் என்றால் இதில் மேல் ஜாதியை சேர்ந்த மற்றவர்களுக்கும் ( ஷத்திரிய வைசிய ) நிறைய பங்கு இருக்கிறது. ஆனால் அது சாமர்தியமாக மூடி மறைக்கப்ப்டடுவிட்டது. இன்று பிராமணர்கள் எங்கு இரு்க்கிறார்கள் என்றே தெரியவில்லை ? ஆனால் இன்றும் ஜாதி கலவரங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணமான மற்ற மேல் ஜாதியை யாரும் கேள்வி கேட்பது இல்லை.

    பிராமிணன் முதலில் வேதம் கற்பதிலும் வேதம் சொல்லிகொடுப்பதிலும் ஈடுபட்டருந்தான். மன்னர்கள் அளித்த மானியம் கொண்டு வாழ்ந்தான். அன்னியர் படையெடுப்புக்குபின் கோவில்களும் மதசம்பிரதாயங்களும் நெலிவுற்றன. எனவே வாழ்வு ஆதாரத்திற்கு மன்னர்களிடம் ஆலோசகர்களாக பணிபுரிந்தான். பிரிட்டிஷ் வரவிற்குபின் பிராமிணனின் அறிவாற்றலைகண்டு வலுக்கட்டாயமாக அவர்களுக்கு பதவிகளை அளித்தான். ஆனால் அவர்கள் காந்திஅடிகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு தீவிரமாக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்கள் (இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டுவது – அன்றிலிருந்து இன்று வரை ஒரு நிகழ்வின் உண்மை நிலையை எழுத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவருபவர்கள் இவர்களே ஆவார்கள்) இதனால் வெள்ளையன் இவர்களின்தீவிரத்தை ஒடு்க்க பிராமிணன் – பிராமிணன் அல்லாதோர் ஆரியன் – திராவிடன் என்ற பிரித்தாளும் கொள்கையை ஆழமாகவித்திட்டான். இதற்கு மற்ற மேல் ஜாதியினரும் பிராமிணனின்மேல் கொண்ட பொறாமையால் தூபம் போட்டுவளர்தார்கள். நாம்எல்லோரும் ஒரேவர்ணம் என்று சூத்திரர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்

    பிராமிணன் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று நான் கூறவில்லை ஆனால் அவன் ஆதிக்கம் செலுத்தியதைவிட ஒதுங்கிஇருந்தான் என்பதே உண்மையாகும். இதுநடந்தது பிரிடிஷாரின் வருகைகுப்பின்தான். அவனை முன்நிறுத்தி மற்றமேல் ஜாதியினர் இன்றுவரையிலும் சுகபோகங்களை அனுபவித்ததை ஏன் ஐயா மறைகிறார்கள். இன்றும் மறைத்துக்கொண்டு டிருக்கிறார்கள்.

    பிராமிணன் கல்வி அறிவை பிறறுக்கு அளிக்கவில்லை என்றால் எவ்வாறு 63 நாயன்மார்களில் ஏதோ சில பிராமிணர்கள் தவிற மற்றவர்கள் போற்றப்பட்டனர். எல்லா கோவில்களிலும் சிலை வைத்து வணங்குகிறோம். ஷத்ரியனும் வைசியனும் செல்வசெழிபில் இருந்தார்கள். அவனுக்கு கல்வி அவ்வளவாக தேவைஇல்லை. அதேநேரம் உழைபாளிகளை அவர்கள் படிக்கவைத்து இழக்க விரும்பவில்லை. இதுதானே யாதார்த உண்மை !!

    இன்றுவரை பிராமிணன் ஆலோசனை சொல்வதை உண்மையை தட்டி கேட்பதை நிறுத்தவில்லை. அரசர்கள் ஆண்டகாலத்தில் முழமையாக கேட்டார்கள். அன்னிய ஆதி்க்கத்தில் பாதி கேட்டுக்கொண்டார்கள் சுகந்திரத்திற்குபி்ன் ஏதோ கேட்பதுபோல் பாவனை செய்து இப்பொழூது அவனை கண்டுகொள்பவர்கள் யாருமே இல்லை

    இன்று கடவுள் மறுப்பவர்கள் இந்து எதிர்பவர்கள் ஏழைபங்காளனான அரசியல் தலைவர்களின் வீடுகளில் உள்ள பெண்கள் தலையில் ஒருகட்டு பூவுடன் ஒரு ரூபாய் அளவில் குங்குமம் வைத்து ஊரில் உள்ள கோவில்களை சுற்றிகொண்டிரு்க்கிறார்கள். எல்லாம் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தன்வீட்டு பிள்ளைகளு்க்கு ஆங்கிலபெயர் வைத்து ஆங்கிலபள்ளியில் படிக்கவைக்கிறார்கள். இதில் உலக தமிழ் மாநாடு வேறு. இதில் எவ்வளவு தூரம் தமிழ் இந்துக்களின் உண்மையான பங்கை (ஆண்மிகத்தோடு இணைந்த இலக்கியங்களை ) பற்றி விவாதிப்பார்கள் ?

    ஆதிக்கம் ஆதிக்கம் என்று சொல்லியே இன்று வாரிசு ஆதிக்கம் கொடிகட்டிபறக்கிறது. கோடிஸ்வரர்களாக கோலோச்சுகின்றனர். ஒரேகுடும்பவாரிசுகளே இன்று சினிமாவின் மொத்த தயாரிப்பை குத்தகை எடுத்துள்ளார்கள். மற்ற தயாரிப்பாளர்கள் காணவில்லை ? நிகர்நிலை பல்கலைகழகங்களின் ஊழல் பட்டியலில் பெரியாரின் மணியம்மை பல்கலைகழகம் முதன்மை வகிக்கிறது. இங்கு இடஒதுக்கீடுகிடையாது

    குறிப்பு – மேற்கோளில் உள்ளது மட்டுமே புத்தகத்திலிருந்து எடுத்தது.

  15. as you ask,”which country did they rule”?
    it is clear even to you that they did not rule anywhere.
    63 naayanmaars spoke in their mother tongue or sanskrit?
    you are getting confused by thinking that only the brahmins were educated.

    the brahmins influenced the ruling classes in the last thousand years,slowly reducing the ancient highly evolved thinking into one that was trapped within the books.the same way that the abrahamic religions are imprisoned by their books,the brahmins are imprisoned by their books.this imprisonment was spread to the dravidian land in the last thousand years.
    the brahmins are very similar to the abrahamic religions in their inflexibility with regard to their books.
    the only difference is your books are older but can be said to have been written around the time of the old testament,or whatever that the jews are possessing.

    great civilisations do not need to be locked up within texts and books.
    people who do not have civilisations will be the ones for whom their books are the only thing that gives them hope.
    civilisations will live and marvel and experience and be free to think about creation,the ultimate achievement of civilisation will be the high thinking and the secular ideals.

    the brahmins began to get too intoxicated with their positioning over the last thousand years,that they have begun to believe that they can erase the past and make everyone believe that they were at the beginning of civilisation,instead of entering the scene later.

    you can try to give the reason as to why sanskrit was not spoken by everyone and why did tamil evolve if everyone at the beginning spoke sanskrit.
    it is obvious but i dont think you will accept it that easily.
    you have your religion and you will spread it,you have the constitutional right to do it.but ,the only problem is that you try to gain the affections of the ruling classes,as it was earlier.
    the ruling class now is democratically chosen,there is little chance for you to go and influence a few and make life stifling and unnatural for the rest.
    a ruling class that cannot give you your old positions is denigrated.unmindful of the fact that it is democratically chosen.
    hence,your refuge is that the ruling class can be changed and everything will be back to normal.
    another refuge is spreading hatred of the other religions ,that like the brahminic religion,are only trying to spread their wings.
    as the hatred is spread,some of it might come back and haunt the very brahmins,some of whom are doing a great disservice to their religion and their community by constantly refusing to understand that civilisation and religion are very different.
    civilisation is when man reasons and when he achieves stability and content,that is the heaven that man will get,here on earth itself.

    iam a tamil and an indian and a saivite,religion will guide me but i have the open mind to accept all that is new and all that other humans think.
    but,i cannot give up my ancestors who lived with the land and evolved the rights and the wrongs.
    the same ancestors also welcomed everyone with open arms,but slowly,there was a big suffocation and a decay.
    leaders came on to the scene who used their thoughts to reclaim the peace and the harmony.

    the thoughts of the brahmins are welcome and are quite an achievement but it is one of the many.
    did it help to evolve a just and efficient and harmonised society.
    the answer is no.

  16. Hi Samurai
    as you ask,”which country did they rule”?
    it is clear even to you that they did not rule any country.?

    So you also accept that Brahmins not ruled any country.

    63 naayanmaars spoke in their mother tongue or Sanskrit?

    Spoke only in Tamil. I don’t know why you ask this question? Both Tamil & Sanskrit are two eyes gifted by God – Tamil is mother & Sanskrit is father – there is no temple equivalent to mother and there is no advise equivalent to father. Both are inseparable ( advise means -Mantras, scared & not to be spoken everywhere) that is why it was restricted as a spoken language among masses. From the writings of Nayanmars it is clear that they are all prized the Vedas, Agamas & Sanskrit., had thorough knowledge of Sanskrit. To-day in Bangalore one entire village people are conversing only in Sanskrit .Now the latest study say Sanskrit is an ideal language for advanced super computer programming . Recently one senior sculptor in Mamalapuram said Sanskrit learning is a must to know more about Mayan architecture. Also according to the experts of the world language studies that any good language brought to masses as a spoken language it looses it superiority due to adulteration of words, accent & pronunciation from other languages.

    you are getting confused by thinking that only the Brahmins were educated.?

    I am not confused & thinking that only the Brahmins were educated, learned people were present in other varnas from ancient time . The blame is according to Vivekananda Brahmins were not passed on their knowledge to the other people due to dominance. Alternately why the other varnas learned people not extended their knowledge to the downtrodden

    the Brahmins influenced the ruling classes in the last thousand years, slowly reducing the ancient highly evolved thinking into one that was trapped within the books.?

    What is highly evolved thinking, influence what? Could you please explain? So you also agree to that 1000 years mark, according to Dravidian party it is 2000 years . According to me Periyarism is the highly evolved thinking ( There is no God, those who teach God are barbarians, Tamil is a Katumirandi language, there is no need of husband wife relation & all sort of never ending filth – is it highly evolved thinking and OK for you) .
    I will answer your other question later

  17. Hi Samurai
    The same way that the Abraham religions are imprisoned by their books the Brahmins are imprisoned by their books This imprisonment was spread to the Dravidian land in the last thousand years.?

    Hindus, Brahmins are not imprisoned by their books. They are deviating many things from the time it is known. My wife calls me “para pappan” (i.e. the serious change) Except Islam other religions are deviating according to change of situation. Also note that there is no Dravidian land or Aryan land. People who where residing in south of Vindya Hills were called as Dravidian & the other side people were called Aryan. Majority of the contribution went in to Hindu Religion is from Dravidan land only. Now the neighboring so called Dravidian states of Kerela, Karnataka, Andhra people are not calling themselves as Dravidian and engaged in all sort of river & other dispute . When the question of RAMA comes you want all the evident but for civilization no evidance is required (book reference) funny

    The Brahmins are very similar to the Abrahamic religions in their inflexibility with regard to their books.? The only difference is your books are older but can be said to have been written around the time of the Old Testament, or whatever that the Jews are possessing ?. Great civilizations do not need to be locked up within texts and books ? People who do not have civilizations will be the ones for whom their books are the only thing that gives them hope?
    Civilizations will live and marvel and experience and be free to think about creation, the ultimate achievement of civilizations will be the high thinking and the secular ideals.?

    It has been proved Scientifically, Archeologically & by Oceanographic study that the Saraswathi River Vedic Civilization is the oldest one in the world . This was only spread into entire Indian continent. As such there is no Aryan or Dravidian civilization according to true history.
    Also refer Wikipedia encyclopedia. Watch this you- tube video
    https://www.youtube.com/results?search_query=hinduism+scientifically&search_type=&

    The Brahmins began to get too intoxicated with their positioning over the last thousand years ,that they have begun to believe that they can erase the past and make everyone believe that they were at the beginning of civilization, instead of entering the scene later?

    Sorry you are intoxicated too much with the injection given in your blood by Dravidian maya, Christian false propaganda started with Aryan invasion 1000 years back. Islam came to India way of front door & looted, killed, raped, destructed the temples for 700 years. Christianity came to India way of back door and looted for 150 years. Now dictating terms for the house owner. You Dravidians want to call these traitors as your brethrens (ancestors) and not ashamed on putting all the blunder lies on Brahmin
    other answer follows

  18. Hi Samurai
    you can try to give the reason as to why Sanskrit was not spoken by everyone and why did Tamil evolve if everyone at the beginning spoke Sanskrit . It is obvious but I don’t think you will accept it that easily.?

    As you said I will not accept and answered you in your earlier question.

    you have your religion and you will spread it, you have the constitutional right to do it. But, the only problem is that you try to gain the affections of the ruling classes, as it was earlier.
    The ruling class now is democratically chosen, there is little chance for you to go and influence a few and make life stifling and unnatural for the rest.?

    What is your religion ? I don’t want to spread my Religion like Abrahamic but only wants to retain its old glory. From the Puranic period to till date Brahmins were mostly doing advisory roll and never influence anybody to suppress the downtrodden

    a ruling class that cannot give you your old positions is denigrated .unmindful of the fact that it is democratically chosen.hence ,your refuge is that the ruling class can be changed and everything will be back to normal.Another refuge is spreading hatred of the other religions that like the Abrahamic Religion are only trying to spread their wings.
    as the hatred is spread, some of it might come back and haunt the very Brahmins, some of whom are doing a great disservice to their religion and their community by constantly refusing to understand that civilizations and religion are very different. Civilization is when man reasons and when he achieves stability and content, that is the heaven that man will get, here on earth itself.?

    We do not want any position for us, if Rama rules or Ravana rules both are same. I appreciate Mr.MK’s rule, lot of downtrodden are improving and really happy to see the change. At the same time I have the right to criticize Dravidian wrong doing & wrong approaches as given below a few . It bounces back at our own people like what we witnessed in Lanka.
    1. Hindu biting
    2. No control of law & order
    3. Appeasement of minorities simply for selfish goals

    All the other allocations of you are false due to jealousy, greed & inferiority complex . You Dravidians are brain washed to such an extent by false propaganda of Christians. As long as Christianity & Islam exist there will not be any peace in the earth only conflicts always like a boiling pot. Recent witnessed worst genocide in Srilanka is purely a church sponsored conspiracy. Pl furnish your e-mail I will send you some good supportive articles appeared recently written by Lankan national (not Brahmin) to prove the west Christian conspiracy. India was a heaven only prior to the invasion of Abrahamic religion. Given below a proof ( letter written by Lord Maculae addressed to the British Parliament in 1835 – copy of the original letter is still available at Mamalpuram museum. If you want I can send you the scanned copy. The content is as follows:-

    “I have traveled across the length and breadth of India and I have not seen one person who is beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage and therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will loose their self-esteem, their native culture and they will become what we want them, a truly dominated nation”

  19. Hi Samurai
    I am a Tamil and an Indian and a Saivite, religion will guide me but I have the open mind to accept all that is new and all that other humans think?
    But, I cannot give up my ancestors who lived with the land and evolved the rights and the wrongs.? The same ancestors also welcomed everyone with open arms, but slowly, there was a big suffocation and a decay.? Leaders came on to the scene who used their thoughts to reclaim the peace and the harmony. ?

    Please call yourself first Indian and vehemently oppose any thing which post threats to Indian Unity. Abrahamic religions are like a cancer eating parts of India day by day. Due you want to close our eyes and pray God. Do you follow any religion, if so what is that , what religion your ancestors followed. If you’re a Saivite how the name Samurai relates

    The thoughts of the Brahmins are welcome and are quite an achievement but it is one of the many. Did it help to evolve a just and efficient and harmonized society. The answer is no?

    At last you agree that thoughts of Brahmins are welcomed. As I told you in the early answer the state of Brahmins thought. To-day there is no one to listen & pick up. So don’t blame Brahmins. Do you say to-day society is harmonized and efficient, I doubt !!! ( don’t close your eyes and look around, see with open eyes what is taking place in India to-day) Please do not hate Hindu and appease minorities for selfish goals results collapse of Indian Nation. You may be happy to-day but we will be leaving only a chaotic society for the younger generation.

  20. //17 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து அபரிமிதமான மூலதனம் ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது. ஐரோப்பிய இனம் ஆசிய,அமெரிக்க,ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியெனப் பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பும் ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகள் தேவையற்றதாகி விட்டன.//

    இன்றைய ஐரோப்பாவில் முடிதிருத்துவோர்,குப்பை அள்ளுவோர் போன்ற தொழில்களை செய்வோரின் சமூகநிலையை விரிவாக ஆய்வது இந்நூலை நடுநிலையானதாகவும்,சிறப்பானதாகவும் ஆக்குமென என்னுகிறேன்.

  21. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறாகும்,
    இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பெரும்பாலும் உயர் சாதி ஹிந்துக்கள் தான் என்பது சமீபத்திய சர்வே கணக்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *